This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் தயிர்: தொடர்புடைய நன்மைகள், பக்கவிளைவுகள் & தற்காப்பு | Curd During Pregnancy: Benefits, Side Effects & Precautions In Tamil

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
கர்ப்ப காலத்தில் தயிர்: தொடர்புடைய நன்மைகள், பக்கவிளைவுகள் & தற்காப்பு | Curd During Pregnancy: Benefits, Side Effects & Precautions In Tamil
Likes4 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • தயிர் பாலை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இதில் லாக்ட்டோஸ் உடைக்கப்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கால்சியம், புரதம் நிறைந்துள்ளது.
  • கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும், உடல் வெப்பம் குறையும் மற்றும் இரத்த அழுத்தம் சீராகும்.
  • கால்சியம் நிறைந்த தயிர் தாயின் எலும்புகளையும் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களையும் வலுப்படுத்துகிறது, மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்திற்கு எது உதவும்? Explore our Vitamin C Moisturizer - 100 gm.
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

யோகர்ட் என்றும் அழைக்கப்படும் தயிர், இந்திய உணவுகளில் உபயோகப்படுத்தப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருள். பாலை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் தயிரானது சருமத்திற்கும் நம் உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. குளிர்ந்த தயிரை அருந்துதல் அல்லது தயிரைக் கடைந்து மோராக குடித்தல் உங்கள் உடல் வெப்பத்தை குளிர்விக்கிறது. குறிப்பாக இது கோடை காலத்தில் அருந்த வேண்டிய சிறந்த குளிர்பானம்.

யோகர்ட்டின் ஊட்டச்சத்து மதிப்பு (Nutritional value of yoghurt in Tamil)

நமது உடலுக்கு பால் மிகுந்த நன்மை பயக்குகிறது, மேலும் இது புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த ஊட்டசத்தான உணவு. லாக்ட்டோஸ் இருப்பதால் பால் குடிப்பது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். தயிர் பாலினால் செய்யப்பட்டது என்றாலும், அதை புளிக்க வைக்கும் செயல்முறை லாக்ட்டோஸை உடைக்கிறது. ஆகவே, இவ்வாறு உடைக்கப்படும் பெரும்பாலான லாக்ட்டோஸ் செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. இது வயிற்று செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துகிறது - தயிர் அருந்துவது உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

தயிரில் இருக்கும் லாக்டோபேசில்லஸ் எனப்படும் பாக்டீரியாவின் இருப்பு வெஜைனல் ஈஸ்ட் நோய்த்தொற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது நோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. தயிரில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இல்லை. இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் நிறைந்திருப்பதால் கர்ப்ப கால உணவில் சேர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது.

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eating curd during pregnancy in Tamil)

  • கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும், உடல் வெப்பம் குறைவது மட்டுமின்றி சீரான இரத்த அழுத்தம் ஏற்படும். தயிர் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருப்பதுடன் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கும் உகந்ததாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் செரிமான அமைப்பு சீராக இருப்பது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. கர்ப்ப காலத்தில், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஆகவே, தினமும் தயிர் அருந்துதல் அல்லது காய்கறிகள், பழங்களுடன் தயிரை கலந்து சாப்பிட்டு வருவது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

  • கர்ப்ப காலத்தில், மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக இருக்கும். தயிரின் புரோபயாடிக் பண்பு குடல் இயக்கங்களை ஒழுங்குப்படுத்தி உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளை விரும்புவார்கள், மேலும் அதனுடன் தயிர் உட்கொள்வது அதிகப்படியான காரமான உணவுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவும். இனிப்பு சாப்பிட வேண்டுவது போல இருக்கும் கர்ப்பிணிகள் ஒரு கிளாஸ் ஸ்மூத்தி அல்லது பழங்களுடன் கலந்த சர்க்கரை சேர்க்கப்பட்ட தயிரை அருந்துவது இனிமையாகஇருக்கும.

  • கால்சியம் நிறைந்த தயிர் கர்ப்ப காலத்தில் பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, குறிப்பாக பிரசவத்துக்கு பின் இது பெண்களுக்கு மிகவும் நல்லது. மேலும், இது உங்கள் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களையும் வலுப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் தயிரை உட்கொள்வது உங்கள் உடல் மற்றும் சருமத்தை ஹைட்ரேட் செய்து, ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் கர்ப்ப காலத்தில் வறட்சியால் ஏற்படும் தோல் எரிச்சல் நீங்கும்.

  • கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்து. ஆகவே, கர்ப்ப காலத்தில் தயிர் எடுத்துக் கொண்டால், உயர் இரத்த அழுத்தம் குறைந்து பாதுகாப்பான பிரசவம் ஏற்பட அது வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுவதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் (Side effects of eating curd during pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படும் வரை, அது பாதுகாப்பானது. இருப்பினும், பெண் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அடிக்கடி இனிப்பு சேர்த்த தயிரை உட்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே, தயிருடன் கலந்து சில உணவுகளைத் தவிர்த்து கவனமாக இருக்க வேண்டும்; பால், மீன் அல்லது அமில நிறைந்த பழங்கள் வயிற்று வலியை ஏற்படுத்தும். சந்தேகம் இருந்தால், எப்போதும் மருத்துவரை அணுகவும். கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிட வேண்டிய சிறந்த நேரம் பகல் நேரம் ஆகும்.

நீங்கள் எந்த வகை யோகர்ட்டை சாப்பிட வேண்டும்? (What types of yogurt should you eat in Tamil)

வடிகட்டபட்ட மற்றும் குறைந்த லாக்டோஸைக் கொண்டிருக்கும் பிளைன் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட கிரீக் யோகர்ட் சிறந்தது. இனிப்பு சேர்க்கப்படாத கிரேக்க தயிரில் குளுக்கோஸ் இல்லை, மேலும் கர்ப்ப கால நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பாதுகாப்பானது. ஃப்ரூட் யோகர்ட் போன்ற இயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட தயிர் கர்ப்ப காலத்தில் சாப்பிட பாதுகாப்பானது.

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடும் போது எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions while eating curd during pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பச்சை பால் அல்லாமல் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலை புளிக்க வைப்பதன் மூலமே தயிர் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காலாவதி தேதி மற்றும் சர்க்கரை அளவும் இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது தயிர் சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக இருக்கும் என்று சொல்வது சரியா? (Is you eat yogurt during pregnancy, the baby will be white?)

ஒரு தாய் என்ன சாப்பிடுகிறாளோ, அதை குழந்தைப் பெறுகிறது என்பது பரவலாக அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், கர்ப்ப காலத்தில் ஒரு தாய் தயிர் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக இருக்கும் என்ற கருத்து தவறானது . தினமும் தயிரை உட்கொள்வது உங்கள் சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது, சருமம் ஈரப்பதம் மிக்கதாகவும் மிருதுவாகவும் மாறுகிறது. தயிர் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால், அது உங்கள் சருமத்தில் பிரதிபலிக்கும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தேநீர்: நீங்கள் குடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய தேநீர்கள்(Tea During Pregnancy: Teas You Should Drink & Avoid In Tamil)

ஆரோக்கியமான மற்றும் சுவையான தயிர் ஸ்மூத்தி செய்முறை (Healthy and delicious yogurt smoothie recipe)

மிகவும் பிரபலமான யோகர்ட் ஸ்மூத்திகள் பெரும்பாலானவை ஃப்ரோசன் பெர்ரி மற்றும் நட்ஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவை புளிப்பு சுவையை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களுக்கு உதவும் ஸ்மூத்திக்களை செய்ய பழுத்தப் பழங்களைப் பயன்படுத்துங்கள். நட்ஸ் அல்லது சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளைச் சேர்ப்பது நிச்சயமாக அதை அதிக சுவை நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது. ஆரோக்கியமான தயிர் ஸ்மூத்திக்கான அற்புதமான செய்முறை பின்வருமாறு;

தேவையான பொருட்கள் :

  • பழுத்த ஃப்ரோசன் வாழைப்பழம் - ஒரு கை நிறைய

  • பழுத்த ஃப்ரோசன் ஆப்பிள் - ஒரு கை நிறைய

  • வெண்ணிலா எசன்ஸ் - 1 டிஸ்பூன்

  • உங்கள் விருப்பத்திற்கேற்ற நட்ஸ் அல்லது விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

  • ஐஸ் கட்டிகள் - 2-3

  • இனிப்பு சேர்க்கப்படாத தயிர் - 1 கப்

செய்முறை:

ஃப்ரோசன் பழங்கள், ஐஸ் கட்டிகள் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை பிளெண்டரில் சேர்த்து நன்கு அரைக்கவும். தயிரை ஊற்றி மீண்டும் அரைக்கவும். தேவைப்பட்டால், ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். பரிமாறும் டம்ளரில் ஊற்றவும். நட்ஸ் அல்லது விதைகளை பொடியாக அரைத்து ஸ்மூத்தியின் மேல் வைக்கவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்மூத்தியை அருந்தி மகிழுங்கள்.

References

1. He A, Chin J, Lomiguen CM. (2020). Benefits of Probiotic Yogurt Consumption on Maternal Health and Pregnancy Outcomes: A Systematic Review. Cureus.

2. Kriss JL, Ramakrishnan U, Beauregard JL, Phadke VK, Stein AD, Rivera JA, Omer SB. (2018). Yogurt consumption during pregnancy and preterm delivery in Mexican women: A prospective analysis of interaction with maternal overweight status. Matern Child Nutr.

Tags

Curd During Pregnancy in Tamil, What is nurtitional value of curd in Tamil, Can I eat Curd During Pregnancy in Tamil, What are benefits of eating Curd During Pregnancy in Tamil, What are the side-effects of eating Curd During Pregnancy in Tamil, Curd During Pregnancy in English, Curd During Pregnancy in Hindi, Curd During Pregnancy in Telugu, Curd During Pregnancy in Bengali

கர்ப்பிணித் தாய்மார்களால் நம்பப்படும் ஆரோக்கிய துணைகள்

சரியான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு பொருட்கள் உங்கள் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்க உதவும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3747 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2006 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.