hamburgerIcon

Orders

login

Profile

Profile
Mylo Joyful DaysSkin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு உதவும் முதன்மையான 5 வழிகள் arrow

In this Article

    பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு உதவும் முதன்மையான 5 வழிகள்

    Baby Care

    பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு உதவும் முதன்மையான 5 வழிகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    புதிய தாய்மார்கள் பிரசவத்திற்கு பிறகு தோன்றக் கூடிய மன அழுத்தத்தை சமாளிப்பதற்கும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடைமுறையை துரிதப்படுத்துவதற்குமான சிறந்த 5 குறிப்புகள்

    ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தான், ஒரு பெண் சந்திக்கக் கூடிய மிக அழகான, மன அழுத்தம் நிறைந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்க முடியும். பிரசவத்திற்கு பிறகு, மிகுதியான உற்சாகத்தோடும், எதிர்பார்ப்போடும், ஒரு வழியாக உங்கள் குழந்தையை பார்த்த பிறகு, நீங்கள் பிரசவத்திற்கு பின் மீண்டெழும் நடைமுறையையும், அதனோடு மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். இந்த வலைப்பதிவில் புதிய தாய்மார்கள் தங்களின் பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தத்தை சமாளிப்பதற்கும், விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் 5 குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பிற்கும் உதவுகிறது:

    பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கும், உடல்நலம் இயல்பு நிலைக்கு விரைவாக திரும்புவதற்குமான 5 குறிப்புகள்

    நிறைய ஓய்வு பெறவும்

    இது சொல்வதற்கு மிக சுலபமானது, ஆனால் வீட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை இருக்கும் போது, ஓய்வு கிடைப்பது கடினம் தான். எனினும், இயன்ற அளவிற்கு நீங்கள் ஓய்வெடுப்பது முக்கியமாகும், உங்கள் குழந்தை தூங்கும் போது, நீங்களும் தூங்கினால் கூட போதுமானது. பிரசவத்திற்கு பின்பு உங்கள் உடல் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது, அதற்கு சிறந்த வழி எதுவென்றால் நீங்கள் அதிகப்படியாக ஓய்வெடுப்பது தான்.

    ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொள்ளவும்

    ஆரோக்கியமான உணவினை உண்பது உங்கள் உடலை விரைவாக குணப்படுத்துவதற்கு உதவும். மேலும் உங்கள் குழந்தையை நீங்கள் கவனித்துக் கொள்வதற்கு தேவையான ஆற்றலையும் கூட உங்களுக்குத் தரும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்துள்ள நொறுக்குத்தீனி மற்றும் பானங்கள் போன்றவற்றையும் தவிர்த்து விடவும், நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் புரோட்டீன்-களை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், சால்மன் மற்றும் எலும்பு சூப் போன்ற உணவுகளையும் உங்கள் பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பிற்கான டயட்டில் சேர்த்துக் கொள்ளவும், இதன் மூலம் விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்குத் தேவையான கூடுதலான புரோட்டீனும், கொலாஜனும் கிடைக்கும்.

    நேரம் எடுத்துக் கொள்ளவும்

    பிரசவத்திற்கு பின், உடனடியாக நிறைய வேலைகளை செய்ய முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் உடல் குணமடைவதற்கு அவகாசம் தேவைப்படும், எனவே உங்களால் உடனடியாக நீங்கள் இதற்கு முன் செய்தது போல் எல்லா காரியங்களையும் செய்ய முடியாது. இதனை பெரிதுபடுத்தாமல், நீங்கள் மீண்டு வருவதற்கு சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளவும். உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நீங்கள் உங்களை கவனித்துக் கொள்வது முக்கியமாகும். நிறைய ஓய்வு எடுத்துக் கொள்வதையும், ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறையினை பின்பற்றுவதையும் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதையும் கூட உறுதிப்படுத்திக் கொள்ளவும். உதாரணத்திற்கு, நீங்கள் விரும்புவது புத்தகம் படிப்பதோ அல்லது நடைபயணம் செல்வதாகவோ கூட இருக்கலாம்.

    உதவியை கேட்டுப் பெறவும்

    இது போன்ற சமயத்தில், தோள் சாய ஆதரவு இருப்பது மிக முக்கியமாகும். குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள், மற்றும் சமையல் போன்றவற்றில் உங்களுக்கு பிரியமானவர்களின் உதவியை பெற்றுக் கொள்ளவும். இதனால் உங்கள் நலனில் நீங்கள் அக்கறை செலுத்துவதற்கும், உங்கள் குழந்தையுடனான உறவில் வலுவான பிணைப்பினை ஏற்படுத்துவதற்கும் நேரம் ஒதுக்கி நீங்கள் கவனம் செலுத்த முடியும். மேலும், உங்களுக்கு உதவி தேவைப்படும் போது கேட்பதற்கு தயங்காதீர்கள். துணி துவைப்பது, சமையல் செய்வது, அல்லது குழந்தையை கவனித்துக் கொள்வது போன்ற வேலைகளில் உங்களுக்கு யாரும் உதவ முன் வந்தால், தயங்காமல் அவர்களின் உதவியை பெற்றுக் கொள்ளவும். இது உங்களின் மன அழுத்தத்தை ஓரளவு குறைப்பதற்கும், நீங்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கும் உதவும்.

    பிற தாய்மார்களுடன் தொடர்பில் இருக்கவும்

    உங்களை போன்றே குழந்தை பெற்றிருக்கும் பிற தாய்மார்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பது உதவியாக இருக்கக் கூடும். குறிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், நீங்கள் எதிர்கொண்ட சவால்களை பற்றி விவாதித்துக் கொள்வதற்கும், உங்கள் தனிமையை போக்கிக் கொள்வதற்கும் கூட உதவியாக இருக்கும். நிறைய ஆன்லைன் கம்யூனிட்டிகளும் மற்றும் லோக்கல் மீட்-அப்களும் உள்ளன, நீங்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம்.

    மேலும், நீங்கள் முற்றும் சோர்வடைந்து விடுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும், எனவே யதார்த்தமான எதிர்பார்ப்புகளுக்காக மட்டும் நீங்கள் செயல்படுவது முக்கியமாகும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை முயற்சி செய்ய வேண்டாம். சின்னஞ்சிறு குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டு, அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

    புதிய தாய்மார்களின் பிரசவத்திற்கு பின் எடையை குறைப்பதற்கு தேவையான சிறந்த 3 டயட் குறிப்புகள்

    குழந்தை பெற்றவுடன், புதிய தாய்மார்கள் கர்ப்ப காலத்தின் போது தாங்கள் அடைந்த கூடுதல் எடையை குறைக்க விரும்புவது இயல்பானது தான். ஆயினும் தாயான பின் ஏற்படும் வேலை பளுவின் காரணமாக, பிரசவத்திற்கு பின் எடை குறைப்பதற்கு வேண்டி டயட்டினை (உணவுக் கட்டுப்பாடு) பின்பற்றுவதற்கு நேரமோ அல்லது ஆற்றலோ இருக்காது. புதிய தாய்மார்கள் பிரசவத்திற்கு பின் உடல் இளைப்பதற்கு தேவையான, எடை குறைப்பு டயட் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

    பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்

    எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளில், முழுமையான, பதப்படுத்தப்படாத உணவுகளை உண்பதும் ஒன்றாகும். சிப்ஸ், இனிப்பு, மற்றும் கேக் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பூரிதக் கொழுப்பு குறைவாக உள்ள புரோட்டீன் சத்துள்ள உணவுகள் (லீன் புரோட்டீன்) ஆகியவற்றை உண்ணவும்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும்

    உடல் எடை குறைப்பதற்கு, நீர்ச்சத்து எப்போது உடலில் நிறைந்திருப்பது அவசியமாகும், மேலும் நீர்த் தேக்கத்தை குறைப்பதற்கும் இது உதவுகிறது. தினந்தோறும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பிற்கு ஹெர்பல் டீ மற்றும் இனிப்பில்லாத க்ரீன் டீ போன்ற ஆரோக்கியமான கலோரி இல்லாத பானங்களை குடிக்கவும்.

    உடற்பயிற்சி செய்யவும்

    எடை குறைக்கும் திட்டம் எதுவாயிருப்பினும், அது பலன் தருவதற்கு உடற்பயிற்சி செய்வது முக்கியமானதாகும், மேலும் குறிப்பாக புதிய தாய்மார்களுக்கு இது பொருந்தும். சுறுசுறுப்பாக நடைபயிற்சி செல்வது அல்லது மெல்ல ஜாகிங் செல்வது போன்றவை நல்லதொரு ஆரம்பமாகும். மேற்கொண்டு, உங்களின் ஆற்றல் சக்தி அதிகரித்தவுடன், மேலும் சவாலான உடற்பயிற்சிகளையும் கூட நீங்கள் மேற்கொள்ளலாம்.

    இதையும் படிக்கலாமே! - சி-செக்‌ஷனுக்குப் பிறகு நான் எப்போது குனிய முடியும்

    முடிவுரை

    ஒரு பெண்ணின் உடலில், பிரசவத்தின் போதும், அதற்கு பின்னும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. புதிய தாய் சந்திக்கும் மிகக் கடினமான சவால்களில் ஒன்று, பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு நடைமுறை தான். எனினும், சிறிது முயற்சியுடன் கூடவே, சில உணவுக் கட்டுப்பாட்டு மாறுதல்களையும் பின்பற்றும் போது, நீங்கள் கர்ப்பமாவதற்கு முன் இருந்த உங்கள் பழைய எடையை அடைய முடியும். மேலும், புதிதாக தாய்மையடைந்தவரின் அன்றாட பணிகளே முற்றிலும் சோர்வையுண்டாக்கும், மேலும் பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு நடைமுறை போன்ற காரியங்களும் சேர்ந்து பெண்ணுக்கு பிரசவத்திற்கு பின் மனச் சோர்வினை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். ஆகவே, புதிய தாய்மார்கள் முதலில் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதிலும், போதிய அளவு ஓய்வெடுப்பதிலும் தான் கவனம் செலுத்த வேண்டும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

      arrow
    • Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

      arrow
    • மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

      arrow
    • 3 மந்த் பேபி எப்படி இருக்கும்

      arrow
    • அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    businessWorld
    cnbc
    financialExp
    economicTimes
    businessToday
    businessWorld
    cnbc
    financialExp
    economicTimes
    businessToday
    toi
    inc42
    businessStandard
    yourStory
    ani
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.