This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

எடை இழப்பு மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (பிரசவ தழும்புகள்): உங்களுக்கான விரைவான வழிகாட்டி(Weight Loss & Stretch Marks: Your Quick Guide In Tamil)

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
எடை இழப்பு மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (பிரசவ தழும்புகள்): உங்களுக்கான விரைவான வழிகாட்டி(Weight Loss & Stretch Marks: Your Quick Guide In Tamil)
Likes1 Likes|
Read time6 min

ஸ்ட்ரெச் மார்க்குகள் பற்றிய அறிமுகம்(An Introduction to Stretch Marks In Tamil)

  • பொதுவாக சருமம் வேகமாக சுருங்கும் போது அல்லது விரிவடையும் போது ஸ்ட்ரெச் மார்க்குகள் (தழும்புகள்) தோன்றும். 90%க்கும் அதிகமானவர்களுக்கு தங்களுடைய எடை இழப்பின் காரணமாக அவர்களுடைய வயிறு, மேற்புற கைகள், மார்பங்கள், தொடைகள் அல்லது பின்புற பிட்டம் பகுதிகளில் ஸ்ட்ரெச் மார்க்குகள் (பிரசவ தழும்புகள்) தோன்றும்.

  • ஆனால், இந்த அறிகுறிகள் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா? அதிர்ஷ்டவசமாக, அப்படி எதுவும் நடக்காது. மற்ற தழும்புகளைப் போலவே, ஸ்ட்ரெச் மார்க்குகள் (பிரசவ தழும்புகளும்) தோலில் இருக்கும் சிறிய உள்தள்ளல் அல்லது மேடு போல உணர்கின்றன. இவை சில நேரங்களில் புண் போலவும் அல்லது அரிப்பு ஏற்படுவது போலவும் இருக்கும். ஆனால் இதைத் தவிர, இவை முற்றிலும் பாதிப்பில்லாதவை தான்.

  • நல்ல செய்தி என்னவென்றால், இந்த ஸ்ட்ரெச் மார்க்குகளை (தழும்புகளை) எப்படி சரி செய்வது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், இவை காலப்போக்கில் மறைந்துவிடும். இந்த வலைப்பதிவின் போஸ்ட் இதைப் பற்றி தான் கூறி இருக்கும். இந்த விரைவான வழிகாட்டியில் ஸ்ட்ரெச் மார்க்குகளுக்கான அத்தியாவசிய மற்றும் சிகிச்சைக்கான விருப்பங்களை நாங்கள் உங்களுக்கு கோடிட்டுக் காட்டுகிறோம் , எனவே எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

எடை இழப்புக்குப் பிறகு ஸ்டெர்ச் மார்க்குகள் ஏற்படுவதற்கான காரணங்கள்(Causes of Stretch Marks after Weight Loss In Tamil)

உடல் எடையை குறைத்த பிறகு ஏன் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வருகிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளது:

  • ஏற்கனவே இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகள்(Pre-existing Stretch Marks):

எடை அதிகரிப்பால் உங்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கிறதா? ஆமாம் என்றால், உடல் எடையை குறைத்த பிறகு இவை வருவதைத் தடுக்க முடியாது, ஏனென்றால் அவை ஏற்கனவே உங்களுடைய தோலில் இருக்கின்றன. எடை இழப்புக்குப் பிறகு அவை பார்ப்பதற்கு மிகவும் தெளிவாகவும் கவனிக்கத்தக்கக் கூடியதாகவும் மாறுகின்றன.

  • அதிகப்படியான தோல்(Excess Skin):

எடை குறைவதால் தோலானது தொய்வடையும். தோலின் இந்த கூடுதல் அடுக்குகள் ஆனது படிப்படியாக தோலின் மற்ற பகுதிகளில் கூடுதல் எடையை ஏற்படுத்துகின்றன. இந்த அதிகப்படியான தோலானது ஆரோக்கியமான தோலை இழுக்கும்போது, வடுக்கள், கிழித்தல் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்கிற்கு வழிவகுக்கிறது.

  • தசை பெருக்கம்(Muscle Gain):

உடல் எடையைக் குறைப்பதற்கு நீங்கள் கடினமான பயிற்சியை மேற்கொள்கிறீர்களா? ஆமாம் என்றால், இதன் மூலமாக வேகமான தசை வளர்ச்சியானது ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பினை உண்டாக்குகிறது என்று அர்த்தம். எனவே, இதற்காக நீங்கள் ஒரு நிலையான வேகத்தில் தசை வலிமைப் பெற முயற்சி செய்ய வேண்டும், மேலும் இந்த நோக்கத்திற்காக நீங்கள் ஸ்டீராய்டு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • விரைவான எடை இழப்பு(Quick Weight Loss):

தோலின் வடிவத்தில் திடீரென்று ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் இதன் விளைவாக ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படலாம். எனவே, வியக்கத்தக்க மாற்றத்திற்கு உடனடியாகச் செல்வதைவிட, ஒரே மாதிரியாக உடல் எடையை குறைக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தீவிர உடற்பயிற்சிகளும், திடீர் உணவுமுறை மாற்றங்களும் உங்களுடைய தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம், இதனால் இவையெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்குகளை உருவாக்கலாம்.

  • மருத்துவ நிலைகள்(Medical Conditions):

இறுதியாக, குஷிங் நோய்க்குறி மற்றும் மார்பன் நோய்க்குறி போன்ற சில மருத்துவ நிலைகள் ஸ்ட்ரெச் மார்க்குகளை ஏற்படுத்தும். மார்பன் நோய்க்குறியால் தோலானது தன்னுடைய நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது. அதே நேரத்தில் குஷிங் நோய்க்குறி அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய் குஷிங் சிண்ட்ரோம் அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால், தோல் உடையக்கூடிய தன்மைக்கு வழிவகுக்கும்.

உடல் எடையைக் குறைக்கும் போது ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகளை எப்படித் தடுக்கலாம்?(How to Prevent Stretch Marks from Losing Weight In Tamil)

உங்களுடைய தோலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை 100% தடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும், சில தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக நீங்கள் இதற்கான ஆபத்தைக் குறைக்கலாம். இது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

  • உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பிஎம்ஐ அல்லது எடையை பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

  • சில மாதங்களுக்குள் உளி வடிவத்தைப் பெறுவதற்கென்று இருக்கும் க்ராஷ் டயட்டுக்கு நோ சொல்லிவிடுங்கள்.

  • உங்களுடைய தோலின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதற்கு நீங்கள் உங்களுடைய உணவில் நிறைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, சிலிக்கான் மற்றும் துத்தநாகம் போன்றவை எடை குறைப்பின் போது உங்களுடைய தோலிற்கு ஆதரவினைத் தரும்.

  • படிப்படியான மற்றும் மெதுவான எடை இழப்பை எப்பொழுதும் நோக்கமாகக் கொண்டிருங்கள். திடீரென்று எடையைக் குறைக்கத் தொடங்கினால் உங்களுடைய தோலானது தொய்வடையும், மேலும், இதனால் ஸ்ட்ரெச் மார்க் கண்டிப்பாகத் தோன்றும்.

இதையும் படிக்கலாமே! - வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகள்: காரணங்கள், சிகிச்சை முறை மற்றும் தடுப்பு(Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention In Tamil)

  • மேலும், ஒரு மாதத்தில் அல்லது ஒரு வாரத்தில் நீங்கள் எடையை இழக்கிறீர்கள் என்றால், இது ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படுவதையும் தீர்மானிக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு, வாரா வாரம் நீங்கள் உங்களுடைய உடல் எடையில் 1% ஐ மட்டும் குறைக்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  • கடைசியாக, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் எட்டு முதல் பத்து டம்ளர் அளவிற்கு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் எடை இழப்பைக் கையாளுவதோடு உங்களுடைய தோலை நீரேற்றமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அபாயத்தைக் குறைப்பதற்கான மற்ற வழிகள்(Other Ways to Reduce Stretch Marks Risk In Tamil)

சில மேற்புற சிகிச்சைகள், எடை இழப்பிற்குப் பிறகு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகளைத் தடுப்பதற்கு உதவும். இதற்கான விருப்பங்களை இங்கே பார்ப்போம்:

  • ஸ்ட்ரெச் மார்க்குகளுக்கான கிரீம்கள்(Stretch Mark Creams):

இந்த லோஷன்களில் பெப்டைடுகள் மற்றும் லிப்பிடுகள் உள்ளன, இவை தோலில் எலாஸ்டின் மற்றும் கொலாஜனைத் தூண்டுகின்றன. இவை குணப்படுத்துதல் மற்றும் தோல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இவை ஸ்ட்ரெச் மார்க்குகள் உருவாவதைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக தோலை உறுதிப்படுத்தி பலப்படுத்துகின்றன.

  • மைக்ரோ நீட்லிங் தெரபி(Micro Needling Therapy):

இது ஒரு மேம்பட்ட தோல் சிகிச்சைக்கான விருப்பமாகும், ஸ்ட்ரெச் மார்க்குகள், சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் போன்ற சிக்கல்களைச் சரிசெய்வதற்கு டெர்மா ரோலர் சாதனம் பயன்படுத்தப்படுத்துகிறது. சிறந்த முடிவுகளுக்கு குறைந்தபட்சம் மூன்று மைக்ரோ-நீட்லிங் அமர்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

எடை இழப்பின் போது உருவாகும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஐ குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்(Tips to Reduce Stretch Marks Visibility from Weight Loss In Tamil)

எடை இழப்பின் போது உருவாகும் ஸ்ட்ரெச் மார்க்ஸைக் குறைப்பதற்கான ஒரு சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தோல் வறட்சியைத் தடுப்பதற்கு நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீரைத் தவிர, வைட்டமின் சி நிறைந்த ஜூஸ்கள், ஸ்மூத்திகள், மில்க் ஷேக்குகள் போன்றவற்றையும் குடிக்கலாம்.

  • ஏழு முதல் எட்டு மணி நேர நல்ல தூக்கமானது தோலை நெகிழ்ச்சியடையச் செய்வதோடு, இதன் நெகிழ்ச்சித்தன்மையையும் முக்கியமாக பராமரிக்கிறது. உங்களிடமிருக்கும் ஸ்ட்ரெச் மார்க்ஸைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

  • தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து ஸ்ட்ரெச் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுவதையும் குறைக்கும்.

  • எடை இழப்பினால் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகளைக் குறைப்பதற்கு, நீங்கள் மேற்புர சிகிச்சை முறைகளையும் முயற்சிக்கலாம். இருந்தாலும், உங்களுடைய தோலில் எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tags :

Stretch marks in tamil, weight loss in tamil, stretch marks during weight loss in tamil, how to reduce stretch marks after weight loss in tamil

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.