hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • ஃபேஸ் க்ரீம் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன arrow

In this Article

    ஃபேஸ் க்ரீம் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன

    Pregnancy

    ஃபேஸ் க்ரீம் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு ‘தோல்’ (ஸ்கின்) பகுதியாகும். ஆனால் பலர் அதன் முக்கியத்துவத்தை மதிப்பளிப்பதில்லை அத்துடன் அதற்கான பராமரிப்பை புறக்கணிக்கிறார்கள். நமது ஸ்கின் நம்மை வெப்பம், அதிக ஒளி, காயம் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, நமது ஸ்கின்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், அவை நம் உடலின் மிகவும் மென்மையான பகுதியாகும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் ஸ்கின் கேரைத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. நல்ல பழக்கங்களை வளர்க்க ஒருபோதும் தாமதம் செய்யக்கூடாது. தற்போதைய தலைமுறையினர் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள், நல்ல ஸ்கின் கேர் முறை பற்றி அக்கறையுடன் இருக்கிறார்கள். ஒரு நல்ல ஸ்கின் கேர் ருட்டினானது, உங்கள் ஸ்கின்னை ஆரோக்கியமாகவும், கொழுக்கொழு என்றும், பிரஷாகவும் வைத்துக்கொள்ளும். மேலும், நல்ல ஸ்கின் கேர் ருட்டின் டேமேஜ்கள், பொலுஷன் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளைப் பொருட்படுத்தாது.

    ஒரு நல்ல ஸ்கின் கேர் ருட்டினை எவ்வாறு மேம்படுத்துவது?

    • சரியான ஸ்கின் கேர் ருட்டினை பராமரிக்க, நீங்கள் அதை மிகுந்த அர்ப்பணிப்புடன் தவறாமல் பின்பற்ற வேண்டும். நல்ல ஸ்கின் ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அதை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும். நல்ல ஸ்கின் கேர் பொருட்கள் இருந்தால் மட்டும் போதாது, பயனுள்ள முடிவுகளைக் காட்ட அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

    • உங்கள் ஸ்கின் கேர் ருட்டின் க்ளென்ஸ் மற்றும் மாய்ஸ்ச்சுரைஸ் என்ற 2 அடிப்படை மற்றும் எளிய வழிமுறைகளில் உள்ளன. ஸ்கின்னில் உள்ள அழுக்குகள், அசுத்தங்கள் மற்றும் மேக்கப்பை அகற்றும் போது, ​​மென்மையான க்ளென்சரை உங்கள் ஸ்கின்னில் பயன்படுத்துவது நல்லது, இதனால், ஸ்கின்னில் உள்ள துளைகளை கையாள்வதுடன், முகப்பரு பாதிப்புக்குள்ளான ஸ்கின்னை பராமரிக்கவும் உதவுகிறது. க்ளென்ஸிங்கை இரண்டு முறை செய்யப்பட வேண்டும். அதாவது, பகலில் ஒரு முறை மற்றும் இரவில் ஒரு முறை.

    • டிரை, ஆய்லி அல்லது கலவையான பல்வேறு ஸ்கின் டைப்களுக்கு ஏற்றவாறு சந்தையில் ஏராளமான க்ளென்சர்கள் கிடைக்கின்றன. எனவே, மார்க்கெட்டில் கண்மூடித்தனமாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை விட, உங்கள் ஸ்கின் டைப்க்கு மிகவும் பொருத்தமான ஒரு க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது ஆகச் சிறந்தது. மற்றொரு சிறந்த யோசனை என்னவென்றால், உங்கள் ஸ்கின் டைப்க்கு எந்த தயாரிப்புகள் சிறந்தது என்பதை தீர்மானிக்க ஒரு டேர்மடாலாஜிஸ்ட்டை (தோல் மருத்துவர்) அணுகுவது நல்லது. ஏனெனில், அவர்கள் உங்கள் ஸ்கின் கன்டிஷன்களை சிறப்பாக ஆராய முடியும். ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் ஸ்கின்னை சேதப்படுத்தும். மேலும், உங்கள் ஸ்கின்னிற்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிப்பது சற்றே கடினமாக இருக்கும்.

    • க்ளென்சிங்கிற்கு பிறகு, இரண்டாவது மிக முக்கியமான ஸ்டெப் உங்கள் முகத்தை மாய்ஸ்ச்சரைஸாக வைத்துக்கொள்வதாகும். ஃபேஸ் மாய்ஸ்சரைசர்கள் உங்கள் ஸ்கின்னை ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரப்புவதன் மூலம் மாய்ஸ்ச்சுரைஸாக வைத்துக்கொள்கின்றன. இதனால், ஸ்கினில் சுற்றுச்சூழல் மாசுக்களால் ஏற்படும் எரிச்சல்களுக்கு, இது ஒரு தடையாக செயல்படுகிறது.

    • ஒரே ஒரு மாய்ஸ்சரைசர் அனைத்து ஸ்கின் டைப்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக, டிரை ஸ்கின் ஆயில் சார்ந்த ஃபேஸ் க்ரீம்களையும், ஆய்லி ஸ்கின் கொண்டவர்கள் நீர் சார்ந்த ஃபேஸ் கிரீம்களையும் பயன்படுத்த வேண்டும்.

    டெய்லி ஃபேஸ் கிரீமை வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய பாயிண்ட்கள் என்ன?

    • சன் புரடக்ஷன்:

    உங்கள் ஸ்கின் டைப்பை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஸ்கின் டேர்மடாலாஜிஸ்ட்டும் குறைந்தபட்சம் SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனாகச் செயல்படும் மாய்ஸ்சரைசரைப் பரிந்துரைப்பார். ஏனெனில், சன்ஸ்கிரீன் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து ஸ்கின்னை பாதுகாக்க உதவுகிறது. இது சன்பர்ன் மற்றும் வயது முதிர்வை தடுக்கிறது. மாய்ஸ்சரைசர்கள் ஆயில் மற்றும் வாசனை இல்லாமல் இருக்க வேண்டும்.

    • ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

    கிரீன் டீ, கெமோமில், மாதுளை, வைட்டமின் C, E மற்றும் A போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட ஃபேஸ் கிரீம்கள் எந்த ஸ்கின்னையும் ஹெல்தியாகவும், கொழுக்கொழுவென்றும், பிரஷாகவும் காண உதவுகிறது. அவை சக்திவாய்ந்த வயது-எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன. வைட்டமின் C ஒரு பிரகாசமான ஆக்ஸிஜனேற்றியாக அறியப்படுகிறது. இது உங்கள் ஸ்கின்னை பிரகாசமாக்குவதுடன், ரேடிக்கல் டேமேஜிலிருந்து தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

    • ஆய்லி ஆக்னே-புரோன் ஸ்கின்

    உங்களுக்கு ஆய்லி அல்லது ஆக்னே-புரோன் ஸ்கின் இருந்தால், காமெடோஜெனிக் அல்லாத மற்றும் துளைகளை அடைக்காத ஃபேஸ் க்ரீமைத் தேர்வு செய்யவும். நறுமணப் பொருட்கள் ஸ்கின்னில் எரிச்சலை உண்டாக்கி முகப்பருவை உண்டாக்குவதால், ஹைபோஅலர்கெனிக் ஃபேஸ் க்ரீமைப் பயன்படுத்துவது நல்லது, அத்துடன் நறுமணமில்லாத ஃபேஸ் க்ரீமைத் தேர்வு செய்யுங்கள். சாலிசிலிக் அமிலம், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் கிளிசரின் ஆகியவை முகப்பருவை (ஆக்னே) எதிர்த்துப் போராடுவதற்கான மிக முக்கியமான பொருட்களாகும்.

    • டிரை ஸ்கின்

    ஹைலூரோனிக் அமிலம் மற்றும் டைமெதிகோன் போன்ற ஹெவி ஃபேஸ் கிரீமை கருத்தில்கொள்ளுங்கள். இது ஸ்கின்னை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. கிளிசரின் டிரை ஸ்கின்னிற்கு அவசியமான பொருட்களில் ஒன்றாகும். ஏனெனில், கிளிசரின் உங்கள் ஸ்கின்னில் நீரை தக்கவைக்க உதவுகிறது, அத்துடன் ஸ்கின்னின் மேற்பரப்பை நன்றாக ஈரப்பதமாக்குகிறது. வைட்டமின் C டிரை ஸ்கின்னை தடுக்கிறது.

    • சென்சிட்டிவ் ஸ்கின்

    ஹைபோஅலர்கெனி மற்றும் நறுமணம் இல்லாத ஃபேஸ் கிரீமைத் தேடுங்கள். சென்சிட்டிவ் ஸ்கின் காஸ்மெட்டிக் புராடக்ட்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிர்வினையாற்றலாம். சென்சிட்டிவ் ஸ்கின்னிற்கு ஃபேஸ் கிரீம் முக்கியமானது. ஏனெனில், இது எரிச்சலைக் குறைக்கிறது. அத்துடன் ஸ்கின்னின் அவுட்டர் லேயரை ரீஸ்டோர் செய்கிறது.

    • தோலழற்சி (எக்ஸிமா)

    தோலழற்சி என்பது மரபியல், சுற்றுச்சூழல் அழுத்தம் அல்லது தூண்டுதல்களால் ஏற்படுகிறது. பெட்ரோலாட்டம் கொண்ட தடிமனான ஃபேஸ் கிரீம் தடவலாம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம். பெட்ரோலியம் ஜெல்லி ஒரு சரியான மாய்ஸ்ச்சரைசிங் ஏஜென்ட்டாக செயல்படுவதுடன் சிவத்தல் மற்றும் அசௌகரியத்தை ஆற்றுகிறது.

    ஃபேஸ் கிரீமைத் தேர்வு செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்?

    ஃபேஸ் கிரீம் வாங்கும் போது மக்கள் செய்யும் சில தவறுகள், ஃபேஸ் கிரீமின் மூலப்பொருட்களை அறியாமல் இருப்பது. வாங்குவதற்கு முன் லேபிளைப் படிக்க வேண்டியது அவசியம்.

    • நறுமணம் மற்றும் இரசாயனங்கள் இருக்கும் ஃபேஸ் கிரீமை தவிர்க்கவும்.
    • ஆயில், வேக்ஸஸ் அல்லது ஷியா பட்டர் போன்ற உடலுக்கு உகந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இவை துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். உங்கள் உடலுக்கு ஏற்றது உங்கள் முகத்திற்கு நல்லதாக இருக்காது.

    • ஸ்டெராய்டு கிரீம்களையும் அதிகமாகப் பயன்படுத்துவதால் ஸ்கின் மெலிந்துவிடும். இதனால் ஸ்கின் அதிக சென்சிட்டிவிட்டியாக மாறும்.

    • நீங்கள் ஒரு தனி ஃபேஸ் கிரீம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஜிங்க் ஆக்சைடு அல்லது டைட்டானியம் ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீனை கருத்தில் கொள்ளுங்கள், ஏனெனில் அவை முகப்பருவைத் தவிர்க்கும்.

    ஃபேஸ் கிரீமை சரியான முறையில் தடவுவதற்கான டிப்ஸ்

    • உங்கள் உள்ளங்கையில் பட்டாணி அளவை விட சற்று உங்கள் உள்ளங்கையில் மாய்ஸ்சரைசரை நன்றாக தேய்க்கவும்

    • பின்னர் கன்னங்களில் சர்குலர் மோஷனில் தடவவும், அதைத் தொடர்ந்து, நெற்றியிலும் மற்ற முகப் பகுதிகளிலும் தடவவும்.

    • கழுத்தில் மேல்நோக்கி மென்மையாக தடவவும்.

    • அப்ளை செய்த பிறகு, ஸ்கின் கிரீமை உறிஞ்சுவதற்கு இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் அடுத்த படிக்கு செல்லலாம்.

    இதையும் படிக்கலாமே! - உட்புற தொடை உராய்வு காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

    முடிவுரை

    • பருவகால மாற்றங்கள் நம் ஸ்கின்னில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கேற்ப சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் உங்கள் ஸ்கின்னை ஹைட்ரேட் செய்ய வேண்டும் மற்றும் கோடையில் ஆயில் இல்லாத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

    • முதலில் ஒருவர் கவனிக்கும் விஷயம் உங்கள் முகம் தான். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் ஸ்கின் கேர் ருட்டினானது உங்களை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கும். அதே வேளையில் உங்களை ஹெல்தியாகவும், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.

    • பழமொழியில் கூறுவது போல, "வரும்முன் காப்பதே சிறந்தது". உங்கள் ஸ்கின் சார்ந்த பிரச்சனைகளை எவ்வளவு சீக்கிரம் தடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. ஸ்கின்னை நல்ல முறையில் பராமரிப்பதுடன் ருட்டினை பின்பற்றுங்கள், அது தானாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.