hamburgerIcon

Orders

login

Profile

Profile
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • New Mom arrow

  • புதிதாக தாய்மையடைந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழும் முறை: தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் arrow

In this Article

    புதிதாக தாய்மையடைந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழும் முறை: தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

    New Mom

    புதிதாக தாய்மையடைந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழும் முறை: தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    புதிதாக தாயாகியிருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான 5 விஷயங்கள்

    பிரசவத்திற்கு பிந்திய காலம் அதாவது போஸ்ட்பார்டம் பீரியட் என்பது பிரசவம் முடிந்த பின் தொடங்குகிறது. குழந்தை பிறந்த பின்னர் ஒரு பெண்ணின் உடல்நிலை அவள் கர்ப்பமாவதற்கு முன் இருந்தது போன்ற பழைய நிலைக்கு திரும்பும் போது போஸ்ட்பார்டம் பீரியட் முடிகிறது. 6 முதல் 8 வாரங்கள் வரை நீளக் கூடிய இந்த போஸ்ட்பார்டம் பீரியட் காலகட்டத்தில், ஒரு பெண் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை அடைகிறாள். ஏராளமான பொறுப்புகளுக்கிடையே, புதிதாக தாயாகி இருக்கும் ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பணியிலும், தன் உடலில் ஏற்படும் மாறுதல்களை சமாளிப்பதிலும் பெருமளவு போராடுகிறாள். மேலும் இவைகளுக்கு எல்லாமிடையே, பிரசவத்திற்கு பின்னர் எடை குறைப்பதென்பது உண்மையாகவே ஒரு பெரும் போராட்டம் தான். புதிய தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முதன்மையான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

    சமச்சீரான, ஊட்டச்சத்து மிக்க உணவுமுறை அவசியமானது

    புதிய தாய்மார்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், சிக்கன், மற்றும் முழு தானியங்கள் போன்ற சமச்சீரான, ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையை பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றும் போது தான், குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். ஆகவே, எடை குறைப்பிற்கான பிரசவத்திற்கு பிந்திய டயட் பிளானில், தயிர், பாலாடைக் கட்டி மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள பால் போன்றவை இருக்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ட்ரௌட் மீன், சால்மன் மீன் போன்ற சத்தான உணவுகளை பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், புதிய தாய்மார்கள் தங்கள் உடல் எடையை போதுமான அளவு குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

    புதிய தாய்மார்களின் பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு டயட் பிளானில், டேலியா (கோதுமை குருணை), பிரவுன் ரைஸ் (கைக்குத்தல் அரிசி), முழு கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளும் இருக்க வேண்டும். இந்த உணவுகள் செரிமானத்தை தாமதப்படுத்தி, பசியை குறைக்க உதவும். மேலும் இந்த உணவுகள் அவர்களின் வயிறு நிறைவாக இருப்பது போல் உணரச் செய்வது மட்டுமின்றி, பசியையும் கட்டுப்படுத்தும். இதனால் அவர்களின் தினசரி எடுத்துக் கொள்ளும் கலோரி அளவுகள் குறைகிறது, மேலும் உடலில் உள்ள கொழுப்பு கரைவதற்கும் உதவியாக உள்ளது. வெள்ளை வெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை எடுத்துக் கொள்வது ஆற்றலை அதிகரிப்பதற்கும், அழகான சருமத்தினையும், கூந்தலையும் பெறுவதற்கும் உதவுகிறது. ஆயினும் இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம்

    புதிய தாய்மார்கள் சில சமயங்களில் உணவை தவிர்ப்பார்கள், இது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு நடைமுறை செயல்பாட்டிற்கும் கூட தொந்தரவாக அமைகிறது. குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலை இருந்தாலும் கூட, அவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். குழந்தை தூங்கும் போது, அவர்கள் சாப்பிட்டு விட வேண்டும். நீண்ட நேரத்திற்கு பசியோடு இருப்பது சரியல்ல, ஏனெனில் பிறகு பசியை போக்குவதற்கு அதிகப்படியாக சாப்பிட நேரிடுகிறது, இதனால் அவர்களின் அதிகரித்த எடையை குறைப்பது கடினமாகி விடும். புதிய தாய்மார்கள் இது போன்று அதிகப்படியாக உணவு எடுத்துக் கொள்வதனால், சரியான அளவு ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ள முடியாமல் போவதுடன், உடலில் கொழுப்பும் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை உண்பதற்கு பதிலாக, பழ வகைகள் அல்லது சிறிதளவு உலர்ந்த பழங்கள் அல்லது கொட்டைகளை உண்ணவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் பொருட்டு, ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து உண்பது மிக முக்கியமாகும்.

    நீர்ச்சத்து நிறைந்திருப்பதும் அவசியம்

    உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது தான், புதிய தாய்மார்கள் பிரசவத்திற்கு பின் தங்கள் எடையை குறைப்பதற்கு வழங்கப்படும் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்றாகும். போதிய அளவு தண்ணீர் அருந்துவது, வெப்பத்தினை எதிர்த்து போராட அவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, உடலில் உள்ள கூடுதல் கலோரிகளையும் எரிப்பதற்கு உதவுகிறது. நொறுக்குத் தீனிகளை உண்பதற்கு முன், அவர்கள் வயிறு முட்ட தண்ணீர் அருந்த வேண்டும், இதனால் அவர்கள் வயிறு நிறைந்தது போல் உணர்வார்கள், மேலும் துரித உணவு உண்பதற்கு வயிற்றில் இடமிருக்காது. குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், ஏனென்றால் தாய்ப்பாலில் 90% தண்ணீர் தான் உள்ளது. தினந்தோறும் குறைந்தபட்சம் 16 கிளாஸ் தண்ணீரை அருந்தும் பாலூட்டும் தாய்மார்களும், அவர்களின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரின் நிறம் மற்றும் ஒரு நாளில் சிறுநீர் கழிக்கின்ற அளவு ஆகிய இரு காரணிகளை கொண்டே, மேற்குறிப்பிட்ட அளவு தண்ணீரை அருந்த வேண்டுமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். போதிய அளவு நீர் அருந்தும் புதிய தாய்மார்களின் சிறுநீர் தெளிவாக இருக்கும், அவர்கள் 3-லிருந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆகவே, வெறும் தண்ணீர் மட்டுமின்றி, இளநீர், பழச்சாறு, காய்கறி சூப், மற்றும் சிக்கன் சூப் போன்றவற்றை குடிப்பதும், உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து நிறைந்திருப்பதற்கு உதவும்.

    உடற்பயிற்சி மேற்கொள்ளவும்!

    பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பு டயட்டினை சரியான முறையில் பின்பற்றுவதோடு, புதிய தாய்மார்கள் வலுப்பெறுவதற்கான பயிற்சியையும், ஏரோபிக் உடற்பயிற்சிகளையும் தங்களின் அன்றாட அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது எடையை குறைப்பதற்கு உதவுவதோடு மட்டுமின்றி, சரியான முறையில் உடற்பயிற்சி செய்வது எலும்புகளையும், தசைகளையும் வலுவாக்குகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, மேலும் மனச்சோர்வு மற்றும் தூக்கம் வராத தொந்தரவுகளிலிருந்தும் விடுபட உதவுகிறது. பிரசவத்திற்கு பின்னர் எடையை குறைப்பதற்காக ஜிம்-மிற்கு செல்வது அவசியமில்லை. சுறுசுறுப்பாக நடைபயிற்சி மேற்கொள்வது தசைகள் செயல்படுவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் போதுமானது. யோகா, தியானம், ஆடல், நீச்சல் மற்றும் ஜாகிங் செய்வதும் கூட எடை குறைப்பிற்கு உதவும். ஆயினும் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் மருத்துவரின் அனுமதியை பெற்றிடவும், குறிப்பாக சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

    போதிய தூக்கம் அவசியம்

    புதிய தாய்மார்கள் தங்கள் பிரசவத்திற்கு பிந்திய எடை குறைப்பிற்கான குறிப்புகளுள் பொதுவாகவே சொல்லப்படுவது, போதுமான அளவிற்கு தூக்கத்தை பெறுவது தான். ஏனென்றால், சரியாக தூங்காமல் இருக்கும் போது, எடையை குறைப்பது கடினமாகி விடும். மேலும், அவர்கள் தொடர்ச்சியாகவே முற்றும் சோர்வுற்றிருக்கும் காரணத்தால், அவர்களின் உடல் அதிகப்படியான மன அழுத்தத்தை உண்டாக்கும், கார்ட்டிசால் உள்ளிட்ட மன அழுத்த ஹார்மோன்களை வெளியேற்றும், இதனால் உடல் எடை அதிகரிக்கும். எனவே தான் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், எடை குறைப்பிற்கும் உதவுவதால், புதிய தாய்மார்கள் போதிய அளவு தூங்குவது அவசியமாகும். முழுமையாக 8 மணி நேரத்திற்கு நன்றாக தூங்க முடியாவிட்டாலும் கூட, அவர்களின் குழந்தை தூங்கும் போது அவர்கள் தூங்கி ஓய்வெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பகல் வேளையில் எவ்வளவு குட்டித் தூக்கம் போட முடியுமோ, அவ்வளவு தூங்கிக் கொள்ளவும், இரவில் நன்கு தூங்குவதற்கு வேண்டி, சீக்கிரமே படுக்கைக்கு சென்று விடவும்.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கு உதவும் முதன்மையான 5 வழிகள்

    முடிவுரை

    ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள், ஆயினும் அதன் கூடவே குழந்தையையும், தன்னையும் கவனித்துக் கொள்வதற்கான பொறுப்புகளும் அவளுக்கு மிகுந்து விடுகிறது. எனவே, உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு தேவையான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானது. பலரும் பல விதமாக ஆலோசனை சொல்லக் கூடுமாகையால், ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது. மேற்கொண்டு, புதிய தாய்மார்கள் மேலும் தகவல்களும், குறிப்புகளும் பெறுவதற்கு

    மைலோ-வில் கட்டுரைகளையும், தகவல் ஆதாரங்களையும் பார்க்கவும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

      arrow
    • Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

      arrow
    • Baby kicks KB Marta hai Plz tell mi

      arrow
    • PCOD kya hota hai

      arrow
    • How to detect pcos

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Image related to Paternity Leave

    Paternity Leave

    தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil) 

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.