Raise A Happy & Healthy Baby
Get baby's growth & weight tips
Join the Mylo Moms community
Get baby diet chart
Get Mylo App
Want to raise a happy & healthy Baby?
Breathlessness
10 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பெற்றோராக இருப்பது என்பது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாகும். அது சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை மட்டுமல்ல பெற்றோருக்கு மிகப் பெரிய பொறுப்பையும் தருகிறது. அவ்வாறு இருக்கையில், சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் கூட பெற்றோருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கைக்குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது, அடிக்கடி சுவாசம் ஒழுங்கற்று காணப்படலாம். குழந்தைக்கு தேவையான அனைத்தும் அப்பொழுது தான் வளரத் தொடங்கும் என்பதால், அவர்களின் சுவாச விகிதம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். இதனால் அவர்கள் சுவாசத்திற்கு இடையில் நீண்ட இடைவெளிகள் ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறான சத்தங்களையும் குழந்தைகள் எழுப்பலாம். ஆனால், குழந்தையின் சுவாச அமைப்பானது பெரியவர்கள் போல் இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பிறந்த குழந்தைககள் மூக்கிலிருந்து மூச்சு விடாமல் வாய் வழியாக கூட மூச்சு விடலாம். குழந்தைகள் பிறந்ததில் இருந்தே சுவாசப்பாதையில் அம்னோடிக் திரவம் மற்றும் மெகோனியம், சிறிய சுவாச சுழற்சிகள் போன்றவை இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சுவாச முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் சில வேறுபாடுகள் இருப்பது இயல்பானது தான்.
இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தை எவ்வாறு மூச்சு விடுகிறது என்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தான் வேண்டும். அவவறு செய்தால் தான் ஏதேனும் அசாதாரணங்கள் இருந்தால், அதற்கான தீர்வை விரைவில் பெற முடியும்.
சந்தேகத்திற்குரிய எதேனும் ஒன்றை உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வது பாதுகாப்பானது.
ஒழுங்கற்ற சுவாசம் என்பது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் பெற்றோராக உங்களுக்கு கவலையாகவும் இருக்கலாம். ஆனால், எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே, குழந்தை சுவாசிப்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை நாங்கள் உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
உங்கள் குழந்தை வழக்கமாக எவ்வாறு மூச்சு விடுகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்தால் உங்களுக்கு அதில் ஏதும் வேறுபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் அதனை கண்டறிவது மிகவும் சுலபமாகும்.
உங்கள் குழந்தை எவ்வாறு சுவாசிக்கிறது என்பதை பதிவு செய்து, நிபுணத்துவ கருத்தைப் பெற மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், பல சுகாதார வல்லுநர்கள் இப்போது ஆன்லைன் சந்திப்புகள் அல்லது மின்னஞ்சல் தொடர்புகளை வழங்குகிறார்கள், இது தேவையற்ற பயணங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.குழந்தைகள் எப்போதும் தங்கள் முதுகு கீழ் இருப்பது போல் (மல்லாந்து) தூங்க வேண்டும்
ஒரு ஆய்வின் படி, குழந்தை எப்போதும் முதுகு கீழ் இருப்பது போல் தூங்குவது தான் நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி (எஸ்ஐடிஎஸ்) ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் குழந்தைக்கு சுவாசத் தொற்று பிரச்சனை இருந்தால் மற்றும் அதனால் சரியாக தூங்கவில்லை என்றால், மூச்சடைப்பில் இருந்து விடுபட பாதுகாப்பான வழிகளைக் கண்டறிய உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். மேலும், இத்தகைய சமயத்தில் குழந்தையை அல்லது குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தொட்டிலை சாய்த்து வைப்பது பாதுகாப்பானது அல்ல.
மருந்தகங்களில் விற்கப்படும் பிஸியோலாஜிக்கல் சீரம் டிராப்கள், குழந்தைக்கு சளி கட்டிக்கொண்டிருந்தால் அதனை குணப்படுத்த உதவும்.எளிதில் சுவாசிக்க உதவும் வகையிலான ஆடைகளை அணிவியுங்கள்
சில நேரங்களில், தொந்தரவு அல்லது அதிக வெப்பம் காரணமாக குழந்தையின் சுவாச விகிதம் அதிகமாகும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு சிரமமின்றி சுவாசிக்க உதவும் வகையிலான ஆடைகளை அணிவது அவசியம்.
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டும் 8 எளிய அறிகுறிகள்
பொதுவாக சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களை விட கைக்குழந்தைகள் வேகமாக சுவாசிப்பார்கள். அவர்கள் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறான சத்தங்களை கூட எழுப்புவார்கள். கடுமையான மருத்துவ நிலைமை காரணமாக குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது என்பது அரிதான ஒன்று தான். உங்கள் குழந்தைக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால் உங்களால் அதை உடனடியாக உணர முடியும். அதற்கு உங்கள் குழந்தை வழக்கமாக எவ்வாறு சுவாசிக்கிறது என்பது பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள், அதில் ஏதேனும் அசாதாரணங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
வாஷபிள் நர்சிங் பேட்கள்(washable nursing pads) மார்பகக் கசிவை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்குமா?
ஒயிட்னிங் கிரீம்கள் உங்கள் முகத்துக்கு பயனளிக்கிறதா?
முகத்தில் வைட்டனிங் கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
தாய்ப்பால் கொடுப்பதற்கான சிறந்த நிலைகள்
3 மாத குழந்தை வளர்ச்சியின் மைல்கற்கள்
பிரசவத்தை விரைவாகத் தூண்டுவதற்கும் பாதுகாப்பான பிரசவத்துக்கும் தேவையான 10 பயனுள்ள பயிற்சிகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Skin - Daily Wellness | By Concern | Digestive Health | Immunity | By Ingredient | Saffron | Wheatgrass | Skin - Weight | By Concern | Weight Management | By Ingredient | Apple Cider Vinegar | Skin - Bath & Body | By Concern | Body Moisturizer | Brightening | Tan Removal | By Ingredient | Skin - Hygiene | By Concern | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |