
மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் என்பது கர்ப்பமாக இருக்கும் போதும் கூட நீங்கள் ஸ்டைலாக காட்சியளிப்பதற்கான ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இது குறித்து நம் மனதில் பெரும்பாலும் எழும் ஒரு கேள்வி என்னவென்றால், லெக்கின்ஸ் அணிவது பாதுகாப்பானது தானா என்பதுதான். இதற்குக் காரணம் என்னவென்றால் மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் சருமத்தை ஒட்டி அணியப்படுகின்றன; பெண்கள் கர்ப்ப காலத்தில் அணியும் உடைகள் பொதுவாக அவ்வாறு இருப்பதில்லை. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால் பெரும்பாலான மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் சௌகரியமாக அணிவதற்காகவே தயாரிக்கப்படுகின்றன என்பதால் பெண்கள் கர்ப்ப காலத்தில் அணிவதற்கு அவை முழுதும் பாதுகாப்பானவை. பெண்ணின் வளர்ந்து வரும் வயிற்றைக் கருத்தில் கொண்டு, அதாவது வயிறு பெரிதாகும் போது மெட்டர்னிட்டி லெக்கின்ஸும் அதற்கேற்றார் போல் பெரிதாகி வயிற்றை சௌகரியமாக நன்கு மூடிக்கொள்ளும் வகையில் இருக்கும்படி ஆடை வடிவமைப்பாளர்கள் அவற்றை வடிவமைக்கின்றனர்.
மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்களுக்கும் வழக்கமான லெக்கின்ஸ்களுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று வெயிஸ்ட்பேண்டுயின் தன்மை ஆகும். இரண்டு வகை லெக்கின்ஸ்களுமே நன்கு ஸ்ட்ரெச் ஆகக் கூடிய துணியால் செய்யப்பட்டாலும், மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்களின் வெயிஸ்ட்பேண்டு பெரிதாக இருக்கும், அதனால் அது கர்ப்ப காலத்திற்கு ஏற்ப வயிற்றைத் தாங்கக்கூடியதாக இருக்கிறது. மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்களில் வெயிஸ்ட்பேண்டுகளைப் பொறுத்து இரு வகைகள் உள்ளன: இடுப்புக்குக் கீழ் அமைந்திருக்கும் வெயிஸ்ட்பேண்டுகள் மற்றும் வயிற்றுக்கு மேல் அமைந்திருக்கும் வெயிஸ்ட்பேண்டுகள்.
பொதுவாக இந்த வகை லெக்கின்ஸ் பெல்லி பேனல் இல்லாமல் வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகை லெக்கின்ஸ் ஆனது வயிற்றின் அளவிற்கேற்ப விரிவடையும் ஒரு எலாஸ்டிக் பேண்டைக் கொண்டுள்ளன. இது வயிற்றை அழுத்தாது என்பதாலும் நாகரீகமாக இருக்கும், அதே சமயத்தில் சௌகரியமாகவும் இருப்பதாலும் சில பெண்கள் இதை அணிய விரும்புகிறார்கள். இவ்வகை லெக்கின்ஸ்கள் கோடையில் அணிவதற்கு அல்லது வயிற்றில் அழுத்தம் கொடுக்காத ஆடைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்றதாகும்.
இதையும் படிக்கலாமே! - மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்: கர்ப்பமாக இருக்கும் போது உங்களுக்கு சௌகரியமான ஒன்றை தேர்வு செய்வது எப்படி!(Maternity Leggings: Choosing comfort in Pregnancy and How! In Tamil)
இந்த லெக்கின்ஸ் வயிற்றுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியதாக இருக்கும். அதோடு வசதியான ஸ்ட்ரெச் ஆகக் கூடிய பெல்லி பேனலைக் கொண்டுள்ளது. சில சிறந்த மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் வயிற்றைத் தாங்கவும் செய்கின்றன; இது மூன்றாம் டிரைமெஸ்டரில் முக்கியமானது. குளிர்காலத்தில் அதிகம் வியர்க்காத போதோ அரிப்பு எடுக்காத போதோ அணிய இந்த வகை சிறந்தது. கோடையில், உடல் அதிக வெப்பமடைமால் பாதுகாக்கும் கேப்ரி கட் கொண்ட லெக்கின்ஸ்களைத் தேர்வு செய்யலாம்.
பெண்கள் வழக்கமாக அணிவதை விடப் பெரிய அளவு லெக்கின்ஸ்களை வாங்கி கர்ப்பத்தின் முதல் மும்மாதக்காலத்தில் அணிய முடியும் என்றாலும், நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் அதிக சௌகரியம் வேண்டுமென்றால் மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்களுக்கு மாற வேண்டியிருக்கும். இந்த லெக்கின்ஸ்கள் கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்று என்றும் சொல்லலாம். பாரம்பரிய மகப்பேறுகால ஆடைகளுடன் ஒப்பிடும் போது இவை அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன. அதுமட்டுமல்ல இது தூங்குவதற்கு மிகவும் வசதியான ஒரு வகை உடையாகும்.
ஆரம்பத்தில் சிலருக்குத் தாங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருக்கலாம்; ஆனால், வயிறு பெரிதாகி வரும் போது, தளர்வான ஆடைகள் கூட அவர்களுக்குப் பொருந்தாமல் போகும். மகப்பேறுகால ஆடைகளுக்கு மாற அதுவே சரியான நேரம் ஆகும். மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்கள் அணிய மிகவும் சௌகரியமானவை என்பதாலும் பல்வேறு ஸ்டைல்களில் வருவதாலும் பெண்கள் கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்திலேயே மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்கள் அணியத் தொடங்கலாம். மைலோ ஃபேமிலியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒவ்வொரு ஸ்டைலுக்கும் பொருந்தக்கூடிய பலவிதமான மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்கள் கிடைக்கின்றன.
கர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தும் செயற்கையிழை ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அவை சருமத்திற்கு எரிச்சலூட்டுவதோடு அழற்சியையும் ஏற்படுத்தலாம். பருத்தி போன்ற மென்மையான இயற்கை துணிகளைத் தேர்ந்தெடுப்பது சருமத்திற்கு நல்லது. அவை அணிபவர்கள் நாள் முழுவதும் குளுமையாகவும் சௌகரியமாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன.
கர்ப்பத்திற்கு முன்பு எவ்வளவு ஸ்டைலாக இருந்தீர்களோ அதை கர்ப்பம் அடைந்த பின்னரும் தொடர மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் அணிந்து கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மேற்கத்திய உடைகள், இந்திய உடைகள் அல்லது இரண்டின் கலவை ஆகியவற்றுள் எதைப் பெண்கள் அணிய விரும்பினாலும், மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் அதில் நிலையாக இடம்பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
லெக்கின்ஸ்களை லைட் வெயிட்டான, சௌகரியமான ஸ்ட்ரெச் ஆகக் கூடிய ஒரு மெட்டர்னிட்டி டாப்புடன் மேட்ச் செய்து அணிந்தால் போதும், நாள்முழுதும் ஸ்டைலாகவும் சௌகரியமாகவும் இருக்கலாம். ஒன்பது மாதங்களும் பிரசவத்துக்குப் பின்னும் கூட டாப் அணிய, தளர்வான பெல் ஸ்லீவ்களைத் தேர்வு செய்யலாம்.
நல்ல அமைப்புடனான ரெண்டு மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் இருந்தால் போதும், அதுவே அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏற்றதாக இருக்கும். அதிகபட்ச சௌகரியம் வேண்டுமென்றால் பெரிய அளவிலான சட்டைகளுடன் அவற்றை அணியுங்கள். பட்டன்கள் கொண்ட சட்டை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டியிருக்கும்போது உதவியாக இருக்கும் என்பதால் இது பிரசவத்திற்குப் பிறகும் கூட பெண்கள் அணியக்கூடிய ஒரு விதமான ஸ்டைலாகும்.
விழாக்காலங்களில், குட்டைக் குர்தாக்களிலிருந்து கனமான குர்தாக்கள் வரை எதை வேண்டுமானாலும் மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் உடன் இணைத்து அணியலாம். தளரவாக இருக்கும் ரிலாக்ஸ்ட் ஃபிட் குர்தாக்கள் அழகாக இருப்பது மட்டுமன்றி, அவை வயிற்றை அழுத்தாது என்பதால் அணிய வசதியாகவும் இருக்கும். சற்று மாறுபட்டுத் தோற்றமளிக்க வேண்டுமென்றால் முழு நீளமுள்ள, கணுக்கால் வரையுள்ள அல்லது கேப்ரி ஸ்டைல் மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்களைத் தேர்வு செய்யலாம்.
மெட்டர்னிட்டி லெக்கின்ஸ் உங்களை ஸ்டைலாக காட்டுவது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. கர்ப்பமாக இருக்கும் ஒன்பது மாதங்களுக்கும் அதற்குப் பிறகும் கூட பெண்கள் இதனை தாராளமாக அணியலாம். பிடித்துப் போனால், குழந்தை பிறந்து பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன பிறகும் கூட நீங்கள் இதையே அணிந்து கொள்வீர்கள்!
Maternity clothes in tamil, maternity dresses in tamil, maternity fashion in tamil, comfort dresses during pregnancy in tamil, pre and post delivery dresses in tamil, uses of maternity dresses in tamil.
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |