hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

In this Article

    10 ஆவது வார கர்ப்ப அறிகுறிகள்

    Pregnancy Journey

    10 ஆவது வார கர்ப்ப அறிகுறிகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    • கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களை ஒரு அத்தியாயமாக பிரிக்கும் வேறுபாடு குறித்து நமக்கு தெரியும். ‘10 வார கர்ப்பம் என்றால் எத்தனை மாதங்களை கொண்டது’ என்று நீங்கள் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்றால், முதலாவது அத்தியாயத்தின் இறுதிக் காலம் தான் 10 வார கர்ப்பம் ஆகும். அதாவது, 3 மாத கர்ப்பம். இரண்டாவது அத்தியாய காலத்தில் பெண்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும், மற்றும் ஆரம்பகட்ட கர்ப்பகால அறிகுறிகள் அனைத்தும் மறையத் தொடங்கும்.

    • 10 வார கர்ப்ப காலத்தில், கருவுக்கு மற்றுமொரு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்படும். முகம் அடையாளம் காணுகின்ற அளவுக்கு வளர்ந்திருந்தாலும் தற்போது வரை தலை தான் மிகப் பெரியதாக இருக்கிறது. கண்கள் லேசாக மூடியிருந்தாலும் கூட தற்போதைய நிலையில் வெளிச்சத்தை உணரும் வகையில் அமைந்திருக்கிறது. வாயில் மெல்லிய மேல் உதடு தோன்றுகிறது, மூக்கில் இரண்டு சிறிய துளைகள் தோன்றுகின்றன, மற்றும் காதுகள் வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன.

    • தாடை எலும்புகளும் வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன மற்றும் குழந்தைகளுக்கான பால் பற்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 180 என்ற அளவில் இருக்கிறது அல்லது சராசரியாக பெரியவர்களின் இதயத்துடிப்பை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. கருவின் தற்போதைய அளவு என்பது தலை முதல் பாதம் வரையில் 30 மில்லிமீட்டர் அளவு கொண்டதாக இருக்கிறது அல்லது ஒரு சின்ன ஆப்ரிகாட் பழத்தின் அளவு என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ஸ்கேன்களில் பார்க்கும்போது குழந்தை மெதுவாக நகருவதை பார்க்கலாம்.

    10 வார கர்ப்பத்தின் அறிகுறிகள்

    10 வார கர்ப்பம் கொண்ட பெண் ஒருவருக்கு உணரத்தகுந்த முக்கியமான அறிகுறிகளில் ஒன்று, கீழ்வயிறு கொஞ்சம் வட்டமாக மாறியிருப்பது. இந்த சமயத்தில் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் மற்றும் அவ்வபோது நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தற்போது கர்ப்பப்பை விரிவடைந்து கொண்டே போகிறது. 10 வார கர்ப்பத்தில் உள்ள ஒருவர் தனது வயிறு விரிவடைவதை உணர முடியவில்லை என்றாலும், வெகு விரைவில் அது நடக்கும். மார்பகங்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள சருமங்களில் ப்ளூ நிற கோடுகள் தென்படுவதை அவர்கள் உணரலாம்.

    ஹார்மோன்களின் செயல்பாடுகள் காரணமாக, கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு உப்புசம், வாய்வு அல்லது ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த தருணத்தில், பெண்மைக்கான ஹார்மோன் ப்ரோஜெஸ்டிரோன் அதன் வேலையை செய்து கொண்டிருக்கும். அதன்படி, வளரும் குழந்தைக்கு ஏற்ப விரிவடையும் வகையில் கர்ப்பப்பை தசைகளை அது இலகுவாக மாற்றிக் கொண்டிருக்கும். இந்த நடவடிக்கையின்போது செரிமானக் கட்டமைப்பில் உள்ள தசைகளும் விரிவடையும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    மலச்சிக்கல்

    கர்ப்பத்தின் முதல் அத்தியாய காலத்தில் மலச்சிக்கல் என்பது பொதுவான அறிகுறி ஆகும். இதை சமாளிப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முதலாவதாக ரிஃபைன் செய்யப்பட்ட வெள்ளை பிரட், தானியங்கள் மற்றும் பாஸ்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமானக் கட்டமைப்பில் அடைப்பை ஏற்படுத்தும். அடுத்ததாக, நார்ச்சத்து உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். ஃப்ரெஷ் பழங்கள், குறிப்பாக, மலச்சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவக் கூடிய கிவி பழம் மற்றும் முழு தானியங்கள், நார்ச்சத்து மிகுந்த பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

    பெண்ணுறுப்பு கசிவு அதிகரிப்பு

    லுகோரியா என்பது நிறமற்ற, மணமற்ற கசிவு ஆகும். உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அதிகமாகுவதாலும், பெண்ணுறுப்பு நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும் இவ்வாறு கசிவு ஏற்படக் கூடும். இது பெண்களுக்கு கொஞ்சம் அசௌகரியமானதாக இருந்தாலும், இது இயல்பாக நுண்ணுயிரிகளை வெளியேற்றக் கூடியதாகும். ஆனால், இந்த கசிவு என்பது கலர் கொண்டதாக, லேசாக ரத்தம் கலந்ததாக, கெட்ட வாடை வீசக் கூடியதாக இருந்தால் அல்லது அசௌகரியமாக தோன்றினால், அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

    வயிற்று வலி

    கர்ப்பப்பையை சுற்றிய வட்ட வடிவ தசைநார்கள் விரிவடைவதன் காரணமாக வயிற்று வலி ஏற்படும். இந்த வலி லேசாக தோன்றி, பிறகு தீவிரமடையலாம் அல்லது ஒன்றுமில்லாமல் போகலாம். 10 வார கர்ப்பத்தின்போது மார்பகங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கும் மற்றும் வயிற்றுப்பகுதியில் தசைநார்கள், தசைகள் ஆகியவையும் கூட விரிவடைந்து கொண்டிருக்கும். மேலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும். பெண்கள் மேலே எழும்போது கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் நகரும்போது முடிந்தவரை மெதுவாக நகர வேண்டும். அடிக்கடி வலி ஏற்படுவதை இது குறைக்கும்.

    வட்ட தசைநார் வலி

    வளரும் குழந்தைக்கு இடவசதி அளிப்பதற்கு ஏற்ப வயிறு விரிவடைந்து கொண்டிருப்பதால் சில பிடிப்பு மற்றும் வலி ஏற்படுவது இயல்பான விஷயம் தான். சில பெண்கள் இதை முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது சிலருக்கு வட்ட தசைநார் வலி கூட ஏற்படலாம். அது மிகுந்த வலி கொண்டதாக இருக்கும். குறிப்பாக, பெண்ணின் கர்ப்பப்பையில் இரட்டை குழந்தைகள் உள்ளது என்றால், 10 வார கர்ப்பத்தின் போது மிகுந்த வலி உண்டாகும்.

    வளரும் மார்பகங்கள்

    10வது கர்ப்பத்தின்போது பெண்களின் மார்பகங்கள் பெரியதாக மாறும் மற்றும் பல வாரங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு தயாராகுவதன் காரணமாக கொஞ்சம் வலி மிகுந்ததாக இருக்கும்.

    இதையும் படிக்கலாமே! - மார்பக சுய பரிசோதனை

    காலைநேர சோர்வு

    பெண் 10 வார கர்ப்பிணியாக இருக்கும்போது, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுவது இயல்பானது தான். ஆனால், எப்போதுமே இது காலை நேரத்தில் மட்டும் நிகழாது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டாவது அத்தியாயம் தொடங்கும்போது இவை நின்றுவிடும்.

    தெரியக்கூடிய நரம்புகள்

    உடலில் நீள நிறத்தில் நரம்புகள் தென்பட தொடங்கும். வளரும் குழந்தைக்கு உதவிடும் வகையில் உங்கள் உடல் ரத்த உற்பத்தியை அதிகரித்துள்ளது என்பதற்கான அறிகுறி இதுவாகும். நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஸ்பைடர் நரம்புகள் கூட வெளிப்புறமாக தெரியும்.

    முடிவுரை

    10 வார கர்ப்பம் என்றால் அது மூன்று மாதங்கள் ஆகும். 10வது வாரத்தில், குழந்தையானது கரு என்ற நிலையில் இருந்து சிசு என்ற நிலைக்கு மாறுகிறது. இந்த இரண்டு நிலைகளும் அதன் வளர்ச்சியின் வேறுபாடுகளை உணர்த்துகின்றன. முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் மற்றும் கை, கால்கள் ஆகியவை இந்த சிசு நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த உறுப்புகள் தொடர்ந்து வளர்ச்சி அடையும். 10வது வாரத்தில் குழந்தையின் தோள்பட்டை மூட்டுகள் செயல்படத் தொடங்கும் மற்றும் நரம்புகள், எலும்புகள் ஆகியவை வளர்ச்சி அடையும். தற்போது கர்ப்ப காலத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் நீங்கள் நுழைய உள்ளீர்கள்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.