This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி சோதனை செய்தல்(Pregnancy Test at Home with Kit In Tamil) 

Conception
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி சோதனை செய்தல்(Pregnancy Test at Home with Kit In Tamil) 
Likes1 Likes|
Read time5 min

அதிநவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினாலும் அதிலும் தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஒரு கரு முட்டையை கருத்தரிக்க ஒரு விந்தணு மட்டுமே தேவைப்படும். எனவே கருத்தரிக்க வாய்ப்புள்ள அத்தகைய சந்தர்ப்பங்களில், இந்த OTC சோதனை செய்துகொள்வது ஒரு சிறந்த முடிவாக இருக்கும்.

ஓ.டி.சி கர்ப்ப பரிசோதனைகளில் உங்கள் சிறுநீரில் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஹெச்.சி.ஜி) என்ற ஹார்மோனை பரிசோதித்துப் பார்ப்பது பொதுவானது ஒன்றாகும். நீங்கள் பிரக்னன்டாக இருந்தால், உங்கள் உடலில் ஹெச்.சி.ஜி இருக்கும், முட்டையானது கருத்தரிக்கும், ஆனால் கருப்பை சுவர் அல்லது கருப்பைக்கு வெளியே இன்னும் அது இணையவில்லை என்றால், பின்னர் ஹார்மோன் வெளியிடப்படும்.

வீட்டில் பிரக்னன்ஸி சோதனை: படிப்படியான வழிமுறைகள்(Home Pregnancy Test: Step by Step Instructions In Tamil)

மார்கெட்டில் பலவிதமான பிரக்னன்ஸி சோதனை கிட்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் ஒரு கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி சோதனையை மேற்கொள்ள ஒரே வழியில் செயல்படுகின்றன: அவை சிறுநீரில் ஹெச்.சி.ஜி அளவைக் கண்டறிகின்றன. பிரக்னன்ஸி கிட் வாங்கும் போது, ​​முதலில் காலாவதி தேதியைப் பார்க்கவும். நீங்கள் வாங்குவதற்கு முன், பேக்கேஜிங் பிரிக்கப்படாமல் அப்படியே இருப்பதையும், புராடக்ட்டு புதியதாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரே பேக்கேஜில் இரண்டு சோதனைக் ஸ்டிக்குகளை வழங்கும் நிறுவன புராடக்ட்டுகள் இருக்கிறதா என்று பாருங்கள், எனவே அவசரப்பட்டு இன்னொன்றை வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் கிச்சனில் பல மாதங்களுக்கு முன்பு வாங்கி வைத்த கிட்டை பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு முறையும் பிரக்னன்ஸி சோதனை செய்வதற்கு புதிதாக வாங்குங்கள்.

  • மேலும் தகவல் ஆலோசனைக்கு சேர்க்கப்பட்ட கையேட்டைப் பார்க்கவும்(See the included manual for more information)

பிரக்னன்ஸி பரிசோதனை கிட்டை வாங்கிய பிறகு, வீட்டிலேயே பிரக்னன்ஸியை சோதனை மூலம் எவ்வாறு அறிந்துகொள்ளலாம் என்பது பற்றிய வழிமுறைகளை நீங்கள் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு புதிய புராடக்ட் வாங்கும் போது, ​​அதனுடன் வரும் துண்டுப்பிரசுரத்தை சரியாகப் படித்து, வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். புராடக்ட் உற்பத்தியாளரைப் பொறுத்து, நீங்கள் பிரக்னன்ட்டாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மாறுபடலாம்.சிறுநீரைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் நுட்பமும் வேறுபட்டிருக்கலாம். உங்களது டெஸ்ட் கிட்டை முறையாகப் பயன்படுத்த அதனுடன் வரும் வழிமுறைகளை படித்து அறிந்துகொள்வதே சிறந்ததாகும்.

உங்கள் மாதவிடாய் தவறிய நாளிலிருந்து, நீங்கள் பிரக்னன்ட்டாக இருக்கிறீர்களா என்பதைப் பார்க்க வீட்டிலேயே பிரக்னன்ஸி பரிசோதனை கிட்டை பயன்படுத்துவதற்கு முன்பு குறைந்தது ஒரு நாள் காத்திருக்க வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு ஒரு வாரம் வரை காத்திருந்து இந்த சோதனையை செய்துகொள்ளலாம். சோதனைக்கு உகந்த நேரம், காலையில் எழுந்த சிறிது நேரத்திலேயே நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அதிக ஹெச்.சி.ஜி இருக்கும்.

  • சோதனைக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்(Make sure you are prepared for the test)

சந்தேகத்திற்கு இடமின்றி, நீங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறீர்களா என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறீர்கள் பதட்டமின்றி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் அதோடு இந்த இந்த சோதனையை மேற்கொள்ள உங்கள் வீட்டில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். டெஸ்ட் ஸ்டிக்கில் வைப்பதற்கு முன் உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

  • முடிவெடுத்தல்(decision making)

பிரக்னன்ஸி பரிசோதனை செய்ய, நீங்கள் உங்கள் சிறுநீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் கொள்கலனில் சேகரிக்கலாம் அல்லது டெஸ்ட் ஸ்டிக்கில் நேரடியாக சிறுநீர் கழிக்கலாம். சோதனைக்கு நடுத்தர சிறுநீரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அதாவது ஆய்வின் போது முழுமையாக சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது சிறிது சிறுநீர் கழித்த பிறகு சிறுநீரை ஒரு கொள்கலனில் சேகரித்து பின்னர் பரிசோதிக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பிராண்டின் தயாரிப்பைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பிட்ட நேரத்திற்கு ஸ்டிக்கில் சிறுநீர் கழிக்கும்படி உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம். கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி பரிசோதனை செய்வது எப்படி என்பதற்கு ஸ்டாப்வாட்ச்சைப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஸ்டிக்கின் டிஸ்பிளே கிளாஸில் நேரடியாக சிறுநீர் கழிக்கும் போது, ஸ்டிக்கின் உறிஞ்சக்கூடிய பகுதியில் சிறுநீர் கழிக்க வேண்டும்.

  • பரிசோதனைக்குத் தயாராகும் போது, ​​நீங்கள் சிறுநீரை சேகரிக்க வேண்டும்

அதற்கு பதிலாக ஒரு கப்பை பயன்படுத்த விரும்பினால், டெஸ்ட் ஸ்டிக்கின் உறிஞ்சக்கூடிய முனையை கப்பில் உள்ள சிறுநீரில் மூழ்குமாறு 5-10 வினாடிகள் அல்லது கிட்டில் அறிவுறுத்தியபடி வைக்கவும். கிட் மூலம் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி என்பது குறித்த டெஸ்ட் ஸ்டிக்கில் சிறுநீர் வைப்பதற்கான மற்றொரு வழி துளிசொட்டு ஆகும்.

  • முடிவுக்காக சிறிது நேரம் காத்திருக்கவும்.

ரியாக்ஷன் ஏற்பட, நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தட்டையான மேற்பரப்பில் டெஸ்ட் ஸ்டிக்கை வைத்திருக்க வேண்டும். இதற்காக ஐந்திலிருந்து பத்துநிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும். எனவே ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு முடிவுகளைப் பார்க்க மீண்டும் வாருங்கள். உங்கள் டெஸ்ட் ஸ்டிக்ல் ஒரு சிறிய கோடு அல்லது டைமர் அடையாளம் காணப்பட்டால், டெஸ்ட் ஸ்டிக் சரியாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். அது வேலை செய்யவில்லை என்றால், வேறு ஒன்றை எடுத்து முயற்சிக்கவும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் போது தோல் அலர்ஜி(ப்ரூரிகோ): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை

முடிவுரை

நீங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க, இந்த சிம்பல்களைப் பாருங்கள். உற்பத்தியாளரைப் பொறுத்து, இந்த சிம்பல்கள் சற்று வேறுபட்டு காணலாம். எனவே வீட்டிலேயே பிரக்னன்ஸியை எவ்வாறு பரிசோதிக்கலாம் என்பதற்கான புராடக்ட்டுடன் வருகின்ற அறிவுறுத்தல் கையேட்டைப் படியுங்கள். பெரும்பாலும் ஹோம் பிரக்னன்ஸி பரிசோதனைகளில் மைனஸ் அல்லது பிளஸ் சைன்கள் பயன்படுத்தப்படுகிறது. சோதனையில் பிளஸ் சைன் வந்திருந்தால் உங்கள் மருத்துவரை பார்க்கவும்.

Tags :

pregnancy test in tamil, how to check pregnancy at home in tamil, using pregnancy kit in tamil, how to use pregnancy kit in tamil

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.