hamburgerIcon

Orders

login

Profile

Profile
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்வதற்கு இன்டிமேட் வாஷ் உதவுமா?(Does an Intimate Wash Help To Get Rid of Vaginal Itching?In Tamil) arrow

In this Article

    பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்வதற்கு இன்டிமேட் வாஷ் உதவுமா?(Does an Intimate Wash Help To Get Rid of Vaginal Itching?In Tamil)

    Pregnancy

    பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்வதற்கு இன்டிமேட் வாஷ் உதவுமா?(Does an Intimate Wash Help To Get Rid of Vaginal Itching?In Tamil)

    13 March 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது

    • வாழ்க்கை முறையில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களின் காரணமாக, பல்வேறு வகையான ஹெல்த்கேர் புராடக்டுகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இணைய வசதி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது, ஒவ்வொரு புராடக்டையும் பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவை பற்றிய சரியான புரிதல் ஏற்படுவதற்கும் உதவுகிறது. பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் போது, அதில் சிறப்பானதொன்றை தேர்ந்தெடுப்பது சற்று சிரமம் தான்.

    • இன்டிமேட் வாஷ் என்பது பாதுகாப்பு வழங்குவதொன்றையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புராடக்ட் ஆகும். இதனை வாங்குவதற்கு முன், அதன் செயல்பாடு, பயன்படுத்தும் முறை, மற்றும் நன்மைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தும் தயாரிப்பாதலால், அது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். இன்டிமேட் வாஷ் என்பது, நச்சுப் பொருள்களையும், வியர்வையையும் முழுமையாக அகற்றி, பெண்ணுறுப்பினை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் ஆக்க உதவும் ஒரு புராடக்ட் ஆகும்.

    • நீங்கள் இன்டிமேட் ஹைஜீன் வாஷ் புராடக்ட்-ஐ வாங்குவதற்கு முடிவெடுக்கும் போது, அதில் சில அம்சங்கள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அந்த புராடக்ட்-ல் சோப் இருக்கக் கூடாது, எரிச்சல் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். பொதுவாகவே இத்தகைய மிகுந்த உணர்வுத்திறன் மிக்க இடங்களில் சோப் பயன்படுத்துவது சிறிது கடுமையானதாக இருக்கும். ஆகவே, பாராபென் அற்ற, சோப்-உம் இல்லாத இன்டிமேட் வாஷ்-ஐ வாங்குவது தான் சிறந்தது,

    • உதாரணத்திற்கு, மைலோ கேர் இன்டிமேட் வாஷ்-ஐ வாங்கலாம். செயற்கையான பொருட்களினால் வறட்சியும், அரிப்பும் ஏற்பட்டு, இறுதியில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுத்து விடும். இது போன்ற புராடக்டுகளை நீண்ட காலத்திற்கு உபயோகிப்பதால் பெருமளவு அசௌகரியம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இன்டிமேட் வாஷ்-ஐ வாங்குவதற்கு முன்னர், செயற்கையான நறுமணத்தை உண்டாக்காத, இயற்கையான, ஈரப்பதமாக்கும் உள்ளடக்கப் பொருட்கள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளவும்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சிறுநீர் கசிவிற்கான காரணங்கள் & சிகிச்சை

    இன்டிமேட் வாஷ்-ஐ எப்படி பயன்படுத்துவது?(How to use Intimate wash? In tamil)

    • உங்கள் பெண்ணுறுப்புப் பகுதியை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்வது தான், அந்தரங்கப் பகுதியை பேணுவதற்கான முதல் படியாகும். நீங்கள் பெண்களுக்கான சிறந்த இன்டிமேட் வாஷ்-ஐ ஆன்லைனில் தேடும் போது, நீங்கள் பல புராடக்டுகளை காணலாம். ஆயினும், அவற்றில் இயற்கையானது, ஈரப்பதமாக்க உதவுவது, சோப்-அற்றது எது என தெரிந்து கொள்வது அவசியமாகும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், உதாரணத்திற்கு, பாக்டீரியா நோய்த்தொற்று அல்லது அரிப்பு போன்றவை இருக்கும் பட்சத்தில், இன்டிமேட் ஹைஜீன் வாஷ் தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்யும் முன்னர் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ஹைஜீன் வாஷ்-ஐ பயன்படுத்துவதால் நேரும் சாதக பாதகங்களை புரிந்து கொள்வதற்கு இது உதவும்.

    • நீங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, பெண்களுக்கான சிறந்த இன்டிமேட் வாஷ்-ஐ வாங்கிய பிறகு, அதனை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்வது அவசியமாகும். மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி விடக் கூடாது. உங்கள் அந்தரங்க சுகாதாரத்தை பேணும் நடவடிக்கையில் இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதென்பது ஒரு கூடுதல் செயல்முறை தான், எனவே சரியான முறையில் சமநிலையை பேணுவது அவசியமாகும்.

    • நீங்கள் தினமும் குளிக்கும் போது இதனை பயன்படுத்தலாம். இதனை வாரத்தில் சில முறைகள் மட்டும் கூட பயன்படுத்தலாம். இதனை வெளிப்புற பகுதிகளில் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சிறிதளவு திரவத்தை வெளிப்புற பகுதிகளில் சரியான முறையில் தடவவும். இதனை நீங்கள் முன்புறத்திலிருந்து பின்புறம் நோக்கி பயன்படுத்த வேண்டும். மாறாக பின்புறத்திலிருந்து முன்புறம் நோக்கி தடவக் கூடாது, இப்படிச் செய்வதால் மலவாயிலிருந்து கிருமிகள் முன்புறத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர், நன்றாக கழுவி விட்டு, மென்மையான துண்டினால் துடைத்துக் கொள்ளவும்.

    அரிப்பு மற்றும் இன்டிமேட் வாஷ்(Itchiness and Intimate Wash)

    அரிப்பு என்பது பல பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பெண்ணுறுப்பின் வறட்சி, ஈஸ்ட் தொற்று, எரிச்சலை உண்டாக்கும் ஏதேனும் பொருள் பட்டு விடுவது, பாக்டீரியல் வெஜைனோசிஸ் (பெண்ணுறுப்பில் ஏற்படும் அழற்சி), மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவையாகும். எனவே, இது போன்ற ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் நல்லது. மருத்துவர் உங்களுக்கு ஆயின்மென்ட்-களை வழங்குவார் அல்லது வேறு முறையிலான சிகிச்சை அளிப்பார். நோய்த்தொற்றினை குணப்படுத்த மாத்திரைகள் கூட கொடுக்கப்படலாம்.

    இது போன்ற சமயங்களில், ஒருவர் இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை பயன்படுத்தலாமா கூடாதா என்று விவாதிக்கும் போது, பயன்படுத்தக் கூடாது என்பதே சரியாகும்! ஏற்கனவே அரிப்பும், வறட்சி பிரச்சினையும் இருப்பதால், சோப் அல்லது இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    முடிவுரை

    பெண்ணுறுப்பினை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு, Mylo கேர் இன்டிமேட் வாஷ் போன்ற, பெண்களுக்கான சிறந்த இன்டிமேட் வாஷினை உபயோகிப்பது அவசியமாகும். இன்டிமேட் வாஷ் ஆனது சோப் அற்றதாகவும், பாராபென் அற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும், அதனை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என புரிந்து கொள்வது மிக முக்கியமானது.

    எனினும், சிலருக்கு இன்டிமேட் ஹைஜீன் வாஷ்-ஐ உபயோகப்படுத்துவதால் அதிக வறட்சி உண்டாகும். பொதுவாகவே பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பிற்காகவோ அல்லது வேறு விதமான நோய்த்தொற்றுக்காகவோ, இன்டிமேட் வாஷ்-ஐ பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதில்லை. மருத்துவரை கலந்தாலோசித்து, அவருடைய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். பெண்ணுறுப்புப் பகுதியை உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வதற்கு சில கிளென்சர்-களை பரிந்துரைப்பார். அது மட்டுமின்றி, இணையத்தில் பல வீட்டு வைத்தியக் குறிப்புகளும் உள்ளன. இது கூர் உணர்வுள்ள பகுதியாகும், எனவே அதனை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு நீங்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

    Tags :

    Intimate wash in tamil, how to use intimate wash in tamil, is intimate wash cure itching in tamil?, is intimate wash cure infection in tamil?

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

      arrow
    • Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

      arrow
    • Baby kicks KB Marta hai Plz tell mi

      arrow
    • PCOD kya hota hai

      arrow
    • How to detect pcos

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.