Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உலகில் அறியப்பட்ட டஜன் கணக்கான தொற்றுநோய்களில் ரூபெல்லா தொற்றுநோயும் ஒன்று. இது ‘ஜெர்மன் தட்டம்மை’ என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. இது 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கிடையே பொதுவாகக் காணப்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய்த்தொற்றானது சிறிய சிவப்பான புடைப்புகள் அல்லது சொறி, வீக்கமான சுரப்பிகள் மற்றும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. இது சில நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். 1960ல் ரூபெல்லா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நோய்க்கான பாதிப்புகளின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இது இன்னுமும் கூட காணப்படுகிறது.
ரூபெல்லா வைரஸ் குழந்தைகளிடையே கூட தீவிரமாக இல்லை என்றாலும், கர்ப்ப காலத்தில் பெண்ணிற்கு ரூபெல்லா IgG பாசிட்டிவ் இல்லாத போது அது எதிர்மாறாக விளைகிறது. ஜெர்மன் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் கர்ப்பிணித் தாய் தொடர்பு கொள்ளும்போது கருவில் இருக்கும் குழந்தையானது பிறவி ரூபெல்லா நோய்க்குறியால் பாதிக்கப்படலாம். இதுபோல் நடக்கும்போது, மூளை பாதிப்பு, இதயப் பிரச்சனைகள் மற்றும் காது கேளாமை போன்ற தீவிரமான பிறப்பு குறைபாடுகளால் குழந்தை பாதிக்கப்படலாம்.
ரூபெல்லா வைரஸின் அறிகுறிகள், பொதுவாக லேசானவையாக இருக்கும். ஆரம்பத்தில் இது எளிதாகப் புறக்கணிக்கப்படுலாம். வைரஸ் தாக்கிய 2-3 வாரங்களுக்குள் இதற்கான அறிகுறிகள் உருவாகத் தொடங்கி சுமார் ஒரு வாரம் வரைக்கும் நீடிக்கும். கர்ப்ப காலத்தில் ரூபெல்லா IgG நோயால் பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பின்வரும் பொதுவான அறிகுறிகளில் சிலவற்றால் பாதிக்கப்படலாம்:
முகத்தில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு சொறி தோன்றுதல்
சொறி மெதுவாக உடலில் பரவுதல்
லேசான காய்ச்சல்
தலைவலி
இருமல்
மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
வீங்கிய நிணநீர் முடிச்சுகள்
தசைவலி
சிவந்த கண்கள்
கர்ப்ப காலத்தில் ருபெல்லா IgG ஐ அதிகமாகக் கொண்டிருக்கும் பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும் அரிதான நிகழ்வுகளின் அறிக்கைகள் உள்ளன
காது தொற்று
கழுத்துப் பிடிப்பு
மூளையில் வீக்கவ்ம்
நீடித்த தலைவலி
தும்மல் அல்லது இருமல் மற்றும் கிருமிகளை காற்றில் பரப்பும் பாதிக்கப்பட்ட நபருடன் ஒரு கர்ப்பிணிப் பெண் தொடர்பு கொள்ளும்போது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூபெல்லா வைரஸ் பரவுகிறது. சிலருக்கு இந்த அறிகுறிகள் உடனடியாகத் தெரிவதில்லை. அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியாமல், அவர்களைச் சுற்றிலும் வைரஸ் பரவுகிறது. எனவே, இதுபோன்ற பரவலைத் தவிர்ப்பதற்காக, மக்கள் கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி இருக்கும் போது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது எப்போதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருக்கும் தாயைப் பொறுத்தவரை, ரூபெல்லா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக கர்ப்ப காலத்தில் ரூபெல்லா பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில், ஒரு கர்ப்பிணித் தாய் ரூபெல்லா IgG பரிசோதனை செய்த பிறகு, அந்த பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்த பிறகு அந்தக் குழந்தைக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த வைரஸ் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தாயிடமிருந்து பரவுகிறது மேலும் ஆரம்ப 3 மாதங்களில் ஆபத்து அதிகமாக இருக்கும். ரூபெல்லா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறவி ரூபெல்லா நோய்க்குறி அல்லது சிஆர்எஸ் நோயால் பாதிக்கப்படலாம். இதில் அவர்கள் கடுமையான பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள்:
நீரிழிவு நோய்
கண்புரை
கல்லீரல் பாதிப்பு
மண்ணீரல் பாதிப்பு
தைராய்டு
இதய பிரச்சினைகள்
காது கேளாமை
செவித்திறன் குறைபாடு
ஒரு சில தீவிர நிகழ்வுகளில், குழந்தை பிறந்து சில நாட்களுக்குப் பிறகு இறந்து போகலாம் அல்லது தாய்க்கு கருச்சிதைவு ஏற்படலாம்.
கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் பெண்கள் முதலில் கர்ப்பத்திற்கு முன்பு ரூபெல்லா இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தால், இதற்கு முன்பு MMR தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், அவர்கள் இந்த ஊசியை உடனடியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு, அவள் கர்ப்பமடைவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்க வேண்டும். கர்ப்பிணித் தாய்க்கு ரூபெல்லா வைரஸ் எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தடுப்பூசி போடக்கூடாது. ஏனெனில், அது மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே! - தாமதமாக கருத்தரித்தல் காரணங்கள்
ரூபெல்லா நிலையானது ஆரம்ப கட்டத்தில் இருந்தால் கர்ப்பமாக இல்லாத பெண், எந்தவொரு மருந்துகளையும் பயன்படுத்தாமல் அல்லது வலி நிவாரணிகளை உட்கொள்வதன் மூலமாகத் தானே சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஆனால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்ப காலத்தில் ஹைப்பர் இம்யூன் குளோபுலின் எனப்படும் ரூபெல்லா இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி அவருக்கு வழங்கப்படலாம். இது வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளாக செயல்படுகிறது. அதனுடன், குழந்தை மற்றும் தாயின் பாதுகாப்பிற்காக முழுமையான ஓய்வும் பரிந்துரைக்கப்படுகிறது. தாயின் இரத்தத்தில் வைரஸை எதிர்த்துப் போராட உதவும் பின்வரும் ஆன்டிபாடிகள் இருக்க வேண்டும்:
IgM : இந்த ஆன்டிபாடி ஆனது, ரூபெல்லா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு வாரம் வரைக்கும் அல்லது அதற்கும் மேல் காணப்படும். மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையானது ரூபெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட பிறகு, இது சுமார் ஒரு வருடம் வரைக்கும் இரத்தத்தில் காணப்படுகிறது.
IgG : இந்த ஆன்டிபாடி இரத்தத்தில் நிரந்தரமாக இருக்கும். மேலும், ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மற்றும் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவராக இருந்தால்தான் கண்டறிய முடியும்.
ரூபெல்லா IgG இன் இயல்பான வரம்பு என்பது, சோதனை முடிவு 0.7 அல்லது குறைவான எண்ணைக் காட்டும்போது, எதிர்மறையான சோதனை 1.0 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணைக் காண்பிக்கும். இந்த முடிவுகளானது கர்ப்பத்திற்கான ரூபெல்லா IgG க்கும் மற்றும் சாதாரண தனிப்பட்ட சோதனைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.
எனவே, கர்ப்ப காலத்தில் ரூபெல்லா IgG பாசிட்டிவ் என்று வந்தால், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டதன் மூலமாகவோ அல்லது இதற்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டன் மூலமாகவோ, அந்தப் பெண் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தம். கர்ப்ப காலத்தில் தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, பெண்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ரூபெல்லாவிற்கான தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |