This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் ஆலோசனைகள்

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் ஆலோசனைகள்
Likes25 Likes|
Read time6 min

ஒரு பெண் கர்ப்பவதியாய் இருக்கும் போது, மருத்துவர்கள் அவளின் உணவுமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அது கலோரிகளை எடுத்துக் கொள்வதாகட்டும், உணவு வகைகளாகட்டும், ஒவ்வொரு நாளும் உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் எண்ணிக்கைகளாகட்டும், இவை எல்லாவற்றிலுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த வழக்கத்தை ஒருவர் கர்ப்ப காலம் முழுவதும் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், வயிற்றிலுள்ள முதிர்கருவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் வேண்டி கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். கொய்யா பழங்கள் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ருசியான பழங்களில் ஒன்றாக இருப்பதால், பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

வருடம் முழுவதும் எப்போதுமே கொய்யா கிடைக்கப்பெறுகிறது என்றாலும் கூட, வசந்தகாலத்திலும், கோடை காலத்திலும் கிடைக்கப்பெறும் பருவகால பழமாக இது கருதப்படுகிறது. அதனால் தான் கர்ப்ப காலத்தில் கொய்யா பழங்கள் உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகும். இந்த பருவகால பழத்தின் நன்மைகள் குறித்தும், பக்க விளைவுகள் (ஏதேனும் இருப்பின்) குறித்தும், மற்றும் உணவுமுறையில் அதனை சேர்த்துக் கொள்வதற்கான ஆலோசனைகளும் கீழ்க்கண்ட கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.

கர்ப்ப காலத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

  • இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது

கர்ப்ப காலத்தில் கொய்யா உண்பதால், அதில் உள்ள ஏகப்பட்ட வைட்டமின்களும், மினரல்களும் கிடைப்பதற்கு ஏதுவாக உள்ளது. இது கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளுள் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி2 மற்றும் ஈ உள்ளன. அது மட்டுமின்றி, இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட மினரல்களும் கூட எக்கச்சக்கமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் எல்லாமே தாய் மற்றும் முதிர்கருவின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. இதன் விளைவாக, நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகள் போன்ற பாதிப்புகளை எதிர்த்து போராடுவதற்கு வழிவகை செய்கின்றன.

  • இது ஃபோலிக் அமிலம் நிறைந்தது

வைட்டமின் பி9, அல்லது ஃபோலேட், ஃபோலிக் அமிலத்தில் உள்ளது. முதிர்கருவில் நரம்பு மைய அமைப்பைச் சார்ந்த குழாயை உருவாக்குவதற்கு இது உதவுவதால், இதனை கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உண்பது மிகவும் அவசியமாகும். கூடுதலாக, ஃபோலிக் அமிலம் அனென்செஃபாலி மற்றும் ஸ்பைனா பிஃபிடா உள்ளிட்ட கடுமையான பிறவியிலேயே ஏற்படக் கூடிய நரம்பு சார்ந்த வியாதிகளை தடுப்பதற்கு உதவுவதால், கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவது நல்லது. பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்ப கால உணவுகளில் இந்த பருவகால பழத்தினை சேர்த்துக் கொள்வதற்கு அறிவுறுத்துகிறார்கள்.

  • இது செரிமான பிரச்சினைகளை மட்டுப்படுத்துகிறது

உடலில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாகவே செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை அழற்சி மற்றும் உப்பிசம் போன்றவை. அதனால் தான் பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இருப்பதால், மலம் கழிப்பதில் எந்தவொரு சிக்கலும் நேராது. மேற்கொண்டு இது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை மட்டுப்படுத்த உதவும். மேலும் இது குடலிலுள்ள நுண்ணுயிரிகளை மீட்டெடுத்து, கர்ப்பிணிப் பெண்கள் செரிமான பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளினால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

  • இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறுவதால் ஒழுங்கற்ற இரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்பானது தான். மேலும், பிரசவத்திற்கு முந்தைய மன அழுத்தமும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவது நல்லது தானா என்ற கேள்விக்கு, பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை எளிதாக கட்டுப்படுத்த உதவும் என்று பதிலளிக்கலாம். கூடுதலாக, இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்ஸ் (ஆக்சிஜனேற்றத்தடுப்பான்கள்) ஆக்சிஜனேற்ற சேதத்தை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவியாய் இருக்கிறது.

  • இது கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுக்கிறது

கொய்யா பழம் ஆனது தாய்க்கும், முதிர்கருவிற்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது. இது கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதின் குறிப்பிடத்தக்க நன்மைகளுள் ஒன்றாகும். உடலானது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்திலோ, அல்லது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத பட்சத்திலோ கர்ப்பகால சர்க்கரை நோய் உண்டாகிறது. இதன் விளைவாக, பிறக்கும் போதே குழந்தைக்கும் சர்க்கரை நோய் ஏற்பட்டு, அது எதிர்காலத்தில் மேற்கொண்டு பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாகி விடும்.

  • இது ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது

கொய்யாவில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளதால், கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவது நல்லது. உடலில் ஆக்சிஜனேற்ற சேதத்தை குறைப்பதற்கும், முதிர்கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகிற முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட்-களுள் வைட்டமின் ஈ, அல்லது டோக்கோஃபெரால் ஒன்றாக இருக்கிறது.

சாத்தியமான கருவுறுதிறன் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் கொய்யா உண்பதால் அநேக கருவுறுதிறன் நன்மைகள் உள்ளன. இந்த பழத்தினால் பெண்களுக்கு எப்படி கருவுறுதிறன் மேம்படுகிறது என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.

  1. ஃபோலிக் அமிலத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கர்ப்பமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

  2. மேலும், கொய்யாவில் உள்ள வைட்டமின் சி, பெண்களுக்கு கருவுறுதிறனை அதிகரித்து, கருவுறுவதற்கு உதவுகிறது.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் வால்நட் (அக்ரூட் பருப்பு) சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள்

கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  • கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்றாலும் கூட, இதனால் ஏற்படக் கூடிய குறிப்பிட்ட எதிர்மறையான விளைவுகள் குறித்து ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • கொய்யாவில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால், அதிகப்படியாக இந்த பழத்தை உண்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்து போய், கர்ப்ப காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

  • கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடலாமா என்று பொதுவாகவே எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கான பதில் சாப்பிடலாம் என்பது தான், ஆனால் பழத்தை நன்கு கழுவி, தோல் சீவிய பின்னரே சாப்பிட வேண்டும். இது பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் பாதிப்பினை தடுக்க உதவும்.

கொய்யா சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • கர்ப்ப காலத்தில் கொய்யாவினால் உண்டாகும் நன்மைகளை பெறுவதற்கு, ஆர்கானிக் பழங்களையே உண்பது தான் மேலானது, ஏனெனில் அவற்றில் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை உண்டாக்கக் கூடிய இரசாயனங்கள் இருப்பதில்லை.

  • மேலும், வயிற்றுப்போக்கும், வயிற்று வலியும் உண்டாகும் வாய்ப்புள்ளதால் மிதமிஞ்சிய அளவில் கொய்யாவை சாப்பிடக் கூடாது.

  • குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதற்கான ஆலோசனைகள்

  • சிவப்பு சதையுள்ள பழங்களை விடவும், வெள்ளை சதையுள்ள கொய்யா பழங்களை உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பலனளிப்பதாக இருக்கும்.

  • நார்ச்சத்து உள்ளதாலும், நல்ல முறையில் செரிமானம் ஆவதற்கும், தொல்லையின்றி மலம் கழிப்பதற்கும் உதவுவதால் பழத்தை கொட்டைகளுடன் உண்பதே சிறந்தது.

  • கர்ப்ப காலத்தில் கொய்யாவை உண்பதற்கான சரியான நேரம் என்பது, ஒன்று காலை உணவின் போது உண்பது அல்லது மதிய உணவின் பின் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு உண்பது சரியாக இருக்கும்.

  • கொய்யாவை வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பெர்ரி, மாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் தர்பூசணி பழம் போன்ற பிற பழங்களோடு சேர்த்து உண்பது உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுவதற்கு உதவியாய் இருக்கும்.

  • பழுக்காத கொய்யாவை விடவும், பழுத்த பழங்களை சாப்பிடுவது அதிக பலனை அளிக்கும்.

முடிவுரை

கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இதன் மூலம் அறிந்த பின்னர், இந்த சுவையான, சாறு நிறைந்த, மென்மையான பழத்தை உங்கள் அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்வதற்கு இனி எந்த பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும், உங்கள் அன்றாட உணவுமுறையில் கொய்யா பழத்தை சேர்த்துக் கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மேலானது.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.