This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பிரசவத்திற்கு முந்தைய மசாஜ்: அதன் பொருள் & நன்மைகள்

Preparing For Delivery
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பிரசவத்திற்கு முந்தைய மசாஜ்: அதன் பொருள் & நன்மைகள்
Likes13 Likes|
Read time7 min

பிரசவத்திற்கு முந்தைய மசாஜ்: அதன் பொருள் & நன்மைகள்

சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையின் அற்புதமான தருணம் ஆகும். கர்ப்ப காலம் அழகானது தான் என்றாலும் டெலிவரி உங்களுக்கு வலியற்ற அனுபவமாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது. ஆனால், பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் அதற்கு சற்று உதவுவதாக நம்பப்படுகிறது. உடற்தோற்றம் மற்றும் கூடுதல் எடை போன்றவற்றில் உள்ள மாற்றங்களால் ஏற்படும் வேதனை மற்றும் வலிகளுக்கு இந்த மசாஜ் கூடுதல் ஆறுதலை அளிக்கும்.

பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் என்றால் என்ன?

பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் என்பது வழக்கமான மசாஜ் போன்றது தான். இது உங்கள் இறுக்கமான தசைகளை தளர்த்தவும், இயக்கம் மற்றும் சுழற்சியை மேம்படுத்தவும், புண்கள் இருப்பதை கண்டறிவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் மறுபுறம், பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் கர்ப்பிணிப் பெண்களின் தேவைகள் மற்றும் அவர்களின் மாறிவரும் உடல்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படுகிறது. ஒரு குழந்தையைச் சுமப்பதால், அது உங்கள் உடலின் ஈர்ப்பு மையத்தை மாற்றும், மேலும் இது உங்கள் கழுத்து, தோள்கள் மற்றும் முதுகு மற்றும் வயிற்று தசைகளில் நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தும். மறுபுறம், பிரக்னன்ஸியானது இடுப்பு மூட்டுகளில் நிலைப்புத்தன்மையை குறைக்கும். இது உடற்தோற்றத்தையும் மாற்றும், இடுப்பை முன்னோக்கி இழுக்கும். இதனால் உங்களுக்கு கீழ் முதுகில் வலி இருக்கலாம். இருப்பினும், பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் மூலம், அத்தகைய வலியைக் குறைக்கலாம்.

மசாஜ் செய்யும் போது, ஒரு கைத்தேர்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் சிகிச்சையாளரை தேர்ந்தெடுக்க வேண்டும், அவர் உங்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுவார். அவர் வீங்கிய மற்றும் புண் ஏற்பட்டுள்ள இடங்களில் சரியான மசாஜ் நுட்பங்களைப் பயன்படுத்துவார். தவிர, மசாஜ் செய்யும் போது எந்த பகுதியைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

வீட்டிலேயே பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் செய்துகொள்வது எப்படி?

கால்களை மென்மையாக அழுத்துவதன் மூலம் வீட்டிலேயே பேறு காலத்திற்கு முந்தைய மசாஜை நீங்கள் தொடங்கவும். ஒரு நல்ல மற்றும் மென்மையான ஸ்ட்ரோக்குக்கு நீங்கள் எந்த ஒரு தரமான லோஷனையும் பயன்படுத்தலாம். மென்மையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பாதத்தின் மேல் பகுதியை நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் கால்விரல்களிலிருந்து கணுக்கால் மற்றும் கணுக்கால் சுற்றிச் சென்று வட்டமான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்களை ஆசுவாசப்படுத்த உதவும்.

பின்னர் நீங்கள் பின்புறமாகத் தேய்க்கத் துவங்கலாம். உங்கள் துணைவரையும் உங்கள் பக்கத்தில் அமரச் சொல்லி உதவ சொல்லலாம். அவரை முதுகு புறத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி மேலும் கீழும் ஸ்ட்ரோக் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு, நீங்கள் வெறும் கையால் தோள்பட்டையைத் தேய்த்து கழுத்தின் ஒரு பக்கத்தில் மென்மையாக அமுக்கி விடலாம்.

பேறு காலத்திற்கு முந்தைய மசாஜின் நன்மைகள்

கர்ப்பிணிகள் பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் செய்து கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. ஒரு கர்ப்பிணிப் பெண் மீதான ஆராய்ச்சி அல்லது சோதனையானது நெறிமுறை அடிப்படையில் தவிர்க்கப்படுகிறது. ஆகையால், பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் மூலம் ஏற்படும் நன்மைகள் தொடர்பான பெரும்பாலான சான்றுகள் உவமானங்களாகத்தான் உள்ளன. இந்த மசாஜால் கிடைக்கும் உறுதியான நன்மைகள் சில பின்வருமாறு:

வீக்கத்தைக் குறைக்கிறது

கர்ப்ப காலத்தின் போது உங்கள் கைகள், மற்றும் கால்கள் வீக்கமடையத் தொடங்கும். இது பொதுவாக இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. தவிர, இரத்த நாளங்களில் அதிகரித்த அழுத்தமும் வீக்கத்தை ஏற்படுத்தும். பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் மென்மையான திசுக்களைத் தூண்டுவதற்கும் கூடுதல் திரவத்தை வெளியேற்றுவதற்கும் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, வீக்கம் குறைந்து, உங்களுக்குத் தேவையான ஆறுதலை அது வழங்கும். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள முடியுமா என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் நரம்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது

பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் நாள்பட்ட நரம்பு வலியைக் அனுபவிக்கிறார்கள். கர்ப்ப காலத்தின் போது, கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்புக்குழி மேல் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும். படிப்படியாக, அழுத்தம் உங்கள் கால் தசைகளுக்கு பரவத் தொடங்கும். வீக்கமடைந்த இடுப்பு நரம்பு வீக்கமடையும் போது, கால்களில் திடீர் அல்லது கடுமையான வலியை நீங்கள் உணரலாம். பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் சிகிச்சை தசையில் உள்ள இறுக்கத்தை திறம்பட குறைக்கலாம் இதன்மூலம் நரம்புகளில் வீக்கம் குறைகிறது.

கீழ் முதுகுவலிக்கு நல்லது

பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உள்ள உங்கள் இறுக்கமான தசைகளை தளர்த்துவதன் மூலம் முதுகுவலியை குறைக்கலாம். இதன்மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை திறம்பட அதிகரிக்கிறது, உடல் இறுக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடுகிறது.

பதட்டத்தை குறைக்கிறது

பிரக்னன்ஸியானது பெண்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்துடன், பதட்டத்தையும் ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது பெண்களுக்கு ஒரு புதிய அத்தியாயம், மேலும் உடலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்படும். பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் உடலை இயற்கையான மாற்றங்களுடன் வசதியாக உணர கற்றுக்கொள்ள இணைப்பதற்கு ஒரு நல்ல வழியாகும், இதனால் பதட்டம் குறைகிறது. தவிர, சிகிச்சையாளர் உங்களுக்கு கர்ப்ப காலத்தின் போது உடலில் ஏற்படும் இயல்பான மற்றும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை விளக்குவதன் மூலம் மேலும் உதவுவார்.

சிறந்த தூக்கம்

கர்ப்ப காலத்தின் போது, பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பது கடினம். மசாஜ் சிகிச்சையாளர் சரியான நுட்பங்களையும் அழுத்தத்தையும் பயன்படுத்துவதன் மூலம் நரம்பு மண்டலத்தை தளர்த்துவார், இது உங்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இதன் விளைவாக, நீங்கள் மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள் மற்றும் இரவு முழுவதும் நன்றாக தூங்குவீர்கள்.

கர்ப்ப காலத்தின் போது மசாஜ் செய்வது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா?

முதலில், இது குறித்து ஆலோசிக்க நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்ப காலத்தின் போது உங்களை கவனித்துக் கொள்ள உங்களுக்கு ஒரு நிபுணர் அல்லது மகப்பேறியல் நிபுணர் தேவைப்பட்டால், இதைப் பற்றி மருத்துவரிடம் பேசலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் பாதுகாப்பானது. இருப்பினும், குறிப்பிட்ட ஆபத்து காரணிகள் உள்ள பெண்கள் இந்த மசாஜ் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது குறித்து நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில ஆபத்து காரணிகள்:

• ப்ரீ க்ளாம்ப்சியா அல்லது பேறு கால ஜன்னி

• பிரக்னன்ஸியால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம்

• கடுமையான தலைவலி, உயர் இரத்த அழுத்தம் அல்லது கடுமையான

வீக்கம்

• குறைப்பிரசவம் ஏற்பட்டிருந்ததற்கான வரலாறு

உங்கள் மருத்துவர்கள் இந்த மசாஜ் செய்து கொள்வதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால் மட்டுமே, நீங்கள் பல வருட அனுபவத்துடன் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் சிகிச்சையாளரை அணுகலாம்.

உங்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தால், சில மசாஜ் சிகிச்சையாளர்கள் அத்தகைய அறிகுறிகளைப் போக்க வல்லவர்கள் என்றாலும், அது போன்ற நிலமைகளுடன் பிரக்னன்ஸி மசாஜ் செய்து கொள்வதை தவிர்ப்பது தான் பாதுகாப்பானது. அதே போல், உங்களுக்கு நஞ்சுக்கொடியில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்தால், இதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகு வரும் தூக்கமின்மை: அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் அதற்கான நிவாரணங்கள்

பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த மசாஜ் அனைத்து கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஏற்றது அல்ல. அதனால்தான் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் பேறு காலத்திற்கு முந்தைய மசாஜ் செய்துகொள்வதை திட்டமிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடம் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.