Conception
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று யோசித்துக்கொண்டும், அப்படியானால் அதை எப்படி அறிந்து கொள்வது? என்றும் உங்களை நீங்களே கேட்டுக் கொண்டும் இருக்கிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. கர்ப்பம் தொடர்பான ஊகங்கள் பின்வரும் அறிகுறிகளுடன் தொடங்குகின்றன:
மாதவிடாய் தவறுவது
தோல் உலர்ந்திருப்பது
வாந்தியெடுப்பது
வயிறு உப்புசமாக இருப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது மற்றும் சில உணவுகளுக்காக ஏங்குவது
தூக்கமில்லாமல் போவது
களைப்பாக இருப்பது
கர்ப்ப அறிகுறிகளைப் பற்றிப் பேசும்போது நினைவில் வரும் முதல் விஷயம் மாதவிடாய் தவறுவதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இதுவே கர்ப்பத்தின் மிகவும் பொதுவான குறிகாட்டியாகும். இருப்பினும், பிற அறிகுறிகளும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே, உடலுறவுக்கு 10 நாட்கள் பிறகு கர்ப்பத்தை எப்படி உறுதிப்படுத்துவது? அல்லது ஒரு வாரத்திற்குள் கர்ப்பத்தை எப்படி உறுதிப்படுத்துவது? உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இங்கே சில வழிகள் கூறப்பட்டுள்ளன.
முதல் மாதத்தில் கர்ப்பத்தை எப்படி உறுதிப்படுத்துவது என்பதற்கான ஒரு வழியை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? செலவு குறைந்த, பயன்படுத்த எளிதான வீட்டில் கர்ப்பப் பரிசோதனை செய்யும் கருவியை (kit) வாங்கவும். இது நன்கறியப்பட்ட ஒரு முறையாகும். இக்கருவி உங்கள் சிறுநீரில் கர்ப்ப ஹார்மோன் (human Chorionic Gonadotropin/hCG) இருப்பதைக் கண்டறிந்து வீட்டிலிருந்தே நீங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகிறது. உங்கள் மாதவிடாய் வருவது ஒரு நாள் தாமதமானாலும் கூட இந்த முறை துல்லியமான முடிவைக் காட்டும்.
1. உங்களுக்கு மாதவிடாய் ஏற்படவில்லையென்றால், சுமார் ஐந்து முதல் பத்து நாட்கள் வரை காத்திருங்கள். வீட்டுச் சோதனைக் கருவியில் உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படியுங்கள்.
2. கிட்டத்தட்ட அனைத்து கருவிகளும் சிறுநீரைச் சேகரிக்க ஒரு சிறிய டப்பாவுடன் வருகின்றன.
3. மிகவும் துல்லியமான முடிவுகளைப் பெற, காலையில் முதல் சிறுநீரைச் சேகரியுங்கள்.
4. சிறுநீர் மாதிரியை பட்டையில் உள்ள உறிஞ்சும் முனையில் அல்லது குழியில் சொட்டாக இட ஒரு டிராப்பரைப் பயன்படுத்தவும்.
5. முடிவைச் சரிபார்ப்பதற்கு முன்பு கர்ப்பப் பரிசோதனைப் பட்டையை சுமார் ஐந்து நிமிடங்கள் அசைக்காமல் வைத்திருக்கவும். முடிவை அறிந்துகொள்ள, நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்துப் பார்க்கலாம்.
பரிசோதனை முடிவைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருந்தால் உறுதிப்படுத்த ஒரு மகப்பேறு மருத்துவரைப் பாருங்கள். நேர்மறையான பரிசோதனை முடிவுடன் கூட இரத்தம் சொட்டுதலோ அல்லது இரத்தப்போக்கோ இருந்தால் மருத்துவரை அணுகவும். பற்பசை கர்ப்பப் பரிசோதனைகள் போன்ற வீட்டில் செய்யலாம் என்று சொல்லப்படும் அறிவியல் சான்றுகள் இல்லாத கர்ப்ப பரிசோதனைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மருத்துவ ரீதியாக அவை கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகளாக அங்கீகரிக்கப்படவில்லை.
கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு, இது ஒரு நம்பகமான முறையாகும். உங்கள் உடலின் கர்ப்ப ஹார்மோனின் (hCG) அளவைக் கண்டறிய மருத்துவர் இரத்தப் பரிசோதனையை பரிந்துரைக்கலாம். இரத்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் உங்கள் கர்ப்பம் பற்றிய மிகவும் துல்லியமான தகவல்களை வழங்க முடியும். கூடுதலாக, காலப்போக்கில் உங்கள் hCG அளவைக் கண்காணிக்க தொடர்ந்து இந்த இரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு மருத்துவர் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
6-7 வாரங்களுக்கு உங்களுக்கு மாதவிடாய் வரவில்லையென்றால், கருப்பாதையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேலும் கரு எங்கே இருக்கிறது, எண்ணிக்கை எத்தனை, கரு தங்கும் சாத்தியம் உள்ளதா போன்ற முக்கிய விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். எந்தவொரு சாத்தியமான சிக்கலையும் ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சரிசெய்ய இந்தச் செயல்முறை மருத்துவருக்கு உதவுகிறது.
கீழே உள்ள பட்டியலில் உள்ள அறிகுறிகளில் எவையாவது உங்களுக்கு இருக்கின்றனவா என்று சரிபார்க்கவும். தனித்தனியாக, அவை உங்களுக்கு ஒரு துல்லியமான முடிவைத் தராமல் போகக்கூடும். ஆனால், கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தாலும், உங்கள் கர்ப்பம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளைப் பெற நீங்கள் கர்ப்பப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்:
1. மாதவிடாய் தவறுவது அல்லது மாதவிடாய் ஒழுங்கற்றிருப்பது
2. பிடிப்புகள் ஏற்படுவது
3. மார்பகங்களில் வலி ஏற்படுவது
4. அசௌகர்யமாக உணர்வது
5. உங்கள் கருத்தடை வேலை செய்யாமல் போவது
உங்களுக்கு மாதவிடாய் வராத முதல் நாளில் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உங்கள் அடுத்த மாதவிடாய் எப்போது தொடங்கும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், பாதுகாப்பு இல்லாமலிருந்த உங்கள் கடைசி உடலுறவுக்குப் பிறகு குறைந்தது 21 நாட்கள் கழித்து நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வீட்டில் செய்யும் கர்ப்பப் பரிசோதனைக் கருவி அல்லது இரத்தப் பரிசோதனை இரண்டுமே ஒரு வாரத்திற்குள் நீங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நம்பகமான தேர்வுகள். வீட்டில் செய்வது சில நிமிடங்களுக்குள் உங்களுக்கு முடிவுகளைத் தந்துவிடும். ஆனால், முற்றிலும் உறுதியாக இருக்க, நீங்கள் இரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் இந்த முடிவுகள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
பிரசவத்திற்கு முன்னான பராமரிப்பு உங்களது மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. உங்கள் கர்ப்பகாலத்தில் உங்களைக் கவனிக்க இன்னும் ஒரு மருத்துவரையோ மருத்துவச்சியையோ நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிற மருத்துவ வசதி வழங்குநர்களிடம் பரிந்துரைகளைக் கேட்கத் தொடங்குங்கள்.
நீங்கள் நன்றாகவே இருப்பதாக உணர்ந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றாலும், உங்கள் பிரசவத்திற்கு முன்னான பரிசோதனைகள் அனைத்தையும் செய்துகொள்ளுங்கள். உங்கள் மருத்துவர் உங்கள் கர்ப்பத்தைக் கண்காணித்து, சிக்கல் எதுவும் ஏற்பட்டால் விரைவில் தீர்க்க வேண்டியது அவசியம்.
சமைக்கப்படாத இறைச்சி, பண்படுத்தாத பால்பொருட்கள், பழச்சாறுகள், பச்சையான கடலுணவுகள், உறைந்த இறைச்சிகள் போன்ற உணவுகளை கர்ப்பகாலத்தில் உண்ணவேண்டாம். நல்ல முறையில் விளைவிக்கப்படாதது, கலப்படமானது என்று தோன்றும் உணவுகளையும் பானங்களையும் தவிர்க்கவும்.
ஒரு ஒழுங்கான உடற்பயிற்சி விதிமுறை கர்ப்பகாலம் முழுவதும் வளர்கின்ற குழந்தையின் எடையைச் சுமக்க உங்களுக்குத் தேவையான வலிமையையும் சகிப்புத்தன்மையையும் உருவாக்கவும், நோவுகளையும் வலிகளையும் தவிர்க்க அல்லது போக்கவும், உங்கள் கால்களில் மந்தமான ஓட்டத்தை மேம்படுத்தவும், பிரசவத்தில் நேரும் உடல் சிரமத்தைச் சமாளிக்கவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிக் கேட்டோ படித்தோ கற்றுக்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே! - ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் போது, பிரவச தேதியை எப்படி கணக்கிடுவது எப்படி?
மாதவிடாய் வருவது தவறினால் நீங்கள் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். உங்கள் மாதவிடாய் தவறிய ஒரு வாரத்திற்குப் பிறகு நீங்கள் வீட்டில் கர்ப்பப் பரிசோதனை செய்துகொண்டால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதைக் கண்டறியலாம். இரத்தப் பரிசோதனை செய்தால் இன்னும் விரிவான முடிவுகளைப் பெறலாம். இது எப்படியென்றால், சிறுநீர்ப் பரிசோதனை உங்கள் உடலில் hCG ஹார்மோன் உற்பத்தியாகிறதா என்பதைச் சொல்லும். இரத்தப் பரிசோதனை, இன்னும் விரிவாக ஹார்மோனின் சரியான அளவை அளித்து மேலும் தேவையான மதிப்பீட்டிற்கு உதவும். ஆயினும் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை அறிய மிகவும் பரிந்துரைக்கப்பட்ட வழி ஒரு மருத்துவரை அணுகுவதே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |