This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் பேரிக்காயின் (pear)நன்மைகள், அபாயங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்(Pear in Pregnancy: Benefits, Risks & Guidelines )

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
கர்ப்ப காலத்தில் பேரிக்காயின் (pear)நன்மைகள், அபாயங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்(Pear in Pregnancy: Benefits, Risks & Guidelines )
Likes1 Likes|
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்ப காலத்தில் பேரிக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானது; நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் தாய், குழந்தை இருவருக்கும் நல்லது.
  • பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது, மேலும் வைட்டமின் சி குழந்தையின் இதய நலத்திற்கு பயனளிக்கிறது.
  • மிகவும் பழுத்த பேரிக்காய்களை தவிர்த்து, நாள் ஒன்றுக்கு 1-2 பேரிக்காய்களை நன்கு கழுவிய பின்னர் சாப்பிடுவது பாதுகாப்பானது; அளவுக்கதிகமாக உண்ணும்போது வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
  • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்திற்கு என்ன உதவும்? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

கர்ப்ப காலத்தில் பேரிக்காய் உண்பது பாதுகாப்பானது தானா?(Is eating pears safe during pregnancy?)

கர்ப்ப காலத்தின் போது நான் பேரிக்காய் சாப்பிடலாமா? என்று நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், கவலை வேண்டாம். நீங்கள் அதனை தாராளமாக சாப்பிடலாம். ஆம், பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய்களை சாப்பிடுவது பாதுகாப்பானது தான். எனினும், மற்ற உணவுப் பொருள்களை போலவே, சாப்பிடுவதற்கு முன்னர் பேரிக்காய்களை நன்கு கழுவிய பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் பழுத்த பேரிக்காய்களில் உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளதால், நீங்கள் அதனை தவிர்த்து விட வேண்டும்.

உங்கள் கர்ப்ப கால உணவு முறையில் சுவையான, ஊட்டச்சத்து மிக்க பழ வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள விரும்பினால், பேரிக்காய்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை! ஒரே ஒரு விஷயம் தான், அதனை நன்கு சுத்தமாக கழுவிய பிறகு உண்ண வேண்டும், மேலும் மிகவும் பழுத்த பேரிக்காய்களை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பேரிக்காய் உண்பதால் விளையும் உடல்நல நற்பயன்கள்(Health benefits of pears during pregnancy)

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, உங்கள் உணவுமுறையில் சுவையான, ஊட்டச்சத்து மிக்க பழத்தினை சேர்க்க விரும்புகிறீர்களா? அப்போது நீங்கள் பேரிக்காய்களை உண்பது பற்றி பரிசீலிக்கலாம்! கர்ப்ப காலத்தில் பேரிக்காய்களை உண்பதால் கிடைக்கும் சில முதன்மையான நன்மைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன:

  • பேரிக்காய்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி, மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன, கர்ப்ப காலத்தின் போது பேரிக்காயை உண்ணும் போது இந்த ஊட்டச்சத்துகளினால் உடலுக்கு நன்மைகள் விளையும். அவற்றில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்து அதிகமாகவும் உள்ளதால், கர்ப்ப காலத்தின் போது இவற்றை உண்பது நல்ல பலன்களை அளிக்கும்.

  • பேரிக்காயில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும், உங்கள் குழந்தையின் இதய நலத்திற்கும் நல்லது.

  • பேரிக்காய்களில் உள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தின் போது காணப்படும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றான மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு உதவுகிறது.

  • கூடுதலாக, பேரிக்காய்களில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் (ஆக்சிஜனேற்றத் தடுப்பான்) நிறைந்துள்ளதால் கர்ப்ப காலத்தின் போது பேரிக்காய்களை உண்பது, செல்களை சேதமடையாமல் தடுப்பதற்கும், செல்களின் மீளமைப்பிற்கும் உதவுகின்றது.

கர்ப்ப காலத்தின் போது பேரிக்காய்களை சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள்(Risks of consuming pears during pregnancy)

பேரிக்காய்கள் சுவையான, ஊட்டச்சத்து மிக்க பழங்கள் ஆகும், ஆயினும் கர்ப்ப காலத்தின் போது அவற்றை உண்ணும் போது சில விஷயங்களை பரிசீலிக்க வேண்டும்.

  • பேரிக்காய்களில் சார்பிட்டால் என்னும் கூட்டுப்பொருள் உள்ளது, இது சிலருக்கு வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடும். ஏற்கனவே நீர்ச்சத்து குறையும் அபாயமும், வயிற்றுப் போக்கு ஏற்படும் அபாயமும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். நீங்கள் பேரிக்காய்களை உண்ணும் போது, தண்ணீர் மற்றும் பிற திரவ பானங்களை நிறைய அருந்தி, உங்களை எப்போதும் ஹைட்ரேட்டட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • கர்ப்ப காலத்தின் போது பேரிக்காய்களை சாப்பிடுவதால் ஏற்படும் இன்னொரு கலக்கம் என்னவென்றால், அதில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படக் கூடிய அபாயம் குறித்தது தான். பேரிக்காய்களில் எப்போதுமே பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்கும், எனவே தான் சாப்பிடுவதற்கு முன் அதனை நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இந்த பாதிப்பினை தவிர்ப்பதற்கு, நீங்கள் ஆர்கானிக் பேரிக்காய்களை கூட வாங்கலாம்.

  • பேரிக்காய்களில் கணிசமான அளவு சர்க்கரை உள்ளது. சர்க்கரை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்காதெனினும், அளவுக்கதிகமாக சர்க்கரை உண்பதால் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமுள்ளது. ஒரு வேளை கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் உண்டாகும் அபாயமிருக்கும் பட்சத்தில், பேரிக்காய்களை (பிற சர்க்கரை நிறைந்த பழங்களையும் கூட) அளவாக சாப்பிட வேண்டும்.

  • இறுதியாக, பேரிக்காய்களை அளவாக சாப்பிடுவது முக்கியமாகும். சார்பிட்டாலில் மலமிளக்கித் தன்மை இருப்பதால், அளவுக்கதிகமாக சார்பிட்டாலை உண்ணும் போது குடலில் அசௌகரியம் ஏற்படக் கூடும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து பெறுவதற்கு தங்களின் உணவு முறையில் நிறைய பிற பழங்களையும், காய்கறிகளையும் கூட சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை பேரிக்காய்களை உண்ண வேண்டும்?(How many pears should a pregnant woman eat?)

பேரிக்காய்களில் அதிக ஊட்டச்சத்தும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், கர்ப்ப காலத்தில் பேரிக்காய் உண்பது நல்லது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 சராசரி அளவுள்ள பேரிக்காய்களை உண்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பேரிக்காய்களில் மலமிளக்கித் தன்மை உள்ளதால், குறிப்பிட்ட இந்த அளவுக்கு மேல் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பேரிக்காய்களை நான் எப்படி தேர்வு செய்து, ஸ்டோர் செய்ய வேண்டும்?(How should I select and store pears)

நீங்கள் பேரிக்காய் வாங்கும் போது திடமானவையாக பார்த்து வாங்க வேண்டும். மேலும் புள்ளிகள் இல்லாதவையாக பார்த்துக் கொள்ளவும். ஏனெனில், அவை பழம் அழுகிப் பொய் இருப்பதைக் குறிக்கலாம். ஒரு வேளை பேரிக்காய்கள் முழுமையாக பழுக்கவில்லையென்றால், அவற்றை பழுக்கும் வரையில் அறை வெப்பநிலையிலேயே வைத்திருக்கவும். எனினும், பேரிக்காய் மிகவும் பழுத்திருந்தால் (கொழ கொழ என்றிருப்பது), அதனை உடனடியாக தூக்கியெறிந்து விடவும். பேரிக்காய்களை பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பையில் வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் நீண்ட நாளைக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் கர்ப்ப கால உணவுமுறையில் பேரிக்காய்களை எப்படி சேர்த்துக் கொள்வது?(How can pears be added to your pregnancy diet)

கர்ப்ப காலத்தின் போது பேரிக்காய்களை அப்படியே சாப்பிடலாம். அவற்றை பீநட் பட்டர் அல்லது ஹம்மஸ் அல்லது பழங்களின் கூடவே நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். பேரிக்காய்களை வேக வைத்து, கூழாக அடித்து பேரிக்காய் சாஸ் செய்து வைத்துக் கொண்டால், குளிர்காலத்தின் போது பிரட் மற்றும் கேக் ஆகியவற்றுக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும். எனினும், பேரிக்காய்களை நீண்ட நேரத்திற்கு சமைக்கும் போது அவற்றிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகளை இழக்கும் படி ஆகிறது. ஆகவே, பொதுவாக இந்த பழங்களை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கர்ப்பமாக இருக்கும் போது பேரிக்காய் தோலை சாப்பிடுவது சரியானது தானா?(Is it ok to eat pear skin when pregnant)

ஆம், கர்ப்ப காலத்தின் போதும், பொதுவாகவும் பேரிக்காய்களை தோலுடன் சாப்பிடுவது பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தின் போது பேரிக்காய் தோலை சாப்பிடுவதால் தீங்கு விளையுமென்று எந்த ஆய்வுகளும் தெரிவிக்கவில்லை. எனினும், எந்தவொரு பழத்தையோ அல்லது காய்கறியையோ உபயோகிக்கும் முன்னர் சுத்தப்படுத்துவது போலவே, பேரிக்காயையும் முழுமையாக கழுவி சுத்தப்படுத்திய பிறகு உண்ணவும்.

பேரிக்காய்களை உண்பதால் வாயு உருவாகுமா?(Does eating pears create gas?)

சார்பிட்டால் மற்றும் ஃப்ரக்டோஸ் (பழ சர்க்கரை) மிகுதியாக இருப்பதால், கர்ப்ப காலத்தின் போதும், பொதுவாகவும் பேரிக்காய்களை அளவுக்கதிகமாக உண்ணும் போது, வாயு மற்றும் உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும், இது வயிற்றுப்போக்கையும், வயிற்று வலியையும் கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

Tags

pears in pregnancy in tamil,pears during pregnancy in tamil, is pears safe in pregnancy in tamil ,benefits of pears in tamil, howmany pears should i eat perday in preganancy in tamil,risks of pears during pregnancy in tamil

எதிர்பார்ப்பில் இருக்கும் தாய்மார்களால் நம்பப்படுபவை

ஊட்டச்சத்து நிறைந்த உணவோடு, கர்ப்ப காலத்தில் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான கூடுதல் ஆதரவை சரியான தயாரிப்புகள் வழங்கும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

531 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3701 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.