Postnatal Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பிரசவத்திற்கு பிறகான இரத்தப்போக்கு (பிபிஹெச்) என்பது பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பில் இருந்து வெளியாகும் கடுமையான இரத்தப்போக்கு ஆகும். இது ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்த உடனேயே அல்லது 84 நாட்கள் கழித்து பிபிஹெச் நிகழலாம். இது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் உயிரைக் காப்பாற்ற முடியும்..
பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு வழியாக இரத்தப்போக்கு ஏற்படும். வெளியேறும் இரத்தத்தின் அளவு 32 அவுன்சைத் தாண்டினால், அது பிரசவத்திற்கு பிறகான இரத்தப்போக்கு என்று கருதப்படுகிறது. பிபிஹெச் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும்போது சாதகமான சிகிச்சை பலன் கிடைக்கும்.
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கில் இரண்டு வகைகள் உள்ளன. இரத்தப்போக்கு ஏற்படும் போது:
பிரசவத்திற்குப் பிறகு 24 மணிநேரத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு- முதன்மை பிபிஹெச் ஆகும்.
பிரசவமான 24 மணி நேரங்களுக்குப் பிறகு அல்லது 12 வாரங்களுக்குப் பிறகு - செகன்டரி பிபிஹெச் ஆகும்.
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு மாதவிடாய் உடன் தொடர்புபடுத்திக் கொண்டு குழப்பம் ஏற்படுத்திக் கொள்ளப்படுகிறது. அசாதாரண அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பிபிஹெச் இன் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
நிறுத்த முடியாத இரத்தப்போக்கு
இரத்த அழுத்தம் குறைதல்
இதய துடிப்பு அதிகரிப்பு
சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைதல்
பிறப்புறுப்பைச் சுற்றி வீக்கம் மற்றும் வலி
பிரசவத்தின் போது, குழந்தை வெளியே தள்ளப்பட்ட பிறகு, மூன்றாவது சுருக்கம் ஏற்படுகிறது. இந்த கட்டத்தில், கர்ப்பப்பை மீண்டும் சுருங்குகிறது மற்றும் நஞ்சுக்கொடியை வெளியே தள்ளுகிறது. இந்த சுருக்கம் இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் போதுமானதாக இல்லாவிட்டால், இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
இரத்தப்போக்குக்கான பிற காரணங்கள்:
கர்ப்பப்பையில் சில நஞ்சுக்கொடி இருக்கும் போது.
பிறப்புறுப்பு கிழந்திருத்தல்
கர்ப்பப்பையில் கிழிவு ஏற்பட்டிருத்தல்
பிறப்புறுப்புக்கு அருகில் உள்ள இடங்களில் இரத்தப்போக்கு. இது ஹேமாடோமா என்று அழைக்கப்படுகிறது.
இரத்தப்போக்கு கோளாறுகள்
சுகாதார நிபுணர்கள் முதலில் ஹெல்த் ஹிஸ்டரியை ரிவ்யூ செய்து உடல் பரிசோதனை செய்கிறார்கள். ஆய்வக சோதனைகள் நோயறிதலை உறுதிப்படுத்த உதவுகின்றன. பொதுவாக எடுக்கப்படும் சில ஆய்வக சோதனைகள்:
வெளியேறிய இரத்தத்தின் அளவு
இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அளவீடு
ஆர்பிசி எண்ணிக்கை
இரத்தத்தில் உறைதல் காரணிகளை சரிபார்த்தல்
காரணத்தைக் கண்டுபிடித்து இரத்தப்போக்கை நிறுத்துவதே முதல் குறிக்கோள். இந்த சிகிச்சையில் பின்வருவன அடங்கும்:
கர்ப்பப்பையின் சுருக்கத்தை அதிகரிக்க மருந்து அல்லது மசாஜ் செய்தல்
கர்ப்பப்பையில் இருந்து நஞ்சுக்கொடியின் துண்டுகளை அகற்றுதல்
பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பார்த்தல்
இரத்த நாளத்தில் அழுத்தம் கொடுக்க பலூனிங் அல்லது ஃபோலே வடிகுழாய் பயன்படுத்தப்படும். கர்ப்பப்பையில் குறிப்பிடப்பட்ட மற்றவை இல்லாவிட்டால் கூட ஸ்பாஞ்ச் அல்லது காட்டன் வைக்கப்படலாம்
இரத்தப்போக்குக்கான காரணத்தைக் கண்டறிய வயிற்றைத் திறந்து பார்த்தல்
அதிர்ச்சியைத் தடுக்க தையல்களைப் பயன்படுத்தி, சிறப்பு ஜெல், பசை வைப்பது
ஐவி திரவங்கள், இரத்தப் பொருட்கள் மற்றும் இரத்தம் கொடுக்கப்படுதல்
கர்ப்பப்பை சுருங்குவதற்கு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இரத்தப்போக்குக்கான காரணம் போதுமான சுருக்கம் இல்லாததுதான். அப்போது இது வழங்கப்படுகிறது. ஆக்ஸிடோஸின், மெத்திலர்கோனோவைன் மற்றும் புரோஸ்டாகிலான்டின்ஸ் ஆகியவை பொதுவான மருந்து ஆகும்.
நஞ்சுக்கொடியில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு பிபிஹெச் ஏற்படும் ஆபத்து உள்ளது. வேறு சில காரணங்கள் பின்வருமாறு:
பல கர்ப்பங்கள்
ஒரே பிரசவத்தில் இரட்டை அல்லது மூன்று குழந்தைகள்
குழந்தை பெரிதாக இருத்தல்
நிறைய அம்னியோடிக் திரவம்
உடல் பருமன்
தொற்று நோய்
வலி வந்த பின்னும் பிரசவிக்க நீண்ட நேரம் ஆகுதல்
மீண்டு வருவது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. இரத்த இழப்பின் அளவைப் பொறுத்து மீண்டுவரும் காலம் இருக்கும். பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் நீங்கள் குணமடைந்த பிறகு கவனமாக இருக்க வேண்டியது அவசியம்:
ஆரோக்கியமான உணவு
ஓய்வெடுத்தல்
நிறைய தண்ணீர் குடித்தல்
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது
அதிகரித்த இதயத் துடிப்பு, மூச்சிரைப்பு மற்றும் இரத்த ஓட்டம் குறைதல் போன்ற சிக்கல்களை பிபிஹெச் ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளையும் பாதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கர்ப்பத்திற்கு முன் ஆபத்து காரணிகளை கண்டறிவதே சிறந்த வழி. கர்ப்பிணிகள் தங்கள் முழுமையான மருத்துவ வரலாற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வழக்கமான மருந்துகள் உயிர் காக்கும்.
100 பெண்கள் கொண்ட குழுவில் 5 இல் 1 பெண் இதை அனுபவிக்கிறார்கள்.
ஆம், ஆனால் பிபிஹெச் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, பிரசவத்திற்கு முன் ஒருவர் எப்போதும் முழுமையான மருத்துவ வரலாற்றை வழங்க வேண்டும்.
அவசர சிகிச்சை கிடைக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது எப்போதும் நல்லது. ஆரம்பகால கவனிப்பு உயிர் காக்கும் மற்றும் விரைவாக மீண்டு வர வழிவகுக்கும்.
ஆம், சிகிச்சை அளிக்காமல் விடப்படும் போது இது ஒரு ஆபத்தான நிலை தான். பெண்கள் மிக விரைவாக இரத்தத்தை இழக்கிறார்கள். இது இரத்த அழுத்தத்தில் மிக விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது அதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது மரணத்திற்கு வழிவகுக்கும்.
பிபிஹெச் என்பது உடனடி சிகிச்சை தேவைப்படும் ஒரு முக்கியமான நிலை. கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம். நாம் தவறாக நினைத்து மருத்துவமனைக்குச் சென்றால் கூட பரவாயில்லை. வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது. தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை அறிகுறிகள் ஆகும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உயிர் காக்கும் முறை ஆகும். பிபிஹெச் உடனான கடந்த கால அனுபவத்தைப் பற்றி மருத்துவர்களிடம் கூறுவது மற்றும் முழு மெடிக்கல் ஹிஸ்டரியை வழங்குவதும் முக்கியம்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |