This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

மாதவிடாய் தவறுவதற்கு முன்பு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள்: முழு வழிகாட்டி (2026)

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
மாதவிடாய் தவறுவதற்கு முன்பு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள்: முழு வழிகாட்டி (2026)
Likes1 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • மாதவிடாய் தவறுவதற்கு முன்பே கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளான மார்பக மாற்றங்கள், குமட்டல், சோர்வு, மற்றும் கரு உட்பதியும் போது ஏற்படும் லேசான இரத்தப்போக்கு போன்றவற்றை பல பெண்கள் உணர வாய்ப்புள்ளது.
  • ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பசியின்மை, சுவை மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில் தோன்றலாம்.
  • துல்லியமான முடிவுகளுக்கு, மாதவிடாய் எதிர்பார்க்கும் நாளில் காலையில் கர்ப்பப் பரிசோதனை செய்வது சிறந்தது, ஏனெனில் சிறுநீரில் hCG ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும்.
  • ஆரம்ப கர்ப்பத்தின் போது எது உதவும்? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.6

மாதவிடாய் தாமதமாவதற்கு முன்னரே தோன்றும் கர்ப்ப அறிகுறிகள்

  • உங்களுக்கு மாதவிடாய் ரெகுலராக இருக்கும் பட்சத்தில், ஒரு முறை மாதவிடாய் தவறினால் அதையே நீங்கள் கருத்தரித்திருப்பதற்கான முதல் அறிகுறியாகக் கருதலாம்.

  • கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில், மாதவிடாய் ஏற்பட்டது போன்று லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம். இது கரு உட்பதியும் போது ஏற்படும் இரத்தப்போக்கு ஆகும்.

  • இருப்பினும், ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது என்பது நாம் அறிந்த ஒன்றே. அதனால் அனைவரும் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது மட்டுமல்ல, ஒரு சில பெண்கள் மாதவிடாய் வருவதற்கு முன்பே கர்ப்பமாக உணர ஆரம்பிப்பார்கள். மாதவிடாய் தள்ளிப்போவது மட்டுமே கர்ப்பத்திற்கான அறிகுறி இல்லை! சில பெண்கள் மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முன்பே கருத்தரித்தது போன்று உணர வாய்ப்புள்ளது. கருத்தரிப்பதற்கு சில பெண்கள் ஆர்வமாக முயற்சி செய்வதால் அது பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பார்கள்.

  • ஆம், மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முன்பே கர்ப்பத்திற்கு முந்தைய அறிகுறிகளை உணர வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும், ஒரு பெண்ணின் உடலானது கர்ப்பமாவதற்குத் தயாராகிறது.

ஒவ்வொரு முறை மாதவிடாய் ஏற்படும்போது அதன் இரண்டாவது பகுதியில் உண்டாகும் சில மாற்றங்கள் கர்ப்பத்துக்கான அறிகுறிகளைப் பிரதிபலிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகக் கூட இது போன்று ஏற்படலாம். இது சில பெண்களுக்கு ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இருக்கலாம். அதனால் மாதவிடாய் தவறுவதற்கு முன் கர்ப்பத்தை எவ்வாறு கண்டறிவது?

மாதவிடாய் தள்ளிப் போவதற்கு முன் கருத்தரித்து இருப்பதற்கான அறிகுறிகள் சில இங்கே-

மார்பக மாற்றம் :

உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் உங்கள் மார்பகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, பல பெண்கள் மாதவிடாய்க்கு முன் மார்பக அசௌகரியம் அல்லது மார்பகம் கனமாக இருப்பது போன்று உணர வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான கர்ப்பம் ஏற்பட்டால் இந்த மாற்றங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன. "உங்கள் உடலில் ஏற்படும் ஆரம்பகால ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில் உங்கள் மார்பகங்களில் கூச்ச உணர்வு அல்லது அசௌகரியம் கூட ஏற்படக்கூடும்" என்று மருத்துவர் ப்ரித்தி அரோரா தமிஜா கூறுகிறார். இவர் தெற்கு டெல்லியில் உள்ள சீதாராம் பாரதியா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக உள்ளார்.

குமட்டல் அல்லது வாந்தி :

"காலை நேர சோர்வு என்பது கர்ப்பத்தின் அடிப்படை அறிகுறிகளில் ஒன்றாகும். வாந்தியுடன் அல்லது அது இல்லாமல் குமட்டல் மட்டும் இருக்கலாம். இது பொதுவாக கர்ப்பம் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது. இருப்பினும், மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பே பெண்கள் இந்த அறிகுறியை உணர வாய்ப்புள்ளது." என்று மருத்துவர் ப்ரித்தி கூறுகிறார்.

கரு உட்பதித்தலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு :

பெண்களுக்கு மாதவிடாய் முழுவதும் இரத்தம் வெளியாவது பொதுவானது ஆகும். இருப்பினும், இது ஆரம்பகால கர்ப்ப அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு இதுபோன்று ஏற்பட வாய்ப்புள்ளது. "இது போன்று இரத்தம் வெளியானால் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்று தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகளை உணர்பவர்கள், மறுபுறம், கர்ப்பம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று மருத்துவர் ப்ரித்தி கூறுகிறார்.

பசியின்மை ஏற்படுதல் :

கர்ப்பத்தின் முதல் சில வாரங்களில், பெரும்பாலான பெண்களுக்கு குறிப்பிட்ட உணவுகள் மற்றும் வாசனை திரவியங்கள் மீது வெறுப்பு ஏற்படக்கூடும். நீங்கள் முன்பு விரும்பி சாப்பிட்ட உணவு மீது கூட வெறுப்பபு ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் அதிகப்படியான உமிழ்நீர் கூட உண்டாகும். "ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் சுவை உணர்வுகளை பாதிக்கலாம்" என்கிறார் மருத்துவர் ப்ரித்தி.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு :

நீங்கள் கருத்தரித்திருந்தால், அடிக்கடி கழிவறையைப் பயன்படுத்த வேண்டி இருக்கலாம். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு இரத்த அளவு அதிகரிப்பதால், உங்கள் சிறுநீரகங்கள் கூடுதல் நேரம் வேலை செய்யும். இது கர்ப்ப காலம் முழுவதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.

சோர்வு :

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பே, சோர்வு என்பது கர்ப்பகால ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்."இயற்கை உங்களை மெதுவாக செயல்படத் தூண்டுகிறது என்றும் இதை நாம் புரிந்து கொள்ளலாம். புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் உங்கள் உடலை சோர்வடையச் செய்கின்றன" என்று விளக்குகிறார் மருத்துவர் ப்ரித்தி.

மலச்சிக்கல் :

  • பிரசவத்திற்குப் பிறகு முதல் சில வாரங்களில், பெண்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது குடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படலாம்.

  • அதிகரித்து வரும் ஹார்மோன் அளவுகள் உங்கள் செரிமான அமைப்பை மெதுவாக்குகிறது. இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீங்கள் சந்திக்க உள்ள தவறிய மாதவிடாய்க்கு முந்தைய கர்ப்ப அறிகுறிகளாக இது இருக்கலாம்.

  • மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கர்ப்ப அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தள்ளிப் போவதற்கு முன் அசாதாரண கர்ப்ப அறிகுறிகள் சில இருக்கலாம். ஒரு பெண் அந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகளாக கருதக்கூடாது.

எனவே, கருதரித்தரிப்பு நிகழ்ந்து இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?

  • பரிசோதனைக்கு சிறந்த நேரத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைப் புரிந்துகொள்வோம்.

  • முட்டை வெளியீடு பொதுவாக 28 நாள் சுழற்சியில் 15வது நாள் நிகழும். ஒரு முட்டை ஃபலோபியன் குழாயில் கருவுற்று, பின்னர் கர்ப்பப்பைக்குள் செல்கிறது. சாதாரண கர்ப்பம் என்றால் கர்ப்பப்பைச் சுவரில் சென்று கருமுட்டை தங்கும். கருவுற்ற முட்டை கர்ப்பப்பையில் தங்கிய உடனேயே, ஒரு பெண்ணின் உடலில் நஞ்சுக்கொடி (வளரும் குழந்தைக்கு உணவளிக்கும் திசு) உள்ள செல்களிலிருந்து எச்சிஜி-ஐ வெளியிடத் தொடங்குகிறது. முட்டை வெளியிடப்பட்ட எட்டு நாட்களுக்குப் பிறகு ஆரம்பகால கர்ப்பத்திலிருந்து எச்சிஜியின் அளவு கண்டறியப்படலாம். இதன்மூலம் ஒரு பெண் தனது மாதவிடாய் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே கர்ப்பத்துக்கான சாதகங்களை கண்டுபிடிக்கலாம் என்பதை குறிக்கிறது.

  • கருதரிப்பு சோதனையை எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சிரமம் என்னவென்றால், மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியானது இரண்டாவது பாதியை விட கணிக்க முடியாததாக இருப்பது தான். மாதவிடாய் ஏற்படும் நாள் மற்றும் முட்டை வெளியீட்டின் முதல் நாளுக்கு இடையிலான இடைவெளி மாதந்தோறும் மாறும். முட்டை வெளியீட்டின் அருகில் உள்ள பாலியல் செயல்பாடு, வெளியான முட்டையுடன் விந்தணுக்கள் சேர்ந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. கருவுற்ற முட்டை கர்ப்பப்பையில் தங்குவதற்கு எடுக்கும் நேரமும் மாறுபடும். கருமுட்டை கர்ப்பப்பையில் பதியும் வரை எச்சிஜி உருவாக்கப்படாது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரிக்க சிறந்த கருத்தரிப்பு மாத்திரைகள்

  • மிகத் துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்காக, மாதவிடாய் தொடங்கும் என்று பெண்கள் எதிர்பார்க்கும் நாளில் காலையில் பரிசோதனை செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது முட்டை வெளியீட்டில், கருத்தரித்தல் மற்றும் கரு முட்டை பதியும் நேரம் ஆகியவற்றில் நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. காலையில் பரிசோதனை செய்வதன் மூலம், ஒரு செறிவூட்டப்பட்ட சிறுநீர் மாதிரி கிடைக்கும். இது அதிக எச்சிஜி (hcg) ஹார்மோனைக் கொண்டிருக்கும். இதன் மூலம் மாதவிடாய் தள்ளிப் போவதற்கு முன் கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகளை சோதனை மூலம் கண்டறிய முடியும்.

FAQs

மாதவிடாய்க்கு முன் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

ஏற்பிலான்டேஷன் பிளீடிங், மார்பக மென்மை, களைப்பு, லேசான வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பு, மற்றும் சுவை மாற்றங்கள்.

PMS மற்றும் கர்ப்ப அறிகுறிகள் வேறுபாடு என்ன?

PMS அறிகுறிகள் மாதவிடாய் வந்தவுடன் மறையும். கர்ப்ப அறிகுறிகள் தொடர்ந்து தீவிரமாகின்றன. மார்பக மென்மை, காலை வாந்தி கர்ப்பத்தில் மட்டுமே.

மாதவிடாய் தவறுவதற்கு எத்தனை நாட்கள் முன் சோதனை செய்யலாம்?

அதிக-உணர்திறன் சோதனைகள் (10-25 mIU/mL) எதிர்பார்த்த மாதவிடாய்க்கு 6-7 நாட்கள் முன் வேலை செய்கின்றன. இரத்த hCG சோதனை 10-12 நாட்கள் முன்.

இந்த அறிகுறிகள் கர்ப்பத்தை உறுதி செய்கின்றனவா?

இல்லை — இவை யோசனைகள் மட்டுமே. உறுதிப்படுத்த சிறுநீர் சோதனை செய்யுங்கள் அல்லது மருத்துவரை அணுகவும்.

புதிய கர்ப்பத்தில் அடியெடுக்கும் அன்னையரால் நம்பப்படுபவை

ஆரம்ப கர்ப்பகால அறிகுறிகளை சமாளித்து, உங்கள் பயணத்தை வசதியாகவும் ஆரோக்கியமாகவும் ஆரம்பிக்க உதவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

441 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4186 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4495 Moms bought
₹499₹64923% Off
Rating
4.6
(1000)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.