hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Symptoms & Illnesses arrow
  • கவாசாகி நோய்: இதன் அர்த்தம், அறிகுறிகள் & சிகிச்சை arrow

In this Article

    கவாசாகி நோய்: இதன் அர்த்தம், அறிகுறிகள் & சிகிச்சை

    Symptoms & Illnesses

    கவாசாகி நோய்: இதன் அர்த்தம், அறிகுறிகள் & சிகிச்சை

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருப்பதால், இவர்கள் சிறு சிறு நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இருந்தாலும், ஒரு சில குழந்தைகளுக்கு சில மரபணு நோய்கள் பொதுவானதாக இருக்கும். அத்தகைய ஒரு நோய் தான் கவாசாகி நோய். இந்த நோயானது குழந்தைகளின் தமனிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அவர்களுக்கு காய்ச்சலும், கவாசாகி ரேஷஸ் ஏற்படுகிறது. இந்த நோய் தற்காலிகமான நிலை தான் என்பதால் இது குறித்து பயப்படத் தேவையில்லை, பொதுவாக மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சையளிக்கப்படும் போது இது ஒரு சில நாட்களுக்குள் சரியாகிவிடும்.

    கவாசாகி நோய் என்றால் என்ன?

    கவாசாகி நோய் என்றால் என்ன, இதிலிருந்து குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது, இதிலிருந்து குழந்தைகளை எவ்வளவு சீக்கிரம் மீட்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கவாசாகி நோய் அல்லது கவாசாகி நோய்க்குறி என்பது மருத்துவ ரீதியாக மியூகோகுட்டேனஸ் நிணநீர் முடிச்சு என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுடைய இரத்த நாளங்களின் சுவர்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும், இந்த நோய் இதயத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளான கரோனரி தமனியில் வீக்கத்தினை ஏற்படுத்தும். இது சுரப்பிகள் மற்றும் சளி சவ்வுகளில் வீக்கத்தினை ஏற்படுத்தும்.

    கவாசாகி நோயிற்கான அறிகுறிகள்

    கவாசாகி நோயின் பொதுவான சில அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

    • 102.2 ஃபாரன்ஹீட் அல்லது 39 செல்சியஸ்-க்கும் அதிகமான காய்ச்சல் இருத்தல்

    • குழந்தைகளின் சருமத்தில் ஏற்படும் கவாசாகி நோய்க்கட்டி

    • நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கம்

    • சிவந்த கண்கள் அல்லது வெண்படல நோய்

    • உதட்டு வெடிப்பு மற்றும் காய்ந்து போன சிவப்பான உதடுகள் மற்றும் மிகவும் சிவப்பாக இருக்கும் நாக்கு அல்லது கவாசாகி நோயினைக் கொண்ட நாக்கு

    • கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டு, இறுதியில் இவை ஒரே மாதிரியாக சிவப்பு நிறத்தில் மாறும்.

    • அடிவயிற்று வலி

    • வயிற்றுப்போக்கு

    • மயக்கம் மற்றும் வாந்தி

    • மூட்டு வலி

    • மஞ்சள் காமாலை

    • கைகள் மற்றும் கால்களில் தோல் உரிதல்

    கவாசாகி நோய்க்கான காரணங்கள்

    கவாசாகி நோய்க்கான சரியான காரணங்கள் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இருந்தாலும், ஒரு சில காரணிகள் இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம். கவாசாகி நோய்க்கான காரணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன-

    வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று

    கவாசாகி சொறி நோய் போன்றவை கவாசாகி நோய்க்கான ஒரு சில அறிகுறிகளாகும், இது வைரஸ்கள் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றாகும். இருந்தாலும், வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள்தான் இதற்கு காரணமாக இருக்குமா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

    தன்னுடல் தாக்கக் கோளாறு (ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்)

    தன்னுடல் தாக்கக் கோளாறு (ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்) கவாசாகி நோயை ஏற்படுத்தும். இந்த நிலையில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது ஒரு நோய்க்கிருமியாக மாறும், இருந்தாலும், வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள்தான் இதற்கு காரணமாக இருக்குமா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

    மரபியல்

    கவாசாகி நோயிற்கான வரலாற்றைக் கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய மரபணுக்கள் மூலமாகத் தங்களுடைய குழந்தைகளுக்கு இந்த நோயை அனுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    கவாசாகி நோயைக் கண்டறிதல்

    கவாசாகி நோயைக் கண்டறிதல் என்பது குழந்தைக்கு ஏற்படும் கவாசாகி நோயின் அறிகுறிகளைப் பொறுத்து கண்டறியலாம். இரத்தம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்கு ஒரு சில பொதுவான பரிசோதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன -

    சிறுநீர் பரிசோதனை -

    வேறு ஏதாவது நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கு.

    இரத்த சிவப்பணு எண்ணிக்கைக்கான பரிசோதனை -

    கவாசாகி நோயில் இரத்த சிவப்பணுக்கள் பெரும்பாலும் மிக அதிகமாக இருக்கும்.

    இரத்தச் சிவப்பணு படிமான வீதத்திற்கான பரிசோதனை -

    உடலில் ஏதாவது அழற்சி நிலை இருக்கிறதா என்பதை இந்தப் பரிசோதனை சரிபார்க்கிறது.

    சோடியம் பரிசோதனை -

    கவாசாகி நோயின் போது, குழந்தைகளின் உடலில் அடிக்கடி சோடியம் அளவு குறைவாக இருக்கும்.

    சிஆர்பி பரிசோதனை -

    உடலில் இருக்கும் அழற்சியை சரிபார்ப்பதற்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

    வெண்புரத (ஆல்புமின்) பரிசோதனை –

    இரத்தத்தில் வெண்புரத (ஆல்புமின்) அளவு குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு கவாசாகி நோய் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

    இதயத்தின் ஆரோக்கியத்தை சரிபார்ப்பதற்குச் செய்யப்படும் பரிசோதனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது-

    இசிஜி பரிசோதனை –

    இதயத் துடிப்பை சரிபார்ப்பதற்கும், மற்ற அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பதற்கும் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மின்முனைகள் சருமத்துடன் இணைக்கப்பட்டு, இதயம் எப்படி பம்பிங் ஆகிறது மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் எப்படி உள்ளது போன்ற அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கவனிக்கப்படுகிறது.

    எக்கோகார்டியோகிராம் -

    இது ஒலி அலை களைப் பயன்படுத்தி இதயத்தின் பம்பிங் செயல்பாட்டைத் தீர்மானிக்கப் பயன்படும் அல்ட்ராசவுண்ட் சோதனையாகும்.

    இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கு ADHD இன் அறிகுறிகள்

    கவாசாகி நோய்க்கான சிகிச்சை

    கவாசாகி நோய்க்கு ஒரு சில மருந்துகள் வாய்வழியாகவும் கொடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது -

    • ஆஸ்பிரின்

    • நரம்பு வழியாகத் தரப்படும் எதிர்ப்புப் புரதங்கள் (இன்ட்ராவேனஸ் இம்யூனோகுளோபுலின்)

    • கார்டிகோஸ்டீராய்டுகள் (இயக்க ஊக்கி மருந்துகள்) மற்றும் ட்யூமர் நெக்ரோஸிஸ் ஃபேக்டர் இன்ஹெபிட்டார்ஸ்

    • இரத்த உறைவைத் தடுப்பதற்கு தரப்படும் மருந்துகள்

    இருந்தாலும், இந்த மருந்துகள் எதுவும் உதவவில்லை என்றால், பிளாக் ஆன தமனியைத் திறப்பதற்கு கரோனரி ஆர்டரி ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சையானது செய்யப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் ஏதாவது அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ஸ்டென்ட்டும் வைக்கப்படுகிறது.

    கவாசாகி நோயில் இருக்கும் சிக்கல்கள்

    இதற்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால், இந்த கவாசாகி நோயானது அனியூரிசம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், குழந்தைகளுக்கு மாரடைப்பு அல்லது உள் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். இதில் வேறு சில முக்கிய சிக்கல்களும் அடங்கியுள்ளன -

    • இதயத்தசையழற்சி (மயோகார்டிட்டிஸ்)

    • இதய உறை அழற்சி (பெரிகார்டிட்டிஸ்)

    • இதய தசை மற்றும் இதய வால்வுகளின் செயலிழப்பு

    • இதய செயலிழப்பு

    கவாசாகி நோயால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்

    கவாசாகி நோய்க்குறி அல்லது கவாசாகி நோயானது முதலில் 5 வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளை பாதிக்கிறது. சிறுவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆசியா அல்லது பசிபிக் வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கவாசாகி நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்

    தங்களுடைய குழந்தைகளிடம் கவாசாகி நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், குழந்தையின் பெற்றோர் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். குழந்தைக்கு காய்ச்சல் தொடர்ச்சியாக இருக்கும் போது குழந்தைகளின் மீது சில சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதை பெற்றோர்களால் பார்க்க முடியும், அவ்வாறு கண்டால் நேரம் தாழ்த்தாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, கவாசாகி நோய்க்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும். முறையான சிகிச்சை மூலமாக குழந்தைகள் ஆறு முதல் எட்டு வாரங்களில் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைகின்றனர்.

    எனவே கவாசாகி நோய் மற்றும் நோய்க்கான அறிகுறிகளான இந்த அனைத்தையும் பற்றி பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தங்களுடைய குழந்தைக்கு மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருப்பது தெரிந்தால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு தேவையான சிகிச்சையை தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.