


Pregnancy Journey
9 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
மரவள்ளிக்கிழங்கு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உலகெங்கிலும் உட்கொள்ளப்படும் ஒரு முக்கிய உணவாகும். மரவள்ளிக்கிழங்கில் இருந்து தான் ஸ்டார்ச் பிரித்தெடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் ஏதேனும் நன்மைகள் உள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இது மற்ற மாவுகளைப் போன்றது என்றும், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர், சிலர் மரவள்ளிக்கிழங்கு கர்ப்பத்திற்கு நல்லது என்றும் கூறுகிறார்கள்.
கோதுமை, அரிசி அல்லது பிற சோள அடிப்படையிலான மாவுகளுக்கு மாற்றான நார்ச்சத்தின் மூலமாக மரவள்ளிக்கிழங்கு இருப்பதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது என்ற நோக்கில் கர்ப்பிணிப் பெண்கள் இதை உட்கொள்ள விரும்புகிறார்கள். மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி என்ன வகையான ஆரோக்கியமான உணவுகளை செய்யலாம், மேலும் இது என்ன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பதை இந்தப் பதிவின் மூலம் அறிவோம்
சிறிய அளவில் இருந்தாலும், மரவள்ளிக்கிழங்கில் கால்சியம், மெக்னீசியம், உணவு நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, இரும்பு மற்றும் வைட்டமின் பி போன்ற பலவிதமான தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், இவை சிறிதளவிலேயே இருப்பதால், மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துக்களைப் பெறும் வாய்ப்பு குறைவே.
மரவள்ளிக்கிழங்கு உட்கொள்து உடலில் அதிக கலோரிகளைச் சேர்க்காது என பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
உலர்ந்ததை விட, புதிய மரவள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்து மதிப்பு அதிகம் கொண்டுள்ளதால், கர்ப்பத்தின் போது உண்ணத் தகுந்தது எனக் கருதப்படுகிறது. ஆயினும்கூட, இதில் அதிக அளவு ஊட்டச்சத்து இல்லை, எனவே மரவள்ளிக்கிழங்கை மட்டும் எடுத்துக் கொள்வது உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யாது. குறிப்பாக மரவள்ளிக்கிழங்கை சமைக்கும் முறை கூட இதன் ஊட்டச் சத்து மதிப்பைக் குறைக்கலாம். சமைத்த பிறகு, மரவள்ளிக்கிழங்கில் அதிக நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் இல்லை, எனவே கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு அதிகப் பயன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு கர்ப்பத்திற்கு நல்லதா என்ற கேள்விக்கு எளிமையான பதில் தேவை என்றால் சாப்பிடுங்கள் என்பது தான்; இதில் அதிக ஊட்டச்சத்து மதிப்பு இல்லாததால், அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். அதே சமயம், அதிக அளவு மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் மரவள்ளிக்கிழங்கை மட்டுமே சார்ந்து இருக்காமல், அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பெறக் கூடிய சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் போது மரவள்ளிக்கிழங்கு சில ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பினும், அவை உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் சிறந்தவை என்பதால், நாளின் துவக்கத்தில் உட்கொள்ள இது ஒரு சிறந்த சப்ளிமென்ட் ஆகும்.
உடல் சோர்வு, பலவீனம் அல்லது சோர்வாக இருப்பதைத் தவிர்க்க விரும்பினால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது நல்லது.
எடை இழப்பு அல்லது எடை குறைபாடுகளை சந்தித்தால், மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வது நன்மை பயக்கும். கர்ப்ப காலத்தில் மரவள்ளிக்கிழங்கு உட்கொள்வது இழந்த எடையை மீண்டும் பெற உதவும்.
மரவள்ளிக்கிழங்கில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் உப்புசம் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வது மலச்சிக்கல் அல்லது உப்புசத்தைத் தடுக்க உதவுகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது அமிலத்தன்மையைத் தவிர்க்க உதவும்.
மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகளுடன் கூடுதலாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் ஃபோலேட் உள்ளது. கருவின் உறுப்புக் குறைபாடுகளைத் தடுக்க இது உதவுகிறது.
மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் நன்மை பயக்கும் மற்றும் இது இன்சுலின் மீதான உணர்திறனை மேம்படுத்த உடலை அனுமதிப்பதால் கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன.
மரவள்ளிக்கிழங்கு கர்ப்பத்திற்கு நல்லது என்றாலும் அதன் அதிகப்படியான பயன்பாடு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் மரவள்ளிக்கிழங்கை உட்கொள்ளும் முன் அதன் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது -
மரவள்ளிக்கிழங்கு செரிமானத்திற்கு உதவுகிறது என்றாலும், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடிய சில ஊட்டச்சத்து எதிர்ப்புகளையும் கொண்டுள்ளது. மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட்கள் இருந்தாலும், எடை அதிகரிப்பதற்குப் பதிலாக விரைவான எடை இழப்புக்குக் கூட வழிவகுக்கும்.
மரவள்ளிக்கிழங்கின் வேர்களில் சயனைடு போன்ற இரசாயனங்கள் உள்ளன, இது உடலில் ஆபத்தான விஷத்தை ஏற்படுத்தும்.
மரவள்ளிக்கிழங்கை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தேவையற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும், உயர் இரத்த சர்க்கரை அல்லது இதய பிரச்சனைகள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
https://www.kingdomofbaby.com/eating-tapioca-during-pregnancy-is-it-a-good-source-of-nutrients/
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips


பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் நீச்சல் - பாதுகாப்பு, நன்மைகள் மற்றும் அபாயங்கள்(Swimming During Pregnancy - Safety, Benefits, and Risks In Tamil)

லேப்ராஸ்கோபிக் மகப்பேறு அறுவை சிகிச்சை

கர்ப்ப காலத்தில் பார்லி தண்ணீர்: நன்மைகள், அபாயங்கள் மற்றும் எப்படி தயாரிப்பது

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியே வருமா?(Do Pregnant Women Ovulate?In Tamil)

உங்கள் குழந்தைக்கு சளியா அல்லது அலர்ஜியா என்பதை எவ்வாறு வேறுபடுத்துவது?

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |