
நல்ல செக்ஸ் வாழ்க்கை என்பது ஒரு மில்லியன் விஷயங்களின் கலவையாகும். அவற்றில் ஒன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்வது. உடலுறவு கொள்வது உங்கள் பார்ட்னருக்கு ஊக்கத்தை அளிக்கும். அதே வேளையில், அத்தகைய நேரங்களில் எடுக்கும் முடிவுகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்காது. பாதுகாப்பின்றி உடலுறவு கொள்வது தன்னிச்சையான முடிவாக இருப்பதுடன் உற்சாகமூட்டுவதாக இருப்பதால், அதில் இறங்குவதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
கணவர் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றால் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது ஓரளவுக்கு பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இது நாம் பொதுவாக நம்பும் ஒரு கூற்றாகும். ஆனால், விந்தணு வெளியாவதற்கு முன் உருவாகும் திரவம் கூட (Precum) கருத்தரிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். முன்கூட்டியே வெளியேறும் திரவம் மற்றும் உச்சகட்டத்தை அடைதல் என்பது இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் ஆகும். இவை இரண்டும் வெவ்வேறு நிலைகளில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். கருத்தடை பாதுகாப்பின்றி உச்சகட்டத்தை அடைவதன் மூலம் கரு உருவாகும் என்பது தம்பதிகளுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் ப்ரீகம் எனும் மூன்கூட்டியே வெளியேறும் திரவம் பற்றி தம்பதிகளுக்கு தெரியுமா? முன்கூட்டியே வெளியேறும் திரவத்தில் இருந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் என்னென்ன? இந்த குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான கட்டுரையைப் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்!
ப்ரீகம் என்பது ஒரு ஆண் உடலில் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான திரவமாகும். இது அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இயற்கையான லூப்ரிகண்டாக செயல்படுகிறது. ப்ரீகம் என்பது விந்தணு வெளியேறிவதற்கு முன் வெளியாகும் ஒரு திரவம். சாதாரண மனிதன் உச்சகட்டத்தில் இருக்கும் சமயத்தில் விந்தணு வெளியாகிறது. ப்ரீகம் என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் பல கூறுகளின் கலவையான ஒரு திரவமாகும். இந்த கூறுகளில் என்சைம்கள், புரதங்கள், சளி மற்றும் பல அம்சங்கள் அடங்கி இருக்கும்.
ஆண் இனப்பெருக்க அமைப்பில் ப்ரீகம்மின் பங்கு, உடலுறவை பாதுகாப்பாகவும் சீராகவும் மட்டுமின்றி எளிதாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கை கொண்டிருக்கிறது. பெண்களின் பிறப்புறுப்பில் அதிக அமிலம் சுரக்கும் சூழல் உள்ளது. இது எந்த விந்தணுவும் உயிர்வாழும் வாய்ப்புகளைக் குறைக்கும். ப்ரீகம் ஒரு குறிப்பிட்ட பிஎச் அளவை பராமரிக்க உதவுகிறது. இது பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணின் பிறப்புறுப்பு ஊடுருவியவுடன் விந்தணு உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், ப்ரீகம் என்பது ஒரு திரவமாகும். இது கடுமையான உராய்வின் அபாயங்களைக் குறைக்கிறது. இது சுரக்கவில்லை என்றால் உடலுறவில் ஈடுபடும்போது இரு தரப்பினருக்கும் வலியை உண்டாக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ப்ரீகம் என்பது என்சைம்கள், புரதங்கள் மற்றும் சளி போன்ற பல கூறுகளைக் கொண்டுள்ளது. ப்ரீகம் பற்றிய ஒரு முக்கியமான காரணி என்னவென்றால், அது வெளியாகும்போது விந்தணுவைக் கொண்டிருக்காது என்பதாகும். விந்தணு வெளியேற்றம் என்பது ஒரு ஆண் இனப்பெருக்க உறுப்பானது விந்து செல்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா போன்ற மற்ற திரவங்களை வெளியிடும் செயல்முறையைக் குறிக்கிறது. விந்து வெளியேறுதல் பல நிகழ்வுகளில் விந்து என்றும் குறிப்பிடப்படுகிறது. முன்கூட்டியே வெளியேறுதல் மற்றும் விந்து வெளியேறுதல் ஆகியவை நேரம் மற்றும் நிகழ்வு தொடர்பாக ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை மிகவும் வேறுபடுகின்றன. அளவு, தோற்றம் போன்றவற்றை தவிர மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று என்னவென்றால், விந்தணுக்கள் ஆரம்ப கட்ட வெளியேற்றத்தில் சேர்க்கப்பட்டிருக்காது.
மேலே உள்ள தகவல்கள் உங்களை குழப்பியிருக்கலாம். ஆனால் ஆம், முன்கூட்டியே கர்ப்ப வாய்ப்புகள் என்பது உண்மை தான். இப்போது கேள்வி என்னவென்றால், விந்தணு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும் என்பதுதான்? விந்தணுவை உற்பத்தி செய்யாத ஆண் பிறப்புறுப்பு சுரப்பியில் இருந்து ப்ரீகம் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. விந்தணுக்கள் விதைப்பைகளில் இருந்து உருவாகின்றன. சரி, இதோ இங்கு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ப்ரீகம்மில் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும், ஆண்களின் இனப்பெருக்க அமைப்பின் சிறுநீர்க் குழாயில் இருந்து விந்தணுக்கள் கலக்கும் வாய்ப்பு உள்ளது. சிறுநீர்க்குழாய் விந்துவை உற்பத்தி செய்யாது. ஆனால் அதன் மூலம் விந்து வெளியேறும். எனவே, கடந்த கால விந்து வெளியேற்றத்தில் இருந்து சிறுநீர்க் குழாயில் விந்தணுக்கள் ஏதேனும் எஞ்சி இருந்தால், அந்த விந்தணு ப்ரீகம்மின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ப்ரீகம் ஒரு உண்மையான விந்து வெளியேற்றத்தின் ஆரம்பம் என்று அழைக்கப்படுகிறது. அது உச்சகட்டத்தில் வெளிப்படுகிறது. விந்தணுக்கள் முன்பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவை இருக்க வாய்ப்புள்ளது. குறைந்த அளவு விந்தணுவுடன் கர்ப்பம் தரிப்பது கடினம், ஆனால் அது சாத்தியமாகும் வாய்ப்பும் உள்ளது. ப்ரீகம் மூலம் கர்ப்பம் தரிக்கும் செயல்முறை உண்மையானது என்பதை இப்போது நாம் அறிந்து கொண்டோம். ஆனால்,இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற ஆச்சரியமும் மேலெழும். ப்ரீகம்மால் 15-20% கருத்தரிக்க வாய்ப்புள்ளது. புல்-அவுட் முறையும் இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. புல் அவுட் முறை என்பது ஆணுறை போன்ற கருத்தடைகள் இல்லாமல் உடலுறவு கொள்ளும்போது உச்சக் கட்டத்தை (விந்தணுவை வெளியேற்றுதல்) அடைவதற்கு முன்பே ஆணுறுப்பை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்தல் ஆகும்.
இதையும் படிக்கலாமே! - கருத்தரிக்க இயற்கையாக விந்தணுவை வலிமையாக்குவது எப்படி
கர்ப்பம் தரிக்கலாம் என்ற திட்டம் எதுவும் இல்லாமல் கருத்தடை சாதனங்கள் எதுவும் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவது அவ்வளவு சரியானதாக இருக்காது என்று அறிவுறுத்தப்படுகிறது. புல்-அவுட் முறைகள் மற்றும் ப்ரீகம் உடனான தொடர்பு கூட மிகவும் ஆபத்தானது. கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகத் தோன்றினாலும், மாதவிடாய் சுழற்சி இந்த செயல்முறையை கணிசமாக பாதிக்க வாய்ப்புள்ளது. பெண்ணுக்கு தனது மாதவிடாய் கட்டத்தில் முட்டை வெளியீடு நிகழ்ந்திருந்தால், திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ப்ரீகம் அளவு மற்றும் விந்தணு எண்ணிக்கையானது ஹார்மோன்கள், தூண்டுதல் நிலை, ஹைட்ரேஷன் அளவுகள் போன்றவற்றைப் பொறுத்தது. நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் வரை கருத்தடைகளைப் பயன்படுத்துவது சிறந்தது!



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |