This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலங்களில் பெரிய இடுப்பளவு உள்ளாடைகள் எவ்வளது தூரம் உதவிகரமாக இருக்கும்?

Maternity Fashion
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலங்களில் பெரிய இடுப்பளவு உள்ளாடைகள் எவ்வளது தூரம் உதவிகரமாக இருக்கும்?
Likes1 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாகும்போது வழக்கமான பேண்டிகள் பொருந்தாமல் போகும், அப்போது பெரிய இடுப்பளவு கொண்ட மகப்பேறுகால பேண்டிகள் சௌகரியத்தையும் ஆதரவையும் வழங்குகின்றன.
  • பெரிய இடுப்பளவு பேண்டிகளில் உள்ள எலாஸ்டிக் தன்மை உங்கள் வளர்ந்து வரும் வயிற்றுக்கு ஏற்ப விரிவடைந்து, கர்ப்ப காலம் முழுவதும் மற்றும் பாலூட்டும் காலத்திலும் எளிதான நகர்வுகளை உறுதி செய்கிறது.
  • பெரிய இடுப்பளவு பேண்டியை வாங்கும்போது சௌகரியம், எலாஸ்டிசிட்டி, நீடித்த உழைப்பு மற்றும் மென்மையான துணி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும், மிகவும் இறுக்கமோ தளர்வோ இருக்கக் கூடாது.
  • உங்களுக்கு ஏற்ற மகப்பேறுகால பேண்டியை எப்படி தேர்வு செய்வது? Explore our High Waist Maternity Panty - XL - Skin & Black (Pack of 2).

கர்ப்ப காலத்தில் எதிர்பாராத விதமாக உடல் எடை அதிகரிப்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், மகப்பேறுகால பேண்டி ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். மகப்பேறுகால பேண்டிகளைப் பொருத்தவரையில் கர்ப்பினி பெண்ணின் இடுப்பளவை பொறுத்து இரண்டு விதமான பேண்டிகள் வருகின்றன. முதலாவது, உங்களின் பெரிய வயிறையும் கவர் செய்யக் கூடிய மிகப் பெரிய இடுப்பளவு கொண்ட மகப்பேறுகால பேண்டி ஆகும். இரண்டாவது, உங்கள் வயிற்றுக்கு கீழே பயன்படுத்தக் கூடிய வழக்கமான இடுப்பளவு கொண்ட பேண்டி ஆகும்.

இந்த இரண்டு வகை பேண்டிகளுமே சௌகரியம் மிகுந்தவை. நீடித்து உழைக்கக் கூடியவை. எனினும், கர்ப்ப காலத்தில் பெரிய இடுப்பளவு பேண்டியை பயன்படுத்துமாறு பல மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனெனில், கர்ப்ப காலத்தில் உங்கள் நகர்வுகள் எளிமையாக இருப்பதை அது உறுதி செய்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்த பேண்டிகளில் உள்ள எளாஸ்டிக் என்பது உங்களுக்கு நல்ல விரிவாக்கத்தை தருகிறது. ஆகவே, இதனை நீங்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரிய இடுப்பளவு உள்ளாடையை நீங்கள் எப்போது தேர்வு செய்ய வேண்டும்?

உங்கள் கர்ப்ப காலம் முழுவதுமே நீங்கள் பெரிய இடுப்பளவு பேண்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் எடை அதிகரிப்பதை நீங்கள் உணர முடியும். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் வழக்கமாக அணியும் பேண்டி உங்களுக்கு பொருந்தாமல் போகும். ஆக, இந்த கர்ப்ப காலத்தில் உங்களுக்கான சௌகரியத்தை உறுதி செய்ய, மகப்பேறுகால பெரிய இடுப்பளவு பேண்டிகள் உங்களுக்கு உதவிகரமாக அமையும். இந்த மகப்பேறு கால பேண்டிகள் கனக்கச்சிதமாக இருக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தின் இறுதி அத்தியாயத்தில் சௌகரியமானதாக இருக்கும்.

பாலூட்டும் காலத்தைப் பொருத்தவரையில், பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டிகளில் உள்ள எலாஸ்டிக் காரணமாக உங்கள் நகர்வுகள் மிக எளிமையானதாக இருக்கும். இந்த பேண்டிகள் உங்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் இதன் பெரும் பலன்களை உணருவீர்கள்.

பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்?

பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டிகளை வாங்குவதற்கு நீங்கள் திட்டமிடும் முன்பாக, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சில தேர்வுகளை அது கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில நிபந்தனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சௌகரியமானதாக இருக்க வேண்டும்

பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டிகளை நீங்கள் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதால், அது உங்களுக்கு சௌகரியமான உணர்வை தரக் கூடியது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடுத்த சில மாதங்களில் உங்கள் வயிறு எவ்வளவு பெரியதாக மாறப் போகிறது என்பதை நீங்கள் கணிக்க முடியாது என்பதால், ரொம்பவும் இறுக்கமாக அல்லது தளர்வாக இல்லாத பேண்டியை தேர்வு செய்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ளவும். இறுக்கம் மிகுந்த பெரிய இடுப்பளவு பேண்டியை நீங்கள் அணியும்போது அது உங்கள் சருமத்திற்கு எரிச்சல் உணர்வை தரக் கூடும். அதேசமயம், மிகவும் தளர்வாக உள்ள பேண்டி கீழே நழுவி வரக் கூடும்.

எலாஸ்டிசிட்டி

உங்களின் பெரிய இடுப்பளவு மகப்பேறு கால பேண்டி மிக நன்றாக விரிவடையும் பட்சத்தில் உங்களின் அன்றாடப் பணிகளை நீங்கள் சௌகரியமாக மேற்கொள்ள முடியும். உங்கள் வயிறு வளர்ச்சி அடைந்தாலும் கூட, நீங்கள் அதே பேண்டியை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும். ஆக, பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டியை தேர்வு செய்யும் முன்பாக அதன் எளாஸ்டிக் தன்மையை கவனிப்பது மிக முக்கியமான விஷயமாகும்!

நீடித்த உழைப்பு

உங்கள் மகப்பேறு கால பேண்டி பிரசவத்திற்கு பிறகும் கூட உங்களுக்கு தேவைப்படலாம். ஆக, பெரிய இடுப்பளவு பேண்டியை வாங்கும்போது அது எவ்வளவு காலத்திற்கு உழைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். பேண்டி எந்த துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அது மென்மையாக இருக்க வேண்டும். வெகு விரைவில் கிழிந்து விடக் கூடிய அல்லது எலாஸ்டிக் தன்மையை இழந்து விடக் கூடிய பேண்டியை பரிசீலனை செய்ய வேண்டாம்.

ஒட்டுமொத்த தோரணை

இன்றைக்கு பல விதமான, பெரிய இடுப்பளவு கொண்ட பேண்டிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவை சௌகரியமானதாகவும், அழகானதாகவும் இருக்கின்றன. எண்ணற்ற மாடல்கள் மற்றும் டிசைன்கள் உங்களை கவரக்கூடியதாக இருக்கும். ஆக, பெரிய இடுப்பளவு கொண்ட மகப்பேறு கால பேண்டிகளை வாங்குவது குறித்து நீங்கள் இன்றே முடிவு செய்யுங்கள்!

இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தில் Rh D ஃபேக்டரின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன ?

முடிவுரை

கர்ப்ப காலத்தில் நல்ல சௌகரியம் அளிக்கும் வகையில்தான் மகப்பேறு கால பேண்டிகள் டிசைன் செய்யப்படுகின்றன. வழக்கமான ஆடைகள் உங்களுக்கு பொருந்தாமல் போகும் என்பதை கருத்தில் கொள்ளும்போது, மகப்பேறு கால ஆடைகள் நிச்சயம் பயனுள்ளதாக அமையும். உங்கள் வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில், நீங்கள் கர்ப்பம் தொடர்பான நிறைய இதழ்கள் மற்றும் வலைப்பூ கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆக, மகப்பேறு கால உடை என்று வருகின்ற போது, நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க இது உங்களுக்கு உதவிகரமாக அமையும்.

புத்தம் புதிய குழந்தையை வரவேற்க உங்கள் உடல் தயாராகி வரும் இந்த வேளையில், உங்களுக்கு மிகவும் பலன் தரக் கூடிய மகப்பேறு கால உடைகளுக்கு மாறிக் கொள்வது நல்ல முடிவாகும். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், கர்ப்ப காலத்தில் நீங்கள் நிச்சயமாக மாற்ற வேண்டியது உங்கள் பேண்டிகளை தான்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.