This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

ஆனியன் ஹேர் சீரம்-ஐ எவ்வளவு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்?

Hair Problems
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
ஆனியன் ஹேர் சீரம்-ஐ எவ்வளவு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்?
Read time5 min

ஸ்கால்ப்-ல் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஒரு இயற்கையான தீர்வாக ஆனியன் ஹேர் சீரம் விளங்குகிறது. இது வெங்காயத்தின் சாறினால் தயாரிக்கப்படுகிறது. இது முடி கொட்டுதல், பொடுகு, மற்றும் ஸ்கால்ப்-ல் ஏற்படும் பிற பிரச்சனைகளை கையாள்வதற்கு காலம் காலமாக உதவுகிறது.

மைலோ கேர் ஆனியன் ஹேர் சீரம் போன்ற ஹேர் சீரம், புதிதாக முடி வளர்வதற்கும், அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் உதவுவதற்காக பிரத்தேயகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான கேடு தரும் இரசாயன பொருட்களும் இதில் இல்லை. இது கலரிங் செய்யப்பட்ட முடி உள்ளிட்ட, எல்லா விதமான முடி வகைகளுக்கும் கூட பாதுகாப்பானது தான்.

புதிதாக முடி வளர்வதையும், இருக்கின்ற முடியை அழகாகவும், அடர்த்தியாகவும் ஆக்குவதற்கு உதவும் ஹேர் சீரம் வாங்க யாரேனும் விரும்பினால், ஆனியன் சீரம்-ஐ முயற்சி செய்து பார்ப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

ஸ்கால்ப்-ல் ஆனியன் ஹேர் சீரம்-ஐ உபயோகப்படுத்துவது: நன்மைகள் என்னென்ன?

தலையின் மேல் பாகத்திற்கு ஆனியன் ஹேர் சீரம் பல நன்மைகளை செய்கிறது. இது தலையின் மேல் பாகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் அழற்சியையும், அரிப்பையும் குறைப்பதற்கு உதவுகிறது. கூடுதலாக, தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், முடி கொட்டுவதை தடுப்பதற்கும் ஆனியன் ஹேர் சீரம் உதவுகிறது. இதை பற்றி விரிவாக இனி பார்ப்போம்:

தலைமுடி வளர்ச்சியை தூண்டும்

ஆனியன் ஹேர் சீரம்-இல் உள்ள சல்ஃபரானது, முடி வளர்ச்சியை தூண்டுவதாக அறியப்படுகிறது. சொல்லப் போனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், வெங்காய சாறு கொடுக்கப்பட்ட எலிகளின் முடி வளர்ச்சி, மற்ற எலிகளை விடவும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருந்தது.

ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும்

ஆனியன் ஹேர் சீரம் ஸ்கால்ப்பை சுத்தப்படுத்தி, தேங்கிய அழுக்கினை அகற்ற உதவுகிறது. ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் இவ்வாறு சுத்தப்படுத்துவது முக்கியமாகும். கூடுதலாக, இது மயிர்க்கால் அடைப்பை நீக்கி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முடி உடைவதை எதிர்த்து போரிடும்

ஆனியன் ஹேர் கிரோத் சீரம், முடி உடைவதை எதிர்த்து போரிடவும் உதவுகிறது. வெங்காய சாற்றில் சல்ஃபர் இருப்பதன் காரணமாக, மயிர்க்கால்களையும், வெளியே தெரியும் தலைமுடியையும் வலுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, ஸ்ப்ளிட் என்ட்ஸ் என்று சொல்லப்படும் முடியின் அடிப்பகுதி உடைந்து போவதை தடுப்பதற்கும், தலைமுடியை அடர்த்தியாகவும், அழகாகவும் ஆக்குவதற்கு இது உதவும்.

பொடுகை குறைக்க உதவும்

ஆனியன் ஹேர் சீரம்-இல் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகை குறைப்பதற்கு உதவுகிறது. கூடுதலாக, ஸ்கால்ப்-ல் அரிப்பு ஏற்படுவதை தடுத்து ஆறுதல் அளிக்கிறது. வெங்காயத்திலுள்ள சல்ஃபரில் அழற்சியினை எதிர்க்கும் பண்புகள் உள்ளதால் இது சாத்தியமாகிறது.

இதையும் படிக்கலாமே! - முடி உதிர்வை எளிதில் சமாளிக்க உதவும் டாப் 5 டிப்ஸ்

தலைமுடிக்கு ஆனியன் சீரம்-ஐ உபயோகப்படுத்துவது: எவ்வளவு நாளுக்கு ஒரு முறை மற்றும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

தினமும் உபயோகப்படுத்துவது vs வாரம் ஒரு முறை உபயோகப்படுத்துவது

  • ஆனியம் ஹேர் சீரம்-ஐ எவ்வளவு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டுமென்பது நமக்குள்ள பிரச்சனையை பொறுத்தது. இதனை தடுப்பு நடவடிக்கையாக ஒருவர் பயன்படுத்த விரும்பினால், வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. ஒரு வேளை முடி கொட்டும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் ஸ்கால்ப் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலோ, இதனை தினந்தோறும் பயன்படுத்தலாம்.

  • ஆனியன் ஹேர் சீரமினை, ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் மாஸ்க் போன்ற பிற இயற்கையான புராடக்டுகளோடு பயன்படுத்தும் போது, சிறப்பாக செயல்படும் என்பது கவனிக்கத்தக்கது.

  • ஆனியன் ஹேர் சீரமினை முதல் முறையாக பயன்படுத்தும் போது, ஒவ்வாமை ஏதும் ஏற்படுவதை சரி பார்ப்பதற்கு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சிறிதளவு சீரம்-ஐ எடுத்து, முன்னங்கையில் தடவ வேண்டும், பிறகு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிவந்து போவது, அரிப்பு, அல்லது தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லையெனில், தலையின் மேல் பாகத்தில் சீரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும்.

  • தலைமுடி நீளத்தினையும், வகையினையும் பொறுத்தே சீரத்தை உபயோகிக்க வேண்டிய அளவும் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நீளமான தலைமுடி உள்ளவர்களை விடவும், குட்டையான தலைமுடி உள்ளவர்கள் குறைவான அளவு சீரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதே போல, வறட்சியான தலைமுடியை விடவும், எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் குறைவாகவே சீரத்தை பயன்படுத்த வேண்டும்.

அளவு மற்றும் தரம்

ஆனியன் ஹேர் சீரம்-ஐ பயன்படுத்தும் போது, மலிவான தயாரிப்பினை அதிக அளவில் பயன்படுத்துவதை காட்டிலும், நல்ல தரமான தயாரிப்பினை குறைவான அளவு பயன்படுத்துவதே சிறந்தது. ஏனென்றால், தலை மேல் பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பதை தயாரிப்பின் உயர்ந்த தரமே தீர்மானிக்கிறது.

மறு புறம், அளவுக்கதிகமான சீரத்தை பயன்படுத்துவதால், முடி அதிகமாக கொட்ட ஆரம்பித்து விடும். எனவே, குறைவான அளவு சீரத்தை முதலில் எடுத்துக் கொண்டு ஆரம்பிக்கவும், பிறகு தலை மேல் பாகத்துக்கு பொருந்துகிற வகையில் படிப்படியாக சீரத்தின் அளவினை அதிகரிக்கவும்.

ஆனியன் ஹேர் சீரம்-ஐ பயன்படுத்திய பின் பலனளிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

ஆனியன் ஹேர் சீரம்-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் ஒருவருக்கொருவர் மாறுபடும். சிலருக்கு சில வாரங்களிலேயே பலன்கள் தெரியலாம், மற்றவர்களுக்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.

ஆனியன் ஹேர் சீரம்-ஐ பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலனை அடைய ஒருவர் விரும்பினால், அதனை தொடர்ச்சியாகவும், அதில் அறுவுறுத்தப்பட்டபடியும் உபயோகப்படுத்தவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்திய பின்னர் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். எனவே, உடனடியாக பலன்கள் தெரியவில்லையென்றால், சீரத்தை பயன்படுத்துவதை விட்டு விடக் கூடாது, நீங்கள் விரும்பிய பலன்களை அடையும் வரையில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை

ஹேர் சீரம், குறிப்பாக வெங்காய சாற்றினை கொண்டு தயாரிக்கப்படுபவை, அவற்றின் நன்மைகள் காரணமாக மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. தினமும் பயன்படுத்தும் தயாரிப்பாதலால், தலைமுடி வகைக்கு ஏற்றவாறு சரியான ஒன்றை தேர்வு செய்வது அவசியமாகும். தலை மேல் பாகத்தில் முதன் முறையாக ஆனியன் ஹேர் சீரத்தை பயன்படுத்தும் முன்பு, பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுவது முக்கியமானது, இதற்கு மட்டுமின்றி எந்தவொரு புதிய தயாரிப்பினை உபயோகப்படுத்தும் முன்பும் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.