


Fibroids
22 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டி அல்லது திசுக்கட்டி என்பது புற்றுநோய் வகையைச் சாராத கட்டி வகையாகும். இது பெண்களின் கர்ப்பப்பை உள்ளே வளருகிறது. பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை தாண்டிய பெண்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது 30 முதல் 40 வயதில் ஏற்படுகிறது. ஆனால், எந்த வயது பெண்ணுக்கும் இது உண்டாகலாம். நார்த்திசுக்கட்டிகளால் பாதிக்கப்படும் சில பெண்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதன் அறிகுறிகள் குறித்து சொல்வதற்கு பெரிய அளவுக்கு ஒன்றுமில்லை. அதேவேளையில் சில பெண்கள் தீவிரமான மாதவிலக்கு, கடுமையான இடுப்பு வலி மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி போன்ற பிரச்சினைகளை உணரலாம்.
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் அல்லது லியோமியோமா அல்லது திசுக்கட்டிகள் என்பது கர்ப்பப்பை பகுதியில் காண கூடிய புற்றுநோயை சாராத வளர்ச்சி நிலை ஆகும். இவை தொடர்புகள் கொண்ட திசுக்கள் மற்றும் தசைகளால் உருவானவை ஆகும். கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டி என்பது அரிதாக கர்ப்பப்பை புற்றுநோயாக மாறும். எனவே, ஒருவர் இதுகுறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த நார்த்திசுக்கட்டிகளின் அளவுகள் மாறுபடலாம். உதாரணத்திற்கு நமது கண்களால் பார்க்க இயலாத அளவுக்கு மிகச் சிறியதான அளவு முதல் கர்ப்பப்பை தோற்றத்தையே மாற்றியமைக்கும் வகையில் பெரிய அளவு வரையில் இருக்கலாம்.
கர்ப்பப்பையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நார்த்திசுக்கட்டிகள் இருக்கலாம். இடுப்பு பகுதியை பரிசோதனை செய்யும்போது அல்லது கர்ப்பப்பை பகுதியில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யும்போது இந்த கட்டிகள் கண்டறியப்படலாம். கட்டிகள் கண்டறியப்பட்ட பிறகு, பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றி இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகள் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். சிலருக்கு மிதமான அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு மிக தீவிரமான அசௌகரியம் ஏற்படலாம். கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டி தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
தீவிரமான மாதவிலக்கு
ஒரு வாரத்திற்கும் மேலான மாதவிலக்கு
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நீடித்த மலச்சிக்கல்
இடுப்பு மற்றும் கால் வலி
பாலியல் உறவு கொள்ளும்போது வலி
பெண்ணுறுப்பில் நீடித்த கசிவு
வயிறு உப்புசம்
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சிக்கு என்னதான் காரணம்? என்ற கேள்விக்கு விடை கிடையாது. எனினும், பின்வரும் விஷயங்கள் தான் இதற்கான காரணங்கள் என்று மருத்துவ மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மரபுரீதியான மாற்றங்கள்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் சமநிலை தவறுதல்
உடலில் திசுக்களின் வளர்சிக்கு காரணமான அதே பொருள்களின் மூலமாக நார்த்திசுக்கட்டிகள் வளருவது
உடலில் செல்களை ஒருங்கிணைக்கக் கூடிய எக்ஸ்ட்ரா செல்லுலர் மேட்ரிஸ் காரணமாக இது உண்டாகலாம். ஏனெனில், இயல்பான உடல் செல்களை காட்டிலும் நார்த்திசுக்கட்டிகளில் இந்த மேட்ரிஸ் வகை செல்கள் மிகுதியாக உள்ளன.
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, அது தொடர்புடைய அறிகுறிகள் மிக தீவிரமான வலியுடன் உண்டாகக் கூடும். எனினும், ஒரு பெண்ணுக்கு கட்டிகள் சிறியதாக இருந்தால், அதுவும் நம் கண்களுக்கு புலப்படாத வகையில் மிகச் சிறியதாக இருந்தால், அதன் காரணமாக எந்தவித வலி மற்றும் அசௌகரியம் ஏற்படாது. பெரிய அளவில் நார்த்திசுக்கட்டிகளை கொண்ட பெண்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையான வலி இருக்கும்.
அதேபோன்று பாலுறவு கொள்ளும்போது வலியை உணர முடியும் மற்றும் வயிற்றுப் பகுதியில் சுருக்கென்று குத்துவதைப் போல வலி இருக்கும். இதை மோசமானதாக மாற்றும் வகையில் மாதவிலக்கு கால பிடிப்புகள் மிக கடுமையானதாக இருக்கும். நார்த்திசுக்கட்டிகளை கொண்ட பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்கற்றதாக மற்றும் நீண்ட நாட்களைக் கொண்டதாக இருக்கும். ஆக, இந்த பிடிப்புகள் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சொல்லிவிட முடியாது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பெண்களுக்கு வழக்கமான இடுப்பு பரிசோதனைகளை பல தருணங்களில் மேற்கொள்ளும்போது இந்த கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளை கண்டறியலாம். நார்த்திசுக்கட்டிகளை தொடக்க கால பரிசோதனைகளில் அறியும்போது, அதனை உறுதி செய்வதற்கான சில பரிந்துரைகளை செய்யுமாறு மருத்துவ நிபுணர் பரிந்துரை செய்வார். அதில் சில பரிசோதனை முறைகள் இவை:
இந்த பரிசோதனை முறையில் எடுக்கப்பட்ட படத்தை வைத்துக் கொண்டு கர்ப்பப்பையில் எந்த இடத்தில், என்ன அளவில் கட்டிகள் இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளில் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது, பாதிக்கப்பட்ட பகுதியின் விரிவான படத்தை பெற்றிடும் வகையில் MRI பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை செய்வார்.
இந்த ஆழ்ந்த பரிசோதனை முறையில், பெண்ணுறுப்பின் வழியே ஒரு நுண்ணோக்கி உள்ளே செலுத்தப்பட்டு மிக நெருக்கமான அளவில் நார்த்திசுக்கட்டிகள் குறித்து பார்க்கப்படும்.
மேற்கண்ட பரிசோதனை முறைகளில் மிகச் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்றால், கர்ப்பப்பை பாதையில் சிறிய ஊசியின் மூலமாக உப்பு திரவம் உள்செலுத்தப்படும். வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை காட்டிலும் இந்த பரிசோதனை முறையில் மிக துல்லியமான படம் தென்படும்.
இந்த பரிசோதனை முறையில், பெண்ணின் அடிவயிற்று பகுதியை அழுத்திப் பிடித்தவாறு, நெகிழும் தன்மை கொண்ட டியூப் ஒன்று பெண்ணின் கர்ப்பப்பை உள்ளே செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பெண்ணின் உடல் உள்ளே வளரக் கூடிய கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளை எதிர்கொள்ளுவதற்கு எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. நார்த்திசுக்கட்டிகளின் அளவு, எண்ணிக்கை மற்றும் அவை இடம்பெற்றுள்ள இடம் ஆகியவற்றை பொருத்து இதனை எதிர்கொள்ளும் முறைகள் மாறுபடும். கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளை எதிர்கொள்வது எப்படி என்று மருத்துவ நிபுணரை ஆலோசிப்பது மிகச் சிறப்பான வழிமுறை ஆகும்.
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கலாம்:
வாய்வழி மருந்துகள்
அறுவை சிகிச்சை முறைகள்
நார்த்திசுக்கட்டிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சில பொதுவான முறைகள் இவை:
OTC வலி மருந்துகள்
இரும்புச்சத்து மாத்திரைகள்
பிறப்பு கட்டுப்பாடு மருந்துகள்
GnRH அகோனிஸ்டு மருந்துகள்
இதையும் படிக்கலாமே! - இடம் மாறிய கர்ப்பத்தை (எக்டோபிக் பிரக்னன்ஸி)முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
நார்த்திசுக்கட்டிகளை அப்புறப்படுத்துவதற்கு மிக சிறப்பான அறுவை சிகிச்சை முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மயோமெக்டோமி
ஹிஸ்டரோஸ்கோபி
லேபரோடமி
லேப்ராஸ்கோபி
லேபரோடமி
ஹிஸ்டெரக்டோமி
ரேடியோ ஃபிரிக்வன்சி அப்லேஷன்
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன்
பெண்ணின் உடலில் நார்த்திசுக்கட்டிகள் வளர்ச்சி அடைவதை தடுப்பதற்கான சிறப்பான வழிமுறை எதுவும் கிடையாது. எனினும், உடல் எடையை ஆரோக்கியமான அளவில் வைத்துக் கொள்வது, சமநிலை கொண்ட சத்தான உணவுகளை சாப்பிடுவது போன்ற வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக நார்த்திசுக்கட்டிகளின் அபாயத்தை குறைக்கலாம். உடலில் கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சியை குறைக்க நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளலாம்.
கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கான அறிகுறிகள் உங்களுக்கு தோன்றுகிறது என்றால், அருகாமையில் உள்ள மருத்துவ நிபுணர்களை சந்தித்து இடுப்புப் பகுதியை பரிசோதனை செய்து கொள்ளவும்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











வீட்டிலேயே செய்யக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்

பிறப்பு கட்டுப்பாட்டுக்கான யோனி வளையம் பற்றிய தகவல்கள்(Vaginal Ring for Birth Control: How It Works, Benefits & Risk In Tamil)

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள்

கதிரியக்க தோலுக்கான ரகசியத்தைத் திறக்கவும்: வைட்டமின் சி சீரம் உங்கள் சிக்கலை எவ்வாறு மாற்றும்(Unlock the Secret to Radiant Skin: How Vitamin C Serum Can Transform Your Complexion In Tamil)

4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கான டயட் சார்ட்

குழந்தைகளுக்கு வரும் பொடுகு காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |