This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தையின் டயப்பர் பேக்(diaper bags) வாங்கும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்

Travel & Holidays
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
குழந்தையின் டயப்பர் பேக்(diaper bags) வாங்கும் பொழுது  கருத்தில் கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்
Read time9 min

டயப்பர் பேக்(diaper bag) என்றால் என்ன?(What is a diaper bag)

டயப்பர் பேக் என்பது குழந்தைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்ல ஏதுவான பல்-உபயோகப் பை ஆகும். இது நாப்பி பேக் என்றும் அழைக்கப்படுகிறது, இதில் குழந்தைகக்குத் தேவையான பொருட்களை ஒழுங்கமைப்பதற்கான பிரிவுகள் உள்ளன.

டயப்பர் பேக்(diaper bag) வகைகள்(Types Of Diaper Bags):

மெசஞ்சர் அல்லது ஸ்லிங் டயபர் பைகள்(Messenger Or Sling Diaper Bags) :

இந்தப் பைகள் பொதுவாக ஒரு நீளமான ஸ்ட்ரிப் கொண்டிருக்கும், இவற்றை கிராஸ் பாடியாக அல்லது உங்கள் தோளுக்கு மேல் அணியலாம். இது பெரும்பாலும் பலரால் விரும்பப்படுகிறது. இந்த டயபர் பேக்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் டிசைன்களில் வருவதால், அவை நவநாகரீகமாகவும், டிசைனர் பைகள் போலவும் இருக்கும். இது பார்க்க நாப்பி பேக் போல இருக்காது. இந்த பைகளில் நிறைய பாக்கெட்டுகள் மற்றும் ஜிப்பர் கொண்ட அறைகள் இருப்பதால், தேவையான பொருட்களை எளிதாக ஒழுங்கமைக்கலாம். ஒரு பாக்கெட்டில் டயப்பர்கள், மற்றொரு பாக்கெட்டில் புதிய ஆடைகள், மூன்றாவதில் தின்பண்டங்கள் என பலவற்றை வைக்கலாம். இந்த டயபர் பேக் பேட் செய்யப்பட்ட கிராஸ்-பாடி ஸ்ட்ராப் கொண்டிருப்பதால், மிகவும் பாதுகாப்பானது. முதுகு மற்றும் தோள்பட்டை வலி இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறது.இருப்பினும், உங்கள் பையின் உள்ளடக்கங்களை எளிதாக அணுகுவதில் சிறிது கடினம் இருக்கலாம். மெசஞ்சர் பையின் ஃபோல்டோவர் ஃபிரண்ட் ஸ்டைல் சில பெற்றோருக்கு திறப்பதையும் மூடுவதையும் கடினமாக்குகிறது.

பின்னாடி மாட்டிக் கொள்ளும் டயபர் பைகள்(Backpack Diaper Bags) :

லேப்டாப் பேக் போன்று தோற்றமளிக்கும் இந்த வகையான பைகள் பெற்றோர்கள் மத்தியில் பிரபலமான தேர்வாகும். குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் வசதியாக எடுத்துச் செல்லவும் அதே சமயம் கைகளைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் உதவுகின்றன, இதில் பலவிதமான ஸ்டைல் மற்றும் வடிவத்தில் வரும் கூடுதல் ஸ்டோரேஜ் பாக்கெட்டுகள் மற்றும் பிரிவுகள் உள்ளன. இவ்வகை பேக்களின் ஒரே குறை என்னவென்றால், பேபி வியரிங்கிற்குத் தடையாக இருக்கும். குழந்தை மற்றும் முதுகில் இருக்கும் பைை இரண்டையும் சுமந்து செல்வது சாத்தியமானது என்றாலும், சில சமயங்களில் அதிக எடையைக் கூட்டும். பின்புறமாக அணிய வேண்டும் என்பதால் பையை எளிதாக அணுக முடியாது என்பது ஒரு குறை.

கையில் இழுத்துச் செல்லக்கூடிய பைகள்(Tote Bags) :

இந்தப் பைகள் நம்பமுடியாத அளவிற்கு விசாலமானவை என்பதால், ஒரு நாள் அல்லது வார விடுமுறைக்கு ஏற்றதாக இருக்கும். பார்க்க டயாபர் பேக் போல் இல்லாததால் செயல்பாடு மற்றும் ஸ்டைல் இரண்டுமே சிறப்பாக இருக்கும். இது பெரியதாக, விசாலமான ஸ்டோரேஜூடன் வருகிறது. இந்த பேக்குகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று இதில் மிக பரவலாக இடம் இருப்பதால் பொருட்கள் கலக்கப்பட்டு பையின் அடிப்பகுதியில் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது. தேவையான போது உடனே பொருளை எடுப்பது கடினமாகும். இதில் கிராஸ் ஸ்ட்ரிப் இல்லாதாதால் தோளில் இருந்து நழுவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறைவான இடத்தைக் கொண்ட (மினிமலிஸ்ட்)பைகள்(Minimalist Bags) :

குழந்தை நடக்கத் துவங்கிவிட்டால் குறைவான பொருட்களே தேவைப்படும். அச்சமயத்தில் இந்தப் பைகள் சரியானதாக இருக்கும். டயபர் கிளட்ச்களை வழக்கமான பைகளாகவும், உங்கள் டயபர் பையின் உள்ளேயே சிறிய டயப்பர் மாற்றும் நிலையத்தைக் கொண்டதாகவும் பயன்படுத்தலாம். பெல்ட்-ஸ்டைல் முதுகுப்பைகள் கைகளுக்குச் சுதந்திரம் அளிக்கிறது. இந்த பைகளுக்கு அதிக ஸ்டோரேஜ் இடம் தேவை. கூடுதலாக, இந்தப் பைகள் எப்போதும் ஒரு மணிக்கட்டில் இணைக்கப்பட்டிருக்கும், எடுத்துச் செல்வது சற்று எரிச்சலூட்டும்.

டயப்பர் பையில்(diaper bag) கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்(Top 5 Essential Features To Look For In A Diaper Bag):

நிறைய சேமிப்பு இடம்(Lots of storage space) :

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போது முறையாகத் திட்டமிடல் அவசியம். குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வைத்திருப்பது மிகவும் சவாலானது பயணத்தின் போது நிறைய டயப்பர்கள், வெட் வைப்ஸ் மற்றும் குழந்தை உணவு மற்றும் பொம்மைகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். எனவே, நீங்கள் முதல் முறையாக ஒரு டயபர் பையை வாங்கினால் ஸ்டோரேஜ் மீது கவனம் செலுத்தவும்.

எளிதாக சுத்தம் செய்தல்(Easy to clean):

பையில் நிறைய பொருட்களை வைப்பீர்கள், குழந்தைகளுக்கான உணவு சில சமயங்களில் பைக்குள் சிந்தும் அல்லது உடைந்து போகலாம். சில நேரங்களில் நீங்கள் அழுக்கடைந்த போர்வைகளைப் பையின் உள்ளே வைக்க வேண்டியிருக்கும். எனவே, பையில் கறை படியலாம் அல்லது துர்நாற்றம் வீசலாம். எனவே உறுதியான மற்றும் எளிதில் சுத்தம் செய்யக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட டயப்பர் பையைத் தேர்வு செய்வது அவசியம். பாக்கெட்டுகள், பார்டிஷன்கள் மற்றும் ஸ்ட்ரிப்கள் சுத்தம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்.

எளிதாக ஒழுங்கமைத்தல்(Easy to organize) :

நிறைய பொருட்களை வைக்குமளவு பொருத்தமான கம்பார்ட்மென்ட் இருந்தால் ஒழுங்கமைப்பது எளிது. குழந்தையின் அத்தியாவசியப் பொருட்களுக்காக டயப்பர் பையை வாங்கும்போது, டயபர் பையில் சரியான கம்பார்ட்மென்ட்கள் மற்றும் பாக்கெட்டுகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பாக்கெட் பரந்ததாகவும் திறக்க எளிதாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் அவற்றை மூடியவுடன் அவை இறுக்கமாக பூட்டப்பட வேண்டும். வெளியில் செல்லும் போது எதிர்பாராதவிதமாகக் கசிவு ஏற்படக்கூடாது.

சிறந்த பணிச்சூழலியல் வடிவமைப்பு(It should have a great ergonomic design) :

நீங்கள் வாங்கும் டயப்பர் பேக் சிறந்த பணிச்சூழலியல் வடிவமைப்பைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தவும். பை மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தால், அதை மணிக்கணக்கில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் அது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது தீவிர தோள்பட்டை மற்றும் முதுகுப் பிரச்சினைகளை உருவாக்க வழிவகுக்கும். எனவே ஒரு டயபர் பையை வாங்குவதற்கு முன் நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். தயாரிப்பு மதிப்புரைகளைப் பார்த்து, சிறந்த பணிச்சூழலியல் வடிவமைப்பைக் கொண்டவையாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.

நீடித்த உழைப்பு(It should be durable) :

டயபர் பைகள் அடிக்கடி உபயோகிக்கப்படுவதால், நீடித்து நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றை தூக்கி எறிவோம், ஏதேனும் உணவு சிந்தும், கறை படியும், அத்துடன் குழந்தைகளின் பல அத்தியாவசிய பொருட்களால் நிரம்பி வழியும். டயப்பர் பைகள் நீடித்து நிலைக்கவில்லை என்றால், அவை குறுகிய காலத்தில் கிழிந்துவிடும். குழந்தையுடன் வெளியில் உலாவும் போது டயப்பர் பை கிழிந்து பொருட்கள் சிதறினால், அவற்றை எடுப்பது அதே சமயம் குழந்தையையும் பார்த்துக் கொள்வது நாம் விரும்பாத சூழ்நிலையை உருவாக்கும். எனவே, டயபர் பையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அது சிறந்த பொருட்களால் ஆனது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவை நீண்ட காலம் நீடிப்பது அவசியம்.

டயப்பர் பேக்கில் (diaper bag) அவசியமான பொருட்கள்(Diaper Bag Essentials):

டயப்பர்கள்(diapers) :

டயப்பர்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். எனவே, நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால், கூடுதலாக எடுத்துச் செல்வது நல்லது.

வைப்கள்(wipes) :

நல்ல டயப்பர் பேக் வாங்கி குழந்தையின் வைப்களை சாண்ட்விச் பையில் வைக்கவும். பொதுக் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு குழந்தையின் பிட்டம், உங்கள் கைகள் மற்றும் சேஞ்சிங் பேடைத் துடைக்க இவை அத்தியாவசியமானவை.

பேபி க்ரீம்(baby cream) அல்லது லோஷன்(baby lotion) :

ட்ரேவல் டியூப் அளவில் எடுத்துச் செல்லுங்கள், அவை பயன்படுத்த எளிதானவை.

சேஞ்சிங் பேடுகள்(changing pads) :

இவை பொதுவாக டயபர் பையுடன் வருகின்றன; இருப்பினும், பெரிதான ஒன்றை வாங்கவும்.

சிறிய பைகள்(Small empty sacks) :

அழுக்கடைந்த டயப்பர்கள் அல்லது துணிகளை எடுத்துச் செல்லப் பயன்படுகின்றன.

பேசிஃபையர்கள்(Pacifiers) :

இவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், அவற்றை சுத்தமான, சுகாதாரமான பையில் சேமிக்கவும். கூடுதல் பாட்டில் நிப்பில்களும் கைவசம் வைத்திருக்கவும்.

வாஷ் கிளாத்(Wash clothes) :

உங்களுக்குத் தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

சானிடைசர்(Hand Sanitizer) :

குழந்தைக்கு உணவளிக்கும் முன் அல்லது உடைகளை மாற்றுவதற்கு முன்பு, பொது இடங்களில் எப்போதும் சானிடைசர் பயன்படுத்தவும். இதற்கு முன் நீங்கள் எங்கே தொட்டீர்கள் எனத் தெரியாததால், இவை உங்கள் கைகளைச் சுத்தமாக்க உதவும்.

குழந்தை உணவு(Baby food) :

குழந்தைகளுக்கான ஃபார்முலா மற்றும் பாட்டில்கள் முதல் பம்ப் செய்யப்பட்ட தாய்ப்பால் அல்லது குழந்தை உணவு வரை, அவற்றைப் போதுமான அளவில் எடுத்துச் செல்வது அவசியம். கொஞ்சம் தண்ணீர் எடுத்துச் செல்லவும்.

மாற்று உடைகள்(Change of clothes) :

எப்போதும் ஒரு கூடுதல் ஜோடியை எடுத்துச் செல்லுங்கள். துப்புவது முதல் கசியும் பாட்டில்கள் வரை திடீரென மாற்று உடைக்கு அவசியம் நேரிடலாம்.சாக்ஸ்களும் கைவசம் வைத்திருக்கவும்.

தொப்பி(Cap) :

வெயில், குளிர் இவற்றிலிருந்து குழந்தையைக் காக்க சிறந்த தலைக் கவசம் தேவை.

லேசான குழந்தை போர்வை(Light baby blanket) :

சீசன் எதுவாக இருந்தாலும் போர்வையை எடுத்துச் செல்வது நல்லது. சூரியன் அல்லது எதிர்பாராத வேகமான காற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க அவை உதவியாக இருக்கும்.

பொம்மைகள்(Toys ) :

போர்டு புத்தகங்கள் முதல் கிலுகிலுப்பை அல்லது டீத்தர் வரை குழந்தையை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு செல்லுங்கள். டாய் ஸ்டிராப்களும் கொண்டு செல்லுங்கள்.

திண்பண்டங்கள்(Light snacks ) :

வயதான குழந்தைகளுக்குத் தேவையான அடுத்த உணவு கவிசம் இருப்பது எப்போதும் உபயோகமாக இருக்கும்.

பேண்ட்-எய்ட்(Band-aids) :

சிறு குழந்தைகளுடன், பூங்காவில் விளையாடும்போது, சிறு சிறு காயங்கள் பட வாய்ப்புண்டு. கைவசம் பேன்ட்எய்டு வைத்திருப்பது அந்நேரங்களில் உதவும்.

உங்களுக்காக சில பொருட்கள் :

நர்சிங் கவர்கள்(Nursing covers) :

பொது இடத்தில் குழந்தைக்கு உணவளித்தால் இது அவசியமானது.

உங்களுக்கான கூடுதல் ஆடைகள்(Extra clothes for yourself) :

குழந்தை உங்கள் மீது எச்சில் துப்பலாம் அல்லது வாந்தி எடுக்கலாம். எனவே உங்களுக்கு ஒரு மாற்று உடை எடுத்துச் செல்வது நல்லது.பிரசவத்தின் முதல் சில வாரங்களுக்குப் பிறகு, இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும்போது, நர்சிங் அல்லது வெஜினல் பேட்கள் கைவசம் இருப்பது மிகஅவசியம்.

முடிவுரை :

டயப்பர் பைகளில்(diaper bag) பல மாடல்கள் உள்ளன. பல வகைகள், வெவ்வேறு பாணிகளில் ஸ்டைலாகக் கிடைக்கின்றன. டயப்பர் பையை வாங்குவதற்கு முன் வசதி, எளிதான செயல்பாடு மற்றும் அழகு ஆகியவற்றிக்குச் சம முன்னுரிமை கொடுங்கள். ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமும் மாறுபட்டது என்றாலும், குழந்தையின் தேவைகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்திற்கு ஏற்ப சரியான பையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.