
சுருக்கம்




உப்பு கர்ப்ப பரிசோதனை என்பது வீட்டில் செய்யப்படும் DIY சோதனையாகும். இதன் மூலம் சிறுநீரில் HCG இருப்பதைக் கண்டறிந்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கண்டறியும். உப்பு மற்றும் உங்கள் சிறுநீர், இவற்றைக் கலந்து முடிவு சோதிக்கப்படுகிறது.
கரு உங்கள் கருப்பையில் பதிக்கப்பட்ட பிறகு உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரில் வரும் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) உப்புடன் எதிர்வினை செய்வதிலிருந்து கர்ப்பத்தை அறியலாம்.
தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே கர்ப்பத்தை சோதிக்க இது ஒரு இயற்கையான முறையாகும்.
உங்கள் சிறுநீர் மாதிரியை ஒரு கன்டெயினரில் சேகரிக்கவும்.
அடுத்து, ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி உப்பு போடவும்.
உப்பின் மேல் சிறுநீரை ஊற்றவும்.
சில நிமிடங்கள் முதல் பல மணி நேரம் வரை காத்திருக்கவும்.
வெவ்வேறு பரிந்துரைகள் இருப்பதால் குறிப்பிட்ட காத்திருப்பு காலம் என ஒன்று இல்லை.
கோட்பாட்டின் படி, ஒருவர் கர்ப்பமாக இருந்தால், கலவையானது:
"சீஸ்" அல்லது "பால்" போன்ற தோற்றம் தரும்.
கலவையின் மேல் நுரையும் இருக்கலாம்.
சிறுநீரானது உப்பைக் கட்டியாகவோ அல்லது நுரைக்கவோ வைக்கும்.
திரியும் அல்லது இழை நயம் மாறும்.
கர்ப்பமாக இல்லாவிட்டால், எந்த மாற்றமும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. உப்பு கலந்த சிறுநீர் போல் இருக்கும்.
உப்பு மேலே ஒரு நுரை உருவாக்குகிறது என்றால், இது ஒரு தவறான முடிவு.
உப்பு கர்ப்ப பரிசோதனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை அல்லது இந்தச் சோதனையின் கூற்றுகளை ஆதரிக்க எந்த அறிவியல் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. சோதனையை ஆதரிக்கும் நபர்கள், HCG உப்புடன் வினைபுரிவதால் கலவை திரிகிறது அல்லது அதன் அமைப்பை மாற்றுகிறது. ஆனால், உப்பு மற்றும் hCG ஏன் இந்த எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை.
உப்பு கர்ப்ப பரிசோதனை ஒரு நல்ல மற்றும் வேடிக்கையான பரிசோதனையாகச் செய்யப்படுகிறது. இதற்கு மருத்துவ ஆதரவு, அறிவியல் அடிப்படை அல்லது ஒப்புதல் ஏதுமில்லை. அவர் கர்ப்பமாக இருக்கிறார் அல்லது இல்லை என இரண்டு சாத்தியமான விளைவுகளே இருப்பதால் அது சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது. உப்பு HCG உடன் வினைபுரிகிறது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, இந்தப் பரிசோதனையைச் செய்த பிறகு, உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் அல்லது மருத்துவச்சியியை சந்தியுங்கள். இந்தச் சோதனையின் முடிவை மட்டுமே நம்ப வேண்டாம்.
மாதவிடாய் தவறிவிட்டாலோ அல்லது கர்ப்பத்தின் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலோ, உப்பு கர்ப்ப பரிசோதனையைச் செய்யலாம். முதல் சிறுநீரில் hCG செறிவூட்டப்பட்டதாக இருக்கும் என்பதால், காலையில் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மாதவிடாய் தொடங்கும் நாளில் அல்லது அதற்குப் பிறகு பரிசோதனைக்குச் செய்யுங்கள், நீங்கள் அதை முன்கூட்டியே செய்தால் தவறான முடிவுகளைப் பெறலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப பரிசோதனை கருவியை (கிட்) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?(How To Use A Pregnancy Test Kit? In Tamil)
மக்கள் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனைகளைத் தேர்வு செய்ய பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், மிகவும் துல்லியமான மற்றும் சிறந்த மாற்று உள்ளது.
கர்ப்ப பரிசோதனைகளுக்கு, குறிப்பாக டிஜிட்டல் முறையில் அல்லது ஆரம்ப சோதனை முடிவுகளுடன் சோதனை செய்யப்பட்டால் செலவு அதிகமாகும். இலவச கர்ப்ப பரிசோதனை வழங்கும், பல குடும்பக் கட்டுப்பாடு கிளினிக்குகள் உள்ளன.
மருத்துவரை சந்திக்க விரும்பாதவர்கள், மிகக் குறைந்த விலையில் ஸ்ட்ரிப் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனைகளை எந்த மருந்துக் கடையிலிருந்தும் அல்லது ஆன்லைனில் பெறலாம். எந்தவொரு DIY கர்ப்ப பரிசோதனையையும் விட இவை மிகவும் நம்பகமானவை மற்றும் துல்லியமானவை.
தனியுரிமைக் கவலைகள் உள்ளவர்கள் கர்ப்ப பரிசோதனை கருவிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அது கட்டுப்படியாகவில்லை என்றால், ஸ்ட்ரிப் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனை செய்யலாம். இந்த மாற்றுகள் மிகவும் நம்பகமானவை மற்றும் இவற்றை மருந்துக் கடை அல்லது ஆன்லைன் ஸ்டோரில் எளிதாக ஆர்டர் செய்யலாம்.
உப்பு கொண்டு கர்ப்பத்தை பரிசோதிப்பது எளிமையானது, இயற்கையானது மற்றும் செலவில்லாதது என்றும் நல்ல யோசனையாகவும் தோன்றலாம்; இருப்பினும், உப்பு மற்றும் பிற மாற்று கர்ப்ப பரிசோதனைகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது நம்பகமானவை அல்ல. நம்பகமான, துல்லியமான மற்றும் செலவு குறைந்த பல மாற்றுச் சோதனைகள் உள்ளன. கர்ப்பமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், மருத்துவச்சி அல்லது மகளிர் மருத்துவ நிபுணரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் எவ்வித தாமதமும் இன்றி மகப்பேறுக்கு முற்பட்ட வைட்டமின்கள் மற்றும் சரியான மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றைத் துவக்கலாம்.
using salt to check pregnancy in tamil, is salt works for pregnancy test at home in tamil, How to take a pregnancy test with salt In tamil
வீட்டிலேயே தனிமையில், துல்லியமாக, விரைவில் முடிவை அறிய நம்பகமான கர்ப்ப பரிசோதனை கிட் உங்களுக்கு உதவும்.

Organic Aloe Vera (300 ml)
Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns




MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturization| Soothes Dryness






This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |