This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம் என்பதற்கான 5 சிறந்த காரணங்கள் (Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important In Tamil)

Growth & Development
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம் என்பதற்கான 5 சிறந்த காரணங்கள் (Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important In Tamil)
Likes1 Likes|
Read time6 min

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கர் என்றால் என்ன? (What is a Baby Growth Tracker In Tamil)

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கர் என்பது அப்பெயர் குறிப்பிடுவது போல ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு நடவடிக்கையாகச் செயல்படுகிறது. டிராக்கரை ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் 2 வயது வரை பயன்படுத்த மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், இவை வளர்ச்சியின் முக்கியமான ஆண்டுகளாகும். முதல் சில வருடங்களில் குழந்தை தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் வித்தியாசமானது. அது 'இயல்பான' வேகத்தில் வளரவில்லை என்றால், பெற்றோர் அது குறித்துக் கவலைப்படுவது இயற்கையானது. அது போன்ற சமயங்களில் வளர்ச்சி டிராக்கர் பெற்றோருக்கு உதவிகரமாக இருக்கும்.

உணவுப் பழக்கம் முதல் தூக்க முறைகள் வரை, சிறு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்பது நீண்ட காலம் வரை பயன் தரக்கூடியது. பெற்றோர்கள் அவற்றைப் புரிந்துகொண்டால் தேவைப்படும்போது வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலாம். குழந்தையின் எடை, உயரம், தலை சுற்றளவு உள்ளிட்ட உடல் வளர்ச்சிகளை அவர்கள் கண்காணிக்க முடியும். பொதுவாகப் பரந்த அளவில் பயன்படுத்தப்படும் குழந்தை கண்காணிப்பு விளக்கப்படங்களை சிலர் பயன்படுத்தலாம் என்றாலும், உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கரைப் பின்பற்றுவதே மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க சரியான புள்ளிவிவரங்களுடன் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க இதுவே சரியானது.

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கரின் முக்கியத்துவம் என்ன? (What is the Importance of a Baby Growth Tracker In Tamil)

பேபி டிராக்கரின் முக்கியத்துவம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. வெவ்வேறு உடல், மன, உடலியல் வளர்ச்சி மாற்றங்களின் துல்லியமான சதவீத மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ள இது பெற்றோருக்கு உதவுகிறது. குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம் என்பதற்கான முதல் ஐந்து காரணங்கள் கீழ்வருவன:

காரணம் 1:

பிறந்த தேதி முதல் பல மாதங்கள் வரை குழந்தையின் எடையை சரிபார்க்க பெற்றோர்களுக்கு குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கர் அவசியமாகிறது.

காரணம் 2:

டிராக்கரைப் பயன்படுத்துவதற்கான இரண்டாவது காரணம் அடுத்தடுத்த மாதங்களில் குழந்தையின் உயரத்தை சரிபார்க்க வேண்டும் என்பது.

காரணம் 3:

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கர் குழந்தையின் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கிறதா என்று கண்காணிக்க உதவுகிறது.

காரணம் 4 - தலை சுற்றளவு சரிபார்ப்பு(Head Circumference Check):

குழந்தையின் தலையின் சுற்றளவு அது வளரும்போது பெரிதாகிறது. டிராக்கரைப் பயன்படுத்தி தலை சுற்றளவு அளவீட்டை சரிபார்த்துக்கொள்ளலாம்.

காரணம் 5 - முழுமையான மதிப்பீடு(Thorough Assessment):

குழந்தைக்கான டிராக்கர் மூலம், பெற்றோர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியின் முழுமையான மதிப்பீட்டை சரியாகப் பெறலாம். இது பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மருத்துவரிடம் விரிவான தகவல்களை வழங்க உதவும். அவற்றைக் கொண்டு மருத்துவரும் பின்னர் தேவைப்படும்போது மேலதிகத் தீர்வுகளை வழங்க முடியும்.

இதையும் படிக்கலாமே! - வெயில் காலத்தில் குழந்தையை ஸ்லிப்பீங் பேக்கில் தூங்க வைக்கலாமா? (Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In Tamil)

ஒரு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கத் தொடங்க, இந்த இணைப்புகளைப் பார்க்கவும்:

WHO Growth Charts (Recommended from birth to 24 months)

CDC Growth Charts

குழந்தையின் வளர்ச்சிக்கான டிராக்கர் எவ்வாறு செயல்படுகிறது? (How Does a Baby Growth Tracker Work In Tamil)

பேபி டிராக்கரைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. எப்படிப் பயன்படுத்துவது என்பதை பெற்றோர் இங்கே காணலாம்:

  • எடையை சரிபார்த்தல்(Weight Check):

சி.டி.சி கிரிட்-ன் வலது பக்கத்திற்குச் செல்லவும். அடுத்து, குழந்தையின் வயதை மாதத்தின்படி மேலே கண்டுபிடித்து, வளைகோட்டை அது சந்திக்கும் புள்ளி வரை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும் அந்தந்தக் கோடுகளை கவனமாகப் பின்பற்றவும். இறுதியாக, குறிப்பிட்ட வளைகோட்டை இறுதி வரை பின்பற்ற வேண்டும். அங்கு சதவீத மதிப்பெண்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டுள்ளன.

  • உயரத்தை சரிபார்த்தல்(Height Check):

குழந்தையின் உயரம் அல்லது நீளத்தைக் கண்டறிய, கிரிட்-ன் இடது பக்கத்திற்குச் சென்று, அடியில் உள்ள மாதங்களில் வயதைக் கண்டறியவும். அடுத்து, வளர்ச்சி வளைகோட்டில் குறுக்குவெட்டு வரை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும் அந்தந்தக் கோடுகளைப் பின்பற்றவும். இந்த வளைகோடு இறுதி வரை பின்பற்றப்பட வேண்டும். அங்கு சதவீத மதிப்பெண்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டுள்ளன.

  • நீளத்திற்கேற்ற எடையைச் சரிபார்த்தல்(Weight Check for Length):

கிரிட்-ன் அடிப்பகுதிக்குச் சென்று அங்கு இடது பக்கத்தில் குழந்தையின் எடையைக் கண்டுபிடிக்கவும். வளர்ச்சி வளைகோட்டில் குறுக்குவெட்டு வரை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும் அளவீடுகளின் கோடுகளைப் பின்பற்ற வேண்டும், பின்னர் சதவீத மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க இறுதி வரை வளைகோட்டைப் பின்பற்ற வேண்டும்.

  • தலை சுற்றளவை சரிபார்த்தல்(Head Circumference Check):

விளக்கப்படத்தின் இடது பக்கத்தை நோக்கிச் செல்லவும். வளைகோட்டில் குறுக்குவெட்டு வரை கிடைமட்ட மற்றும் செங்குத்துக் கோடுகளைப் பின்பற்ற வேண்டும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்). இறுதி வரை வளைகோட்டைப் பின்பற்ற வேண்டும். அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு எண்ணைக் காணலாம்.

முடிவுரை (Conclusion)

சி.டி.சி வழங்கும் வளர்ச்சி விளக்கப்படங்களை குழந்தையின் பிறந்த தேதி முதல் 19 வயது வரை பயன்படுத்தலாம். உலக சுகாதார அமைப்பு வழங்கும் வளர்ச்சி விளக்கப்படத்தை குழந்தை பிறந்த தேதி முதல் 5 வயது வரை பயன்படுத்தலாம். இவ்விரண்டின் விளக்கப்படங்களின் பயன்பாடு ஒத்தே இருக்கிறது. இவற்றின் மூலம், பெற்றோர் தங்கள் குழந்தை இயல்பாக வளர்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

TAGS :

Baby growth tracker in tamil, meaning of baby growth tracker in tamil, details for baby growth tracker in tamil, uses if baby growth tracker in tamil, Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important in Hindi, Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important In English, Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important In Telugu, Top 5 Reasons Why Using a Baby Growth Tracker is Important in Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.