hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி | கரு பதிவதில் தோல்வி(Recurrent Implantation Failure | Implantation Failure In Tamil) arrow

In this Article

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி | கரு பதிவதில் தோல்வி(Recurrent Implantation Failure | Implantation Failure In Tamil)

    Pregnancy

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி | கரு பதிவதில் தோல்வி(Recurrent Implantation Failure | Implantation Failure In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி(Recurrent Implantation Failure In Tamil)

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி (ஆர்ஐஎஃப்) என்பது மருத்துவ செயல்முறைகளுக்குப் பிறகும் கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையாகும். செயற்கை கருத்தரிப்பில் (ஐவிஎஃப்) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளுக்குப் பிறகும் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் தான் இது பொதுவாக கண்டறியப்படுகிறது.

    இத்தகைய தோல்வியானது, கரு உட்பதிவதற்குப் பிறகு கருப்பை அல்லது கருவை வளர்ப்பதில் உள்ள பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஐவிஎஃப்-க்குப் பிறகு வெற்றிகரமான கர்ப்பத்தின் விகிதம் பொதுவாக 60% ஆக இருக்கும். இந்த விகிதமானது கரு உட்பதிவது தொடர்ச்சியாக தோல்வியுற்றால், வெகுவாகக் குறையும்.

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of Recurrent Implantation Failure In Tamil)

    கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் சரியாக புலப்படவில்லை. இருந்தாலும், ஆராய்ச்சியின் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மற்றவற்றை விட இந்த நிலையை ஏற்படுத்துவதில் அதிக பங்களிப்பை வழங்குவதற்கான சில காரணங்களைக் கூறுகின்றன.

    ஐவிஎஃப் செய்த பிறகு கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி ஏற்படுவதற்கான காரணங்கள் சில பின்வருமாறு:

    • கரு உள்வைப்புக்கு உட்பட்ட பெண்ணின் அதிக வயது

    • விந்தணு டிஎன்ஏ துண்டாடுவதிலான மேம்பாடு

    • கருப்பை தொடர்பான நோயியல் நிலைமைகள், பொதுவாக பின்வருமாறு அடையாளம் காணப்படுகின்றன:

    • பிறவி சார்ந்த முரண்பாடுகள்

    • கருப்பை/எண்டோமெட்ரியல் பாலிப்கள்

    • நார்த்திசுக்கட்டிகள்

    • கருப்பையக ஒட்டுதல்கள்

    • கருமுட்டைக் குழாயில் திரவம் குவிதல்

    • சோனா ஹார்டெனிங், மரபணு அசாதாரணங்கள் மற்றும் கரு வளர்ப்பின் துணை நிலைகள் போன்ற கரு வளர்ச்சியில் உள்ள குறைபாடுகள்

    • இரத்தயுறைமை

    • எண்டோமெட்ரியல் மெலிதல்

    • தரத்தை விட குறைவாக கருப்பையைத் தூண்டுதல்

    • நோயெதிர்ப்பு சக்தி தொடர்பான பிற காரணிகள்

    • பின்பற்றப்படும் ஐவிஎஃப் நெறிமுறையின் வகையும் கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்விக்கு பங்களிக்கிறது.

    தாய், கரு மற்றும் ஆண் காரணிகள் என துணை வகைப்படுத்தப்பட்ட ஆர்ஐஎஃப்-ன் பொதுவான காரணங்களை சரியாகச் சித்தரிக்கும் வகையிலான விரிவாக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    (Image Source: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3510376/ )

    ஐவிஎஃப்-க்கு உட்பட்ட பெண்களில் சுமார் 10% கரு பதிவதில் தொடர்ச்சியான தோல்வி காரணமாக கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் தோல்வியை எதிர்கொள்கிறார்கள். ஐவிஎஃப் மூலம் கருவுற்ற முட்டைகளை உட்பதிப்பது தோல்வியடைந்ததன் அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களில் கண்டறியும் சோதனைகள் மூலம் மட்டுமே தெரியும்.

    கரு பதிவதில் ஏற்படும் தோல்வியின் ஆபத்து காரணிகள்(Risk Factors of Implantation Failure In Tamil)

    தோல்வியுற்ற கரு உட்பதித்தலுக்கு வழிவகுக்கும் சில பொதுவான ஆபத்து காரணிகள் மற்றும் அதன் பல்வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

    • செயற்கை கருவூட்டல் மூலமாக கர்ப்பம் தரிக்கவிருக்கும் பெண்ணின் வயது(Age of the woman undergoing assisted pregnancy In Tamil):

    ஐவிஎஃப் முயற்சியின் வெற்றி அல்லது தோல்வியில் கரு உட்பதித்தலுக்கு உட்பட்ட பெண்ணின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளார்ந்த உடலியல் காரணிகளுக்காக 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இது செய்யப்படுகிறது. வயது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப அனூப்ளோயிட் அதிர்வெண் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுமா?(Do Pregnant Women Get Their Period? In Tamil)

    • மனஅழுத்தம்(Stress):

    இது ஆர்ஐஎஃப் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றொரு பொதுவான காரணியாகும். அதிக அளவு மன அழுத்தமானது உடலில் கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது. இது கருச்சிதைவுக்கான பொதுவான காரணமாக அறியப்படுகிறது.

    • உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ)(Body Mass Index) :

    உடல் நிறை குறியீட்டெண் 30 கிலோகிராம்/ஸ்கொயர் மீட்டருக்கும் அதிகமாக இருப்பது, கரு உட்பதிவதில் தோல்வி ஏற்படுவதற்கு ஒரு பொதுவான காரணமமாக அமைகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பருமனான பெண்களுக்கு குறைந்த ஓசைட் அளவுகள் இருக்கும். இது கரு உட்பதிவதில் தோல்வி மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

    • புகைப்பிடித்தல்(Smoking):

    செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிப்பதில் வெற்றி குறைவாக இருப்பதற்கான பொதுவன காரணங்களில் ஒன்று புகைப்பிடித்தல் தான். அடிக்கடி புகைப்பிடிப்பவருக்கு குறைவான எஸ்ட்ராடியோல் அளவுகள் இருக்கும்; எஸ்ட்ராடியோல் தான் ஆரோக்கியமான கருப்பை தூண்டுதலை ஆதரிக்கும். இருப்பினும், தரவு வெளிப்பாடு குறைவாக இருப்பதன் காரணமாக அதன் பங்களிப்பு குறித்து தொழில் வல்லுநர்களிடையே பரவலான ஒருமித்த கருத்து எதுவும் இல்லை.

    கரு பதிவதில் ஏற்படும் தோல்வியை கண்டறிந்து சிகிச்சையளித்தல்(Diagnosis and Treatment of Recurrent Implantation Failure In tamil)

    ஒருபுறம் ஆர்ஐஎஃப்-ன் நோயறிதல் சர்ச்சைக்குரியதாக உள்ளது. அதே வேளையில், செயற்கையாக கர்ப்பம் தரிப்பதில் கரு உட்பதிவது தோல்வி தான் பொதுவாக இதனை அடையாளம் காணப்பதற்கான அளவுகோலாகும். உள்வைப்பு அறிகுறிகளில் இது ஒரு பொதுவான தோல்வியாகவும் கருதப்படுகிறது.

    ஒரு பெண் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஐவிஎஃப் சிகிச்சை எடுத்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியிருந்தால், இது ஆர்ஐஎஃப் இருப்பதை முடிவு செய்வதற்கான நிலையான த்ரெஷோல்ட ஆக கருதப்படுகிறது.

    தவிர, நிபுணர்கள் தொடர்ச்சியான கரு பதித்தல் தோல்வியை கண்டறிவதில் கரு பரிமாற்றத்தின் தரத்தை மதிப்பிடுகின்றனர். இருப்பினும், கருவின் தரத்தை 'நல்லது' என வகைப்படுத்துவது தொடர்பான முடிவு இன்னும் விவாதக்குரியதாகவே உள்ளது.

    ஆர்ஐஎஃப் என்பது பொதுவாக ஒரு உடலியலில் இருந்து மற்றொன்றுக்கு மாறுபடும் மருத்துவ ரீதியிலான ஒரு தரநிலை மற்றும் அகநிலை சுகாதார நிலை ஆகும். எனவே, சுகாதார வல்லுநர்கள் இதற்கு நோய் தீர்க்கும் சிகிச்சை மற்றும் தலையீட்டு சிகிச்சை முறைகளை அறிவுறுத்துகிறார்கள். அவை முதன்மையாக பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

    • ஆய்வக உதவி நடைமுறைகள் மற்றும் தலையீடுகள்(Lab-assisted procedures and interventions)

    ஆர்ஐஎஃப் சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் சில நிலையான ஆய்வக உதவி மற்றும் தலையீட்டு நடைமுறைகள் பின்வருமாறு: 2வது/3வது அல்லது 5வது நாளில் வரிசைமுறை இ.டி (ET), இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் உருவவியலின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விந்தணு ஊசி, மற்றும் கருவின் தன்னியக்க குவிப்பு மூலமான செல் இணை வளர்ப்பு.

    • கருப்பை தலையீட்டு முறைகள்(Uterine interventional methods )

    கருப்பை தலையீட்டு முறைகள் தான் மிகவும் நிலையான சிகிச்சை நடைமுறைகளாகும். அவற்றில் ஹிஸ்டரோஸ்கோபி, எண்டோமெட்ரிடிஸ் சிகிச்சை, நுண்ணுயிரியல் ஆய்வுகள், ஹிஸ்டாலஜிக்கல் எண்டோமெட்ரியல் மாதிரி போன்ற நுட்பங்கள் அடங்கும்.

    • எண்டோமெட்ரியல் ஏற்பு தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை(Endometrial receptive technology and treatment)

    சில சிகிச்சைகள் வெற்றிகரமான கரு பதித்தலுக்கான எண்டோமெட்ரியல் ஏற்பின் திறனை மேம்படுத்த உதவுகின்றன. இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் ஈஆர்ஏ அல்லது எண்டோமெட்ரியல் ரெகோட்டிவிட்டி அரே, இன்ட்ராமுஸ்குலர் ஜிஹெச் அளவுகள் போன்றவற்றை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    • இம்யூனோமோடூலேஷன் அடங்கிய சிகிச்சை(Therapies involving immunomodulation)

    ஐவிஐஜி, ஜி-சிஎஸ்எஃப் (g-CSF), பிஎம்பிசி, கருப்பையக தன்னியக்க பிஆர்பி, இன்ட்ராவெனஸ் இன்ட்ராலிபிட் மற்றும் எல்எம்டபிள்யூஹெச் போன்ற சிகிச்சைகள் நோயாளியின் நிலையை மேம்படுத்துவதோடு வெற்றிகரமாக கர்ப்பம் தரிப்பதற்கு ஏதுவாக ஆர்ஐஎஃப்-க்கு சிகிச்சை அளிக்கின்றன.

    செயற்கையாக கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது, கரு உட்பதிவதில் தோல்வியை ஏற்படுத்தக்கக்கூடிய உள்ளார்ந்த உடலியல் நிலைமைகளை சரிபார்க்கும் சோதனையை மேற்கொள்வது சிறந்தது. தொடர்ச்சியாக கரு உட்பதித்தலில் தோல்வி ஏற்பட்டால், நோயாளி தனது கருப்பை நிலைமைகள் மற்றும் விந்தணு பங்களிப்பாளரின் உடலியல் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகளைப் பெற வேண்டும்.

    Tags ;

    Recurrent Implantation in tamil, recurrent implantation failure in tamil, treatment for recurrent implantation in tamil, recurrent implantation failure treatments in tamil, methods of implantation in tamil, reasons for recurrent implantation in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.