hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Women Specific Issues arrow
  • மார்பக ஃபைப்ரோடெனோமா( Breast Fibroadenoma)- காரணங்கள் மற்றும் சிகிச்சை arrow

In this Article

     மார்பக ஃபைப்ரோடெனோமா( Breast Fibroadenoma)- காரணங்கள் மற்றும் சிகிச்சை

    Women Specific Issues

    மார்பக ஃபைப்ரோடெனோமா( Breast Fibroadenoma)- காரணங்கள் மற்றும் சிகிச்சை

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    மார்பக ஃபைப்ரோடெனோமா என்பது உலகளவில் பல பெண்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான ஆனால், பாதிப்பில்லாத கண்டிஷன் ஆகும். இந்த கண்டிஷனுக்கு பொதுவாக எந்த விரிவான சிகிச்சையும் தேவையில்லை மற்றும் அது தானாகவே மறைந்துவிடும். இந்த கட்டுரையின் மூலம் மார்பக ஃபைப்ரோடெனோமா என்றால் என்ன? அதற்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

    மார்பக ஃபைப்ரோடெனோமா என்றால் என்ன?

    மார்பகத்தில் ஏற்படும் ‘ஃபைப்ரோடெனோமா’ என்பது இளம் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு தீங்கற்ற (புற்றுநோய் அல்லாத) கட்டியாகும். இந்த வகை கட்டியானது கிலாண்டுலர் மற்றும் ஃபைப்ரோஸ் திசுக்களால் ஆனது. ஃபைப்ரோடெனோமாஸ் என்பது பொதுவாக ஒரு வழக்கமான மேமோகிராம் அல்லது மார்பக பரிசோதனையின் போது கண்டறியப்படுகின்றன.

    இந்த கட்டிகள் பொதுவாக பாதிப்பில்லாதவையாக இருந்தாலும், சில சமயங்களில் வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிதாக வளரலாம்.அரிதான சந்தர்ப்பங்களில், ஃபைப்ரோடெனோமா மார்பக புற்றுநோயாக மாறலாம். இதனால், கட்டிகளில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் அல்லது வளர்ச்சிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    ஒருவருக்கு ஃபைப்ரோடெனோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டால், அவரிடம் ரெகுலர் மேமோகிராம் மூலம் கட்டியைக் கண்காணிக்க மருத்துவர் பரிந்துரைப்பார். சில சந்தர்ப்பங்களில், கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

    மார்பக ஃபைப்ரோடெனோமாவின் பொதுவான அறிகுறிகள் யாவை?

    மார்பக ஃபைப்ரோடெனோமாவில் வெவ்வேறு வகைகள் உள்ளன. மேலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு ஃபைப்ரோடெனோமா அறிகுறிகளை ஏற்படுத்தும். மார்பக ஃபைப்ரோடெனோமாவின் மிகவும் பொதுவான அறிகுறியானது மார்பகத்தில் ஒரு கட்டி அல்லது திரள் போன்று இருக்கும். இந்த கட்டி பொதுவாக வலியற்றது மற்றும் மார்பகத்தோலை தொடுவதன் மூலம் உணரமுடியும். கட்டியானது தெளிவான எல்லைகளுடன் மிகவும் மென்மையாகவும், ரப்பர் போன்று அல்லது தொடுவதற்கு உறுதியாகவும் இருக்கலாம்.

    சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் லேசான ஃபைப்ரோடெனோமாவால் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். பொதுவாக, ஃபைப்ரோடெனோமாஸ் மிகவும் மெதுவான வேகத்தில் வளர்கின்றன, எனவே அவற்றை உடனடியாக உணர முடியாது. இருப்பினும், அவை நாட்கள் செல்லச் செல்ல வளர ஆரம்பிக்கும். அவை தெளிவான எல்லைகளை உருவாக்கலாம். இதை சுய-பரிசோதனை மூலம் தெளிவாகக் கண்டறியலாம்.

    மார்பக ஃபைப்ரோடெனோமா ஏற்பட என்ன காரணம்?

    மார்பக ஃபைப்ரோடெனோமா ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஆனால், சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், இதை ஏற்படுத்தக்கூடிய சில சாத்தியமான பங்களிப்பு காரணிகள் பின்வருமாறு:-

    • ஹார்மோன் மாற்றங்கள் :

    குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதுடைய பெண்களில் ஃபைப்ரோடெனோமாஸ் அதிகம் காணப்படுவதால், இதுவே பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் (ஒரு பெண் ஹார்மோன்) ஃபைப்ரோடெனோமாஸ் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது.

    • குடும்ப வரலாறு :

    ஃபைப்ரோடெனோமாஸ் வரலாற்றைக் கொண்ட குடும்ப உறுப்பினர் உங்கள் வீட்டில் இருந்தால், உங்களுக்கும் அது ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

    • உடல் பருமன் :

    அதிக உடல்பருமனுடன் இருப்பது (அதிகரித்த பிஎம்ஐ) ஃபைப்ரோடெனோமாஸை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

    ஃபைப்ரோடெனோமாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், சில சாத்தியமான ஆபத்து காரணிகள் அவற்றின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும். இதில் ரிஸ்க் இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் இது பற்றி கலந்து ஆலோசியுங்கள்.

    மார்பக ஃபைப்ரோடெனோமாவின் பல்வேறு வகைகள் என்னென்ன?

    மார்பக ஃபைப்ரோடெனோமாவில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்கென்று தனி அறிகுறிகளையும் சிகிச்சை விருப்பங்களையும் கொண்டுள்ளது. மிகவும் பொதுவான வகை தீங்கற்ற திரள் மார்பக நோயாகும். இது மார்பகத்தில் ஏற்படும் அசாதாரண மார்பக திசுக்களின் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை ஃபைப்ரோடெனோமா பொதுவாக தீங்கற்றது. அதாவது, இது புற்றுநோய் அல்ல மற்றும் இதற்கு பொதுவாக சிகிச்சை தேவைப்படாது. இருப்பினும், ஃபைப்ரோடெனோமா 5 சென்டிமீட்டருக்கு மேல் வளர்ந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். ஃபைப்ரோடெனோமாவின் பிற வகைகளில் டக்டல் ஃபைப்ரோடெனோமா அடங்கும். இது மார்பகக் குழாய்களில் அசாதாரண திசுக்களின் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் பொதுவாக தீங்கற்றது. மார்பக ஃபைப்ரோடெனோசிஸின் பிற வகைகள், அளவு மற்றும் அதன் சிக்கலான தன்மையைப் பொறுத்து, பின்வருமாறு:-

    • எளிய ஃபைப்ரோடெனோமா

    • சிக்கலான ஃபைப்ரோடெனோமா

    • ஜெயண்ட்/இளம் வயதிற்குரிய ஃபைப்ரோடெனோமா

    இதையும் படிக்கலாமே! - மார்பக நீர்க்கட்டி என்றால் என்ன, அதன் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?

    மார்பக ஃபைப்ரோடெனோமாவுக்கு என்னென்ன சிகிச்சை விருப்பங்கள் உள்ளன?

    மார்பக ஃபைப்ரோடெனோமாவுக்கு இன்று வெகுசில சிகிச்சை விருப்பங்களே உள்ளன. இதில் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஒரு விருப்பமாகும். இது பொதுவாக கட்டி பெரியதாக இருந்தால் அல்லது வலியை ஏற்படுத்தினால் மட்டுமே செய்யப்படுகிறது. எக்சிஷன் பயாப்ஸி எனப்படும் செயல்முறை மூலம் ஃபைப்ரோடெனோமா அகற்றப்படுகிறது. இந்த செயல்முறை பொதுவாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு பின்னர் செய்யப்படுகிறது. அதோடு, இது பெரிய மற்றும் சிக்கலான ஃபைப்ரோடெனோமாஸுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனளிக்கிறது.

    இருப்பினும், பெரும்பாலான ஃபைப்ரோடெனோமாஸ் பெரிதாக வளர்வதில்லை. மேலும், அவை பெண் ஹார்மோன்களுக்கு (பொதுவாக ஈஸ்ட்ரோஜன்) பதிலளிக்கக்கூடியதாக இருப்பதால் அவை தானாகவே மறைந்துவிடும். முதலிலிருந்தே சில பெண்கள் அந்த கட்டியை மட்டும் கண்காணித்து எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு காரணம் கட்டி சிறியதாக இருப்பதாலும் மற்றும் வேறு அறிகுறிகள் இல்லாததாலும் பொதுவாக அவ்வாறு செய்கின்றனர்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் மார்பகக் கட்டிக்கான காரணங்கள்

    ஒரு மருத்துவரை எப்போது சென்று பார்க்க வேண்டும்?

    யாரேனும் மார்பகத்தில் கட்டி இருப்பதைக் கண்டறிந்து, அது ஃபைப்ரோடெனோமா என்று சந்தேகித்தால், அப்போது அவர்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பார்கள்.

    இந்த கேள்விக்கான பதில், கட்டியின் அளவு மற்றும் அவர்களின் தனிப்பட்ட சுகாதார வரலாறு போன்ற சில காரணிகளைப் பொறுத்தது. ஒருவேளை கட்டி பெரியதாக இருந்தாலோ, அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், அவர்கள் விரைவில் மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல், மார்பகப் பகுதியில் ரேடியோ தெரபியின் வரலாறு போன்ற மார்பகப் புற்றுநோய்க்கான வேறு ஏதேனும் ஆபத்து காரணிகள் இருந்தால், அவர்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

    இருப்பினும், பொதுவாக, பெரும்பாலான ஃபைப்ரோடெனோமாஸ் வழக்கமான மேமோகிராம்கள் மற்றும் மார்பக பரிசோதனைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒருவருக்கு தனது மார்பக ஆரோக்கியம் குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால், அல்லது மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.