hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • வைட்டமின்-சி ஃபேஸ் டோனரை தினமும் உங்கள் முகத்தில் பயன்படுத்துவதன் டாப் 5 நன்மைகள் (Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In Tamil) arrow

In this Article

     வைட்டமின்-சி ஃபேஸ் டோனரை தினமும் உங்கள் முகத்தில் பயன்படுத்துவதன் டாப் 5 நன்மைகள் (Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In Tamil)

    Pregnancy

    வைட்டமின்-சி ஃபேஸ் டோனரை தினமும் உங்கள் முகத்தில் பயன்படுத்துவதன் டாப் 5 நன்மைகள் (Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In Tamil)

    14 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    • இப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கைமுறை ஆரோக்கியமற்றதாக உள்ளது. இதன் காரணமாக நம் சருமம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், சூரியனில் அதிகப்படியான நேரம் வெளிப்படும் போது நம் சருமம் சேதமடைகிறது. இதனால் அது தொய்வு அடைந்து துளைகள் விரிவடைகின்றன. நம்மில் பெரும்பாலானோர் ஃபேஸ் டோனரைப் பற்றி நன்கு அறிந்திருக்கமாட்டோம். ஏனென்றால், நுண்துளை அளவைக் குறைக்க எண்ணெய் சருமத்திற்கு மட்டுமே அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இருப்பினும், டோனர்கள் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது என்பது தான் உண்மை.

    • பொதுவாக சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை அகற்ற முகத்தை சுத்தம் செய்த பிறகு ஃபேஸ் டோனர்களைப் பயன்படுத்துகிறோம். சந்தையில் பல்வேறு வகையான டோனர்களை நம்மால் காணமுடிகிறது என்றாலும், வைட்டமின்-சி ஃபேஸ் டோனர்கள் நம் சருமத்திற்கு சில கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.

    • ஃபேஸ் டோனர் என்பது கிளிசரின் மற்றும் பிற ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் ஏஜெண்ட்டுகளைக் கொண்ட நீர் சார்ந்த ஒரு தோல் பராமரிப்பு ஃபார்முலா ஆகும். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஹைட்ரேட்டடாகவும் மிருதுவாகவும் மாற்றும். ஃபேஸ் டோனர்களைப் பயன்படுத்துவதன் குறிப்பிடத்தக்க நன்மைகள் சில:

    • துளைகளை சுத்தப்படுத்துவதோடு, அதன் அளவைக் குறைக்கும். இதனால் முகப்பரு வராமல் இருக்கும்.

    • சோப்புகளின் காரத் தன்மையால் தொந்தரவுக்கு உள்ளாகும் நம் சருமத்தின் பிஎச் (pH) அளவைப் பராமரிக்கிறது.

    • அழுக்கு மற்றும் ஒப்பனையின் தடயங்களை அகற்றுகிறது. கிளீன்சர் அவற்றை அகற்றத் தவறிவிடுகின்றன.

    • கூடுதல் பாதுகாப்பு லேயரை உருவாக்கி, அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் சருமத்திற்கு ஏற்படக் கூடிய அபாயத்தைக் குறைக்கிறது.

    • இப்போது, ஃபேஸ் டோனர்கள் நம் சருமத்திற்கு நன்மை பயக்கும் வழிகளை நாம் அறிந்திருப்பதால், வைட்டமின்-சி ஃபேஸ் டோனர்கள் நம் சருமத்திற்கு வழங்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

    சுருக்கங்கள் மற்றும் ஃபைன் லைன்களை எதிர்த்துப் போராடுகிறது (Fights Wrinkles and Fine Lines In Tamil)

    பெரும்பாலும், நம் தோலில் சுருக்கங்கள் மற்றும் ஃபைன் லைன்ஸ் இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், வைட்டமின்-சி ஃபேஸ் டோனர்கள் சிறந்த பொருத்தமான ஏஜெண்டாக செயல்படும். வைட்டமின்-சி டோனர்கள் நம் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. கூடுதலாக, இந்த டோனர்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் நம் சருமத்தை மீளுருவாக்கம் செய்ய உதவுகின்றன.

    நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது (Improves Elasticity In Tamil)

    வைட்டமின்-சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நம் உடலில் இருக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாகும். இது இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கிறது. நாம் வளர வளர, நம் உடலில் கொலாஜன் உற்பத்தியும் குறைந்துவிடும். ஆனால், வைட்டமின்-சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால், வைட்டமின்-சி டோனர்களைப் பயன்படுத்தி ஏஜிங் செயல்முறையை நாம் தள்ளிப் போடலாம். இயற்கையான கிரீன் டீ மற்றும் வெள்ளரிக்காய் சாறுகள் நிறைந்துள்ள இந்த வைட்டமின்-சி டோனர் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, துளைகளை இறுக்கமாக்கி, நம் சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் இளமையான தோற்றத்தையும் அளிக்கிறது.

    வீக்கத்தைக் குறைக்கிறது (Reduces Inflammation)

    பல சமயங்களில் நம் சருமம் சிவந்து எரிச்சல் உணர்வை அளிப்பது போல் உணர்வோம். அதோடு ரேஷஸ் தொந்தரவுகளும் இருக்கும். இது அடிப்படை நோயெதிர்ப்பு, தொற்று அல்லது சில ஏஜெண்ட்கள் ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகள் தேவைப்பட்டாலும், வைட்டமின்-சி பயன்படுத்தினால் முகப்பரு, தோல் அழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சியின் அறிகுறிகளை திறம்பட எளிதில் அகற்ற முடியும் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வைட்டமின்-சி ஃபேஸ் டோனர்களில் வெள்ளரிக்காய் உள்ளது, இது உங்கள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.

    ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது (Reduces Hyper pigmentation In Tamil)

    ஹைப்பர் பிக்மென்டேஷன் அல்லது டார்க் பேட்ச்கள் என்பது நமது சருமத்தில் மெலனின் அதிகமாக உற்பத்தி செய்வதால் ஏற்படுகிறது. வைட்டமின்-சி டோனர்களின் பயன்பாடு இந்த அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் மெலனின் உற்பத்திக்கு பங்களிக்கும் நொதியான டைரோசினேஸின் உற்பத்தியைக் குறைக்கிறது. வைட்டமின்-சி ஃபேஸ் டோனரில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது. இது கரும்புள்ளிகளைக் குறைக்கவும், நிறத்தை பிரகாசமாக்கவும், உங்கள் சருமத்தின் அமைப்பு மற்றும் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தையின் சருமத்தில் உப்தான் பயன்படுத்துவதால் ஏற்படும் 5 நன்மைகள் (Top 5 benefits of applying an ubtan on your baby's body In Tamil)

    சூரியனால் பாதிக்கப்பட்ட சருமத்தை புத்துயிர் பெறச் செய்கிறது (Revitalizes Sun-damaged Skin In Tamil)

    சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதால் தோல் பிரச்சனைகள், சுருக்கங்கள், கரடுமுரடான தன்மை மற்றும் ரோசாசியா போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இருப்பினும், வைட்டமின் சி-யின் வழக்கமான பயன்பாடு உங்கள் சருமத்தை குறிப்பிடத்தக்க சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது. மூன்று மாதங்களுக்கு வைட்டமின்-சி டோனர்களைப் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தின் தோற்றம் மேம்படும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு கலந்திருப்பதால், வைட்டமின்-சி ஃபேஸ் டோனரின் வழக்கமான பயன்பாடு உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

    இரசாயனங்கள், நச்சுக்கள் மற்றும் பிற இயற்கைப் பொருட்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். ஹேசல், கிரீன் டீ, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறு, வைட்டமின்-சி நிறைந்துள்ள மைலோ கேர் வைட்டமின்-சி மேட்டிஃபையிங் ஸ்கின் மிஸ்ட் டோனர் ஒரு இயற்கை அஸ்ட்ரிஜென்டாகச் செயல்படுகிறது. டோனரின் லைட் வெயிட் ஃபார்முலா உங்கள் சருமத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, துளைகளை இறுக்கமாக்கி, உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

    நச்சுத்தன்மையற்ற, வேகன் ஃப்ரெண்ட்லி, க்ரூயல்டி ஃப்ரீ தயாரிப்புகளை வழங்கும் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்குங்கள். டோனர்கள் தயாரிப்பதில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி படித்துப் பாருங்கள். சிறந்த டோனர் பாராபென்ஸ், எஸ்எல்எஸ், மினரல் ஆயில்கள், பேலேட்டுகள் மற்றும் ஆல்கஹால் போன்ற இரசாயனங்கள் இல்லாமல் உள்ளது. செயற்கை நிறங்கள் மற்றும் பாதுகாப்புகளுடன் இந்தப் பொருட்களின் இருப்பு உங்கள் சருமத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே, சிறந்த மற்றும் விரைவான முடிவுகளுக்கு சிறந்த தரமான இயற்கை மற்றும் கரிம பொருட்களை பயன்படுத்தவும்.

    TAGS :

    Vitamin C face toner in tamil, uses of vitamin c face toner in tamil, Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In English, Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In hindi, Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day In Telugu, Top 5 advantages of using a Vitamin-C Face Toner on your face every day Bengali

    Vitamin C Toner - 200 ml

    Soothes Skin Irritation | Removes Impurities | Brightens Complexion

    ₹ 359

    4.3

    (473)

    2930 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Toys & Gifts

    Toys & Gifts

    குழந்தைக்கு 6 மாதங்களிலிருந்து கொடுக்கப்படவேண்டிய பொம்மைகள் (Baby Toys from 6 months onwards In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய முக்கிய உணவுகள் (Foods which can be harmful for your baby: Please Avoid these In Tamil)

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள் ( Travelling suggestions that you can keep in mind: Newborn to 8-Month-old In Tamil)

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    பிறந்த குழந்தையை முதன் முதலில் வெளி இடங்களுக்கு எப்போது அழைத்துச் செல்லலாம் ? ( Trying to figure out what it is the best time to take your newborn for an outing: Read this In Tamil) In Tamil)

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    உங்கள் குழந்தையுடன் டிரிப் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க 5 சூப்பர் டிப்ஸ் (Planning a Trip with Your Little One? Here are 5 Extremely Useful Tips for an Enjoyable Holiday with Your Baby In Tamil)

    Image related to Pillows & Blankets

    Pillows & Blankets

    ஒரு குறுநடை போடும் குழந்தை தலையணையுடன் தூங்க சரியான நேரம் எது?(When is the right time for a toddler to sleep with a pillow In Tamil)

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.