This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

இரட்டை குழந்தைகள் இருப்பதற்கான அறிகுறிகள்

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
இரட்டை குழந்தைகள் இருப்பதற்கான அறிகுறிகள்
Likes1 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • இரட்டை கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் அதிக hCG ஹார்மோன் அளவு, காலத்திற்கு முந்தைய பேபி பம்ப் தோன்றுதல் மற்றும் 18-வது வாரத்திற்கு முன்பே குழந்தையின் அசைவுகளை உணர்தல் ஆகியவை அடங்கும்.
  • தீவிரமான மார்னிங் சிக்னெஸ், அதிக அளவு வாந்தி மற்றும் குமட்டல், தீவிர ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் சோர்வு மற்றும் தலைவலி போன்றவை இரட்டையர் கர்ப்பத்தின் மிகைப்படுத்தப்பட்ட அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
  • 5-வது வாரத்தில் தீவிர கருப்பை தசைப்பிடிப்பு, 6-வது வாரத்தில் இரண்டாம் இதயத் துடிப்பு, குடும்ப வரலாறு, 35க்கு மேற்பட்ட வயது மற்றும் BMI 30க்கு மேல் இருத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்க காரணிகள்.
  • இரட்டை கர்ப்ப பயணத்தை எளிதாக்க என்ன உதவும்? Explore our Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Compression Stocking Socks - S
Compression Stocking Socks - S
Rating4.5

அறிமுகம்

கர்ப்பம் தரித்துள்ள ஒரு பெண் அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத அறிகுறிகளைக் காண நேர்ந்தால், அவர் இரட்டை கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புள்ளது (அதாவது அவர்கள் இரட்டை குழந்தைகளைச் சுமக்கிறார்கள்).

இரட்டைக் குழந்தைகளைத் தரித்திருப்பதை அறிய அல்ட்ராசவுண்ட் ஒரே உறுதியான முறை என்றாலும், கருப்பைக்குள் சிறிது கூடுதலான நிகழ்வு நடைபெறுவதைச் சில அறிகுறிகளும் வெளிக்காட்டும். இந்த கட்டுரை இப்படியான அறிகுறிகளை கோடிட்டுக் காட்டுகிறது.

இரட்டை கர்ப்பத்தின் அறிகுறிகள் என்ன?

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவம் வாய்ந்தவரே, அதுபோலவே அவருடைய கர்ப்ப அறிகுறிகளும். இது ஒருபுறம் இருக்க, இரட்டையர் கர்ப்பம், அவற்றின் இயல்பு மற்றும் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் சிறப்புமிக்க தனித்துவமான அறிகுறிகளால் குறிக்கப்படுகிறது. இரட்டைக் குழந்தைகளின் ஆரம்பகட்ட நேர்மறையான கர்ப்ப பரிசோதனை அறிகுறிகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1.அதிக hCG மட்டம்

hCG அளவு அதிகமாக இருப்பது இரட்டை கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. ஒரு பெண் கருவுறும்போது, அவரது உடலில் hCG அல்லது ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் ஹார்மோன் சுரக்கிறது. கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக வீட்டில் நாம் உபயோகிக்கும் கர்ப்ப சோதனைக் கருவிகள் இதைக் கொண்டுதான் கர்ப்பத்தை உறுதி செய்கின்றன. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் hCG சுரப்பு இயற்கையாகவே அதிகரிக்கிறது என்றாலும், சாதாரண அதிகரிப்பு விகிதத்தை விட அதிகமாக இருப்பது, தாய் இரட்டைக் குழந்தைகளைத் தரித்திருப்பதை எடுத்துக்காட்டுவதாகக் கருதலாம்.

2. முன்கூட்டிய அசைவுகள்

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே கரு வயிற்றில் நகரத் தொடங்குகிறது என்றாலும், குழந்தை மிகவும் சிறியதாக இருப்பதால், கர்ப்பத்தின் 18-வது வாரம் வரை தாய் அசைவுகளை அறிவதில்லை. 18 வாரத்துக்கு முன் குழந்தையின் அசைவுகளை அறிவது இரட்டைக் குழந்தைகளைத் தரித்திருப்பத்தின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

3. மிகைப்படுத்தப்பட்ட அறிகுறிகள்

கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்று. கர்ப்பிணி பெண் தீவிர ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாவது அறியப்பட்டால், அவர் பொதுவாக அறியாத, பொதுவாக கவனத்தில் கொள்ளப்படாத மற்றும் மறைக்கப்பட்ட இரட்டை கர்ப்ப அறிகுறியைக் கொண்டிருக்கக் கூடும். இரட்டைக் குழந்தையைக் கர்ப்பம் தரித்திருப்போருக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சோர்வு மற்றும் லேசான தலைவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். இந்த அறிகுறிகள் மிகவும் தொல்லை தருவதாக இருந்தால், மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது. இதுபோன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நான்கு வாரங்களில் இரட்டை கர்ப்ப அறிகுறிகள் கண்டறியப்படலாம்.

4. அதிக அளவு வாந்தி மற்றும் குமட்டல்

கர்ப்ப காலத்தில் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது இயல்பான ஒன்றே. hCG அளவுகளில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு காரணமாக இது நிகழ்கிறது. ஆனால், இது மிகையாக இருந்தால் மாதவிடாய் தவறும் காலத்துக்கு முந்தைய முன்கூட்டிய இரட்டையர் கர்ப்ப அறிகுறிகளாக இருக்கலாம். இது கர்ப்பவதிப் பெண் தனது முதல் அல்ட்ராசவுண்டிற்கு செல்வதற்கு முன்பே இரட்டை கர்ப்பத்தை வெளிக்காட்டும் நுட்பமான அறிகுறியாகும்.

5. காலத்திற்கு முன்பே பேபி பம்ப் தோன்றுதல்

கர்ப்பிணிப் பெண்களுக்கு நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்கு இடையே பேபி பம்ப் கண்ணுக்குப் புலப்படும். இதற்கு முன்பே பேபி பம்ப் தோன்றுவது இரட்டையர் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால், இரட்டை கர்ப்பத்தை இது உறுதிப்படுத்தவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க. உணவு, உடல் வகை மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய எடை போன்ற காரணிகளால் கூட சில நேரங்களில் முன்னதாகவே பேபி பம்ப் புலப்படலாம் என்பதால் ஒரு மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

6. மார்னிங் சிக்னெஸ்

கர்ப்பிணிப் பெண்கள் மார்னிங் சிக்னெஸ் அனுபவிப்பது பொதுவான ஒன்று. ஆனால் கர்ப்பத்தின் 14-வது வாரத்திற்குப் பிறகும் தீவிர மார்னிங் சிக்னெஸ் கொண்ருந்தால், அது இரட்டை கர்ப்பத்தின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். அதே சமயம், அது ஹைபிரேமிசிஸ் கிராவிடாரம் எனப்படும் மருத்துவ நிலையையும் குறிக்கலாம். இது நபருக்கு நபர் மாறுபடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

7. தீவிர தசைபிடிப்பு

கருப்பை தசைப்பிடிப்பு ஏற்படுவது இரட்டை கர்ப்பத்தின் அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் இது இயல்பானது மற்றும் கருவின் அளவு மாறுவதால் இது ஏற்படுகிறது. ஆனால், தீவிரமான, நீடித்த கருப்பை தசை பிடிப்பு பொதுவான ஒன்றல்ல. 5வது வாரங்களில் இவ்விதமான தீவிர தசைப் பிடிப்பு ஏற்படுவது இரட்டை கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

8. இரண்டாம் இதயத் துடிப்பு

குழந்தையின் 8-வது வார வளர்ச்சியின் போது குழந்தையின் இதயத் துடிப்பு அறிய முடியும். இந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவர்கள் பல சோதனைகளை மேற்கொள்வதுண்டு. அப்போது இரண்டாவது இதயத் துடிப்புக்கான அறிகுறிகளைக் கண்டால், அவர்கள் சில வாரங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு மற்றொரு அல்ட்ராசவுண்ட் எடுக்க பரிந்துரைப்பார்கள். இரட்டைக் குழந்தைகளுக்கு 6-வது வார கர்ப்பத்தின் மிக முக்கிய அறிகுறி இது.

மற்ற காரணிகள்

இரட்டை கர்ப்பத்திற்கு வேறு சில காரணிகளும் காரணமாகக் கூடும். பின்வருவனவற்றில் சிலவற்றை அக்காரணிகளின் முன்னெச்சரிக்கையாக, இரட்டை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாகக் கருதலாம்.

  • இரட்டைக் குழந்தை கொள்வது சார்ந்த குடும்ப வரலாறு

  • BMI 30க்கு மேல்

  • தாயின் வயது, 35க்கு மேல்

  • தாய் சராசரி உயரத்தை விட அதிகமாக இருத்தல்

  • முன்னாள் கர்ப்பத்தின் வரலாறு

  • சூலாக்கத்தைத் தூண்டும் மருந்துகளை உட்கொள்ளல்

கவனத்தில் கொள்ளவேண்டியவை

இரட்டைக் குழந்தை தரித்திருப்பது சார்ந்த சில முக்கிய அறிகுறிகளை இந்தக் கட்டுரை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பட்டியல் விரிவான ஒன்றாக இல்லை என்ற போதும், இரட்டை கர்ப்பத்தை உறுதி செய்ய மகப்பேறு மருத்துவரே சரியான நபர் என்பதை கவனத்தில் கொள்க.

இரட்டை கர்ப்ப பயணத்திற்கு அன்பான ஆதரவு

இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்மார்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் வசதி தேவை - உங்கள் பயணத்தை எளிதாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Compression Stocking Socks - S

Compression Stocking Socks - S

Compression Stockings for Varicose Veins | Reduces Swelling | Boosts Blood Circulation

460 Moms bought
₹364₹59939% Off
Rating
4.5
(31)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.