
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பல வகையான அறிகுறிகள் மற்றும் குறிப்புணர்வுகள் தென்படுகின்றன. ஆனால், அரிதிலும் அரிதாக சில பெண்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் போகிறது. நீங்கள் அத்தகைய பெண்களில் ஒருவர் என்றால், எதிர்பாராத கர்ப்பம் அடைந்துள்ளீர்கள் என்றால், அது உங்களுக்கான ரகசிய கர்ப்பமாக இருக்கலாம்.
சிலர் கர்ப்பமாக இருக்கின்ற போதிலும் அதுகுறித்து அறியாமல் இருப்பது தான் ரகசிய கர்ப்பம் ஆகும். இதனை ‘கள்ளத்தனமான கர்ப்பம்’ என்றும் குறிப்பிடலாம். பிரசவ அறிகுறிகள் தென்படும்போது தான் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உணருவார்.
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பம் அடைந்த 4வது வாரம் முதல் 12வது வாரத்திற்குள் தெரிய வருகிறது. கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள் அல்லது அவர்களது மாதவிலக்கை தவற விடுவதன் மூலமாக இது தெரிய வரும். ஆனால், ஒரு பெண்ணுக்கு ரகசிய கர்ப்பம் உண்டாகியுள்ளது என்றால் அவர்களுக்கு கர்ப்பத்திற்கான எந்தவித அறிகுறிகளும் தெரிய வராது. கர்ப்ப பரிசோதனை முடிவு தவறானதாக இருக்கலாம். அவர்களுக்கு திட்டமிடப்படாத கர்ப்பம் உண்டாகியிருக்கலாம் அல்லது கர்ப்பம் அடைந்ததற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் போகலாம். சிலர் கர்ப்பத்தை வைரஸ் தாக்குதல் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கலாம்.
குழந்தை பெற்றுக் கொண்ட பல பெண்களுக்கு, இன்னொரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருக்கிறார் என்று சொன்னால் அதை நம்புவதற்கு கடினமாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில் தொந்தரவு தரக் கூடிய அறிகுறிகள், மாதவிலக்கு தவறுவது, திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் உடல் எடை கூடுதல் போன்றவை உங்கள் வயிற்றில் புதிய உயிர் வளரத் தொடங்கியுள்ளது என்பதை உணர்த்தி விடும்.
ரகசிய கர்ப்பம் குறித்து நீங்கள் இன்னமும் நம்பவில்லை என்றால், தன்னுடைய நிலை குறித்து அறியாத கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன சூழல் காரணமாக இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
பிறப்பு கட்டுப்பாடு அல்லது கருத்தடுப்பு உத்திகளை சரியாகவும், வாடிக்கையாகவும் கடைப்பிடித்து வரும் பட்சத்தில், நீங்கள் கர்ப்பம் அடையக் கூடும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.
மாதவிலக்கு தவறுவதான் ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளார் என்பதற்கான முக்கியமான மற்றும் பரவலாக அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்றாகும்.
கர்ப்பம் அடைந்த இரண்டு வாரங்களில், உங்கள் குழந்தை தன்னை கர்ப்பப்பை உள்ளே பொருத்திக் கொண்ட நிலையில், கருத்தரித்தலுக்கான உதிரப்போக்கு உங்களுக்கு ஏற்படலாம். ஏற்கனவே கூடுதலான உதிரப்போக்கு ஏற்பட்ட அனுபவம் இல்லாத பெண்கள், இதனை அவர்களது மாதவிலக்கு என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடும்.
உங்களுக்கு திட்டமிடப்படாத கர்ப்பம் உண்டாகியிருக்கலாம் மற்றும் வெகு விரைவில் நீங்கள் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
காலை நேர சோர்வு, குமட்டல் அல்லது மார்புகளில் புண்கள் போன்ற கர்ப்பத்திற்கான பொதுவான அறிகுறிகளை நீங்கள் உணராத பட்சத்தில், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் போகலாம்.
உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதுடன், குழந்தை வளருவதற்கான அறிகுறியாக வயிறு பெரியதாக தோற்றமளிக்காத பட்சத்தில் நீங்கள் கர்ப்பத்தை அறிய வாய்ப்பில்லை.
உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இல்லாத பட்சத்தில், குழந்தையின் நகர்வுகளை உங்களால் உணர்ந்து கொள்ள இயலாது.
கடந்த காலங்களில் கர்ப்பம் அடைவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டவர்கள் அல்லது கர்ப்பம் உண்டாகுவதை சிக்கலாக்கும் வகையிலான உடல்நல பிரச்சினைகளை கொண்டவர்கள், தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று யோசிக்க வாய்ப்பில்லை.
மன அழுத்தம், பயம் மற்றும் வெட்கம் காரணமாக ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உணர மாட்டார் அல்லது ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இயல்பான முறையில் கர்ப்பம் கொண்டிருக்கும் பெண் அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய அதே வகையிலான அறிகுறிகள் தான் ரகசிய கர்ப்பம் கொண்டவர்களுக்கும் இருக்கும். ஆனால், இதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்ணுக்கு, தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்ற அறிகுறிகளை உணராமல் இருப்பது தான்.
உதாரணத்திற்கு, ஏதோ குறிப்பிட்ட உணவை சாப்பிட்ட காரணத்தால் அல்லது போதிய தூக்கமின்மை காரணத்தால் தான் உடல் சோர்வு ஏற்படுகிறது என்று சில பெண்கள் நினைத்துக் கொள்வார்கள். ரகசிய கர்ப்பத்தின் பிற அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சீரற்ற மாதவிலக்குகள்
மார்புகளில் வலி, வீக்கம் அல்லது தளர்வாக இருப்பது
லேசான உதிரப்போக்கு அல்லது வெள்ளைப்படுதல்
குமட்டல் அல்லது வாந்தி
சோர்வு
வீக்கம்
பிடிப்பு
மலச்சிக்கல்
சிறுநீர் கழித்தல் அதிகரிப்பது
இறுக்கம்
பசி அல்லது உணவு வேட்கையில் திடீர் மாற்றங்கள்
கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மாதிரியான பாதிப்பை உண்டாக்கும். முந்தைய கருத்தரித்தலுக்கு பிறகு உடனே மற்றொரு கர்ப்பம் ஏற்பட்டு விடுமா என்ன என்று சில பெண்கள் ஆச்சரியம் அடையக் கூடும். சிலர் மாதவிலக்கு இல்லாமலே சில மாதங்கள் கடக்கின்றன என்று நினைத்துக் கொள்ளக் கூடும்.
ரகசிய கர்ப்பங்களுக்கான உதாரணங்கள் மிக, மிக அரிதானவையாகும். கர்ப்பம் அடைந்த 475 பெண்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்களில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் 20 வாரங்கள் வரையிலும் கர்ப்பத்தை உணராத போக்கு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2500 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே பிரசவிக்கும் வரையில் அவர்களது கர்ப்பம் தெரியாமல் போகிறது.
பொதுவாக பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ கண்காணிப்பு மற்றும் போதிய இடைவெளியில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் மூலமாக கர்ப்பிணி பெண்களும், அவர்களது பச்சிளம் குழந்தைகளும் பலன் அடைகின்றனர்.
ஆனால், ஒரு கர்ப்பிணி பெண், தன்னுடைய கர்ப்பத்தை உணராத பட்சத்தில், அவர்களுக்கும், பிறக்க இருக்கும் அவர்களது குழந்தைக்கும் தேவைப்படுகின்ற இந்த பராமரிப்பு கிடைக்காமல் போய்விடும். இதனால், கர்ப்பிணி பெண் மற்றும் அவர்களது குழந்தை ஆகிய இருவருக்குமே உடல்நலன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம்.
ரகசிய கர்ப்பம் அடையும் பெரும்பாலான பெண்களுக்கு வீடுகளில் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் மருத்துவ நிபுணர்களின் துணையின்றி பிரசவம் நிகழ்ந்து விடுகிறது. நீங்கள் எதிர்பாராத சூழலில் திடீரென்று குழந்தையை பெற்றெடுப்பது மிகுந்த வலியை ஏற்படுத்தும் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ரகசிய கர்ப்பத்தின் மூலமாக பிரசவிக்கும் பல குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல உடல் எடை குறைவாக அல்லது கர்ப்ப கால வயதுக்கு தகுந்த வளர்ச்சியின்றி பிறக்கும் குழந்தைகளை போல இருக்க வாய்ப்பு உள்ளது. கர்ப்ப கால மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் பிரசவிக்கும் தாய்மார்களுடைய குழந்தைகள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளை இந்த குழந்தைகளும் எதிர்கொள்ளும். ரகசிய கர்ப்பத்தின் மூலமாக பிரசவிக்கும்போது வயிற்றிலேயே குழந்தை இறப்பது, சிசு இறப்பு மற்றும் அலட்சியம் போன்ற பெரும் அபாயங்கள் உள்ளன.
ரகசிய கர்ப்பத்தை பொருத்தவரையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினை என்னவென்றால், அவர்களுக்கான அறிகுறி என்பது சாதாரண பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிக இயல்பான அறிகுறிகளை போலவே இருக்கும். எனவே, ஒரு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யும் வரையில் அல்லது கர்ப்பப்பை மற்றும் கரு துருவம் பெரியதாக மாறும் வரையில் அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பது மருத்துவருக்கே தெரியாமல் போகலாம். பிறப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மிக கவனமாக மேற்கொள்வது தான் ரகசிய கர்ப்பத்தை தடுப்பதற்கான ஒரே வழிமுறையாகும். அப்படி இல்லை என்றால் ரகசிய கர்ப்பத்தை எதிர்கொண்டிருக்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை கணித்துச் சொல்வது கடினமாகும்.
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |