
சுருக்கம்



கர்ப்ப காலத்தில் உங்கள் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் தேவை, எனவே இது சார்ந்து எவ்வகையான உணவுகள் உடலுக்கு நன்மை பயக்கும் என நீங்கள் அறிய விரும்பலாம். கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு கர்ப்பிணிப் பெண்ணிற்கும், வளரும் கருவுக்கும் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். எனவே, சில உணவுப் பொருட்களை உட்கொள்வதன் பின்னணியில் உள்ள புனைக் கதைகள் மற்றும் உண்மைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
கர்ப்பத்தின் போது பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இதனைத் தவிர்க்க வேண்டும் என்று பழங்காலத்திலிருந்தே கூறப்படுவதால் வெந்தயம் அல்லது மேத்தியை எடுத்துக் கொள்வது குறித்து பல கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இயற்கை மருத்துவர்களும், வெந்தயம் ஒரு வலுவான மூலிகை, இதை எடுத்துக் கொள்வது முன்கூட்டிய பிரசவம் அல்லது கருக்கலைப்புக்கு கூட வழிவகுக்கும் எனச் சொல்வதுண்டு. பொதுவாக, கர்ப்ப காலத்தில் வெந்தயம் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் ஏகப்பட்ட நன்மைகளைக் கொண்ட மேத்தி இலைகள் அல்லது மேத்தி பராத்தா சாப்பிடுவதைக் கூட தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் மேத்தி பராத்தா அல்லது கர்ப்ப காலத்தில் மேத்தி இலை சாப்பிடலாமா, வெந்தயம் உட்கொள்ளலாமா என்று நீங்கள் அறிய விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். அது தொடர்பான தகவல்களை இங்கு பார்ப்போம்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு வெந்தயத்தைச் சாப்பிட வேண்டும் அல்லது மேத்தி பராத்தா சாப்பிட வேண்டும் என்று உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதாவது சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதே போல், வெந்தயத் தேநீர் அல்லது சாறு அருந்துவதும் மாதவிடாய் ஏற்படுவதற்கு உதவுகிறது. இருப்பினும், கர்ப்ப காலத்தைப் பொறுத்தவரை வெந்தயத்தின் நுகர்வு வேறுபட்டது. பொதுவாக, கர்ப்ப காலத்தில் வெந்தயத்தை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது முன்கூட்டிய பிறப்புக்கு வழிவகுக்கும் என்று பல பெண்கள் கூறுகின்றனர்.
வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதால் பிறவி குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகள், பிறப்பு நிலைக் கோளாறுகள் கூட ஏற்படலாம் எனத் தொடர்பு படுத்துவதுண்டு. அதோடு, வெந்தயத்தை உட்கொள்வதால் இனப்பெருக்க நச்சுத்தன்மை மற்றும் கருவின் வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் அறியப்படுகிறது. இக்காரணங்கள் சார்ந்து, கர்ப்ப காலத்தில் வெந்தயம் அல்லது மேத்தியின் பயன்பாடு பொதுவாக தவிர்க்கப்படுகிறது.
கர்ப்பத்தின் போது மிதமான அளவில் வெந்தயம் உட்கொள்வது பாதுகாப்பானதே. வெந்தயம் உட்கொள்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் சில பக்க விளைவுகள் பின்வருமாறு-
கர்ப்பத்தின் போது வெந்தயம் அல்லது மேத்தி கீரையை அதிகமாக உட்கொள்வதால், குழந்தை பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் அல்லது இது குறை பிரசவத்துக்கு வழிவகுக்கும். வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அசாதாரண உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பலர் கூறுகின்றனர்.
பிரசவத்தைத் தூண்டும் அவசியம் ஏற்படும் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பிரசவ வலியைத் தூண்டுவதற்கும், பிரசவ வலியைக் குறைக்கவும் காலங்காலமாகவே வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் வெந்தயத்தை உட்கொள்வது பெண்களுக்கு பிரசவ செயல்முறையை துரிதப்படுத்தவும் எளிதாக்கவும் உதவும்.
கர்ப்பத்தின் போது, வெந்தயத்தை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்று இயற்கை மருத்துவர்களும், மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள். பிரசவத்தைத் தூண்ட அவசியம் ஏற்படும் பெண்களுக்கு வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், துவக்கத்தில் இது கருச்சிதைவு மற்றும் முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். எனவே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, கர்ப்ப காலத்தில் வெந்தயத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆயினும் கூட, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், மிக அரிதாக மிகக் குறைந்த அளவு இதனை உட்கொள்ளலாம்.
வெந்தய விதைகள் பிரசவத்தைத் தூண்டும் என்பதால், கர்ப்ப காலத்தில் வெந்தயம் 37வது வாரத்திற்குப் பிறகு மட்டுமே உட்கொள்ளப்படுகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இதை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் உற்பத்தி அளவைஅதிகரிக்க வெந்தயம் உதவுகிறது. எனவே, குழந்தை பிறந்த பிறகு, பெண்கள் பொதுவாக வெந்தயம், மேத்தி இலைகள் அல்லது மேத்தி பரோட்டாவை உட்கொள்வது அவர்களின் பால் உற்பத்தியை மேம்படுத்த உதவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் மக்காச்சோளம் சாப்பிடுவதால்ஏற்படும் நன்மைகள் & பக்க விளைவுகள்
பொதுவாக, கர்ப்பத்தின் போது வெந்தய இலைகள், விதைகள் அல்லது வெந்தய தேநீர் கூட உட்கொள்ள வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுகிறது,. வெந்தயத்தில் உள்ள வலுவான மூலிகை பண்புகள் கருச்சிதைவுகள், பிரசவ வலி அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்குக் கூட வழிவகுக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் வெந்தய டீயை மட்டுமல்ல, மேத்தி பரோட்டாவையும் தவிர்ப்பது நல்லது.
உங்கள் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துக்களை வழங்கும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான கர்ப்பகால ஊட்டச்சத்து தயாரிப்புகள் இங்கே உள்ளன.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each




Organic Aloe Vera (300 ml)
Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |