hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Abortion arrow
  • ஒரு மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாக பிரக்னன்ஸியை தவிர்ப்பது எப்படி? arrow

In this Article

    ஒரு மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாக பிரக்னன்ஸியை தவிர்ப்பது எப்படி?

    Abortion

    ஒரு மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாக பிரக்னன்ஸியை தவிர்ப்பது எப்படி?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஒரு மாதவிடாய் சுழற்சியானது சாதாரணமாக 21-35 நாட்களுக்குள் கருதப்படுகிறது. மேலும் அது தாமதமானால், குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு, திட்டமிடப்படாத பிரக்னன்ஸி குறித்த பயம் உண்மையானதாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாகவே பிரக்னன்ஸி அடைவதை தவிர்க்க உதவும் பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. மாதவிடாய் ஏற்பட உதவும் பல மருந்துகள் சந்தையில் இருந்தாலும், குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இல்லாவிட்டால் இவை ஆபத்தானவைகளாக மாறும்.

    எந்தவொரு இயற்கை வைத்தியம், கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் கருக்கலைப்பு மருந்துகள் அல்லது மூலிகை சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை சோதிப்பது எப்போதும் நல்லது. உடலுறவிற்குப் பிறகு மாதவிடாய் தள்ளிப்போனதை பற்றி நீங்கள் இன்னும் கவலைப்படுகிறீர்கள் என்றால், மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாக பிரக்னன்ஸியை எவ்வாறு தவிர்ப்பது என்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.

    இயற்கையாக பிரக்னன்ஸி அடைவதை தவிர்ப்பது எப்படி -

    பிரக்னன்ஸியை தடுக்கவும், மாதவிடாய் வருவதை தூண்டவும் உதவும் இயற்கை உணவுகள்

    இஞ்சி:

    இஞ்சி மாதவிடாயைத் தூண்ட உதவும் ஒரு பாரம்பரிய உணவுப்பொருள் ஆகும். ஏனெனில், இது கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தும். இஞ்சியை பச்சையாக சாப்பிட முடியாது என்பதால், நீங்கள் இஞ்சியை தேநீரில் கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். 1 அங்குல தோல் உரிக்கப்பட்ட இஞ்சியை நறுக்கி, குறைந்தது ஏழு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தேநீரில் கொஞ்சம் இயற்கை இனிப்பைச் சேர்த்து, உங்கள் மாதவிடாய் வரும் வரை தினமும் குடிக்கலாம்.

    கொத்தமல்லி தழை:

    கொத்தமல்லி தழையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது கருப்பை சுருக்கங்களைத் தூண்ட உதவும். உங்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் கொத்தமல்லி தழையை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் கொத்தமல்லி தழையை தேநீரில் கலந்தும் உட்கொள்ளலாம். கொத்தமல்லி தழை கொதிக்க வைப்பதற்கு பதிலாக, ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு கொத்து புதிய கொத்தமல்லி தழை சேர்த்து, அதை ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் அருந்துங்கள்.

    பப்பாளி:

    நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டால், அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளி சாப்பிடத் தொடங்குங்கள். பப்பாளி கருவுறுதலைத் தடுப்பதன் மூலமும், உடலுறவுக்குப் பிறகு தேவையற்ற பிரக்னன்ஸியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இயற்கையான கருத்தடையாக செயல்படுகிறது.

    அன்னாசிப்பழம்:

    அன்னாசிப்பழம் கருவை கருப்பையுடன் பொருத்துவதைத் தடுக்கும் இயற்கையான பண்பைக் கொண்டுள்ளது. எனவே, உடலுறவுக்குப் பிறகு தொடர்ந்து 2 முதல் 3 நாட்கள் பழுத்த அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் எதிர்பாராத பிரக்னன்ஸியை தவிர்க்கலாம்.

    ஆப்ரிகாட்:

    ஆப்ரிகாட் மற்றொரு இயற்கை பழமாகும். இது இயற்கையாகவே இம்பிளான்டேஷனை தடுக்கும். மாதவிடாய் தொடங்கும் வரை தினமும் 5-10 ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்ளவும். மாற்றாக, நீங்கள் உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களையும் வாங்கலாம். அவற்றை வேகவைத்து ஏதேனும் ஒரு பானத்தில் கலந்து குடிக்கலாம்.

    இலவங்கப்பட்டை:

    இலவங்கப்பட்டை உடனடியாக வேலை செய்யாது. ஆனால், பிரக்னன்ஸி அடைவதை தவிர்க்கலாம். மேலும், இது சில கண்டிஷன்களில் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவுகளை கூட ஏற்படுத்தும். உடலுறவுக்குப் பிறகு பிரக்னன்ஸியை தவிர்க்க, மாதவிடாய் ஏற்படும் வரை தினமும் தேநீர் வடிவில் இலவங்கப்பட்டை உட்கொள்ளலாம்.

    மாதவிடாய் தள்ளிப்போன பிறகு பிரக்னன்ஸி அடைவதை தவிர்க்க உதவும் மூலிகைகள்

    குயின் ஆனீஸ் லேஸ்:

    இந்த மூலிகையானது புரோஜெஸ்ட்டிரோன் தொகுப்பில் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதன் மூலம் கருமுட்டை பொருத்துவதைத் தடுக்க உதவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 7 நாட்கள் வரை இதன் விதைகளை தேநீர் அல்லது மிக்ஸர் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்படலாம்.

    வேம்பு:

    பழங்காலத்திலிருந்தே வேம்பு ஒரு கருத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் சாறு, இலைகள் அல்லது வேப்ப எண்ணெய் வடிவத்தில் உட்கொள்ளலாம். வஜைனா வழியாக வேப்ப எண்ணெய்யை உட்செலுத்தி விந்தணுக்களை திறம்பட கொல்வதன் மூலம் எதிர்பாராமல் ஏற்படும் பிரக்னன்ஸியை தடுக்கும்.

    ஸ்பியர்மிண்ட்:

    ஸ்பியர்மிண்ட் ஒரு பழங்கால கருத்தடை முறையாகும், இதை சிறிய அளவில் எடுத்துக் கொள்வது கூட மிகவும் உதவியாக இருக்கும். அதிகப்படியான எடுத்துக்கொள்ளும்போது விஷத்தன்மைகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த தேநீரை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும்

    பருத்தி வேர் பட்டை:

    உலர்ந்த வடிவத்தில் இருக்கும் பருத்தி வேர் பட்டை பிரக்னன்ஸியை சிறந்த முறையில் தடுக்கும் மூலிகையாகும். இது ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோனைத் தூண்ட உதவுகிறது. இது பிரக்னன்ஸி அடைவதை தடுக்கிறது. பட்டையை தேநீரில் கொதிக்க வைத்து உட்கொள்ளலாம்.

    கருப்பு மற்றும் நீல கோஹோஷ்:

    இந்த மூலிகைகள் ஆக்ஸிடாசினைத் தூண்ட உதவுகின்றன. இது கருப்பை சுவர் சுருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிரக்னன்ஸி அடைவதை தடுக்கிறது. எடுக்க வேண்டிய அளவை தீர்மானிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

    மாதவிடாய் தள்ளிப்போன பிறகு ஏற்படும் பிரக்னன்ஸியை எவ்வாறு தவிர்ப்பது

    பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது ஆணுறையால் ஏற்படும் சிக்கல்களுக்கு பிறகு பீதியடைவதை விட சரியான பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவது சிறந்தது. பிறப்பு கட்டுப்பாட்டுக்கான சில இயற்கை வைத்தியங்கள் இங்கே உள்ளன. அவை எளிதானவை, பாதுகாப்பானவை மற்றும் உங்கள் வீட்டில் வசதியாக முயற்சி செய்யலாம்.

    காலண்டர் முறை

    காலண்டர் முறை உங்கள் மாதவிடாய் சுழற்சிகளைக் கண்காணிப்பதை உள்ளடக்கியது. உங்கள் ஓவுலேசன் எந்த நாட்களில் தொடங்குகிறது என்பதைச் சரிபார்க்கவும். ஓவுலேசன் நடக்கும் போது, அவை நீங்கள் கர்ப்பமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நாட்கள் ஆகும். ஓவுலேசன் நடக்கும் போது உடலுறவைத் தவிர்ப்பது பிரக்னன்ஸி அடைவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இந்த விளக்கப்படத்தில் குறைந்தது 12 சுழற்சிகளைக் கணக்கிடவும், மிகக் குறுகிய சுழற்சியிலிருந்து 18 நாட்களையும், மிக நீண்ட சுழற்சியிலிருந்து 11 நாட்களையும் கழித்தால், நீங்கள் கருவுவதற்கு அதிக வாய்ப்புள்ள நாட்களை கண்டுபிடித்து விடலாம்.

    வெப்பநிலை முறை

    வெப்பநிலை முறையானது உங்கள் ஓவுலேசன் நாளை வரையறுக்க உங்கள் உடல் வெப்பநிலையை பதிவு செய்வதை உள்ளடக்குகிறது. ஓவுலேசன் நடைபெறும் போது உங்கள் உடல் வெப்பநிலை அதிக அளவில் உயர்கிறது. எனவே, இந்த நாட்களில் உடலுறவைத் தவிர்ப்பது எதிர்பாராமல் ஏற்படும் பிரக்னன்ஸியை தவிர்க்க உதவும்.

    இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கான கருத்தடை உறைகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

    இயற்கை கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

    மாதவிடாய் தள்ளிப்போன பிறகு இயற்கையாகவே கர்ப்பத்தைத் தவிர்க்க மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியம் எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன:

    • எந்தவொரு பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

    • இந்த இயற்கை கருத்தடை முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

    • ஏதேனும் அசாதாரண பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக இயற்கை வைத்தியத்தை உட்கொள்வதை நிறுத்துங்கள்.

    • மேலே, குறிப்பிட்டுள்ள இயற்கை வைத்தியம் 100% பயனுள்ளதாக இல்லை என்றாலோ, அல்லது அவற்றில் சில நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும் என்றாலோ அதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    • பாதுகாப்பான உடலுறவைப் முயிற்சி செய்வதே எப்போதும் சிறந்தது, மேலும் ஏதேனும் கவலை அல்லது பயம் ஏற்பட்டால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.