This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உண்ணுதல் கோளாறு - வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 28, 2025
உண்ணுதல் கோளாறு - வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்
Likes6 Likes|
Read time3 min

உண்ணுதல் கோளாறுகள் தீவிர மனநலப் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. மேலும், இது உணவு மற்றும் உண்ணும் வழக்கம் பற்றிய ஒரு நபரின் எண்ணங்களில் சிக்கலை உருவாக்கலாம். இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர் சாதாரணமாக சாப்பிட வேண்டிய அளவை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடலாம்.

உண்ணுதல் கோளாறுகளின் வகைகள் :

உண்ணுதல் கோளாறுகள் மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

BED பிஇடி (மிகை உண்ணும் கோளாறு) :

அளவுக்கு மீறி உண்ணும் நோய் என்பது ஒரு நபர் தனது உணவுப் பழக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் ஒரு நிலை. அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடலாம்.

பசியற்ற உளநோய் :

இந்த நிலை மிகவும் அரிதானது. 100-ல் ஒருவருக்கு பசியற்ற உளநோய் (அனோரெக்ஸியா நெர்வோசா) உருவாகலாம். இந்த பிரச்சனை உள்ளவர்கள் எடை குறைவாக இருக்கலாம். எடை கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் பொதுவாக மோசமான உடல் தோற்றம் கொண்டவர்களாகவும் தங்களுக்கு கொழுப்பு உள்ளதாகவும் கருதுகின்றனர். அவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு அட்டவணை விதிகளை தீவிரமாக பின்பற்ற விரும்புவார்கள்.

பெரும்பசி நோய் :

பெரும்பசி நோய் (புலிமியா நெர்வோசா) உள்ளவர்கள் அடிக்கடி உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நிறைய சாப்பிட்டு, வாந்தியெடுத்தல் அல்லது டயட் மாத்திரைகள் அல்லது மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அவற்றிலிருந்து விடுபடலாம். இந்த நிலையில் உள்ளவர்கள் பொதுவாக கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள். உண்ணுதல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேருக்கு இந்த நிலை உள்ளது.

உண்ணுதல் கோளாறுக்கான காரணங்கள் :

பல காரணிகள் இந்தக் கோளாறுக்கு வழிவகுக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி,உண்ணுதல் கோளாறுகளைத் தூண்டக்கூடிய பல்வேறு அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் குடும்ப உறுப்பினரின் மரணம், துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்துதல், விவாகரத்து போன்றவை அடங்கும்.நீண்ட கால குறைபாடுகள் அல்லது காது கேளாமை, மனச்சோர்வு, பார்வைக் குறைபாடு அல்லது நீரிழிவு நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்ளுக்கும் உண்ணுதல் கோளாறுகள் ஏற்படலாம்.

உண்ணுதல் கோளாறுகளின் அறிகுறிகள் :

  • முடி கொட்டுதல்
  • மனநிலை மாற்றங்கள்
  • தலைசுற்றுதல், மயக்கம்
  • வழக்கத்திற்கு மாறான வெப்பம் அல்லது வியர்த்தல்
  • கடுமையான எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு
  • உணவு உண்ண வேண்டும் என்பதை அல்லது உணவு உண்டதை மறத்தல்
  • சமூக நடவடிக்கைகள் அல்லது நண்பர்களிடமிருந்து விலகுதல்
  • உடற்பயிற்சி மற்றும் உணவை சரிசெய்தல்

சிகிச்சைகள் :

ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை கேட்பது

உணவு உண்ணும் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளும் இருக்கும். ஆன்டி-டிஃப்ரஸண்ட் அல்லது வேறு சில மருந்துகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு உதவலாம். இது நோயாளிகள் உணவு மற்றும் தங்களைப் பற்றிய எண்ணங்களை மேம்படுத்த உதவும்.

சில நேரங்களில், மனநலப் பிரச்சினைகள் உண்ணுதல் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, மனநல நிபுணரின் உதவியைப் பெறுவது பலனளிக்கும். நிபுணர் ஒரு CBT- அறிவாற்றல் நடத்தை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.