
இது கிரேக்க மொழியில் இருந்து தோன்றிய வார்த்தையாகும். "மனிதன்" என்று பொருள்படும் "ஆண்ட்ரோஸ்" என்ற கிரேக்க வார்த்தையே "ஆண்ட்ராலஜி" என்ற வார்த்தையின் மூலமாகும். இது ஆண் இனப்பெருக்க அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கையாளும் மருத்துவத் துறையைக் குறிக்கிறது.
பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர் இருப்பது போன்று ஆண்களுக்கு ஆண்ட்ராலஜிஸ்ட் என்று நாம் நினைக்கலாம். மகப்பேறு மருத்துவம் நீண்ட காலமாக இருக்கும் ஒரு முக்கியமான ஆய்வுத் துறையாகும். ஆனால், ஆண்ட்ராலஜி மிகவும் சமீபத்தியத்தில் தான் தோன்றியது. இருப்பினும், சமீப காலமாக புரோஸ்டேட் மற்றும் ஆண்களின் இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இந்த துறை தற்போது அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆடவர் நோயியல் மருத்துவர் (ஆண்ட்ராலஜிஸ்ட்) என்பவர் ஆண்களின் இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய உதவும் மருத்துவ வல்லுநர் ஆவார். ஆண்ட்ராலஜி என்பது ஆண் மற்றும் பெண் சிறுநீர் அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை உள்ளடக்கிய சிறுநீரகத் துறையின் கீழ் வருகிறது.
ஆண்ட்ராலஜிஸ்ட் என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும் ஒரு சிறப்பு மருத்துவர் ஆவார். உண்மையில் கூற வேண்டுமானால், நீங்கள் பருவமடைந்த பிறகு, குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ஆண்ட்ராலஜிஸ்ட்டை பார்க்க வேண்டும். அவர் உங்கள் இடுப்புப் பகுதியை ஆய்வு செய்து உங்களுக்கு ஏதேனும் அடிப்படை பிரச்சனைகள் இருக்கிறதா என்று பரிசோதிப்பார். பின்வரும் சூழலை நீங்கள் எதிர்கொள்ளும் போது, நீங்கள் ஒரு ஆண்ட்ரோலஜிஸ்ட்டை சந்திக்க வேண்டும்:
15 நாட்களுக்கும் மேலாக உங்கள் இடுப்புப் பகுதியில் ரேஷஸ் இருத்தல்
தொடர்ச்சியான அரிப்பு.
உங்கள் இடுப்பு பகுதியில் ஏதேனும் தொற்று இருத்தல்.
விந்தணுக்கள் வீங்கி இருத்தல்.
உங்கள் இடுப்புப் பகுதியில் சிவந்து இருத்தல்.
புற்றுநோய்கள் ஆண்களின் இனப்பெருக்க அமைப்புடன் தொடர்புடையவை.
விறைப்புத்தன்மை போன்ற ஏதேனும் பாலியல் பிரச்சனைகள்.
ஆண்களைப் பொறுத்தவரை சிறுநீரக மருத்துவர் மற்றும் ஆடவர் நோயியல் மருத்துவர் (ஆண்ட்ராலஜிஸ்ட்) என இருவருமே தொடர்புடையவர் ஆவர். ஆனால், ஒருவருக்கொருவர் முற்றிலுமாக வேறுபடுகின்றனர்.
சிறுநீரகவியல் என்பது சிறுநீர் அமைப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான மருத்துவத்தின் ஒரு கிளை ஆகும்.
ஆண்கள் மற்றும் பெண்களில் உள்ள சிறுநீர் இனவள உறுப்புகள் தொடர்பான நோய்கள் யாவுமே சிறுநீரக மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவையாகும். அவர் அந்த உறுப்பிகளில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது மருந்து மூலம் சிகிச்சையளிப்பார். சிறுநீரக மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் மருத்துவ வரலாறுகளைப் பதிவுசெய்து மதிப்பீடு செய்வார்கள். அதோடு, நோயறிதல் சோதனைகளை நடத்தி எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சிந்தித்து தகுந்த சிகிச்சையை வழங்குவார். சிறுநீரக மருத்துவர் ஆண் பெண் என இருபாலருக்கும் சிகிச்சை அளிப்பார்.
முன்பு கூறியது போல், ஆண்ட்ராலஜி என்பது சிறுநீரகத் துறையின் கீழ் வருகிறது. இது ஆண்களை பாதிக்கும் நோய்களுடன் தொடர்புடையதாகும். ஆம், பொதுவாக ஆண்களை பாதிக்கும் பிறப்புறுப்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதே ஆண்ட்ராலஜிஸ்ட்டின் பொறுப்பாகும். சிறுநீரக மருத்துவர்களைப் போலவே ஆண்ட்ரோலஜிஸ்டுகளும் அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பார்.
நோயறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பாக ஆண்ட்ரோலஜிஸ்ட் பல சோதனைகளை செய்வார் அல்லது பரிந்துப்பார். அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
விந்தணுவின் வடிவம், அளவு மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள விந்துவை பகுப்பாய்வு செய்ய இந்த சோதனையானது பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவர் கருவுறாமல் இருப்பதற்கான காரணத்தை மதிப்பிட உதவுகிறது. இது பொதுவாக என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்வதற்கு முன்பு செய்யப்படுகிறது.
விந்துவில் வழக்கத்தை விட அதிகமான வெள்ளை இரத்த அணுக்கள் இருந்தால், ஆண்ட்ரோலஜிஸ்ட் நுண்கிருமிகள் வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார். ஆய்வக ஆய்வாளர், பாக்டீரியா வளர்ச்சியைக் கண்டறிய உங்கள் விந்து மாதிரியை கல்ச்சர் செய்வார். அவ்வாறு உங்கள் விந்துவில் பாக்டீரியாக்கள் இருந்தால் அது எந்த வகையான பாக்டீரியா மற்றும் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவற்றை அழிக்கும் என்பதை எல்லாம் தீர்மானிக்க உங்கள் விந்து வேறு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
விந்தணு உட்கருவின் மேற்பகுதி 40-60% அக்ரோசோம் கேப்கள் எனப்படும் ஒரு அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. அக்ரோசோம் செயல்பட, விந்தணுவானது வெற்றிகரமாக கருமுட்டை உறைக்குள் நுழைய வேண்டும். விந்தணு பிணைப்பு தளங்களில் இருந்து பிரிந்து, அக்ரோசோம் பதிலைத் தொடர்ந்து, கருமுட்டையுடன் ஒன்றிணைக்க வேண்டும். செயற்கைத் தூண்டுதலுக்குப் போதுமான அளவு பதிலளிக்கும் அக்ரோசோம்களைக் கொண்ட விந்தணுக்களை இரட்டைக் கண்டறிதல் நுட்பத்தைப் பயன்படுத்தும் அக்ரோசோம் தூண்டுதல் சோதனையைப் பயன்படுத்தி கண்டறியலாம்.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன் தான் விந்து மற்றும் இரண்டாம் நிலை பாலியல் தன்மைகளை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெஸ்டோஸ்டிரோனின் குறைவான உற்பத்தி அல்லது புரோஜெஸ்ட்டிரோனின் அதிகப்படியான உற்பத்தி தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், ஹார்மோன் அளவை தீர்மானிக்க உதவும் இரத்த பரிசோதனையை ஆண்ட்ரோலஜிஸ்ட் பரிந்துரைப்பார்.
இதையும் படிக்கலாமே! - பைலோனிடல் நீர்க்கட்டி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.
ஆண்ட்ரோலஜிஸ்ட் என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பில் நிபுணத்துவம் கொண்ட ஒரு மருத்துவர் ஆவார். ஒவ்வொரு ஆணும் ஆண்ட்ராலஜியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை சந்தித்து ரெகுலர் செக்கப் செய்து கொள்வது நல்லது. ஆண்ட்ரோலஜிஸ்ட் மற்றும் சிறுநீரக மருத்துவர் ஆகிய இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளின் அடிப்படையில், ஆண்ட்ரோலஜிஸ்ட் உங்களுக்கு நோயறிதல் சோதனைகளை பரிந்துரைத்து, அதனைப் பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை திட்டத்தை வகுப்பார். அதே சமயம், ஆண்ட்ரோலஜிஸ்
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |