Skin Changes
8 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
பல விதமான வியாதிகளுக்கு தேயிலை மர எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது பெரும்பாலும் அதன் முகப்பருவை குணமாக்கும் பண்புகளுக்கு அறியப்படுகிறது. இது சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, சரும பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் தேயிலை மர எண்ணெயை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பருவிற்கு தீர்வு தேடுபவர்களும், எண்ணெய்ப்பசையான சருமம் கொண்டவர்களும் தேயிலை மர எண்ணெயை போற்றுகின்றனர். முகப்பருவால் உருவாகும் சில அறிகுறிகளான அரிப்பு, வீக்கம் மற்றும் சிவத்தலைப் போக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேயிலை மர எண்ணெய் சரும பராமரிப்பு கிட் ஒரு சிறந்த சாய்ஸ் ஆகும்.
உங்கள் தோல் பராமரிப்பு ஆட்சியில் தேயிலை மர எண்ணெயை சேர்க்கக்கூடிய சில வெவ்வேறு வழிகள் இங்கே:
· தேயிலை மர எண்ணெய் கிட்டுகள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை என்பதால், இது சிவத்தல், அழற்சி மற்றும் வீக்கத்தை குறைப்பதன் மூலம் முகப்பருக்களை குறைக்கும் செயல்முறையில் ஈடுபடுகின்றது.
· ஒரு கிருமிநீக்கியாக, இது பாக்டீரியா எதிர்ப்பு (தொற்றுகளை தவிர்க்கிறது) பண்புகளையும் கொண்டுள்ளது.
· இது ஒரு கரைப்பானைப் போல செயல்படும் திறன் கொண்டது (இதன் மூலம் துளைகளை அடைக்கும் எண்ணெய், அழுக்கு அல்லது தேவையற்ற கழிவுகள் சேருவதைத் தடுக்க உதவுகிறது)
இந்த அற்புதமான தேயிலை மர எண்ணெய் கிட்டினை வெவ்வேறு முறையில் உங்கள் அன்றாட சரும பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தலாம்.
உங்களுக்கான பேஸ் ஆயிலை நீங்களே தயார் செய்து, அதனை உங்கள் சருமத்திற்கு மாய்சரைஸர் போல பயன்படுத்தலாம். உங்கள் சரும வகைக்கு ஏற்ப தேயிலை மர எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். ஆர்கன் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய் போன்றவை சிறந்த கேரியர் எண்ணெய்கள் ஆகும். காம்பினேஷன் மற்றும் எண்ணெய்ப்பசை நிறைந்த சருமத்திற்கு திராட்சை விதை எண்ணெய் சிறந்த கேரியர் எண்ணெய் ஆகும்.
ஏற்கனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல ஒரு மாய்சரைஸரை நீங்கள் பெற்றிருந்தால், இதனுடன் தேயிலை மர எண்ணெயை கலந்து பயன்படுத்துவது உங்கள் முகப்பருவை அகற்ற உதவும். தேயிலை மர எண்ணெய் என்பது உங்கள் மாய்சரைஸருடன் கலந்து பயன்படுத்த ஏற்ற ஒரு சிறந்த முகப்பரு எதிர்ப்பு பொருளாகும். பட்டாணி அளவு மாய்சரைஸரை உங்கள் உள்ளங்கையில் எடுத்து அதனுடன் ஒரு துளி தேயிலை மர எண்ணெயை கலக்கவும். இப்போது இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்து உங்கள் முகத்தில் தடவவும்.
உங்களுக்கு அடிக்கடி முகப்பரு ஏற்படக்கூடிய எண்ணெய்ப்பசை நிறைந்த சருமம் இருந்தால், சருமத்தை டோனிங் செய்வது மிகவும் அவசியம். மேலும் நீங்கள் பயன்படுத்தும் டோனரின் வகையைப் பொறுத்து உங்கள் சருமத்தில் மாற்றத்தை கவனிக்கலாம். உங்கள் சருமத்திற்கு ஒவ்வாத டோனரை பயன்படுத்தி, முகப்பருவை உருவாக்கிக் கொள்ளக்கூடிய தவறை செய்ய யார் தான் ஆசைப்படுவார்கள்? தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் டோனர் உங்கள் சருமத்தில் சரியாக வேலை செய்யவில்லை என்றால், முகப்பரு டோனருக்கு தேயிலை மர எண்ணெயை பயன்படுத்த முயற்சிக்கவும். ஒரு பாட்டில் ரோஸ் வாட்டர் மற்றும் 10 துளிகள் தேயிலை மர எண்ணெயை ஒன்றாக கலந்து உங்களுக்கான டோனரை உருவாக்குங்கள். நீங்கள் லாவண்டர் அத்தியாவசிய எண்ணெயில் ஐந்து துளிகளைக் கூட பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், பாட்டிலை நன்றாக குலுக்கிய பின் பயன்படுத்தவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்த பின்னர், சிறிதளவு டோனரை ஒரு காட்டன் பந்தில் எடுத்து பயன்படுத்தவும். முகப்பருவிற்கான தேயிலை மர எண்ணெயை நீங்கள் பேஸ் ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம்.
இன்டர்நெட்டில் வலம்வந்து கொண்டிருக்கும் DIY ரெமடிகளுக்கு பதிலாக கமர்ஷியல் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது. வீட்டில் செய்யப்பட்ட பொருட்களை விட கமர்ஷியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தேயிலை மர எண்ணெயின் அளவு குறைவானது தான்.
எனினும் பாதுகாப்பு கருதி, ஃபேஸ் மாஸ்க் அல்லது கிளென்சர் போல கழுவிக் கொள்ளக்கூடிய தேயிலை மர எண்ணெய் ஸ்கின் பியூரிஃபையிங் கிட் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. பாதுகாப்பாக இருக்க, தேயிலை மர எண்ணெய் கொண்ட மாய்சரைஸர், சீரம் அல்லது டோனர் போன்ற லீவ்-இன் தயாரிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஒரு சில நேரங்களில் நீங்கள் இதை உங்கள் முகத்தில் முகப்பரு உள்ள பகுதிகளில் மட்டுமே தடவ வேண்டும்.
தேயிலை மர எண்ணெயை பயன்படுத்தும் முன் அது சருமத்தில் ஏதேனும் அலர்ஜியை ஏற்படுத்துமா என்பதை அறிய முதலில் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். மேலும் எண்ணெயால் எரிச்சல் ஏற்படாமல் இருக்க அதனை கேரியர் எண்ணெயில் கரைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். தேயிலை மர எண்ணெய் ஃபேஷியல் கிட்-சார்ந்த தயாரிப்புகளும் உடனடியாக கடைகளில் கிடைக்கிறது. இது அந்த தயாரிப்பு தரமானது என்ற ஒரு உறுதியை அளிக்கிறது.
Tags;
Uses of Tea Tree Oil in Tamil, Natural Oils for face in Tamil, Treatment of Acne by Tea Tree in Tamil, Tonner for Acne in Tamil, How to include tea tree in your face care regime in English
Yes
No
Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு உதவும் உணவுகள் I Foods that Can Help Pregnant Women Go into Labor in Tamil
கருப்பையில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு எப்போது பாலியல் உறுப்புகள் உருவாகும்? I When Do Sex Organs Develop In Your Baby In The Womb in Tamil?
கருப்பையில் கருவூட்டல் செயல்முறைக்கு எவ்வளவு விந்து தேவைப்படும்? I How Much Sperm is Needed for an Intrauterine Insemination Procedure in Tamil?
கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே பனிக்குட நீரை எவ்வாறு அதிகரிப்பது I How to increase amniotic fluid naturally during pregnancy in Tamil
கர்ப்பத்தில் வாழைப்பழம்: எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும் I Banana in Pregnancy: When to Eat and When to Avoid in Tamil
எக்டோபிக் பிரக்னன்ஸி அறிகுறிகள் எப்போது தொடங்குகின்றன I When do Ectopic Pregnancy Symptoms start in Tamil?
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |