
கர்ப்ப காலத்தில், நீங்கள் முன்பு யோசித்துக்கூட பார்க்காத பல விஷயங்களை யோசித்து மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் சாப்பிடுவதும், குடிப்பதும் உங்கள் குழந்தையை பாதிக்கலாம். கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக்கூடாது, எது பாதுகாப்பானது என்பதற்கு ஏராளமான கட்டு கதைகள் இருந்து வருகிறது. எனவே எதை நம்புவது, எதை விடுவது என்பதை அறிவதே மிக கடினம்.
தேநீர் என்று வரும்போது, கர்ப்ப காலத்தில் அருந்த சில தேநீர் வகை பாதுகாப்பானவை, மற்றும் சில தேநீர் வகையை தவிர்க்க வேண்டும். இந்த கட்டுரையில், நாங்கள் வெவ்வேறு வகையான தேநீர் மற்றும் கர்ப்ப காலத்தில் அவற்றின் பாதிப்பு போன்றவற்றை பார்ப்போம். அதுமட்டுமின்றி கர்ப்பகாலத்தில் அருந்த பாதுகாப்பான சில தேநீர் வகை மற்றும் தவிர்க்க வேண்டிய வகையின் பட்டியலையும் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் தேநீர் அருந்துவது பாதுகாப்பானதே, ஆனால், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய வகைகளும் இருக்கின்றன. இதில் பாதுகாப்பற்ற பொருட்களை கொண்டிருக்கும் மூலிகை தேநீர் (ஹெர்பல் டீ) மற்றும் அதிக கஃபைன் கொண்டிருக்கும் தேநீர்களும் அடங்கும்.
கிரீன் டீ, பிளாக் டீ, மற்றும் ஒயிட் டீ ஆகியவற்றை கர்ப்பகாலத்தில் அளவாக எடுத்துக்கொள்ளும் வரை பாதுகாப்பானவையே. இவ்வகை தேநீர்களில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு கஃபைன் இருக்கிறது. மேலும், அவை பல ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளையும் வழங்குகின்றன. கஃபைன் உட்கொள்வதற்கு பயப்படும் கர்ப்பிணிகள் மேற்கூறிய தேநீர் வகைகளின் கஃபைன் இல்லாதவற்றை அருந்தலாம்.
கர்ப்பகாலத்தின் போது மூலிகை தேநீர்கள் அதிக பிரச்சனை தருபவையாக இருக்கலாம். இம்மாதிரியான பல தேநீர்களிலிருக்கும் பொருட்கள் வெளிப்படையாக கர்ப்பிணி பெண்களில் சோதித்து பார்த்தவையாக இருக்காது. இதன் முடிவாக, அவை பாதுகாப்பானவையா இல்லையா என்பதை அறிவது சிறிது கடினமே.
சில மூலிகை தேநீர்களில் இரத்தப்போக்கை அதிகரிக்கும் அல்லது இடுப்பு வலியை தூண்டும் மூலிகைகளால் தயார் செய்யப்பட்டவை. அவை கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாக இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மூலிகை தேநீர் உட்கொள்ளலை தவிர்ப்பது நல்லது.
கேமிமோல் மற்றும் லேவண்டர் தேநீர் எனும் இரண்டும் மூலிகை தேநீர்களும் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த எல்லா மூலிகை தேநீர்களை அருந்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது மிக அவசியம்.
பொதுவாக, கர்ப்ப காலத்தில் கஃபைன் உட்கொள்ளலை தவிர்ப்பது நல்லது. அதாவது தேநீரை தவர்ப்பது மட்டுமின்றி கஃபைன், சோடா, ஆற்றல் பானங்கள் மற்றும் சாக்லேட் ஆகியவற்றையும் தவிர்ப்பது அவசியம். அதிக அளவு கஃபைன் உட்கொளல் தூக்கமின்மை, பதற்றத்திற்கு வழிவகுப்பதுடன் அவற்றை அதிகரிக்க செய்யும்.
கஃபைன் பிளாசெண்டாவிற்கு ஏற்படுத்துவதுடன், உங்கள் இதய துடிப்பையும் அதிகரிக்கும். இது தூக்கமின்மை ஏற்படுத்துவதுடன், உங்கள் குழந்தையின் தூங்கும் முறையையும் பாதிக்கும். அதீத அளவு கஃபைன் உட்கொள்ளல் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்ப காலத்தில் அதன் உட்கொள்ளலை தவிர்ப்பது சிறந்தது.
கர்ப்ப காலத்தில் சில மூலிகை தேநீர்கள் பயங்கரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சென்னா, லிக்கோரைஸ் மற்றும் கற்றாழை போன்ற மூலிகையினால் ஆனவை மலச்சிக்கலை ஏற்படுத்துவதுடன் டிஹைட்ரேஷனையும் ஏற்படுத்தும். இஞ்சி, பெப்பர்மிண்ட் மற்றும் கேமிமோல் போன்ற மற்ற மூலிகைகள் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கலாம்.
இறுதியாக, அதிக அளவு கஃபைனை கொண்டிருக்கும் ஜின்செங் மற்றும் கிரீன் டீ போன்ற சில மூலிகைகள் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கர்ப்ப காலத்தில் ஏதேனும் மூலிகை தேநீரை அருந்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக அவசியம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர்: விளைவுகள், அபாயங்கள் மற்றும் நன்மைகள் (Cauliflower During Pregnancy: Effects, Risks & Benefits In Tamil)
மாசுபட்ட, அதிக அளவு ஈயத்தை கொண்டிருக்கும் சில தேநீர் வகைகளும் இருக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் பழைய இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை பெரும்பாலும் மாசுபட்டிருக்கும். ஆகவே குறைந்த அளவு ஈயம் கொண்டிருக்கும் தேநீர் வகைகளை தேர்வு செய்வது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்திற்கு தேர்வு செய்யக்கூடிய சில சிறந்த தேநீர் வகை பின்வருமாறு:-
உங்கள் வளரும் குழந்தைக்கு கஃபைன் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
இது உங்களுக்கு அதிக தரம் வாய்ந்த மூலிகைகளை பெற உதவும்.
ஏனெனில் இஞ்சி குமட்டல், வாந்தி மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான அறிகுறிகளை குறைக்க உதவும்.
ஏனெனில் இரும்பு சத்து இரத்த சோகையை போக்குவதால் கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும்.
ஏராளமான மூலிகை தேநீர்கள் கர்ப்ப காலத்தில் அருந்த மிக பாதுகாப்பானவை. இருப்பினும், ஏதேனும் மூலிகை தேநீரை அருந்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது மிக அவசியம். ஏனெனில், சில மூலிகைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இஞ்சி, பெப்பெர்மிண்ட், கேமிமோல், மற்றும் லேவண்டர் போன்றவை சில பொதுவான “பாதுகாப்பான” மூலிகைகள் ஆகும்.
கர்ப்ப காலத்தில் எந்தெந்த தேநீர்கள் பாதுகாப்பானவை, எவற்றை தவிர்க்க வேண்டும் மற்றும் அதைப் பற்றிய குழப்பத்தை தெளிவுபடுத்த இந்த கட்டுரை உதவியிருக்கும் என்று நம்புகிறோம். ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஏதேனும் மூலிகை தேநீரை அருந்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக அவசியம்.
நீங்கள் கர்ப்பிணி பெண்ணாக இருந்தால், ஆரோக்கியம் சார்ந்த பிளாக்குகளை பார்த்து மேலும் கற்றுக்கொள்ள மைலோ ஃபேமிலியை பார்க்கவும்.
tea in pregnancy in tamil, drinking tea during pregnancy in tamil, benefits of tea during pregnancy in tamil,sideeffects of tea in tamil, herbal tea during pregnancy in tamil, ginger tea during pregnancy in tamil
This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |