Breastfeeding & Lactation
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
புதிதாக குழந்தைப் பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மற்ற பொறுப்புகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால், அந்த பொறுப்பை சரியாகச் செய்ய இந்த நேரத்தில் பிரெஸ்ட் பம்ப் மற்றும் நர்சிங் பேட்களுடன் புதிய நர்சிங் பிராக்களை வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர, நீங்கள் குழந்தைகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளை நிறைவேற்ற நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு பணிபுரியும் அம்மாவாக இருந்தால்! இருப்பினும், நர்சிங் பேட்கள் உண்மையில் ஒவ்வொரு தாய்க்கும் தேவையான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்!
இதைத் தவிர்த்து, நீங்கள் வாங்குவதற்கு முன் எந்தெந்த பொருட்கள் அவசியமானவை, எந்த பொருட்கள் அவசியமற்றவை என்பதை தீர்மானிக்க நீங்கள் நீண்ட நேரம் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, ஒருவர் நர்சிங் பேட்களை வாங்குவது முக்கியமா? அவற்றை நாள் முழுவதும் தொடர்ந்து அணிவது சரியா? இதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்!
சில பெண்கள் நர்சிங் பேட்களை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பார்கள். இருப்பினும், ஒரு சிலர் தங்கள் குழந்தைக்கு பாலூட்டும்போது மட்டுமே இது போன்ற பேட்களை பயன்படுத்துகின்றனர். பொது இடங்களில் இருக்கும் போது கூட நீங்கள் ஒரு நர்சிங் பேடை உபயோகப்படுத்தலாம். இது தவிர, உங்கள் உள் ஆடைக்குள் நேர்த்தியாக மடிக்கப்பட்ட ஒரு சுத்தமான கைக்குட்டையையும் இதற்குப் பயன்படுத்தலாம். அதே சமயத்தில், பிளாஸ்டிக் லைனிங் கொண்ட நர்சிங் பேட்களைத் தவிர்த்து விடுங்கள், ஏனெனில், அத்தகைய நாப்கின்கள் மார்புப் பகுதியில் காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடும்.
ஒரு நல்ல தரமான நர்சிங் பேட் என்பது பாலூட்டும் தாயின் மார்புக் காம்பிலிருந்து கூடுதலாக வெளியேறும் தாய்ப்பாலைத் தடுத்து மேலாடை நனையாமல் வைத்திருக்க உதவும் வகையில் அமைந்திருக்கும். நர்சிங் பேட்கள் மிகவும் உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டவை, மேலும் அவை உங்கள் ஆடைகளில் பால் கசிவதைத் தடுக்கின்றன. சொல்லப் போனால், இவை மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் பேட்கள் போன்று இருக்கும். உங்கள் மார்பக காம்புகளில் புண்கள் இருந்தால், நர்சிங் பேட்கள் ஒரு சிறந்த தேர்வாக மாறும்!
ஆரம்ப வாரங்களில், ஒரு பாலூட்டும் தாய்க்கு அதிகப்படியான தாய்ப்பால் உற்பத்தியாகலாம். தொடர்ந்து காம்பிலிருந்து தாய்ப்பால் வெளியேறிக் கொண்டிருக்கும். சில நேரங்களில், அதிக நேரம் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கும்போது மார்பகங்கள் மிகவும் நிரம்பி கனமாக காணப்படும், இறுதியில் அதிகப்படியான பால் கசிவுக்கு வழிவகுக்கும்.
பல சுற்றுச்சூழல் காரணிகளாலும் பிரஸ்ட்டில் பால் கசிவு ஏற்படலாம். ஒரு குழந்தை அழுவதைக் கேட்டால், அந்த சத்தம் அதிகப்படியான பால் உற்பத்தியைத் தூண்டக்கூடும். நர்சிங் பேட்களை இரவில் அணிவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் இது மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உதவியாக மாறும். உங்கள் தூங்கும் பொசிசன்கள் கூட உங்கள் பிரஸ்ட்களை அழுத்தக்கூடும், இதன்காரணமாக அதிக பால் கசியத் தொடங்கிவிடும்.
நர்சிங் பிரஸ்ட் பேட்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இவை பல்வேறு நோக்கங்களுக்காக பல வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. இரவு நேரத்திற்கு பொருத்தமான நர்சிங் பேட் அல்லது பகல்நேர நடவடிக்கைகளுக்கு ஏற்ற நர்சிங் பேட்கள் என நீங்கள் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் நர்சிங் பேட்-ஐ உங்கள் பிராவிற்குள், பிராவின் உட்புற பகுதிக்கும் காம்புகளுக்கும் இடையில் இருக்குமாறு வைக்கலாம். உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில் இப்பொழுதெல்லாம் சில பிராக்கள் நர்சிங் பேட்களுடன் வருகின்றன.
நீங்கள் ஒட்டிக்கொள்ளக்கூடிய நர்சிங் பேட்கள் அல்லது பாக்கெட் நர்சிங் பேட்ககளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒட்டிக்கொள்ளக்கூடிய நர்சிங் பேட்களை உங்கள் பிராவின் உள் பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம், அதே நேரத்தில் பாக்கெட் நர்சிங் பேட்கள் உங்கள் பிராக்களின் உள்ளே வைக்கும் போது அவை கீழே நழுவி விட வாய்ப்புள்ளது. உங்களுக்கு விருப்பமான நர்சிங் பேட்களை வாங்குவதை நீங்கள் பரிசீலிக்கலாம், அல்லது உங்களுக்கு மிகவும் வசதியாகவும் சௌகரியமாகவும் இருக்கக்கூடிய பேட்களை நீங்கள் தேர்ந்தெடுத்து பயனப்டுத்தலாம்!
உங்கள் வசதிக்காக பல்வேறு வகையான நர்சிங் பேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெயர் குறிப்பிடுவது போல இந்த வகையான பேட்களை நீங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆம், அவற்றைப் பயன்படுத்தி முடித்தவுடன் மீண்டும் அதனை பயன்படுத்த முடியாது. இந்த வகை நர்சிங் பேட்கள் ஒட்டிக்கொள்ளும் வகையைச் சார்ந்தவை. இவை சாஃப்ட் ஆக இருக்கும். சொல்லப் போனால், நாம் பயன்படுத்தக்கூடிய பேன்ட்டி லைனர்கள் போல் தான் இருக்கும். ரீயூசபிள் நர்சிங் பேட்களுடன் ஒப்பிடும் போது, இது அதிக சௌகரியத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால், ஒரு முறை தான் பயன்படுத்த முடியும் என்பதால் நாம் இதனை மீண்டும் மீண்டும் வாங்க வேண்டி இருக்கும். இதற்கு அதிக பணம் செலவாகும். ஆகையால், டிஸ்போஸபிள் நர்சிங் பேட்களை வாங்குவதை விட ரீயூசபிள் நர்சிங் பேட்களை வாங்குவதே சிறந்ததாகும்.
இந்த வகையான நர்சிங் பேட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படலாம். மேலும், அத்தகைய பேட்கள் எந்த ஒட்டுதல் தன்மையுடனும் வராது, மூங்கில் போன்ற ஒரு பொதுவான பொருளால் இது போன்ற நர்சிங் பேட்கள் தயாரிக்கப்படுகிறது. அதோடு, நர்சிங் பேட்களில் பாக்டீரியா தாக்குதலைத் தடுக்க, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு உங்கள் நர்சிங் பேட்களை நன்கு அலசி காயவைத்து பயன்படுத்த வேண்டும்.
டிஸ்போஸபிள் நர்சிங் பேட்கள் மற்றும் ரீயூசபிள் நர்சிங் பேட்களைத் தவிர்த்து பல வகையான நர்சிங் பேட்கள் உள்ளன! அவற்றில் சில சிலிகான் பேட்களும் அடங்கும், மேலும் அவை கசிவுகளைத் தடுக்கும் நோக்கத்தை மிகவும் திறமையாக நிறைவேற்றுகின்றன. இந்த வகையான பேட்கள் பிராவுக்கு பதிலாக நேரடியாக மார்பகங்களில் ஒட்டிக்கொள்ளக் கூடியவை ஆகும், எனவே கசிவுகளை முழுமையாக தடுக்கின்றன.
சிலிகான் நர்சிங் பேட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் பிரா அணிய விரும்பாத நேரங்களில். எடுத்துக்காட்டாக, நீச்சல் பயிற்சிக்கு செல்லும் போது அல்லது ஓய்வான வார இறுதி பயணத்திற்குச் செல்லும் போது சிலிகான் பேட்களை ஒட்டிக்கொள்ளலாம்! ஆனால், இது போன்ற பேட்களை எப்போதாவது பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் அவை பால் குழாய்களில் அடைப்பு மற்றும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும்.
உங்களுக்கு பிரஸ்ட் நிப்பிள் பகுதியில் வெடிப்பு அல்லது புண் ஏற்பட்டுள்ளது என்றால், ஹைட்ரோஜெல் நர்சிங் பேட்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்! இந்த பேட்கள் ஓரளவு குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளன, இது ஆடைக்கும் உங்கள் சென்சிட்டிவான நிப்பிள் பகுதிக்கும் இடையிலான உராய்வைத் தடுக்கிறது. ஹைட்ரோஜெல் பேட்கள் முந்தைய காலத்தில், குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் போது பயன்படுத்தப்பட்டன. சிலிகான் நர்சிங் பேட்களைப் போலவே, ஹைட்ரோஜெல் நர்சிங் பேட்கள் உங்கள் சருமத்தில் ஒட்டிக்கொண்டு மார்பு பகுதிக்கு எந்த வகையான காற்றோட்டமும் கிடைக்கச்செய்யாமல் தடுக்கின்றன.
நீங்கள் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயாக இருப்பதால், உங்கள் மார்பக காம்பு பகுதிக்கு அருகில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதியை எப்போதும் ஈரப்பதமாகவே வைத்திருக்கக்கூடாது, ஏனெனில், இந்தப் பகுதியை அதிகநேரம் ஈரப்பதமாக வைத்திருந்தால், அது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இறுதியில் சருமத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தும்!
எனவே, பால் கசிவைப் பொறுத்து ஒரு நர்சிங் பேடை மாற்றிக்கொள்வதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்கள் நர்சிங் பேட் ஈரப்பதம் இன்றி இருந்தால், அதை பிராவில் தொடர்ந்து வைத்திருக்கலாம். ஆனால், அது ஏற்கனவே முழுதும் நனைந்து விட்டது என்றால், அதை விரைவில் மாற்ற வேண்டியதற்கான நேரம் இது தான்!
வாஷ் செய்து கொள்ளக்கூடிய பல நர்சிங் பேட்கள் கசியும் பாலை மிகவும் திறமையாக உறிஞ்சுவதற்கு உதவும் பொருட்களின் பல லேயர்களைக் கொண்டுள்ளன, இதனால் வெளிப்புற லேயர் வறண்டதாக இருக்கும். மீண்டும், நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று நர்சிங் பேட் முழுவதும் நனைந்தவுடன் அதை உடனே மாற்றுவதாகும். ஈரமான பேடுடன் நீண்ட நேரம் தூங்கும்போது உங்கள் நிப்பிள் பகுதியைச் சுற்றியுள்ள தோலில் தொற்றுநோயை ஏற்படுத்தும் என்பதால் இரவில் ஒருமுறை உங்கள் நர்சிங் பேடை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
உங்களது முக்கிய நோக்கம் படுக்கை விரிப்புகள், ஆடைகள் அல்லது வேறு எங்கும் பால் கசிவதைத் தடுப்பதே ஆகும்.உங்களுக்கு அதிகமாக கசிகிறது என்றால் மற்றும் தூங்க முடியாவிட்டால், நர்சிங் பேட்களை முடிந்தவரை பல முறை மாற்றிக் கொள்ளுங்கள்.
சில நேரங்களில், உங்கள் மார்பகங்களில் ஈரமான நர்சிங் பேடை வைத்திருக்கும் போது காம்புகளில் தொற்று ஏற்பட வழிவகுக்கும். இது ஈஸ்ட் அல்லது பூஞ்சை தொற்று வளர்வதற்கு வழிவகுக்கும். ஆனால், நர்சிங் பேட் அணியவில்லை என்றால், உங்கள் ஆடைகளில் பால் கசிவு ஏற்பட்டிருக்கும், இது எப்படியும் மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதியின் ஈரப்பதத்திற்கு வழிவகுக்கும்! எனவே, ஒரு நர்சிங் பேட் எந்த வகையிலும் மிகவும் உதவியாகத் தான் இருக்கும்.
வீட்டில் இருக்கும் போது, உங்கள் முலைக்காம்புகளை முடிந்தவரை காற்றோட்டமாக வைத்திருக்க சில நேரங்களில் எதுவும் அணியாமல் இருக்கலாம். நீங்கள் டாப் அணிந்தால், பால் கசிவைத் தவிர்ப்பதற்காக சுத்தமான மற்றும் உலர்ந்த நர்சிங் பேட் அணிவதை நீங்கள் கவனத்தில் கொள்ளலாம், நீங்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்யலாம் மற்றும் இதுபோன்ற சிக்கல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி மேலும் அறியலாம்!
குறைந்தபட்ச அளவைக் கருத்தில் கொண்டு, பகலில் ஒரு ஜோடி நர்சிங் பேட்களை பயன்படுத்தலாம். மற்றொரு ஜோடியை இரவு நேரத்திற்கு பயன்படுத்தலாம். அவை முழுமையாக நனைவதற்கு முன்பு மாற்றவதே சிறந்ததாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு அதிகப்படியான பால் கசிவு ஏற்படுகின்ற நேரங்களில் பேக்கப் ஆக மூன்றாவது ஜோடி பேட்களைப் பயன்படுத்தலாம். இதைத் தவிர்த்து பிரஸ்ட் ஃபீடிங் நர்சிங் பிராக்களை நன்கு துவைத்து காய வைக்க போதுமான நேரம் அளியுங்கள்.
நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம் நர்சிங் பேட்களில் ஏற்படக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியாகும். ஈரமான மற்றும் சூடான சூழலில் பாக்டீரியா உயிர்வாழ முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும், இதனால், ஈரமான நர்சிங் பேட் அத்தகைய நுண்ணுயிரிகளுக்கு ஒரு சிறந்த சூழலாக மாறும். எனவே, உங்கள் பிரஸ்ட் பேட்கள் ஈரமாகவோ அல்லது நனைந்திருப்பது போன்றோ நீங்கள் உணர்ந்தவுடன் அவற்றை உடனடியாக மாற்றுங்கள். எனவே, இந்த வழியில், உங்கள் நிப்பிள் பகுதியைச் சுற்றி ஈரப்பதம் உருவாவதைத் தவிர்க்கலாம்.
உங்கள் நர்சிங் பேட்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நர்சிங் பேட்களை ஒரு சலவை பையில் வைத்திருப்பது தான். பின்னர் நீங்கள் வாஷிங் மெஷினில் சலவை பையை போட்டு பேட்களை பிளாட்டாக உலர்த்தலாம். பேட்களை சுத்தம் செய்வதற்கு சாஃப்ட்னர் அல்லது ப்ளீச் எதுவும் தேவைப்படாது. உங்கள் நர்சிங் பேட்களை இஸ்திரி அல்லது டிரை கிளீனிங் செய்யக்கூடாது.
நர்சிங் பேட்களை எவ்வாறு பயன்படுத்துவது
மிஷேல் ரூத், BA, IBCLC ஆல் மருத்துவ ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது
ஆகஸ்ட் 29, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |