hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Baby Sleep Management arrow
  • குறுநடை போடும் குழந்தையை எவ்வாறு தனியாக தூங்க ஊக்குவிப்பது arrow

In this Article

    குறுநடை போடும் குழந்தையை எவ்வாறு தனியாக தூங்க ஊக்குவிப்பது

    Baby Sleep Management

    குறுநடை போடும் குழந்தையை எவ்வாறு தனியாக தூங்க ஊக்குவிப்பது

    8 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஒரு கைக்குழந்தையை தூங்க வைப்பதற்கு அதிகப்படியான முயற்சி தேவைப்படுகிறது. உங்கள் குறுநடை போடும் குழந்தை தனியாக தூங்க மறுக்கிறது, மேலும் தனியாக தூங்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள உங்களால் உதவ முடியவில்லை என்றால், இரவில் செய்யும் குறும்பு மற்றும் பிடிவாதத்தை சமாளிக்கத் தயாராக இருங்கள்.

    அதிர்ஷ்டவசமாக, நீங்கள் இந்தப் பழக்கத்தை தடுத்து, உங்கள் குழந்தையை சுதந்திரமாக தூங்க ஊக்குவிக்கலாம். அதை நீங்கள் எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி சில வழிகளைப் பார்ப்போம்.

    1. கவனச்சிதறல்களை நீக்கவும்

    ஒரு வசதியான மற்றும் அமைதியான தூக்க சூழலை உருவாக்க உங்கள் குறுநடை போடும் குழந்தையின் அறையில் இருந்து தொலைக்காட்சிகள், மொபைல் போன்கள், ஐ-பேட் மற்றும் வேறு எந்த வகையான மின்னணு சாதனங்களையும் அகற்றவும். டிவி திரை அல்லது கம்ப்யூட்டர் லைட் உங்கள் குழந்தையின் தூக்கத்தை கடினமாக்கும். அறையில் மங்கலான வெளிச்சத்துடன் கூடிய அமைதியான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    2. படுக்கை நேர வழக்கத்தை உருவாக்கவும்

    வெதுவெதுப்பான நீரில் குளியல், பைஜாமா அணிதல், பல் துலக்குதல், புத்தகம் படித்தல். இவை அனைத்தும் படுக்கை நேர வழக்கத்திற்கு உதாரணமாக சொல்லலாம். இது போன்ற செயல்கள் அடங்கிய சரியான அட்டவணையைப் பின்பற்றினால், உங்கள் குழந்தை படுக்கைக்குச் செல்வதை எளிதாக்கும். இது குழந்தைகளை உளவியல் ரீதியாக தயார்படுத்த உதவுகிறது மற்றும் இரவில் அவர்களின் பதட்டத்தை குறைக்கிறது.

    3. பாதுகாப்பான உணர்வை உருவாக்குங்கள்

    அறையில் நீங்கள் இல்லாதது அல்லது படுக்கைக்கு அடியில் பேய் இருப்பதாக நினைப்பது உங்கள் குழந்தை நன்றாக தூங்குவதைத் தடுக்கலாம். மாற்றத்தை எளிதாக்குங்கள் மற்றும் எந்தவொரு பொருள், பொம்மை அல்லது போர்வையிலிருந்தும் பயத்தை நீக்குவதற்கு அமைதியான சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.

    4. வழக்கத்தை இடைவிடாமல் தொடரவும்

    சரியான இரவு நேர அட்டவணையைப் பின்பற்றி, சீரான நிலையைப் பராமரிக்கவும். நள்ளிரவில் உங்கள் குழந்தை உங்கள் படுக்கைக்கு வந்தால், அவர்களை மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் சென்று, அமைதியான தூக்கம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவும். ஒவ்வொரு முறையும் இதைச் செய்யுங்கள், இது அவர்கள் உங்களிடம் வரும்போது, பயப்படாமல் இருக்கவும், கவலைப்படாமல் இருக்கவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

    இதையும் படிக்கலாமே! - நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?

    5. நல்ல நடத்தையை பாராட்டவும்

    அவர்கள் சரியாக உங்கள் அட்டவணைப் படி தூங்கும் போது அவர்களைப் பாராட்ட அவர்களுடைய கல்லை உணவை தேர்வு அவர்களே தேர்வு செய்து அல்லது அவர்களது இரவு உடைய அவர்களே தேர்வு செய்து போன்ற விருப்பங்களைக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

    உங்கள் குறுநடை போடும் குழந்தை தனியாக தூங்குவதற்கு உதவுவது, வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக இருக்கும் திறனை வளர்ப்பதற்கான சில படிகளில் முதன்மையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதே நேரத்தில் அவர்களை ஊக்கப்படுத்த உங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுங்கள்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.