
அமேனோரியா என்பது மாதவிடாய் இன்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்களுக்கு தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதவிடாய்கள் தவறும் பொழுது நிகழ்கிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாயாகவும் இருக்கலாம். முதன்மை நிலை அமேனோரியா மற்றும் இரண்டாம் நிலை அமேனோரியா ஆகியவை பொதுவாக பெண்களில் காணப்படும் இருவகை அமேனோரியா ஆகும்.
ஒரு பெண் குழந்தை பருவமடையும் வயதிலிருந்து தனது 15 வயதை எட்டும் வரை மாதவிடாய் வராமல் இருக்கும் போது முதன்மை அமேனோரியா ஏற்படுகிறது. இதன் பொருள் அப்பெண் குழந்தைக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வரவில்லை என்பதாகும். அதாவது அவர் இன்னும் பூப்பெய்தவில்லை என்பதை இது குறிக்கிறது.
இரண்டாம் நிலை அமேனோரியா என்பது தொடர்ந்து மாதவிடாய் ஏற்படும் ஒருவருக்கு திடீரென்று மாதவிடாய் சுழற்சி நின்று போவது ஆகும். உங்களுக்கு தொடர்ந்து மாதவிடாய் இருந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக உங்கள் மாதவிடாய் நின்றிருந்தால், நீங்கள் அமேனோரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த வகை உடல்நலப் பிரச்சனை பொதுவாக பிரக்னன்ஸியின் போது எழுகிறது. ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அமேனோரியாவை பெரும் அளவிற்கு ஏற்படுத்துகின்றன. இந்தக் கட்டுரை பெண்களுக்கு ஏற்படும் இந்த நிலைமையின் அறிகுறிகள் மற்றும் காரணங்களைப் பற்றி விவாதிக்கிறது.
மாதவிடாய் இன்மையோடு, அமேனோரியாவுக்கான காரணத்தைப் பொறுத்து, உங்களுக்கு பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம். அவற்றில் சில பின்வருமாறு:
முலைக்காம்பில் இருந்து பால் போன்று கசிவு இருத்தல் அல்லது கேலக்டோரியா ஆனது ஒரு பெண்ணுக்கு அமேனோரியா இருப்பதற்கான அறிகுறியாகும். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் கேலக்டோரியா அல்லது முலைக்காம்பில் இருந்து கசிவு ஏற்படுவதற்கு வழிவகுத்து விடும்.
அதிகப்படியான முடி உதிர்தல் அமேனோரியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
அமேனோரியா உருவாகும் போது தொடர்ச்சியான தலைவலி பொதுவானது. இந்த கண்டிஷன் உங்கள் இனப்பெருக்க அமைப்பை மட்டுமல்ல, உங்கள் முழு உடலையும் பாதிக்கும்.
அமேனோரியாவை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் பார்வை சார்ந்த மாற்றங்கள் இருப்பது மிகவும் பொதுவானதாகும்.
உங்களுக்கு அமேனோரியா இருப்பதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் அதிகப்படியான முக முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இடுப்பு வலி மற்றும் எரிச்சல் ஆகியவை உங்கள் உடலில் அமேனோரியா ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் சருமத்தை பாதித்து முகப்பரு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படும்போது அமேனோரியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் மிகக்குறுகிய காலத்திலேயே மாதவிடாய் நின்று போவது அல்லது அமேனோரியா இருந்ததற்கான வரலாறு உங்களிடம் இருந்தால், உங்களுக்கு அமேனோரியா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்கள் மரபணுக்கள் உங்கள் மாதவிடாய் ஓட்டத்தை பாதிக்கின்றன மற்றும் தீர்மானிக்கின்றன. சில நேரங்களில், மரபணு மாற்றங்கள் அல்லது மரபணு தூண்டுதல்கள் அமேனோரியாவின் தொடக்கத்திற்கு வழிவகுக்கின்றன. உங்களுக்கு உடல் பருமன் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ, அமேனோரியா ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல், உங்களுக்கு உணவுக் கோளாறு இருக்கிறது என்றாலோ முறையற்ற உணவு பழக்கங்கள் உள்ளவர் என்றாலோ, உங்களுக்கு அமேனோரியா உருவாகலாம். மோசமான உணவு மற்றும் மன அழுத்தம் மற்றும் எந்தவொரு நாட்பட்ட நோய்களும் உங்களுக்கு அமேனோரியா அபாயத்தை ஏற்படுத்தும்.
சில நேரங்களில், முதன்மை கருப்பை போதுமான வளர்ச்சியை பெற்றிருக்காத போது 40 வயதிற்கு முன்னரே மாதவிடாய் நின்றுவிடும், இது அமேனோரியாவுக்கு வழிவகுக்கிறது. புரோலாக்டின் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை பாதிக்கும் பிட்யூட்டரி கோளாறுகளும் அமேனோரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், அட்ரீனல் கோளாறுகள் அல்லது ஹைப்போ தைராய்டிசம் போன்ற ஹார்மோன் பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்கலாம். சில நேரங்களில், கருப்பை கட்டிகளின் வளர்ச்சியும் அமேனோரியாவுக்கு வழிவகுக்கிறது. கருப்பைகள் அல்லது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் இரண்டாம் நிலை அமேனோரியாவுக்கு வழிவகுக்கும்.
சுருக்கமாக, அமேனோரியாவுக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு
குரோமோசோமால் அல்லது மரபணு சிக்கல்
ஹைபோதாலமஸ் அல்லது பிட்யூட்டரி சுரப்பியால் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள்
இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் கட்டமைப்பு சிக்கல்
பிரக்னன்ஸி
தாய்ப்பாலூட்டுதல்
மாதவிடாய் நிற்கும் காலம்
சில கருத்தடை முறைகள்
புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை
அடுத்தடுத்த வடுவுடன் முந்தைய கருப்பை அறுவை சிகிச்சை
மனஅழுத்தம்
மோசமான ஊட்டச்சத்து
எடை மாற்றங்கள்
அதிக உடல் எடை
நாள்பட்ட நோய்
அமேனோரியா ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன, ஆனால் இதற்கான காரணம் தான் முதன்மையாக இந்த கண்டிஷனுக்கு சிகிச்சையளிப்பதை தீர்மானிக்கிறது. எனவே, சரியான சிகிச்சையை விரைவில் தொடங்க அமேனோரியாவைக் கண்டறிவது அவசியம் ஆகும் அமெனோரியாவைக் கண்டறிவதற்கான சில பயனுள்ள குறிப்புகள் பின்வருமாறு:
அமேனோரியா தொடர்பான மருத்துவ அறிகுறிகளையும் கடந்தகால குடும்ப வரலாற்றையும் அறிந்து கொள்வது முக்கியம், இது பெரும்பாலும் பாலியல் உறவுகள், இனப்பெருக்க ஆரோக்கியம், முன்னர் ஏற்பட்ட மாதவிடாய் மற்றும் நோயாளியின் வேறு ஏதேனும் குறிப்பிட்ட உடல் பிரச்சனைகள் தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கியது.
அமேனோரியாவை பிரக்னன்ஸி பரிசோதனை, தைராய்டு செயல்பாடு சோதனை, கருப்பை செயல்பாடு சோதனை, புரோலாக்டின் சோதனை மற்றும் ஆண் ஹார்மோன் சோதனை போன்ற பல்வேறு இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும், ஏனெனில் இது எந்தவொரு கோளாறுடன் தொடர்புடைய எந்த ஹார்மோன் அசாதாரணங்களையும் தெளிவுபடுத்த உதவுகிறது.
ஈஸ்ட்ரோஜன் குறைபாடு அமேனோரியா ஏற்படுவதற்கான ஆணிவேராகக் கருதப்பட்டால் ஹார்மோன் சேலன்ஞ் சோதனை பரிந்துரைக்கப்படலாம்.
அல்ட்ராசவுண்ட் இமேஜிங் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஆகியவை அமேனோரியாவை கண்டறியும் பிற சோதனைகளில் அடங்கும். பிற கண்டறியும் சோதனை நுட்பங்கள் இதை கண்டுபிடிக்கத் தவறினால், உங்கள் மருத்துவர் ஒரு ஹிஸ்டரோஸ்கோபியை பரிந்துரைக்கலாம். இந்த செயல்முறையின் போது, உங்கள் கருப்பையின் உட்புறத்தைக் காண உங்கள் வஜைனா மற்றும் கருப்பை வாயில் ஒரு குறுகிய, ஒளிரும் கேமரா செருகப்படுகிறது.
இதையும் படிக்கலாமே! - ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் போது, பிரவச தேதியை எப்படி கணக்கிடுவது எப்படி?
அமேனோரியா ஏற்பட பல காரணிகள் பங்களிக்கக்கூடும். அமேனோரியா ஏற்பட்டால் ஒரு பெண் மலட்டுத்தன்மையுடையவர் என்றும் ஒருபோதும் கருத்தரிக்க முடியாது என்றும் சொல்ல முடியாது. அமேனோரியாவுக்கு சிகிச்சையளித்தால் அதிலிருந்து எளிதில் குணமடைய முடியும்.
உங்கள் தொடர்ச்சியான மாதவிடாய் குறைந்தது 6 மாதங்கள் ஏற்படாமல் இருந்தால் அல்லது உங்கள் தொடர்ச்சியான மாதவிடாய் குறைந்தது 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஏற்படாமல் இருந்தால் நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
Amenorrhea In Tamil, Amenorrhea meaning in Tamil, reasons for Amenorrhea in tamil, Amenorrhea: Meaning, Symptoms, & Causes In English, Amenorrhea: Meaning, Symptoms, & Causes In Hindi, Amenorrhea: Meaning, Symptoms, & Causes In Telugu, Amenorrhea: Meaning, Symptoms, & Causes In Bengali
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |