hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Getting Pregnant arrow
  • குடல் எரிச்சல் சிண்ட்ரோம் - அர்த்தம், காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சைகள் arrow

In this Article

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் - அர்த்தம், காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சைகள்

    Getting Pregnant

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் - அர்த்தம், காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சைகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் என்றால் என்ன?

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் (ஐ.பி.எஸ்) என்பது ஒரு வகை உடல் கோளாறு ஆகும். இது பொதுவாக உங்கள் குடல் மற்றும் வயிற்றை பாதிக்கிறது. ஐ.பி.எஸ்ஸின் பெரும்பாலான அறிகுறிகள் உடலின் இரைப்பைக் குழாயுடன் தொடர்புடையவை. ஐ.பி.எஸ் என்பது ஒரு நாள்பட்ட கண்டிஷன் ஆகும். இது வெவ்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகளின் உதவியுடன் நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

    உங்கள் உடலில் உள்ள கோளாறின் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவோ அல்லது லேசானதாகவோ இருக்கலாம். வாழ்க்கை முறையில், உணவு முறையில் மாற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கான சிகிச்சை உதவியுடன் நீங்கள் கோளாறை நிர்வகிக்கலாம். கடுமையான அறிகுறிகளைத் தீர்க்க மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் மருந்துகளை உட்கொள்வதும் நல்லது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் குடல் திசு மாற்றங்களுக்கு ஐ.பி.எஸ் ஒரு காரணமாக இருக்காது.

    செயல்பாட்டு ஜி.ஐ கோளாறு என்றால் என்ன?

    செயல்பாட்டு ஜி.ஐ கோளாறு என்பது இரைப்பைக் குழாயில் ஏற்படும் கோளாறு ஆகும். இது ஜி.ஐ அறிகுறிகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஜி.ஐ பாதையில் கட்டமைப்பு சிக்கல்கள் ஏற்படுவதற்கு பதிலாக, ஜி.ஐ பாதை செயல்படாதபோது இந்த வகை கோளாறு ஏற்படுகிறது. செயல்பாட்டில் மிகவும் ஆழமாக ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, வெவ்வேறு சோதனைகளை மேற்கொண்ட போதிலும் செயல்பாட்டு ஜி.ஐ கோளாறைக் கண்டறிவது கடினம் இருக்கும்.

    ஐ.பி.எஸ் வகைகள்

    ஐ.பி.எஸ் வகைகள் உங்களுக்கு ஏற்படும் குடல் அசைவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. ஐபிஎஸ் வகையைப் பொறுத்து, சிகிச்சையின் வகை மாறுபடும்.

    ஐ.பி.எஸ் சி :

    ஐ.பி.எஸ் சி என்பது மலச்சிக்கல் கொண்ட ஐ.பி.எஸ் வகை ஆகும். இந்த கண்டிஷனில் உங்கள் மலம் கடினமாகவும் கட்டியாகவும் ஆகிறது.

    Article continues below advertisment

    ஐ.பி.எஸ் டி :

    ஐ.பி.எஸ் டி என்பது வயிற்றுப்போக்கு கொண்ட ஐ.பி.எஸ் ஆகும். இது வயிற்றுப்போக்கு போல் தோன்றலாம். ஆனால் அது தொடர்ந்து இருந்தால், அது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம்.

    கலப்பு குடல் பழக்க ஐ.பி.எஸ்

    ஐ.பி.எஸ் எம் என்பது இந்த சிண்ட்ரோம் காரணமாக உங்களுக்கு கட்டி மற்றும் கடினமான மலம் மற்றும் தண்ணியாக வயிற்றுப்போக்கு போன்றவை கலவையாக ஏற்படக்கூடிய ஒரு கண்டிஷன் ஆகும்

    ஐ.பி.எஸ் வளர்ச்சியால் யாருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது?

    உள்ளுறுப்பு புறணியில் அதிக சென்சிடிவ் உள்ளவர்களுக்கு ஐ.பி.எஸ் வளர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஐ.பி.எஸ் ஆனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது மற்றும் மரபணு வேர்களைக் கொண்டுள்ளது. எனவே, ஐ.பி.எஸ் ஆல் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கும் கோளாறு உருவாகும் அபாயம் உள்ளது. அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் எடுத்துக்கொள்பவர்களுக்கும் ஐபிஎஸ் உருவாகும் அபாயம் உள்ளது.

    ஐ.பி.எஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    ஐ.பி.எஸ்ஸின் பரம்பரை சிக்கல் -

    எந்தவொரு குடும்ப உறுப்பினருக்கும் ஐ.பி.எஸ் கோளாறு ஏற்பட்ட வரலாறு இருந்தாலோ, உங்கள் பரம்பரை ஒரு முறை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, உங்களுக்கும் இந்த நோய் உருவாகும் அபாயம் உள்ளது.

    Article continues below advertisment

    உணவு ஏற்றுக்கொள்ளாமை -

    உங்களுக்கு ஏதேனும் ஒரு உணவுக் குழு உங்கள் குடல் ஏற்றுக்கொள்ளமுடியாததாக மற்றும் சென்சிடிவ் ஆக இருந்தால், அந்த உணவை தொடர்ந்து சாப்பிடும்போது அது ஐ.பி.எஸ் உருவாக வழிவகுக்கும்.

    டிஸ்மோட்டிலிட்டி -

    ஜி.ஐ பாதையின் தசைகள் சரியாக இயங்கவில்லை மற்றும் செரிமானம் மற்றும் சரியான உணவை ஒருங்கிணைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தினால், டிஸ்மோட்டிலிட்டி உருவாகி ஐ.பி.எஸ் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

    நரம்பு அதிக சென்சிட்டிவிட்டியாக இருப்பது -

    குடல் நரம்புகள் மிகவும் உணர்திறன் உடையதாகி உள்ளுறுப்பு பகுதி பாதிக்கப்பட்டால், அது ஐபிஎஸ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    மூளை குடல்நாளம் செயலிழப்பு -

    மூளை-குடல்நாளம் அச்சு மிகவும் சென்சிடிவ் மற்றும் முக்கியமான அச்சு களில் ஒன்றாகும். மூளை மற்றும் குடல் தகவல்தொடர்பு சேனல் செயல்படவில்லை என்றால், ஜி.ஐ பாதை சரியாக வேலை செய்யாது, மேலும் ஐ.பி.எஸ் உருவாகத் தொடங்குகிறது.

    குடல் எரிச்சல் சிண்ட்ரோமுக்கான (ஐபிசி) அறிகுறிகள் யாவை?

    ஐ.பி.எஸ் கோளாறில் பல அறிகுறிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மீண்டும் மீண்டும் வயிற்று வலி, வழக்கமான தசைப்பிடிப்பு மற்றும் குடல் வீக்கம் ஆகியவை ஐ.பி.எஸ்ஸின் அறிகுறிகளாகும். மேலும், குடல் இயக்கங்களின் வழக்கமான தன்மை மாறும்போது, நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணரைப் பார்க்க வேண்டும்.

    Article continues below advertisment

    குடல் எரிச்சல் சிண்ட்ரோம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

    குடல் எரிச்சல் சிண்ட்ரோமை கண்டறிய குறிப்பிட்ட சோதனை எதுவும் இல்லை. உங்களுக்கு பல்வேறு வகையான சோதனைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் நோயறிதலுக்காக மருத்துவர் உங்கள் முழுமையான மருத்துவ வரலாற்றைப் பார்ப்பார். உங்கள் கண்டிஷனை கண்டறிய மருத்துவர் ரோம் அளவுகோல்களையும் பயன்படுத்துவார். ரோம் அளவுகோல்களின் கீழ், குறைந்தது மூன்று மாதங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது கடினமான குடல் அசைவுகளுடன் வயிற்று வலி மீண்டும் வரும்போது இது ஐ.பி.எஸ் அறிகுறி எனக் கண்டறியலாம். அதோடு, நீங்கள் எத்தனை முறை மலம் கழிக்கிறீர்கள் அல்லது மலத்தின் தோற்றம் இயல்பிலிருந்து வேறுபட்டதாக இருப்பதன் மூலமும் அறிகுறியை உணரலாம். மேலும், அது எந்த வகையான ஐ.பி.எஸ் என்பதைப் பார்க்க அவர் அறிகுறிகளையும் உங்கள் அனுபவங்களையும் கேட்டறிவார்.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கல்: சிகிச்சையளிப்பது எப்படி.

    குடல் எரிச்சல் சிண்ட்ரோமுக்கான சிகிச்சை

    ஐ.பிஎஸ் பல வகைகளைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வித்தியாசத்தை அனுபவிக்கிறார்கள். ஒரே வகையான சிகிச்சையும் அனைவருக்கும் வேலை செய்யாது. இருப்பினும், ஒரு மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான நோயறிதலுடன் நீங்கள் ஒரு வகை சிகிச்சையைக் காணலாம். ஐ.பி.எஸ் சிகிச்சை திட்டம் மருத்துவரால் வடிவமைக்கப்படுகிறது. கண்டிஷனை குணப்படுத்த உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.

    நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும், அதிக நார்ச்சத்து சாப்பிட வேண்டும் மற்றும் காஃபினை தவிர்க்க வேண்டும். உங்கள் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவு குழுவைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளிக்க மருத்துவர் இரத்த பரிசோதனைகள் போன்ற பல்வேறு சோதனைகளையும் நடத்துவார். உதாரணமாக, உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கிறது என்றால், நீங்கள் பால் அல்லாத கால்சியம் உள்ள பிற மூலங்களை சாப்பிட வேண்டும்.

    இந்த மாற்றங்களுடன், நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் அனைத்து உடல் அமைப்புகளும் சரியாக வேலை செய்யத்துவங்கும். நீங்கள் நிறைய மன அழுத்தத்தை இருந்தால், அது ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது என்றால், நீங்கள் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கூடுதல் மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும்.

    Article continues below advertisment

    மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

    ஐ.பி.எஸ்ஸின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் கண்டால் மற்றும் அடிவயிற்றில் அசௌகரியத்தை உணர்ந்தால், நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். நோயறிதல் செயல்முறைக்கு நிறைய நேரம் ஆகலாம். ஏனெனில், நீங்கள் பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டியிருக்கும். ஆனால் சிண்ட்ரோமுக்கான சரியான சிகிச்சைக்கு சரியான நோயறிதல் மிகவும் அவசியமானதாகும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.