
சுருக்கம்


குழந்தை பிறந்த பிறகு உடலுறவு என்பது தம்பதியரை அச்சுறுத்துவதாக இருக்கும். பெற்றோராக, நீங்கள் சில மாதங்களில் பல மாற்றங்களை அனுபவத்திருக்கிறீர்கள். பிரசவம் ஆன பிறகு உடல் ஆரோக்கியம் இன்னும் மீண்டு வருவதால், குறிப்பாக தாய்மார்களுக்கு இது நம்பமுடியாத அளவிற்கு சவாலானது.
பிரசவத்துக்குப் பிறகு, தாய்மார்கள் நீடித்த வலி, ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கம், குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் ஒருவித சோகம், உடல் மாற்றங்கள் மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கையாளும் சோர்வு போன்ற பல விஷயங்களை அனுபவிக்கிறார்கள். இருப்பினும், குழந்தையைப் பெற்ற பிறகு ஒவ்வொரு தம்பதியும் கட்டாயம் உடலுறவு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆச்சரியமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கருப்பை குணமடைய ஆறு வாரங்களுக்கு பெண்ணின் உடலுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வழக்கமாகப் பரிந்துரைப்பார்கள். இருப்பினும், இந்த டைம்லைன் முற்றிலும் தன்னிச்சையானது, ஏனெனில், அதை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. எந்தவொரு பாலியல் ரீதியிலான செயலிலும் ஈடுபடுவதற்கு முன், உங்களுக்கு இரத்தப்போக்கு இல்லை, வலி இல்லை மற்றும் சரியான மனநிலையில் நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தம்பதிகள் ஒரே மாதிரியாக இல்லாததால், பெரிய மாற்றத்திலிருந்து மீள்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். வலி இல்லை என்றால், நீங்கள் உடல் ரீதியாக உடலுறவு கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம், ஆனால் மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக நிலைமை மாறுபடலாம். இதை உடலுறவுக்கு முன் தம்பதியினர் இருவருமே கருத்தில் கொள்ள வேண்டும்.
பல பெண்கள் தங்கள் உடலின் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பத்திற்குப் பிறகு உடலுறவின் மீதான ஆர்வம் குறைவதை உணர்கிறார்கள். இது முற்றிலும் இயற்கையானது மற்றும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களால் கொண்டு வரப்படுகிறது. உடலுறவிற்கான செயல்பாட்டிற்கு உங்கள் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உடலுறவின் போது உங்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்.
பிரசவத்துக்குப் பிறகான உடலுறவில் தம்பதிகள் ஈடுபடுவதைத் தடுக்கும் பொதுவான காரணிகளில் வலியும் ஒன்றாகும். இருப்பினும், ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி போன்ற பல காரணங்கள் வலிக்கு காரணமாக இருக்கலாம். உடலுறவில் ஈடுபடும் முன் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசனை செய்து ஏதாவது லூப்ரிகன்டை பயன்படுத்துங்கள்.
இது விசித்திரமாகத் தோன்றினாலும், தாய்ப்பால் சுரப்பதும் உடலுறவின் மீதான உங்கள் ஆர்வத்தை பாதிக்கிறது என்பது உண்மை. தாய்ப்பால் உங்கள் உடலில் பல ஹார்மோன் மாற்றங்களைத் தூண்டுகிறது மற்றும் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவை ஏற்படுத்துகிறது. குறைந்த ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பிறப்புறுப்பை வறண்டு, இறுக்கமாக மாற்றக் கூடியதாகும். தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சிகரமான மாற்றங்களைத் தாய்மார்களுக்கு ஏற்படுத்துகிறது. ஏனெனில், இது தாய்மார்களை மன ரீதியாக போதும் என்று உணர வைக்கிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைகிறது.
என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் தகவல்தொடர்பு முக்கியமானது மற்றும் செயல்திறனுடையது. உடலுறவை வலி மிகுந்ததாகக் கருதும் சில பெண்கள், தங்கள் கணவருக்கு அதைத் தெரிவிப்பதைக் கடினமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதை தெரிவிப்பதில் அவர்கள் மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள். வெளிப்படையாக பேசுவதன் மூலம், தம்பதிகள் இதுபோன்ற சூழ்நிலையை ஒன்றாக கடந்து செல்ல முடியும்.
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் சவாலான காலங்களில் ஒன்றாகும். நீங்கள் தயாராக இல்லாத ஒன்றை அவசரப்படுத்தாமல் இருப்பதாலும், எதுவாக இருந்தாலும் உங்கள் துணையுடன் திறந்த மனதுடன் பேசுவதாலும் இதுமாதிரியான சந்தர்ப்பங்களை தம்பதிகளாக ஒன்றாகவும், விரைவாகவும் கடந்து செல்ல முடியும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு
உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் மருத்துவரை தொடர்புகொண்டு உதவிநாடுங்கள். உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமாளித்து, சாதாரண இல்லற வாழ்க்கைக்கு நீங்கள் எளிதாகத் திரும்புவதற்கு இது உதவும்.
பிரசவத்திற்குப் பிறகான நெருக்கமான தருணங்களில் வசதியாக இருக்க, மென்மையான பராமரிப்பு தயாரிப்புகள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns



Yes
No


















ن
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |