
சுருக்கம்
கருத்தடுப்பு முறைகளை எடுத்துக் கொள்ளாமல் போவது அல்லது அவற்றை முறையாக கையாளாமல் இருப்பது அல்லது திடீர் கர்ப்பம் எப்படி ஏற்படுகிறது என்பதை முறையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் தேவையற்ற கர்ப்பம் உண்டாகுகிறது.
குழந்தைகள் அல்லது கூடுதலான குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள சமயத்தில் விரும்பாத வகையில் அல்லது எதிர்பாராத வகையில் ஏற்படுவதுதான் திட்டமிடப்படாத கர்ப்பம் என்று வரையறை செய்யப்படுகிறது. பெற்றோரின் விரும்பத்தக்க கால வரையறைக்கு முன்பாகவே உருவான கர்ப்பம் என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம். கருத்தடுப்பு முறைகளை முற்றிலுமாக பயன்படுத்தாமல் இருப்பது அல்லது அவற்றை முறையாக பயன்படுத்த தவறுவது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் திட்டமிடப்படாத கர்ப்பம் உண்டாகுகிறது.
100 சதவீதம் செயல்படக் கூடிய பிறப்புக் கட்டுப்பாடு முறையை கடைப்பிடிக்கவில்லை என்பது தான் பரவலாக அறியப்பட்ட காரணமாக இருக்கிறது. சில சமயம் பிறப்பு கட்டுப்பாடு முறைகளை கடைப்பிடித்தாலும் கூட, அதையும் மீறி ஏதேச்சையாக கர்ப்பம் உண்டாகுவதற்கு வாய்ப்பு உண்டு. பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், ஆணுறைகள், கருப்பை உள்தடுப்பு கருவி போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படும் கருத்தடுப்பு முறைகளாகும். ஒருவர் பிறப்புக் கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தவே இல்லை அல்லது முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அவர்கள் கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.
திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு மாபெரும் காரணம் என்னவென்றால் பிறப்புக் கட்டுப்பாடு உத்திகளை முறைப்படி பயன்படுத்தாமல் போவதுதான். அது எந்தவகை கருத்தடுப்பு முறையானாலும் சரியான வகையில் பயன்படுத்தவில்லை என்றால் இவ்வாறு நிகழும். சில பெண்கள் பிறப்புக் கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்துவதில்லை. சிலர் தொடர்ந்து பயன்படுத்த தவறுகின்றனர். கருத்தடுப்பு உத்திகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் வேறுபடுகின்றன. சில பெண்கள் இதை பயன்படுத்த விரும்புவதில்லை. சிலர் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் உள்ளனர். சில சமயம் கருத்தடுப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அந்தப் பெண்ணின் இணையர் விரும்புவதில்லை.
தாங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு என்பதை சில பெண்கள் உணருவதில்லை. குழந்தையின்மை பிரச்சினையை எதிர்கொண்டவர்கள் மற்றும் சீரற்ற மாதவிலக்கு கொண்டவர்கள், தங்களுக்கு கர்ப்பம் நிகழாது என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், அவர்கள் கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
கர்ப்பத்தை தடுக்க நினைக்கும் அல்லது தாமதப்படுத்த நினைக்கும் பெண்கள் கீழ்காணும் வகையில் கருத்தடுப்பு முறைகளை கையாளலாம்.
ஒரு பெண் எதிர்பாராத விதமாக, தான் கர்ப்பம் அடைந்திருப்பது குறித்து அறிய வரும்போது, அவர்களுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களாக இது இருக்கிறது, அடுத்து செய்ய வேண்டியது என்ன, என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று குழப்பம் அடைவார்கள். இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர்கள் தான் பதில் அளிக்க முடியும். ஏற்கனவே OB-GYN சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம் மற்றும் கூடுமான வரையில் நேரில் சந்திக்கலாம். எனினும், இதற்கு முன்பு எந்தவொரு மருத்துவரிடமும் ஆலோசனை செய்தது இல்லை என்றால், முதலில் ஒரு மருத்துவரை கண்டறிய வேண்டும். அருகாமையில் உள்ள கிளினிக் அல்லது மருத்துவமனையை பரிந்துரை செய்யும்படி உங்கள் நட்பு வட்டத்தில் உதவி கோரலாம்.
பரிசோதனை மூலமாக கர்ப்பம் உறுதி செய்யப்படும்போது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி போன்ற உணர்வுகள் கிடைக்கக் கூடும். எனினும், எதிர்பாராத கர்ப்பம் என்றால், அதுகுறித்து ஒருவருக்கு கூடுதலான உணர்வுகள் மேலோங்கக் கூடும். அது இயல்பானது தான். ஒரு பெண் மன அழுத்தத்தை உணரலாம் அல்லது குதூகலமாக இருக்கலாம் அல்லது சந்தேக நிலையில் இருக்கலாம் அல்லது அமைதி அடையலாம் அல்லது உடைந்து போகலாம், இவை அனைத்துமே இயல்பானவை மற்றும் அர்த்தமுள்ளவை.
இன்னும் சொல்லப் போனால், இந்த உணர்வுகளை கடந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிட வேண்டும். எண்ணற்ற உணர்வலைகள் மேலோங்கும்போது தனக்கு தானே ஆறுதலாக இருப்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும். தனக்கு இருப்பது எதிர்மறையான அல்லது இயல்பான அல்லது நேர்மறையான உணர்வு என்ற எந்தவொரு முன்முடிவுக்கும் வந்துவிடக் கூடாது.
உங்களுக்கான வாய்ப்புகளை கண்டறிவது :
தனக்கு திட்டமிடப்படாத கர்ப்பம் உண்டாகியிருப்பதை ஒரு பெண் உறுதி செய்திருக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த வாய்ப்புகள் என்பது விரிவானதாக இருக்கும். உதாரணத்திற்கு கர்ப்பம் உண்டாகி எவ்வளவு நாட்கள் ஆகிறது, அவர் எங்கு வாழுகிறார் மற்றும் அவர்களின் முன்னுரிமை என்ன என்பதை பொருத்து மாறுபடும்.
பல சந்தர்பங்களில் திடீர் கர்ப்பம் குறித்து பெற்றோருக்கு தெரிய வரும்போது அது விரும்பத்தகுந்த கர்ப்பமாக மாறிவிடுகிறது.
ஒருவர் கர்ப்பமாக உள்ளார். ஆனால் பெற்றோராக இருக்க விரும்பவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றால், அந்தக் குழந்தையை தத்தெடுத்து பெற்றோராக இருக்கும்படி வேறு ஒருவரின் உதவியை நாடலாம். இந்த தத்தெடுப்பு முறையை ஏற்பாடு செய்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. தத்தெடுப்பு முகமைகள், சமூக வலைதளங்கள், பெற்றோராக விரும்புபவர்கள், வாய்வழிச் செய்தி என பல முறைகளில் தத்தெடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்கலாம்.
சில பெண்கள் கர்ப்பத்தை கலைக்க விரும்பலாம். கருக்கலைப்பை தேர்வு செய்வது ஒருவரது தனிப்பட்ட விருப்பமாகும் மற்றும் இதை சொல்வதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. ஒவ்வொரு நாடு அல்லது மாநிலத்தை பொருத்து கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை என்பது 6 வாரங்கள் முதல் 15 வாரங்கள் வரையில் வேறுபட்டதாக இருக்கிறது.
கர்ப்பம் உறுதியான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது என்று ஒருவர் திட்டமிட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், உறுதியான உதவிகளைப் பெறுவது அவசியமாகும். இந்த உதவி என்பது நட்பு வட்டம், குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினர் அல்லது வேறு யாரிடமும் இருந்தும் இருக்கலாம். கர்ப்பம் குறித்து நீங்கள் எத்தகைய முடிவை எடுத்திருந்தாலும் உங்களுக்குள் உணர்வுகள் நிறைந்திருக்கும் மற்றும் இதை எதிர்கொள்வதற்கான உதவிகளை கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பது குறித்து நீங்கள் கவலை கொண்டிருப்பின், மனநல சிகிச்சை நிபுணர்கள், வாழ்க்கை பயிற்றுநர் அல்லது கருத்தரிப்பு / கருக்கலைப்பு ஆலோசகர் போன்றோரின் உதவியை நாடலாம்.
ஒரு முடிவெடுக்க போதுமான தகவலை ஒரு பெண் கொண்டிருக்கும் பட்சத்தில், முதல் வேளையாக இந்த திட்டமிடப்படாத கர்ப்பத்தை தொடருவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து அவர்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். கீழ்காணும் கடுமையான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கை தனிப்பட்ட விருப்பத்திற்கு உரியதாகும். மேலும் தனக்கென தனி குடும்பம் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கானது. இந்த எதிர்பாராத கர்ப்பம் காரணமாக அதிர்ச்சியான உணர்வு நீடிக்கிறது என்றால், எதிர்காலத்தில் இதுபோன்ற தேவையற்ற கர்ப்பங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனி ஒருபோதும் கர்ப்பம் வேண்டாம் என்று ஒருவர் முடிவு செய்துவிட்டால், நிரந்தர கருத்தடுப்பு முறைகளை அவர்கள் பின்பற்றலாம். உதாரணத்திற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆண்களுக்கான வாசக்டமி கருத்தடுப்பு சிகிச்சையை செய்து கொள்ளுமாறு அவர்களின் இணையர்களிடம் கேட்கலாம். அப்படி இல்லை என்றால் ஹார்மோன் சாராத அல்லது ஹார்மோன் சார்ந்த பிறப்புக் கட்டுப்பாடு முறைகளை கடைப்பிடிக்கலாம். அவை பின்வருமாறு
தான் விரும்பாமலேயே கர்ப்பம் அடைந்திருக்கிறோம் என்ற விஷயம் ஒரு பெண்ணுக்கு மிக சமீபத்தில் தெரிய வந்துள்ளது என்றால் அவர் மனதில் உணர்வுகள் வெள்ளமென நிறைந்திருக்கும். இந்த தகவலை ஒருவர் பரிசீலித்து வரும் அதேசமயத்தில், இந்த விளைவுகள் அனைத்துமே முழுமையாக இயல்பானவை என்பதை ஒருவர் உணர வேண்டும். ஒருவர் முழுமையாக தயாரான பிறகு, கர்ப்பம் குறித்து அவர்கள் எடுத்திருக்கும் முடிவை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.




This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |