This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your ovulation on mylo app

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு (செபேசியஸ் சிஸ்ட்) - காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை

Health & Wellness
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு (செபேசியஸ் சிஸ்ட்) - காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
Read time5 min

முன்னுரை

நீர்க்கட்டி என்பது காற்று, திரவங்கள் அல்லது அரை-திண்மப் பொருட்களானது. இது உடலில் உள்ள எந்த ஒரு திசுவில் வேண்டுமானாலும் உருவாகலாம். அதோடு இது பெரும்பாலும் புற்று நோய் கட்டிகளாக இருக்காது. இதன் வகை மற்றும் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து, அந்த நீர்க்கட்டியை அகற்றத் தேவையான அறுவை சிகிச்சை முறையை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள். அத்தகையை வகை கட்டிகளில் ஒன்றுதான் எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு (செபேசியஸ் சிஸ்ட்).

இது ஒன்றும் ஆபத்தான கட்டி அல்ல. இந்த எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு முக்கியமாக தோல், கழுத்து அல்லது உடற்பகுதியில் ஆங்காங்கே காணப்படுகிறது. ஆனால் கட்டியினால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனாலும், அது வளரும்போது அசௌகரியத்தை கொடுக்கும். இது புற்றுநோய் கட்டியாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பொதுவாக இதை நாமே சுயமாக பரிசோதித்துக் கண்டறியலாம். இதற்கு ஆய்வக சோதனை அல்லது இமேஜிங் போன்றவை அதிகம் தேவைப்படுவதில்லை. அவ்வாறு சுய பரிசோதனை மூலம் கண்டறியப்படும் கட்டிக்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் அல்லது சமயங்களில் அது தானாகவே சரியாகிவிடும் அல்லது மறைந்து விடும். ஆனால், அதற்காக நீங்கள் சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடாதீர்கள். முறையான சிகிச்சை இன்றி அது உங்கள் வாழ்நாள் முழுவதும் சரி செய்யப்படாமல் போகலாம். பல்வேறு வகை கட்டிகள் உள்ளன, அவை நூற்றுக்கு மேற்பட்டவைகளாக இருக்கலாம். இந்த கட்டிகள் உங்கள் உள்ளங்கையிலோ அல்லது உள்ளங்காலிலோ ஒருபோதும் காணப்படாது.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

நமது உடலில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பியில் இருந்து எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு உருவாகிறது. எண்ணெய்ச் சுரப்பிகள் ஒருவித எண்ணெயை சுரக்கின்றன, இது முடி மற்றும் சருமத்தில் ஒரு கோட்டிங் போல் படிகிறது. பின்னர் கட்டியாக உருவாகிறது. உடலில் இந்த எண்ணெய் கடந்து செல்லும் பாதை சேதமடைந்தால் அல்லது தடைப்பட்டுவிட்டால் கட்டிகள் ஏற்படுகின்றன. அந்தப் பகுதியில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் இவ்வாறு கட்டிகள் உருவாகும்.

இந்த காயமானது கீறல், முகப்பரு, அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் அல்லது தோல் நோயாக இருக்கலாம். சிஸ்ட் மிகவும் மெதுவாக உருவாகிறது. அந்த பகுதியில் உங்களுக்கு காயம் ஏற்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு இது தோன்றலாம்.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு ஏற்படுவதற்கான பிற காரணங்கள் :

i) ஏதேனும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சேதம்

ii) தவறுதலாக சிதைந்த அல்லது சிதைக்கப்பட்ட நாளம்

iii) பேசல் செல் நர்வ்ஸ் சிண்ட்ரோம் அல்லது கார்ட்னர் சிண்ட்ரோம் போன்ற மரபணு காரணங்கள்.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பின் அறிகுறிகள் :

இது புற்றுநோயாக இருந்தால், அது பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்:

i) நீர்க்கட்டி 5 சென்டிமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டிருக்கும்.

ii) ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பிறகும் மீண்டும் கட்டி உருவாகும்.

iii) ஏதேனும் தொற்று காணப்படும்.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பிற்கான சிகிச்சைகள் :

உங்கள் மருத்துவர் சீழை வெளியேற்றுவதன் மூலம் சரி செய்யலாம் அல்லது அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றலாம்.

அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றுவதே சிறந்த சிகிச்சை ஆகும், ஏனெனில் மற்ற சிகிச்சைகள் கட்டி மீண்டும் மீண்டும் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

உங்கள் கட்டியை அகற்ற மருத்துவர் பயன்படுத்தும் முறைகள் :

கன்வென்ஷனல் வைட் எக்சிஷன் :

அறுவை சிகிச்சை மூலம் உங்கள் கட்டியை முற்றிலுமாக அகற்றுவார், ஆனால் உங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் நீண்ட வடு ஏற்படும். இதில் மீண்டும் கட்டி உருவாக வாய்ப்பு இல்லை.

மினிமல் எக்சிஷன் :

இந்த முறை சிறிய அளவிலான வடுக்களை ஏற்படுத்தும், ஆனால், மீண்டும் கட்டி ஏற்படும் அபாயம் இதில் இருக்கலாம்.

பஞ்ச் பயாப்ஸி எக்சிஷன் :

ஒரு லேசர் உதவியுடன், சிஸ்ட்டில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதிலுள்ள சீழ்கள் வெளியேற்றப்படுகிறது.

உங்கள் சிகிச்சைக்கு பிறகு, தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவர் உங்களுக்கு ஆண்டிபயாடிக் ஆயின்மெண்ட் ஒன்றைத் தருவார். முழுவதும் குணமாகும் வரை நீங்கள் இதைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் மருத்துவரிடம் வடு மறைவதற்கான க்ரீமையும் நீங்கள் கேட்கலாம், இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்த வடுக்கள் இருந்தால், இதன் மூலம் அவற்றை குறைக்கலாம்.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனைகள்

1) சிடி ஸ்கேன் - இது உங்கள் மருத்துவருக்கு உங்கள் கட்டியின் குணாதிசயங்களை பரிசோதிக்கவும் மற்றும் அதற்கு சிறந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.

2) அல்ட்ராசவுண்ட் - இவை கட்டியில் நிரம்பியிருக்கும் உள்ளடக்கங்களை அடையாளம் காண உதவுகின்றன.

3) பஞ்ச் பயாப்ஸி என்பது புற்றுநோய் அறிகுறிகளுக்கு லேபில் டெஸ்ட் செய்வதற்காக கட்டியிலிருந்து சிறிய அளவு திசுக்களை எடுப்பதைக் குறிக்கிறது.

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள்

எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு வராமல் தடுக்க வேண்டுமென்றால் தேவையற்ற காயங்கள் உடலில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிபடாமலும் உடலில் கீறல்கள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் பருக்கள் காணப்பட்டால் தோல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ச் சுரப்பி அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எந்த மருந்துகளும் இல்லை. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அது மீண்டும் உருவாகாமல் இருப்பதை கட்டுப்படுத்த முடியும்.

முடிவுரை

எண்ணெய்ச் சுரப்பி அடைப்புகள் புற்று நோயாகவோ ஆபத்தானவையாகவோ இருக்காது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நாளடைவில் மிகவும் பெரியதாகவும், வலியையும் அதோடு அசௌகரியத்தையும் அளிக்கும்.

அறுவை சிகிச்சை மூலம் அதை முழுமையாக அகற்றி விட்டால், கட்டி மீண்டும் ஏற்பட 1% வாய்ப்பு மட்டுமே உள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில், அகற்றிய பகுதியில் தொற்று ஏற்படலாம். சிவத்தல் அல்லது வலியின் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இந்த காரணத்திற்காகத்தான் ஆண்டிபயாடிக் ஆயின்மெண்ட்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில், இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.