Updated on 3 November 2023
மனித வாழ்க்கையின் மிக அழகான மற்றும் முக்கியமான அம்சங்களில் பிரக்னன்ஸியும் ஒன்று, ஒருவரின் வாழ்க்கையின் ஆணிவேர் என்றும் நாம் அதைச் சொல்லலாம். பிரக்னன்ஸி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உயர் நிலையையும் பொறுப்பையும் சேர்க்கிறது. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பலவித பாடங்களை கொடுப்பதுடன் சுவாசம், ஊட்டச்சத்து, உணர்ச்சிகள், போன்ற பல்வேறு படிநிலைகளை நமக்கு அளிக்கிறது. ஒருவர் பிரக்னன்டாக இருக்கிறாரா என்பதை தெரிந்துகொள்ளும் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வம் நிறைந்த கட்டங்கள் உள்ளன. தாய் மற்றும் குழந்தைக்கு இது ஒரு முக்கியமான காலகட்டமாகும், ஏனெனில் வளரும் கருவானது ஊட்டச்சத்துடன் கூடிய பாதுகாப்பிற்காக தாயை சார்ந்துள்ளது. வளர்ந்து வரும் கருவின் தேவைகள் தாயின் பிசிக்கல் மற்றும் எமோஷனல் ஹெல்த்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது தாய்க்கு முக்கியம்.
ஒரு தாய் ஒரு குழந்தையை பெற்றெடுக்க தவம் கிடக்கிறார் எனில், முதலில் அவர் பிரக்னன்டாக இருக்கிறாரா? என்பதை அறிந்து கொள்வது முதன்மையானது. பிரக்னன்ஸியின் ஆரம்ப அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் உறுதியான ஆதாரத்தை வழங்காது. ஒரு பெண் உண்மையில் பிரக்னன்ட்டாக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த செல்ஃப் எக்ஸமைன் டெக்னிக் தேவை.
கரு முட்டையின் வெற்றிகரமான கருத்தரித்தல் மற்றும் கருவின் உருவாக்கம் ஹார்மோன் செயல்பாடுகளின் வரம்பினால் விளைகிறது. இது பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், மார்பக வளர்ச்சி மற்றும் மென்மை, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை பிரக்னன்ஸியின் ஆரம்ப கட்டத்தின் அறிகுறிகளாகும். இருப்பினும், இவை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் அத்துடன் இந்த அறிகுறிகள் நீங்கள் பிரக்னன்ட்டாக இருப்பதை குறிக்காமலும் போகலாம். எனவே, ஆரம்பகால பிரக்னன்ட்டிற்கு உங்கள் வயிற்றை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கும்.
மகப்பேறு மருத்துவரிடமோ அல்லது செல்ஃப் டெஸ்ட் கிட் உங்களுக்கு மிகவும் உறுதியான ரிசல்ட்களைத் தரும். அதே வேளையில், மகப்பேறு மருத்துவரை சந்திக்க முடியாமலோ அல்லது செல்ஃப் டெஸ்ட் கிட் வாங்க முடியாத சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். அதுபோன்ற நிலையில் செல்ஃப் டெஸ்ட் செய்வது உங்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.
பெண்ணின் உடல் பிரக்னன்ஸியின் பல அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், அவற்றில் எதுவுமே உறுதியான முடிவுகளுக்கு வழிவகுக்காது. உங்கள் வயிற்றில் கருப்பையை உணருவது பிரக்னன்ட்டிற்கான செல்ஃப் டெஸ்ட்க்கான வழிகளில் ஒன்றாகும். உங்கள் கருப்பை விரிவடையும் போது பிரக்னன்ஸியின் முதல் வெளிப்படையான வெளிப்புற அறிகுறி தோன்றும், இதன் விளைவாக உங்கள் வயிற்றுப் பகுதியின் வெளிப்புறம் சற்று மாற்றத்துடன் காணப்படும்.
இருப்பினும், உங்கள் பாடி டைப்பை பொறுத்து, அறிகுறிகள் வெளிப்படையானதாக இல்லாமலும் போகலாம் அல்லது நீங்கள் பிரக்னன்ட்டாக இருப்பதை உணர மிகவும் தாமதமாகலாம். இதற்கு உங்களுக்கு இன்னும் உறுதியான ஆதாரம் தேவைப்படலாம்.
உங்கள் இடுப்பு எலும்பிலிருந்து கருப்பை வெளியே வரும் போது உங்களால் அதை உணரமுடியும். நீங்கள் பிரக்னன்ட்டாக இருக்கும் போது, உங்கள் கருப்பை வளரும் அப்போது உங்கள் வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால் வயிற்று பகுதியில் வித்தியாசத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலும், உங்கள் வயிறு அல்லது வயிற்றில் வேறு பகுதியில் தொட்டால் அது உங்களுக்குத் முழுமையான தொடுதல் உணர்வை வழங்காது. சில சமயங்களில், ஏழாவது மற்றும் எட்டாவது வாரத்தில், வயிற்று தசைகள் நீளத் தொடங்கும் போது ஏற்படும் கடினத்தன்மையுடன், பிரக்னன்ஸி இயற்கையாகவே வீட்டிலேயே உங்களால் உணரமுடியும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் அல்ட்ராசவுண்ட் அறிக்கையை எவ்வாறு படிப்பது (How to Read an Ultrasound Report of Pregnancy In Tamil)
உங்கள் வயிற்றைத் தொடுவதன் மூலம் பிரக்னன்ஸியை சரிபார்க்க சரியான வழி கடினமான, வளரும் கருப்பையை கண்டறிவதாகும். இதை பின்வருமாறு கண்டறியலாம்:
நீங்கள் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலி செய்யவும்.
உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்து, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கால்களை படுக்கையில் தட்டையாக வைக்கவும்.
சிறிது நேரம் மெதுவான மற்றும் ஆழ்ந்த சுவாசங்களை எடுத்து, உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த செயல்முறை வெற்றியடைய அமைதியான மனம், உடல் மற்றும் பொறுமையும் தேவை.
உங்கள் விரல்கள் வலப்புறமாகவும், முழங்கையை இடதுபுறமாகவும் காட்டி, உங்கள் இடது கையின் தட்டையான பக்கத்தை உங்கள் வயிற்றின் நடுவில், நேரடியாக உங்கள் இடுப்பெலும்பின் மேல் மற்றும் அருகில் வைக்கவும்.
ஏதேனும் உணரக்கூடிய கொழுப்புத் திணிப்புகள் மற்றும் குடல் சுழல்கள், மேல் வயிற்றை நோக்கி உயர்த்தி, உங்கள் இடது உள்ளங்கையின் தட்டையான பக்கத்தைப் பயன்படுத்தி இடுப்பெலும்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
உங்கள் வலது கையை உங்கள் இடுப்பெலும்பின் மேல் வைத்து, உங்கள் விரல்களை எலும்பை நோக்கிக் காட்டவும், அப்போது உங்கள் இடது கை உங்கள் வயிற்றை சப்போர்ட் செய்ய வேண்டும்.
உங்கள் கால்களை மெதுவாக கீழே விடும்போது உங்கள் விரல்களை உங்கள் வயிற்றிற்கு மேலும் கீழும் மெதுவாக நகர்த்தவும்.
அப்போது உங்கள் குடலைப் போல மென்மையாக இல்லாத அரை-உறுதியான பந்தை நீங்கள் கவனிக்கலாம். அப்போது உங்கள் இடுப்பெலும்பின் பின்னால் உங்கள் கருப்பையின் உச்சி இருக்கும்.
சில முயற்சிகளுக்குப் பிறகும் உங்கள் கருப்பையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்கள் வயிற்றைக் விரலால் குத்த வேண்டாம். உங்கள் கருப்பை உங்கள் இடுப்பு குழிக்கு மேலே உயரும் வரை ஒரு வாரம் காத்திருக்கவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் கருப்பையை உணர முடியவில்லை என்றால், அது பின்வரும் காரணங்களால் இருக்கலாம்.
உங்கள் கருப்பையை அடையாளம் காண்பது கடினமாக இருக்கலாம். நீங்கள் பன்னிரண்டு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் பிரக்னன்ட்டாக இருந்தால் இது பொதுவானதாகும்.
நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தாலும் இவ்வாறு ஏற்படலாம். அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் வயிற்று கொழுப்பை உங்கள் மேல் வயிற்றை நோக்கி உயர்த்தவும். உங்கள் பிரக்னன்ஸி புராகிரஸின் போது உணர எளிதாக இருக்கும்.
நீங்கள் பிரக்னன்ட்டாக இருக்கிறீர்கள் என்று நம்பினால், அதை உறுதிப்படுத்துவது முக்கியம், உங்கள் ஹெல்த்தையும் உங்கள் குழந்தையின் ஹெல்த்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் டாக்டர் அல்லது செல்ஃப் டெஸ்ட் கிட்டை அணுக முடியாவிட்டால், உங்கள் வயிற்றின் மூலம் மேற்கண்ட முறைப்படி கருப்பையை உணர்வது நீங்கள் பிரக்னன்ட்டாக உள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க உதவும் ஒரு சிறந்த வழியாகும்.
pregnancy test in tamil, symptoms of pregnancy in tamil, stomach examination for pregnancy in tamil, How to Self-examine Your Stomach for Early Pregnancy In English, How to Self-examine Your Stomach for Early Pregnancy In Hindi, How to Self-examine Your Stomach for Early Pregnancy In Telugu, How to Self-examine Your Stomach for Early Pregnancy In Bengali
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |