This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பாதுகாப்பான சுகப் பிரசவத்திற்கான சில டிப்ஸ்

Labour & Delivery
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
பாதுகாப்பான சுகப் பிரசவத்திற்கான சில டிப்ஸ்
Likes99 Likes|
Read time12 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • சுகப் பிரசவம் அல்லது நார்மல் டெலிவரி என்பது பிறப்புறுப்பு வழியாக குழந்தை பிறப்பதாகும். இது தாய்க்கு விரைவில் குணமடைய உதவுவதோடு, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
  • எளிதான சுகப் பிரசவத்திற்கு சரியான மருத்துவரைத் தேர்வு செய்வது, சொந்தமாக ஆராய்ச்சி செய்வது, மருத்துவரிடம் கேள்விகள் கேட்பது மற்றும் மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
  • சமச்சீர் ஊட்டச்சத்துள்ள உணவு, நடைபயிற்சி, பிரீநேடல் யோகா, கெகல் பயிற்சிகள், பெரினியல் மசாஜ் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை சுகப் பிரசவத்திற்கு உங்கள் உடலைத் தயார்படுத்த உதவும்.
  • சுகப் பிரசவத்திற்கு தயாராக என்ன உதவும்? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3

எளிதான நார்மல் டெலிவரிக்கான டிப்ஸ், சுகப் பிரசவத்திற்கான டிப்ஸ், வலியற்ற சுகப் பிரசவம் டிப்ஸ், சிசேரியனுக்குப் பின் நார்மல் டெலிவரிக்கான டிப்ஸ், நார்மல் டெலிவரிக்கான கர்ப்ப காலக் குறிப்புகள், சிசேரியன் டெலிவரியைத் தவிர்க்க, சுகப் பிரசவம் டிப்ஸ், தமிழில் நார்மல் டெலிவரிக்கான டிப்ஸ்

நீங்கள் இந்தியாவில் கர்ப்பமாக இருந்தால், சுகப் பிரசவம், அதாவது நார்மல் டெலிவரி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆரம்ப நாட்களிலிருந்தே நீங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சுபச் செய்தியை மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதில் இருந்து, சுலபமான நார்மல் டெலிவரி குறித்து பலர் உங்களுக்கு பல குறிப்புகளை வழங்கி இருப்பார்கள்! ஆனால், நிச்சயமாக, சுகப் பிரசவம் ஏற்படும் பட்சத்தில் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் உண்டு, அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இருப்பினும், சுகப்பிரசவம் என்றாலே "வலி" என்பது நாம் அறிந்த ஒன்றே. பிரசவம் என்பது மறுஜென்மம் என்று கூடக் கருதப்பட்டது. முன்பெல்லாம் ஒரு தாய் தன் குழந்தைக்குச் சொல்லும் பழைய கால வசனத்தில் ஒன்று - "உன்னை எத்தனையோ வலிகளை அனுபவித்து இந்த உலகத்திற்கு கொண்டு வந்தேன், உனக்கு எப்படி தெரியும்? ஒரு பெண்ணால் மட்டுமே வலியைப் புரிந்து கொள்ள முடியும்." இப்பொழுது அதை நினைத்தால் வேடிக்கையாக தெரிகிறது, இல்லையா?

இருப்பினும், அந்த வலி ​​உண்மையாக ஒரு பெண்ணால் மட்டுமே உணரக் கூடியது, அது நிஜமாகவே ஒரு போராட்டம் தான். எனவே, இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு சுகப் பிரசவம் பற்றிய சில குறிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர முற்பட்டுள்ளோம். நார்மல் டெலிவரி அதாவது சுகப்பிரசவம் என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். அதன் பின்பு நார்மல் டெலிவரியினால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி விளக்கியுள்ளோம்! வாங்க, ஆரம்பிக்கலாமா!

நார்மல் டெலிவரி அதாவது சுகப் பிரசவம் என்றால் என்ன

பிறப்புறுப்பு வழியாக குழந்தை பிறப்பது தான் நார்மல் டெலிவரி அல்லது சுகப்பிரசவம் (என்விடி) எனப்படுகிறது. பல சூழ்நிலைகளில், குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அம்மாக்கள், இந்த பிரசவ முறையை தேர்வு செய்வது வழக்கம். ஏனெனில், இது அறுவை சிகிச்சை முறைகள் அல்லது சி-பிரிவு மூலம் ஏற்படக்கூடிய சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சில தாய்மார்கள் குறைந்த அல்லது வலி ஏதும் இல்லாமல் மருந்து மாத்திரைகள் கொண்டு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். இது போன்ற மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்து பெண்களுக்கும் தேவைப்படாது. இது ஒரு தனிப்பட்டத் தேர்வாகும்.

குழந்தையைப் பெற்றெடுக்கும் போது பிரசவ வலி ஏற்படுவது பொதுவான ஒன்று தான். ஆனால், வலியில்லா சுகப் பிரசவத்திற்கான உதவிக்குறிப்புகள் உங்களை சுகப் பிரசவத்திற்குத் தயார்படுத்தி முடிந்தவரை பிரசவம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய உதவும்.

சுகப்பிரசவத்தின் நன்மைகள்

சுகப்பிரசவம் தான் பொதுவாக பிரசவத்திற்கு மிகவும் "இயற்கையான" ஒரு அணுகுமுறையாகப் பாராட்டப்படுகிறது; இந்த முறையில் ஏதேனும் மருத்துவ நன்மைகள் உள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். சுகப்பிரசவம் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் மற்றும் பிறந்த குழந்தை என இருவருக்கும் பல நன்மைகள் ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. சிக்கலற்ற சுகப்பிரசவமானது பின்வரும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் சிலவற்றைப் பற்றி இப்பொழுது அறிந்துகொள்வோம்:

விரைவில் குணமடைய உதவுகிறது

சிசேரியன் அல்லது ஃபோர்செப்ஸ் மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பதை ஒப்பிடுகையில், சுகப்பிரசவத்தில் தாயின் உடல் விரைவில் குணமடையும். கூடுதலாக, பல தாய்மார்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு காரணமாக பிரசவத்திற்குப் பிறகும் கூட சோர்வாக இருப்பார்கள். இதனால் அவர்கள் குழந்தையை நெஞ்சில் சாய்த்து அணைத்து வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக தாய்ப்பால் கொடுப்பது போன்ற பிரசவத்திற்குப் பிறகான செயல்களில் ஈடுபடுவது கடினமாகிவிடும்.

பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை

முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாக இருந்தாலும், சி-பிரிவு கூட ஒரு அறுவை சிகிச்சை தான். இது குழந்தை பிறந்த பிறகும் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்குவது, தொற்று நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து, அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வடுக்கள், மயக்க மருந்து விளைவுகள் மற்றும் அதிக அசௌகரியம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். கூடுதலாக, ஒரு முறை சி-பிரிவு மேற்கொண்டால் அடுத்தடுத்த கர்ப்பங்களும் அவ்வாறே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், இதற்கு உத்தரவாதமும் இல்லை. ஒரு முறை சிசேரியன் மேற்கொண்டதற்குப் பின் சுகப்பிரசவத்திற்கு சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், முந்தைய சி-பிரிவுக்குப் பின்னும் சுகப் பிரசவம் சாத்தியமாகும்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சுகப்பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் குடலில் காணப்படும்பாக்டீரியா மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது புதிதாகப் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. இந்த கட்டத்தில், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டிருப்பது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைக்கிறது. எனவே, உங்களுக்குத் தேவையானது எல்லாம் நார்மல் டெலிவரிக்கான சில குறிப்புகள் மட்டுமே. இதன் மூலம் நீங்கள் சுகப்பிரசவத்திற்குத் தயாராக இருக்க முடியும்.

எளிதான சுகப்பிரசவத்திற்கான டிப்ஸ்

உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் சிசேரியன் அல்லாமல் நார்மல் டெலிவரி மூலம் குழந்தை பெறுவதற்கான ஏகப்பட்ட டிப்ஸை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். மற்ற தாய்மார்கள் தங்கள் அனுபவத்தில் இருந்து மில்லியனுக்கும் அதிகமான குறிப்புகளைக் கூட உங்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த ஒரு மில்லியன் ஆலோசனைகளின் தொகுப்பிலிருந்து ஆக்கபூர்வமான நார்மல் டெலிவரி டிப்ஸ் எது என்பதை எவ்வாறு சரியாக வேறுபடுத்துவது? குழப்பம் வேண்டாம். நார்மல் டெலிவரிக்கான சில முக்கியமான மற்றும் அத்தியாவசியமான குறிப்புகளை உங்களுக்காக வழங்க நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக உள்ளோம்.

சொந்தமாக ஆராய்ச்சி செய்யுங்கள்

அறிவே சக்தி என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, கர்ப்ப காலம் என்பது பலதரப்பட்ட உணர்வுகள் நிறைந்த ஒரு பயணம் என்பதை உணர்ந்து பிரசவ வலி, பிரசவம் போன்ற ஒவ்வொரு நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளையும் சமாளிக்கத் தயாராக இருப்பதற்கான ஒரே வழியான, முழு செயல்முறையையும் பற்றி நன்கு அறிந்திருப்பதை நோக்கி செயல்படுவது மட்டும் தான். இதை செய்வதற்கான சிறந்த வழி, நீங்களே இதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து எளிதான, சுகப்பிரசவத்திற்கான சில உதவிக்குறிப்புகளை சேகரிப்பதாகும்.

உங்கள் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பின்னர் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் உதவும் பல புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வழிகாட்டிகள் உள்ளன. கூடுதலாக, உங்களால் முடிந்தால் உங்கள் தாய், நெருங்கிய தோழி அல்லது உடன்பிறந்த சகோதரியிடம் உங்கள் கர்ப்பத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிலர் சுகப்பிரசவத்தைப் பற்றியும் கூட எதிர்மறையான விஷயங்களை உங்களிடம் கூறலாம். முதலில் நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கர்ப்ப காலமானது தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்வது இந்த சூழ்நிலையில் இன்றியமையாததாகும். வேறொருவரின் கர்ப்ப காலம் இனிமையானதாக இல்லாததால், நீங்களும் அதையே உணருவீர்கள் மற்றும் எதிர்கொள்வீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்வு செய்யுங்கள்

துரதிர்ஷ்டவசமாக, இன்றைய கால கட்டத்தில், உங்களுக்கு எந்த வகையான பிரசவம் நடக்கும் என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்கிறார். அதிர்ச்சியாக இருக்கிறதா? பல மருத்துவர்களுக்கு சுகப்பிரசவங்களில் வெற்றி விகிதம் மிகக் குறைவானதே. அதனால், அவர்கள் அதிகப்படியாக சி-பிரிவு பிரசவங்களைத் தேர்வு செய்வதாக அறியப்படுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், சுகப்பிரசவத்திற்காக உங்களை நீங்கள் எவ்வளவு தான் தயார்படுத்திக் கொண்டாலும் அல்லது எத்தனை சுகப் பிரசவ உதவிக்குறிப்புகளை நீங்கள் கடைப்பிடித்திருந்தாலும், உங்கள் மருத்துவர் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

எனவே, சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுப்பது தான் சுகப் பிரசவத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இதற்காக, உங்கள் மருத்துவரின் சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவங்களின் புள்ளிவிவரங்கள் குறித்து நீங்கள் அவரிடம் நேரடியாகக் கேட்கலாம். மருத்துவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள, அங்கு பிரசவித்த வேறு பெண்கள் அல்லது மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிற பெண்களிடமும் நீங்கள் விசாரிக்கலாம்.

உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம்

நீங்கள் முன்கூட்டியே முறையாக ஆராய்ச்சி செய்திருந்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேள்விகளைக் கேட்பது எளிதாகும். ஏனென்றால், கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பதைப் பொறுத்தவரை உங்கள் மருத்துவர் தான் மிகவும் அறிவு மற்றும் நிபுணத்துவம் கொண்டவர். அதனால் அவரிடம் அதிகம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். நீண்ட காலமாக உங்கள் மனதிலுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் மருத்துவர் பதில் அளிப்பார். அத்தகைய சில கேள்விகள் பின்வருமாறு:

  • எப்பொழுது டெலிவரி ஆகும்?

  • பிரசவமானது எவ்வளவு வலியை ஏற்படுத்தும்?

  • பிரசவத்திற்குத் தயாராவதற்கு என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?

  • இந்நேரத்தில் எந்தெந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளலாம்?

நீங்கள் சரியாக ஆராய்ந்திருந்தால் மட்டுமே இதுபோன்று உங்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளை உங்கள் மருத்துவரிடம் கேட்கலாம். உதாரணமாக, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் பையில் என்னவெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் அல்லது உங்கள் பிரசவத்திற்கானத் திட்டத்தை அமைப்பது எப்படி என்பதை நீங்கள் அறிய விரும்பலாம். உங்கள் மீது கரிசனம் கொண்டு உங்கள் கவலைகளுக்கு உங்கள் மருத்துவரால் பதிலளிக்க முடியும்.

நார்மல் டெலிவரிக்கு தைரியமாக இருக்கவும்

பல சமயங்களில், ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவத்திற்கு போதுமான தைரியமோ அல்லது விருப்பமோ இருக்காது. சுகப்பிரசவம் எவ்வளவு வேதனையானது என்பதைப் பற்றியோ அல்லது சுகப்பிரசவ செயல்முறை மூலம் குழந்தை பெற்ற பிற பெண்களின் கதைகளைப் பற்றியோ சுற்றியுள்ளவர்களைக் கேட்பதன் மூலம் இந்த பயம் உங்களுக்கு ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் அல்லது பிரசவம் என்பது ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளைக் கையாளுவார்கள். நீண்ட காலத்திற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சுகப்பிரசவம் குறித்து நீங்கள் திடமாக இருக்க வேண்டும்.

சுகப் பிரசவம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், மற்றதை ஒப்பிடும் போது இதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பது குறித்தும் நீங்கள் போதுமான அளவு ஆய்வு செய்ய வேண்டும். சி-பிரிவு மூலம் பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, ​​சுகப்பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தை பிறக்கும் போதே சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவது என்பது சற்று குறைவாகவே உள்ளது. வேறு எந்த ஆப்ஷனும் இல்லாத வரை சி-பிரிவு பரிந்துரைக்கப்படுவதில்லை.

மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க முயற்சிக்கவும்

பொதுவாக, நீங்கள் ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் இருந்தால் உங்கள் கர்ப்பம் மற்றும் பிரசவம் சீராக நடக்கும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சிறந்த சூழலை உருவாக்க முடியுமெனில், மன அழுத்தமில்லாத கர்ப்பம் சாத்தியமே ஆகும். குற்ற உணர்ச்சியின்றி, வாசிப்பது அல்லது டிவி பார்ப்பது போன்ற உங்களுக்கு பிடித்த செயல்களில் நேரத்தைச் செலவிடுங்கள். நீங்கள் விரும்பும் நபர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இந்தக் கால கட்டம் முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற முடியவில்லை என்றால்; யோகா, சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவைகளில் சிறிது நேரம் செலவிடுவது நல்லது.

சமச்சீர் உணவு எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு சத்தான உணவானது அவசியமாகும். தவறாமல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதாவது, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டு உங்கள் எடை அதிகரித்தால் ஆரோக்கியமான குழந்தையை சுகப் பிரசவம் மூலம் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். மறுபுறம், முழு தானியங்கள் மற்றும் புரதத்தை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொண்டால், உங்கள் உடல் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும்.

அதுமட்டுமல்ல, கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய பல உணவுகள் சுகப்பிரசவத்திற்கு நல்லது. ராஸ்பெர்ரி, மாம்பழம் மற்றும் அன்னாசி உள்ளிட்ட பழங்கள் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்புக்கு நன்மை பயக்கும். கூடுதலாக, அன்னாசி மற்றும் மாம்பழங்கள் இரண்டும் இயற்கையான பிரசவ வலியைத் தூண்டும் மற்றும் துரிதப்படுத்தும்.

உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி மற்றும் கெகல் உடற்பயிற்சி

நடைபயிற்சி என்பது உடல் செயல்பாடுகளின் மிக அடிப்படையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சி ஆகும். இது நார்மல் டெலிவரி டிப்ஸ் பட்டியலிலும் முதன்மையானது என்பதை மறந்திட வேண்டாம். வெறுமனே, நீங்கள் 30-45 நிமிடங்கள் நடந்தால் போதும். ஆனால், நீங்கள் புதிதாக நடைபயிற்சி செய்பவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் நடக்கலாம். உங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் முக்கிய தசைகளை வலுப்படுத்த நீங்கள் மகப்பேறுக்கு முந்தைய பிரீநடல் யோகாவைச் செய்யலாம். அதோடு, குந்துகைகள் மற்றும் பிற சுவாச பயிற்சிகள் நீங்கள் பிரசவத்திற்கு தயாராகவும், வலியை மிகவும் பொறுத்துக்கொள்ளவும் உதவும்.

கெகல் பயிற்சிகள் மற்றும் பெரினியல் மசாஜ் மூலம் இடுப்புப் பகுதிகளில் உள்ள தசைகளை வலுப்படுத்த முடியும், இது சுகப்பிரசவத்திற்கு உங்களை தயார் படுத்தும். கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் கெகல் பயிற்சிகளை தொடங்கலாம். உங்கள் கர்ப்பத்தின் 36வது வாரத்தில், பெரினியத்தை தினமும் மெதுவாக நீட்டி அதனை பிரசவத்திற்கு தயார் செய்யத் தொடங்க வேண்டும். பெரினியல் மசாஜ் செய்வதும் உங்கள் பிரசவத்தை எளிதாக்கும். இது யோனி திசு கிழிவதைக் குறைக்கும் ஒரு நல்ல யோசனையாகும். கர்ப்பப்பை வாய் (பெரினியல் மசாஜ்) செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

போதுமான அளவு தூங்க வேண்டும்

போதுமான அளவு தூங்குவதில் பல பெண்கள் கவனம் கொள்வதில்லை. ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு, நீங்கள் நிறைய ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் கர்ப்ப காலத்தில், நீங்கள் தூங்கும் போது உங்கள் உடல் தன்னைத் தானே சரிசெய்துவிடும். நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று உடல் சோர்வாகும். இது ஹார்மோன்களின் எழுச்சி மற்றும் கர்ப்பமாக இருப்பதற்கு உங்கள் உடலை ஆயத்தப்படுத்தும் விளைவாக நிகழ்கிறது.

கர்ப்ப காலம் என்பது ஒரு இனிதான அனுபவம் என்றாலும் இதில் நீங்கள் அதிகமாக சோர்வடைவீர்கள். எனவே, உங்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். அதுமட்டுமல்ல, போதுமான அளவு இரவில் தூங்குவது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமானதாகும். ஆனால், உங்களால் இரவில் போதுமான அளவு தூங்க முடியவில்லை என்றால், உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்தை விரைவாகத் தூண்டுவதற்கும் பாதுகாப்பான பிரசவத்துக்கும் தேவையான 10 பயனுள்ள பயிற்சிகள்

முடிவுரை

நீங்கள் ஒரு கருவை சுமக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும் அத்தருணத்தில், உங்கள் உலகமே மாறிவிடும். அதே போலத் தான் உங்கள் முன்னுரிமைகளும். இருப்பினும், எதுவாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பான சுகப்பிரசவம் என்பது நீங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும். நிச்சயமாக, உங்களுக்கு பயம் ஏற்படலாம், ஆனால் உங்களுக்கு தையிரம் தரும் விதமான நார்மல் டெலிவரி டிப்ஸ்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கின்றன! எனவே, நீங்கள் உண்மையிலேயே செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே!

கர்ப்பிணி தாய்மார்களால் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்படுபவை

சுகப் பிரசவத்திற்குத் தயாராகும் உங்கள் பயணத்தில், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் தயாரிப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

1982 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

406 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4015 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(44)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

2842 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(73)
Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 36 weeks pregnant

    1st baby operation avaluku 4 years aguthu ipo second baby normal delivery aguma

  • Asked when 38 weeks pregnant

    👍🏻👍🏻👍🏻

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7(62)
foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.