This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

உடன்பிறந்தவர்கள் இடையே ஏற்படும் சண்டை: காரணங்கள் & அவற்றை எப்படி கையாள்வது

Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
Read time6 min

உடன்பிறந்தவர்கள் இடையே ஏற்படும் சண்டை என்றால் என்ன?

உடன்பிறந்தவர்கள் இடையேயான சண்டை என்பது சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டு, ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு, சண்டை போட்டுக் கொள்வதே ஆகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களும் இதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார்கள். பொதுவாக, இரண்டாவது குழந்தை பிறந்த உடனேயே இந்தப் பிரச்சனைகள் தொடங்கிவிடும். பெரும்பாலான நேரங்களில், உடன்பிறந்தவர்கள் இடையேயான போட்டியானது குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்துவிடும், இது பெற்றோருக்கு மிகவும் சில சமயங்களில் வெறுப்பையும் மன அழுத்தத்தையும் கொடுக்கும்.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்ளாமல் நன்றாகப் பழகுவதற்கும், பிரச்சனைகளுக்காக மோதிக் கொள்ளாமல் ஆரோக்கியமாக எப்படித் தீர்ப்பது என்பதைக் கண்டறிய உதவுவதற்கும் இந்தக் கட்டுரையில் பல விஷயங்கள் உள்ளன.

மேலும், இதனைப் பின்பற்றினால் உங்களுடைய குழந்தைகள் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு நெருக்கமாகிவிடுவார்கள். உங்களுடைய குழந்தைகள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து ஒரு வேலையை சேர்ந்து செய்வதன் மூலமாக, எப்படி ஒன்றாக வேலை செய்வது மற்றும் மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைப் எப்படிப் பார்ப்பது போன்ற அத்தியாவசிய திறன்களைக் கற்றுக்கொள்வார்கள்.

உடன்பிறந்தவர்கள் இடையே சண்டை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

உடன்பிறந்தவர்கள் தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொள்வதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன, அவை பின்வருமாறு:

  • ஒவ்வொரு குழந்தையும், தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும்போது, அவர்கள் தங்களுடைய சொந்த திறமைகள், பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களைக் கண்டறிவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உடன்பிறப்புகளைப் போல கிடையாது அல்லது அவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர்கள் என்பதைக் காட்ட விரும்புகிறார்கள்.

  • அவர்கள் தங்களுக்கான நேரத்தையும், ஒழுக்கத்தையும், பதிலையும் சமமாகப் பிரித்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

  • குழந்தைகள் பசியாக, சலிப்பாக அல்லது சோர்வாக இருக்கும் போது கோபமாக இருப்பதற்கும் மற்றும் சண்டையிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

  • குடும்பம் குழந்தைகள் முன்னிலையில் எப்படி நடந்து கொள்கிறது என்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, பெற்றோர் ஒரு குழந்தையை வித்தியாசமாக நடத்தலாம், ஏனென்றால் அந்தக் குழந்தையானது சமாளிப்பதற்குக் கடினமாக இருந்த உறவினரை நினைவுபடுத்தி இருக்கலாம். இது அவர்களை அறியாமலே கூட நடந்திருக்கலாம்.

  • குடும்பமாகச் சேர்ந்து உணவு உண்பது போன்ற வழக்கமான, வேடிக்கையான செயல்பாடுகளில் ஒன்றாகச் சேர்ந்து குடும்பத்துடன் செலவிட நேரம் இல்லையென்றால், குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

  • பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அவர்களால் அதிக நேரத்தை தங்களுடைய குழந்தைகளிடம் செலவிடவோ அல்லது குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தவோ முடியாமல் போகலாம். இது உடன்பிறந்தவர்கள் இடையே நடக்கும் சண்டையை இன்னும் அதிகமாக்கும்.

  • உங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தமானது அவர்களுக்கு முன்கோபத்தை ஏற்படுத்தி, விரக்தியைச் சமாளிப்பதை கடினமாக்குகிறது, இதனால் அவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

என் குழந்தைகள் நன்றாகப் பழகுவதற்கு நான் அவர்களுக்கு எப்படி உதவுவது?

  • தேவையில்லாத மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு, உங்களுடைய குழந்தையை ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுவதைத் தவிர்க்கவும்.

  • ஒவ்வொரு குழந்தைக்கும் அவ்வப்போது "ஓய்வு நேரம்" கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதே போல், ஒவ்வொரு குழந்தையுடனும் நீங்கள் போதுமான நேரம் தனியாக செலவழிப்பதும் முக்கியம். குறைந்தபட்சம், தினமும் சில நிமிடங்களாவது அவர்களுடன் பேசுவது நேரம் செலவிடுவது போன்றவற்றை நோக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையுடன் 10 நிமிடங்களுக்கு இதை நீங்கள் கவனச் சிதறல் இல்லாமல் செய்தால் கூட போதும், இதனால் ஏற்படும் வித்தியாசம் நம்ப முடியாத அளவில் இருக்கும்.

  • கூட்டுக் குடும்பமாக இருங்கள், குறிப்பாக உங்களுடைய குழந்தைகள் பெரியவர்களாகும் வரைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களும் மிகவும் முக்கியம் என்பதைக் காட்டவே இந்த கூட்டுக்குடும்பம். கூட்டுக் குடும்பம் என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும், பொதுவான நிலையைக் கண்டறியவும், எப்படி முன்னேறுவது என்பதைக் கண்டுபிடிக்கவும் உதவும்.

உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான சண்டைகளில் எப்போது தலையிட வேண்டும் ?

உங்கள் குழந்தைகளுக்கு இடையே ஏதேனும் சிறு மோதல் இருந்தால், நீங்கள் அதில் தலையிடாமல் இருப்பது அவர்களை சொந்தமாகவும் சுதந்திரமாகவும் முடிவு எடுக்க உதவும்.

ஆனால், வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக மாறினால், எந்தவொரு உடல் ரீதியான பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு நீங்கள் அதில் தலையிட வேண்டும். ஏனென்றால், அவர்கள் உணர்ச்சி ரீதியான ஒழுங்குமுறை திறன்கள் இப்போது தான் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும், குழந்தைகள் தீங்கு விளைவிக்கக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு பெரியவரின் உதவி தேவைப்படலாம்.

உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான சண்டைகளை ஆக்கப்பூர்வமாக கையாள உதவிக் குறிப்புகள்

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளின் போது அவர்கள் அமைதியாக இருப்பதை எளிதாக்கலாம்:

  • எந்த குழந்தைகளிடத்தும் பாகுபாடு காட்டாதீர்கள்

  • எதிர்மறையான ஒப்பீடுகளிலிருந்து நீங்கள் தூரமாக விலகி இருக்க வேண்டும்

  • மோதலைத் தூண்டுவது எது என்பதைக் கண்டறியவும்

  • அடிப்படை விதிகளை நிறுவுவதன் மூலமாக அனைவரிடமிருந்தும் என்னென்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்

  • உங்களுடைய எண்ணங்களை ஒழுங்கமைக்கவும். இந்த சிறிய மற்றும் பெரிய வாதங்களுக்கு திட்டமிடல் தேவைப்படுகிறது

உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான சண்டைக்குப் பிறகு பிரச்சனையை எப்படித் தீர்ப்பது: வயதான குழந்தைகளுக்கான வழிமுறைகள்

  • குழந்தைகள் அமைதியாகி, சிறந்த முடிவுகளுக்கு மீண்டும் வந்து பேசத் தயாராகும் வரைக்கும் காத்திருங்கள். பிறகு கீழ்கண்டவாறு செய்யுங்கள்.

  • உங்களுடைய திட்டங்களைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள்

  • பிரச்சனை என்ன என்று இரு குழந்தைகளிடமும் விசாரிக்கவும்

  • இரு குழந்தைகளும் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கு அறிவுறுத்துங்கள்

  • ஒன்றாகச் சேர்ந்து யோசியுங்கள்

  • பரிந்துரைகளை ஆய்வு செய்யவும்

  • தீர்வு பற்றி உடனடியாக யோசிக்க முடியாவிட்டால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம்

  • உங்களுடைய செயல்திட்டத்தைத் தீர்மானித்து, அனைவரும் குழுவில் இருக்கும் போது, அதைச் செயல்படுத்தி அதற்கான முடிவுகளை மதிப்பிடவும். விஷயங்கள் சரியாகவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்கவும்.

உங்களுடைய சொந்த உணர்ச்சிகளைக் கையாளுதல்

குழந்தைகள் சண்டையிடும்போது, நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. இது பாதுகாப்பானது மற்றும் நீங்கள் இதற்காக உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டியதில்லை, இது சண்டையை நிறுத்துவதற்கு உதவும், இதற்காக நீங்கள் 10 வரைக்கும் கூட எண்ணலாம், இதற்குப் பிறகு நீங்கள் ஏதாவது செய்வதற்கு அது உதவியாக இருக்கும்.

அந்த கூடுதல் 10 வினாடிகளில் நீங்கள் பெரும்பாலும் அமைதியாக இருக்க வேண்டும். இது உதவவில்லை என்றால், நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது இந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்வதற்கு மற்றொரு பெரியவரிடம் கேட்கலாம்.

உடன்பிறந்தவர்களுக்கு இடையே சண்டை நடக்கும்போது எப்போது உதவி தேவைப்படும் ?

உங்களுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அடிக்கடி தவறாக நடந்து கொண்டால் அல்லது நிறைய சண்டையிட்டால், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இது.

இது போன்ற சண்டைகள் குழந்தைகளுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் மேலும் அவர்கள் எதிர்காலத்தில் மற்றவர்களுடன் எளிதில் பழகமாட்டார்கள். உங்களுடைய குழந்தைகள் சொல் பேச்சு கேட்காமல் நடந்து கொள்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இதைப் பற்றி நீங்கள் ஒரு நிபுணரிடம் பேச வேண்டும். முதலில் உங்களுடைய குழந்தையின் மருத்துவரிடம் பேசுங்கள்.

அவதானக் குறை மிகையியக்கம் கோளாறு (ஏடிஹெச்டி) போன்ற கோளாறுகள் இருப்பதால் குழந்தைகள் சில சமயங்களில் சண்டை போடுவார்கள். இது அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருக்கும். பொதுவாக உங்களுடைய குழந்தைகளின் நடத்தையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் அதற்காக ஒரு நிபுணரிடம் பேசுவது நல்லது.

அவர்கள் சண்டை போடுவது, உங்களை அதிகமாக பாதித்தாலோ அல்லது நீங்கள் மன அழுத்தமாக உணர்ந்தாலோ, இதற்கு நிபுணரின் பிறரின் உதவியை நாடுவது நல்லது. இதை நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிற பெற்றோருடன் பேசுவதன் மூலமாகத் தொடங்கலாம். உங்களுக்கு உடனடியாக உதவி ஏதாவது தேவைப்பட்டால், பெற்றோருக்குரிய உதவி எண்ணை அழைக்கலாம்.

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.