This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர்: விளைவுகள், அபாயங்கள் மற்றும் நன்மைகள் (Cauliflower During Pregnancy: Effects, Risks & Benefits In Tamil)

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர்: விளைவுகள், அபாயங்கள் மற்றும் நன்மைகள் (Cauliflower During Pregnancy: Effects, Risks & Benefits In Tamil)
Likes4 Likes|
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • காலிஃபிளவரில் ஃபோலேட், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன, இவை குழந்தையின் நரம்பு குழாய் வளர்ச்சிக்கும், பிறவிக் குறைபாடுகளை தடுப்பதற்கும் உதவுகின்றன.
  • கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவது பாதுகாப்பானது; நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கல் தடுப்பதற்கும், ப்ரீ-எக்லாம்ப்சியா அபாயத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.
  • அளவுக்கதிகமாக உண்ணும் போது வாயு, உப்பிசம், கோலிக் வலி ஏற்படக் கூடும்; சிறுநீரகக் கற்கள் அல்லது கீல்வாதம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்ப கால ஊட்டச்சத்துக்கு என்ன உதவும்? Explore our Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g.
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக குறிப்பிடத்தக்க உணவு வகைகளை சாப்பிடுமாறு பெரியவர்கள் பலவற்றை பரிந்துரைப்பார்கள். ஊட்டச்சத்து மிக்க, சமச்சீரான உணவுமுறையை மேற்கொள்வது, தாய்க்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமானதாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதும் பரிந்துரைக்கப்படக் கூடிய அப்பேற்பட்ட காய்கறிகளுள் ஒன்று தான் காலிஃபிளவர். ஒரு வேளை நீங்கள் - கர்ப்பிணிப் பெண்கள் காலிஃபிளவர் சாப்பிடலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். இந்த வலைப்பக்கத்தில் கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் உண்பதை பற்றியும், அதன் நன்மைகள் மற்றும் அதன் அபாயங்கள் ஆகியவை குறித்தும் கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன.

காலிஃபிளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?( benefits of eating cauliflower in tamil)

காலிஃபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. காலிஃபிளவரில் உடலிற்கு அநேக நன்மைகளை வழங்கக் கூடிய ஆன்டிஆக்சிடன்ட்களும், ஃபைட்டோ கெமிக்கல்களும் கூட உள்ளன. இப்போது, கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் உண்பதால் கிடைக்கும் குறிப்பிட்ட நன்மைகள் என்னென்ன?

  • முதன்மையாக, காலிஃபிளவரில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நரம்பு குழாய் குறைபாடுகள் உள்ளிட்ட, பிறவிக் குறைபாடுகளை தடுப்பதற்கு ஃபோலேட் உதவுகிறது.

  • இரண்டாவதாக, காலிஃபிளவரில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் குழந்தையை நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்கு உதவுவுதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமாகும். கொலாஜெனின் உருவாக்கத்திற்கு கூட வைட்டமின் சி தேவைப்படுகிறது. குழந்தையின் எலும்புகள், பற்கள் மற்றும் இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கொலாஜென் மிகவும் முக்கியமாகும்.

  • மூன்றாவதாக, காலிஃபிளவரில் ஆன்டிஆக்சிடன்ட்களும், ஃபைட்டோ கெமிக்கல்களும் உள்ளன. இந்த பொருட்கள் சில நாள்பட்ட வியாதிகள் வராமல் பாதுகாப்பதற்கு உதவியாய் இருக்கும். இது ப்ரீ-எக்லாம்ப்சியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைப்பதற்கு கூட உதவக் கூடும்.

  • இறுதியாக, காலிஃபிளவரில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் பொதுவாகவே காணப்படும், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவியாய் இருக்கும்.

ஆகவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவுமுறையில் காலிஃபிளவரை சேர்த்துக் கொள்ளவும். இது உங்களையும், உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக் கூடிய ஊட்டச்சத்து நிரம்பப் பெற்ற காய்கறியாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு காலிஃபிளவர் பாதுகாப்பானது தானா?(Is Cauliflower safe for pregnant women in tamil?)

  • கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவது பாதுகாப்பானது தானா அல்லது கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவது நல்லதா என்று கர்ப்பிணிப் பெண்கள் எப்போதுமே சிந்தித்துக் கொண்டிருப்பர். இங்கு அவர்கள் பல வழிகளிலும் சிறப்பான இந்த காயினை தங்களுடைய உணவுமுறையில் சேர்ப்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

  • எந்தவொரு டயட்டிற்கும் காலிஃபிளவரை சேர்த்துக் கொள்வது, நல்ல ஊட்டச் சத்தினை வழங்குவதாகவே இருக்கும், எனவே கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து மிக்க இந்த உணவினை உண்டு இதன் நற்பயன்களை கண்டிப்பாக அடைய வேண்டும்.

  • கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவது நல்லது, மேலும் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் எந்த பிரச்சினையுமின்றி காலிஃபிளவரை உண்ணலாம். எனினும், அவர்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமைகள் வரலாறு இருந்தால், அவர்கள் காலிஃபிளவர் அல்லது எந்தவொரு புதிய உணவினையும் உண்பதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். மேலும், காலிஃபிளவரை அளவுக்கதிகமாக உண்ணும் போது வாயுத் தொந்திரவு மற்றும் உப்பிசம் ஏற்படக் கூடும்.

அதிகப்படியாக காலிஃபிளவர் உண்பதால் ஏற்படும் விளைவுகள்(Effects of excessive cauliflower consumption in tamil)

அதிகப்படியாக காலிஃபிளவர் உண்பதால் ஏற்படும் விளைவுகள் பின்வருமாறு:

  • வாயு

  • உப்பிசம்

  • வயிற்றுப் பொருமல்

  • வயிற்றிலும், குடலிலும் வலியினை ஏற்படுத்தும் கோளாறு (கோலிக் பெயின்)

  • வயிற்று வலி

  • நெஞ்செரிவு

  • செரிமான பிரச்சினைகள்

  • டாக்சோப்ளாஸ்மோசிஸ் போன்ற உணவு மூலம் பரவும் வியாதிகள்

கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் உண்பதால் ஏற்படும் அபாயங்கள்(Cauliflower risks during pregnancy in tamil)

கர்ப்பிணிப் பெண்களுக்கு காலிஃபிளவர் பல நன்மைகளை விளைவிக்கும் ஆற்றலுடைய ஆரோக்கியமான ஒரு காய்கறியாகும்; எனினும், மிதமிஞ்சிய அளவிற்கு காலிஃபிளவரை உண்பதால் உப்பிசம் மற்றும் வாயுத் தொந்திரவு ஏற்படக் கூடும். க்ரூசிஃபெரஸ் குடும்பத்தின் அங்கமாக காலிஃபிளவர் இருப்பதால், அதில் சல்ஃபர் சேர்மங்கள் உள்ளன. அளவுக்கதிகமாக உண்பதால் வாயுப் பிரச்சினை மற்றும் உப்பிசம் ஏற்படும், அதன் விளைவாக கோலிக் வலியும் (வயிற்றிலும், குடலிலும் வலியினை ஏற்படுத்தும் கோளாறு) கூட ஏற்படக் கூடும்.

மேலும், காலிஃபிளவரில் அதிக அளவில் ப்யூரின்கள் இருப்பதால், சிறுநீரகக் கற்கள் அல்லது கீல்வாதம் ஏற்படும் அபாயமுள்ள கர்ப்பிணிப் பெண்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தங்களின் மூன்றாம் மும்மாதங்களின் இறுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், காலிஃபிளவரினால் உண்டாகும் வாயு வலியை, பிரசவ வலியென்று தவறாக எண்ணிக் கொள்ளும் வாய்ப்புள்ளது, இது பதற்றமான மனநிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் அளவுக்கதிகமாக காலிஃபிளவர் உண்பதை தவிர்க்க வேண்டும்.

காலிஃபிளவர்: உங்கள் டயட்டில் எப்படி சேர்ப்பது?(Cauliflower: How to add it to your diet in tamil?)

காலிஃபிளவரை சமைப்பதற்கு முன், ஓடும் நீரில் நன்கு சுத்தமாக அதனை கழுவவும். அதன் தண்டுப் பகுதி மற்றும் இலைகளை வெட்டி நீக்கி விட்டு, சிறு சிறு பூக்களாக பிரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், 5 முதல் 10 நிமிடங்களுக்கு வெட்டி வைத்த பூக்களை தண்ணீரில், அவை சிறிது மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் நீராவியில் வேக வைத்த அல்லது வேக வைத்த காலிஃபிளவரை தங்கள் உணவுடன் கூடவே சேர்த்து சாப்பிடலாம். அவர்கள் சமைத்த/நீராவியில் சமைத்த காலிஃபிளவரை வைத்து சுவையான க்ரீம் சூப்-ஐ தயாரிக்கலாம், ஆயினும் நீராவியில் வேக வைக்கப்பட்ட காலிஃபிளவர் பெரும்பாலும் சுவை குறைவாகவே இருக்கும். காலிஃபிளவரை சிறு சிறு துண்டுகளாக்கி, மொறுமொறுவென்று வறுத்து விட்டால், சோறுடன் சேர்த்து தொட்டுக் கொள்வதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதே போலவே, காலிஃபிளவரை சமைப்பதற்கு பல்வேறு பிற மரபு வழிகளும், நவீன முறைகளும் உள்ளன.

காலிஃபிளவர் சாப்பிடும் போது நீங்கள் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?(What safety measures can you take when consuming cauliflower in tamil?)

  • கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் சாப்பிடுவது பொதுவாகவே பாதுகாப்பானது தான் என்றாலும், கர்ப்பிணிப் பெண்கள் அதனை சாப்பிடும் போது மேற்கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன.

  • காலிஃபிளவர் வாங்கும் போது, வெள்ளையாகவோ அல்லது க்ரீம் நிறத்திலோ பழுப்பு நிற புள்ளிகள் இல்லாத பூவாக பார்த்து வாங்க வேண்டும். பூக்கள் தனித்தனியாக பிரியும் நிலையிலுள்ள சிறிய காலிஃபிளவரையோ அல்லது வாடிப் போயிருக்கும் அல்லது மஞ்சள் நிறமாயுள்ள இலைகள் கொண்ட பூவையோ வாங்குவதை தவிர்க்கவும்.

  • அடுத்து, அது நன்றாக சமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். காலிஃபிளவரில் பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளதால், உணவின் மூலம் ஏற்படக் கூடிய உடல்நலக் கேட்டினை தவிர்ப்பதற்கு அதனை நன்றாக சமைப்பது மிகவும் அவசியமாகும். காலிஃபிளவரை உண்ணும் போது, வாயுப் பிரச்சினை மற்றும் உப்பிசம் ஏற்படாமல் தடுப்பதற்கு நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

  • மற்ற உணவுப் பொருள்களை போலவே, காலிஃபிளவரையும் அளவாக சாப்பிடவும். கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் உண்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், உங்கள் மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்கவும்.

Tags

cauliflower during pregnancy in tamil, eating cauliflower in pregnancy in tamil, risks of cauliflower in pregnancy in tamil, benefits of cauliflower during pregnancy in tamil

எதிர்பார்ப்பில் இருக்கும் அன்னையர்களால் நம்பப்படும் தேர்வுகள்

சமச்சீரான உணவுடன் கூடவே, கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் துணை பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும்.

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

530 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3672 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.