This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?(When Should You Take A Pregnancy Test With Irregular Periods? In Tamil)

Pregnancy Tests
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?(When Should You Take A Pregnancy Test With Irregular Periods? In Tamil)
Likes31 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு கர்ப்பத்தைக் கண்டறிவது சவாலானது, ஏனெனில் மாதவிடாய் தவறியதா என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது, எனவே மற்ற அறிகுறிகளைக் கவனிப்பது அவசியம்.
  • கரு பதிவதினால் ஏற்படும் இரத்தக் கசிவு, குமட்டல், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மனநிலை மாற்றங்கள், மென்மையான மார்பகங்கள் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாயின் போதான கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.
  • கடைசி மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திலிருந்து 36 நாட்கள் அல்லது கடைசியாக உடலுறவு கொண்டதிலிருந்து 4 வாரங்கள் கழித்து வீட்டு கர்ப்ப பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி கர்ப்பத்தை துல்லியமாக சரிபார்க்கலாம்.
  • சரியான கர்ப்ப பரிசோதனை கருவியை எவ்வாறு தேர்வு செய்வது? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4
  • நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு சிலிர்ப்பான அனுபவமாகும். கர்ப்பத்தின் மிகவும் பொதுவான அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவதே ஆகும். ஆனால் ,உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால் என்ன செய்வது? உங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், அந்த சூழ்நிலையில் கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்வோம்.

  • மாதவிடாய் சுழற்சி என்பது பெண்கள் பூப்பெய்திய காலத்தில் இருந்தே மாதா மாதம் நிகழும் ஒரு செயல்பாடாகும். மாதவிடாய் வராமல் தள்ளிப் போகும் பட்சத்தில், ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக எதிர்பார்க்கலாம்.

  • பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் நீடிக்கும் (இருப்பினும் வரம்பு 24 முதல் 38 நாட்கள் வரை மாறுபடும்). மாதவிடாய்கள் 24 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 38 நாட்களுக்கு மேலாகவோ இடைவெளி இருந்தால் மற்றும் சுழற்சியின் காலம் மாறிக்கொண்டே இருந்தால், அவை ஒழுங்கற்றவை என்று அழைக்கப்படுகின்றன.

  • ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கர்ப்பம் பற்றி மேலும் புரிந்து கொள்ள, இந்த கட்டுரையில் பின்வரும் தலைப்புகளை அறிந்து கொள்ளலாம்:

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணங்கள்(Causes of Irregular Periods In Tamil)

கர்ப்பத்தைத் தவிர, பல்வேறு காரணிகள் மாதவிடாய் ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பத்தில் தாமதத்தை ஏற்படுத்தும். ஏனெனில், ஓவுலேஷன் காலம் மாதத்திற்கு மாதம் மாறுபடும். ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான சில பொதுவான காரணங்கள்:

  • இளமைப் பருவம் மற்றும் பெரிமெனோபாஸ் காலத்தில் மாதவிடாய் ஒழுங்கின்மை பொதுவானது.

  • கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய்

  • மன அழுத்தம்

  • உணவுக் கோளாறுகள்

  • சில மருந்துகள்

  • பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்

  • கடுமையான உடற்பயிற்சிகள்

  • தூங்கும் நேரத்தின் மாற்றம்

  • தாய்ப்பால் கொடுப்பது

  • பொதுவான நோய்கள்

ஒழுங்கற்ற மாதவிடாயின் போது கர்ப்பத்தை எவ்வாறு திட்டமிடுவது?(How to Plan Pregnancy with Irregular Periods?In Tamil)

ஓவுலேஷனின் போது உடலுறவு கொள்ளும்போது ஒரு பெண் கர்ப்பமாகிறாள். ஆனால், அதுவே ஒருவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், ஓவுலேஷன் காலத்தை தீர்மானிப்பது சவாலானது. இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஒரு மனிதனின் விந்தணு ஒரு பெண்ணின் உடலில் ஒரு முறை வெளியேறினால், அது ஐந்து நாட்களுக்கு ஆயுளைக் கொண்டுள்ளது. எனவே, ஒழுங்கற்ற மாதவிடாயின் போது கர்ப்பம் பெற எளிதான வழி மாதம் முழுவதும் வழக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாகும். ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது, விந்தணுக்கள் முட்டையை அடையாததற்கு வாய்ப்பு மிகக் குறைவு.

ஒழுங்கற்ற மாதவிடாயின் கர்ப்பத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?(How to Check Pregnancy with Irregular Periods? In Tamil)

ஒரு பெண்ணுக்கு வழக்கமான சுழற்சி இருந்தால், மாதவிடாய் தவறியிருப்பது அவள் கர்ப்பமாக இருப்பதற்கான மிக முக்கியமான அடையாளமாகும். ஆனால், ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், மாதவிடாய் தாமதமாகிவிட்டதா அல்லது மாதவிடாய் தவறிவிட்டதா என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதால் இது தெளிவாகத் தெரிவதில்லை. ஒழுங்கற்ற மாதவிடாயுடன் கூடிய கர்ப்பத்தின் சந்தர்ப்பங்களில், மற்ற அறிகுறிகளும் உள்ளன, நீங்கள் அவற்றை கவனிக்க வேண்டும்.

1) கரு பதிவதினால் ஏற்படும் இரத்தக் கசிவு அல்லது இரத்தப் போக்கு(Implantation Bleeding or Spotting)

கருத்தரித்த 1 அல்லது 2 வாரங்களுக்குப் பின்னர் கரு பதித்தல் நடக்கும். இதனை ஒரு லைட் மாதவிடாயாக தவறாக கருதலாம். அதனை வேறுபடுத்தும் விஷயங்கள் இதோ:

  • கரு பதிவதினால் ஏற்படும் இரத்தக் கசிவினால் இரத்தம் உறையாமல் இருத்தல்

  • மிகவும் லைட்டானது

  • இது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும், மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு சிவப்பு நிறமாக இருக்கும்

  • இது 1 முதல் 3 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

2) குமட்டல் அல்லது மசக்கை(Nausea or Morning Sickness)

ஹார்மோன் மாற்றங்கள் காலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன, இது குமட்டலுக்கு வழிவகுக்கும், இது வாந்தியுடனும் இல்லாமலும் இருக்கலாம். காலையில் பொதுவாக பாதிப்பிருந்தாலும், அத்தகைய குமட்டல், கர்ப்பிணிகளை நாளின் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யலாம்.

3) சோர்வு(Fatigue)

அதிகரிக்கும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு, கருவுற்ற கருமுட்டைக்குத் தன்னைத் தயார்படுத்தும் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. அந்த மாற்றங்கள் கர்ப்பிணிப் பெண்களை உடல் ரீதியாக பாதிக்கிறது.

5) அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Frequent urination)

இந்த அறிகுறி கர்ப்பம் முழுவதும் இருக்கும்.

6)மனநிலை மாற்றங்கள்(Mood Swings)

7)வீக்கம் அல்லது மென்மையான மார்பகங்கள்(Swollen or tender breasts)

8)தலைவலி(Headaches)

9)முதுகுவலி(Backaches)

10) சில உணவுப் பொருட்களின் மீது ஆசை மற்றும் வெறுப்பு(Cravings and aversions toward certain food items)

ஒழுங்கற்ற மாதவிடாய்களின் போது கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?(When to Take a Pregnancy Test with Irregular Periods?In tamil)

நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும், உங்கள் கடைசி மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திலிருந்து 36 நாட்கள் அல்லது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டதிலிருந்து 4 வாரங்கள் என எண்ணலாம். இந்த நேரத்தில், நீங்கள் கர்ப்பமாக இருந்தால் சிறுநீர் பரிசோதனையில் கண்டறியக்கூடிய அளவுக்கு உங்கள் கோனாடோட்ரோபின் (எச்சிஜி/hCG) அளவு அதிகமாக இருக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாயின் போது கர்ப்பத்தை கண்டறிதல்(Diagnosis of Pregnancy with Irregular Periods In Tamil)

வழக்கமான மாதவிடாய் உள்ள பெண்களுக்கு வீட்டு கர்ப்ப பரிசோதனை கருவிகள் பொதுவாக துல்லியமாக இருக்கும். ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவள் கர்ப்பத்தின் அறிகுறிகளை அனுபவித்தாலோ அல்லது அவளது மாதவிடாய் எதிர்பார்த்ததை விட தாமதமாகினாலோ, நிலைமை சவாலாக இருக்கும். கருத்தரித்த உடனேயே உயரத் தொடங்கும் சிறுநீரில் உள்ள கோனாடோட்ரோபின் (hCG) அளவைக் கண்டறிவதால், கடைசி உடலுறவுக்குப் பிறகு 28 நாட்களுக்கு முன்பே இந்த கருவி கர்ப்பத்தைக் கண்டறியும்.

சோதனை நெகட்டிவாக வந்து, கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்ந்தால், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை செய்யப்பட வேண்டும். சோதனை மறுபடி நெகட்டிவாக இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாயின் போதான கர்ப்பத்திற்கு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?(When to See a Doctor for Pregnancy with Irregular Periods? In Tamil)

கர்ப்ப அறிகுறிகள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக தாமதமான மாதவிடாய் ஏற்பட்ட பிறகும் உங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை நெகட்டிவாக இருந்தால், நீங்கள் கர்ப்பத்திற்காக மருத்துவரை சந்திக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதிப்படுத்த, மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்வார்:

ஒழுங்கற்ற மாதவிடாயின் போதான பிரசவ தேதியை எவ்வாறு தீர்மானிப்பது(How to Determine Pregnancy Due Date with Irregular Periods In Tamil)

ஒழுங்கற்ற மாதவிடாயின் போதான கர்ப்பத்தின் விஷயத்தில், LMP அதாவது, கடைசி மாதவிடாய் காலத்தைப் பயன்படுத்தி பிரசவத்தின் இறுதி தேதியை தீர்மானிக்க மிகவும் கடினமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், அல்ட்ராசவுண்ட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பமாகி 6 வாரங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யலாம். இது கருவின் வளர்ச்சியை கவனிக்கிறது, எனவே கர்ப்பகால வயதைக் கணக்கிட உதவுகிறது. பிரசவத்தின் சரியான தேதியைத் தீர்மானிக்க இது மேலும் உதவுகிறது.

சிகிச்சை(Treatment)

ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் உறுதி செய்யப்பட்டால், வழக்கமான மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணைப் போலவே வழக்கமான நெறிமுறை பின்பற்றப்படுகிறது.

ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப்படவில்லை என்றால், மாதவிடாய் தாமதம் மற்றும் பிற கர்ப்பம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்களுக்காக அவர் சிகிச்சையளிக்கப்படுகிறார். அவற்றுள் கீழுள்ளவை அடங்கும்-

1) கருப்பை பற்றாக்குறை மற்றும் பிசிஓஎஸ்-க்கான சைக்லிக் ஹார்மோன் சிகிச்சை.

2) மாதவிடாயை சீராக்க வாய்வழி கருத்தடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

3) சர்க்கரை நோய் போன்ற பிற நோய்கள் மூலகாரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சை.

4) மன அழுத்த சிகிச்சை.

5) தூக்கத்தை முறைப்படுத்துதல்.

6) உணவுக் கோளாறுகளுக்கு கவனம் செலுத்துதல் மற்றும் சிகிச்சை செய்தல்

7) பாலூட்டும் தாய்க்கு பாலூட்டிய காலத்திற்கு பிறகு படிப்படியாக மாதவிடாய் வரும்.

இதையும் படிக்கலாமே! - மாதவிடாய் ஆகாமல் இருப்பது (அமேனோரியா): அர்த்தம், அறிகுறிகள், மற்றும் காரணங்கள்

சுருக்கம்

ஒழுங்கற்ற மாதவிடாயை கணிக்க முடியாது என்பதால், பாலுறவில் சுறுசுறுப்பான ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாளா இல்லையா என்பதில் குழப்பமடைகிறாள். அறிகுறிகளைக் கூர்ந்து கவனிப்பது மற்றும் சரியான நேரத்தில் மருத்துவத்தை நாடுவது அவளது பயணத்தை சீராக்க உதவுகிறது. எனவே, உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டாலும், வழக்கத்திற்கு மாறாக மாதவிடாய் தாமதமாகி, வேறு சில கர்ப்ப அறிகுறிகளை அனுபவித்தாலும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கண்டறிய கர்ப்ப பரிசோதனை செய்யலாம்.

கர்ப்பத்தை கனவு காணும் தாய்மார்களின் நம்பிக்கைக்குரிய தேர்வு

ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும், வீட்டிலிருந்தே துல்லியமாகவும் தனிமையாகவும் உங்கள் கர்ப்பத்தை உறுதிசெய்ய உதவும் நம்பகமான தீர்வுகள்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

417 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.