Hair Problems
25 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீளமான, ஆரோக்கியமான தலைமுடி என்பது பலரின் வெளித்தோற்றம் மற்றும் தன்மதிப்புணர்வை அதிகரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகிமையின் மகுடமாய் விளங்கும் தலைமுடியானது ஒருவரது ஆட்பண்பு மற்றும் நடைப்பாங்கின் நேரடி வெளிப்பாடு ஆகும். இத்தகைய பெருமை வாய்ந்த தலைமுடி மெலிந்து போனாலோ அல்லது உதிர ஆரம்பித்தாலோ அது ஒருவருக்கு வருத்தத்தை அளிக்கும். இருப்பினும், முடி உதிர்வை சமாளிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
முடி உதிர்வை குறைக்கவும் அல்லது முற்றிலுமாக நிறுத்தவும் அதற்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறிவதே சிறந்த வழி ஆகும். அவ்வப்போது ஏற்படும் முடி உதிர்வு தற்காலிகமானது தான். அது குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சை அல்லது மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படலாம். இந்த நிகழ்வு முடிந்த பின் தலைமுடி மீண்டும் வளர ஆரம்பித்து விடும். இயற்கையான வளர்ச்சி சுழற்சியில் அன்றாடம் 100 முடி இழைகள் உதிர்வை வழக்கமான ஒன்று. ஆனால், வழக்கத்தை விட அதிகமான முடி உதிர்வை அனுபவிக்கிறீர்கள் என்றால், ஒரு மருத்துவரை அணுகி அதற்கு பின்னால் உள்ள காரணத்தை அறிந்து, தேவையான தீர்வுகளை பின்பற்றவும்.
முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள் நபருக்கு நபர் மாறுபடும். தனிநபர்களுக்கு முடி உதிர்வதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
உங்கள் பெற்றோருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்திருந்தால் உங்களுக்கு அது இருக்க வாய்ப்புள்ளது. ஆண்களிடம் இது மிகவும் அதிகமாக காணப்பட்டாலும், பெண்களுக்கு மரபணு ரீதியாக இன்ஹெரிடட் அலோபீசியா உருவாக வாய்ப்புள்ளது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முடி இழைகளின் உணர்திறனை அதிகரித்து, முடி வேர்களை வலுவிழக்கச் செய்து, இறுதியில் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. மெனோபாஸ், பிசிஓடி, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர்தைராய்டிசம், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் போன்றவை தனிநபர்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
பல கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வழக்கமாக நீர்ப்போக்கு, சோர்வு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை ஏற்படுகின்றன. இது மயிர்க்கால்களில் உணர்திறனை அதிகரித்து முடி உதிர்தல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த காரணிகள் அனைத்தும் முடி உதிர்தலுக்கு தொடர்ந்து வழிவகுக்கிறது.
தொடர்ச்சியான உடல் நலமின்மை, அதிகப்படியான உடல் எடை இழப்பு மற்றும் கடின உடல் உழைப்பு ஆகியவை உடலை சோர்வடையச் செய்யலாம். இது மயிர்க்கால்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக விரைவான முடி உதிர்தல் ஏற்படுகிறது.
பூஞ்சை, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளான செபோர்ஹெக் டெர்மடிடிஸ் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சொரியாசிஸ் போன்றவை முடி வேர்களை வலுவிழக்கச் செய்து மயிர்க்கால்களுக்கு தீங்கு விளைவிக்கும், இதன் விளைவாக முடியானது மெலிந்து, உடைந்து, முடி உதிர்வு ஏற்படுகிறது.
இது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதில் நோயெதிர்ப்பு மண்டலமானது தலைமுடியை மாசுபடுத்தும் பொருளாகக் கருதி மயிர்க்கால்களைத் தாக்கத் தொடங்குகிறது, இதன் விளைவாக முடி உதிர்கிறது. கார்டிகோஸ்டீராய்டு ஊசிகள், ஆயின்மென்டுகள் அல்லது டாபிகல் கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற பல்வேறு சிகிச்சைகளை அலோபீசியா அரேட்டா நோய்க்கு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
சில மருத்துவ சிகிச்சைகளின் பக்க விளைவுகள் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். கீமோதெரபி, ஸ்டீராய்டுகள் மற்றும் டைபாய்டு, இதய நோய் மற்றும் மனச்சோர்வுக்கான மருந்துகள் போன்ற சில சிகிச்சைகள் முடி உதிர்வை ஏற்படுத்தும். பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளின் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று அலோபீசியா ஆகும். ரெட்டினாய்டுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், கர்ப்பத்தடை மாத்திரைகள், உறைதல் தடுப்பு மாத்திரைகள், வலிப்பு மாத்திரைகள், உயர் இரத்த அழுத்த மாத்திரைகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், எடை குறைப்பு மருந்துகள், ஹார்மோன் மாற்று சிகிச்சை, பார்கின்சன் நோய் மருந்துகள் மற்றும் தைராய்டு மருந்துகள் ஆகியவை முடி உதிர்வைத் தூண்டக்கூடிய பிற மருந்துகள் ஆகும்.
தைராய்டு கோளாறுகள் மற்றும் தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் எப்போதும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இந்த நிலையில், முடி உதிர்தலானது உச்சந்தலை முழுவதும் ஏற்பட்டு முடி பற்றாக்குறை தோன்றுகிறது. இருப்பினும், சரியான சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளரத் தொடங்கும்.
உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு, எதிர்பாராத இரத்த இழப்பு மற்றும் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவை சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கிறது
வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்ற சில ஊட்டச்சத்துக்களை மருந்துகளாகவோ அல்லது மாத்திரைகளாகவோ எடுத்துக்கொள்வது அதிகமாக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். வைட்டமின்களை அவற்றின் செறிவூட்டப்பட்ட வடிவில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, பழங்கள் மற்றும் பிற இயற்கை உணவுகளை சாப்பிடுவது நல்லது.
ஹேர் புராடக்ட்டுகள் மற்றும் ஹேர் ஆக்சஸரீஸ்களை அதிகமாகப் பயன்படுத்துவது முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. சோடியம் லாரில் சல்பேட் ஷாம்புகள் மற்றும் ஹேர் ஸ்ப்ரேக்கள் போன்ற சில ஹேர் புராடக்ட்டுளில் உங்கள் முடி மற்றும் உச்சந்தலைக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. எலாஸ்டிக் ரப்பர் பேண்டுகள் போன்ற ஹேர் ஆக்சஸரீஸ்கள் பயன்படுத்தும்போது முடியை இழுப்பதால் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
உங்கள் உணவில் இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். வைட்டமின் டி குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்தும். எனவே, அவ்வப்போது வீட்டிற்கு வெளியே சென்று சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செலவிடுவது அவசியம்.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் உடைய பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளது. எனவே இது இயல்பை விட அதிக அளவு ஆண்ட்ரோஜன்களை உருவாக்குகிறது. தலையில் உள்ள முடியானது மெலிதாக வளரவும், முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த ஆண்ட்ரோஜன்களே காரணம். கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகள், முகப்பரு மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை பிசிஓஎஸ் ஏற்படுத்தக் கூடும்.
வறட்சியான, உடையக்கூடிய மற்றும் பிளவுபட்ட முனைகள் ஆகியவை முடியை கூடுதல் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. எனவே, முடி ஆரோக்கியமாக இருப்பதற்கு, ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிலோ அல்லது சலூனிலோ டிரிம் செய்து கொள்வது அவசியம். எனவே முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், பிளவடைந்த முடியின் முனைகளை அகற்றவும், வைக்கோல் மாதிரியான இழைகள் போன்ற சேதமடைந்த முடியை டிரிம் செய்யலாம். உங்கள் தலைமுடியை டிரிம் செய்வதற்கு முன்பு ஷாம்புவை உபயோகபடுத்தவும். மேலும் உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.
· முடி உதிர்தல் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களில் மன அழுத்தமும் ஒன்றாகும். இது முடியின் வளர்ச்சியை சீர்குலைத்து, இளநரைக்கும் வழிவகுக்கிறது. மேலும், தொடர்ந்து தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் செய்வது மன அழுத்தத்தை நன்கு குறைக்கிறது.
சூடான நீரில் குளிப்பது இதமாக இருந்தாலும், இது முடி இழைகளை நீரிழக்க செய்து, அதன் இயற்கையான எண்ணெய் தன்மையை தலையிலிருந்து அகற்றி, உலர்ந்த, உடையக்கூடிய முடியாக மாறுவதற்கு வழிவகுக்கிறது. மாறாக, வெதுவெதுப்பான நீரை உங்கள் தலைமுடியை சுத்தம் செய்ய பயன்படுத்தவும்.
முடி இழைகள் எளிதில் உடையக்கூடியதாக இருப்பதில்லை. ஆனால் ஈரமாக இருக்கும்போது எளிதில் உடைந்து போகும். எனவே, அதிக பல் இடைவெளி கொண்ட சீப்பை அவசியம் பயன்படுத்தவும் அல்லது தலை முடியை சீவுவதற்கு முன் அவற்றை காற்றில் நன்கு உலர வைக்கவும்.
உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து மிகவும் இறுக்கமாக இழுப்பது தலைமுடிக்கு சேதத்தை விளைவிக்கும். எனவே, இது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், தூங்கும் போது முடியை இறுக்கமாக கட்டாமல் இருப்பதும் நல்லது.
உச்சந்தலையில் ஹேர் ஆயில் மசாஜ்:
தேங்காய் எண்ணெய், ஆர்கான் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்வது தலை முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த எண்ணெயை நீங்கள் சிறிது சூடாக்கியும் பயன்படுத்தலாம். இது உங்கள் தலையின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, மயிர்க்கால்களை புத்துயிர் பெறச் செய்து, வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்துகிறது. சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு இருமுறை இருபது நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
உங்கள் முடி வேர்கள் ஆரோக்கியமாக வளரவும், புத்துயிர் பெறவும் நீங்கள் வீட்டில் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப, வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம். பின்வரும் DIY ஹேர் மாஸ்க்குகளை நீங்கள் பயன்படுத்தலாம்:
கிரீன் டீயில் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) உள்ளது. மேலும், முட்டைகள் முடி ஆரோக்கியமாக வளர தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதால், முடியை பராமரிப்பதற்கான முக்கிய பொருளாக உள்ளது. இரண்டு டேபிள் ஸ்பூன் புதிதாக காய்ச்சப்பட்ட கிரீன் டீயை 1-2 முட்டை மஞ்சள் கருவுடன் நன்கு கலக்கவும். வலுவான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற இந்த கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும்.
வெங்காயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கரோட்டின் போன்ற முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முடி உதிர்வு உள்ளவர்களுக்கு, ஆனியன் (வெங்காயம்) சாறு முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. ஒரு முழு வெங்காயத்தை அரைத்து சாற்றைப் பிரித்தெடுக்கவும். இந்த ஆனியன் (வெங்காயம்) சாற்றை காட்டன் துணியை பயன்படுத்தி உச்சந்தலையில் தேய்க்கவும். 20-30 நிமிடங்களுக்குப் பிறகு தலை முடியை நன்கு கழுவவும்.
கற்றாழையில் ஈரப்பதமூட்டும் தன்மை உள்ளது மற்றும் இது முடியின் தண்டு பகுதியை மென்மையாக்கி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து உச்சந்தலையில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தலை முடியை நன்கு கழுவவும்.
மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தவும்: உங்கள் தலைமுடியைக் சுத்தம் செய்வதற்கு எப்போதும் மூலிகை அல்லது மருத்துவ குணமுடைய மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். இது பொடுகு மற்றும் தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கிறது. உங்கள் விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து ஷாம்புவை தடவவும். ஷாம்புவை உங்கள் முடியில் அழுத்தமாக தேய்க்க வேண்டாம். மேலும், உங்கள் தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டு அலசவும்.
எப்போதும் தலைமுடிக்கு ஈரப்பதமூட்டக்கூடிய மற்றும் ஊட்டமளிக்கக்கூடிய கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதனை முடிந்தவரை தலையில் படாமல், முடி இழைகளுக்கு மட்டும் தடவவும். அதை 20 நிமிடங்கள் கழித்து அலசவும். உங்கள் தலைமுடியைக் கழுவும் ஒவ்வொரு முறையும் இதனை செய்யவும். வாரம் ஒரு முறை, நீங்கள் ஒரு ஆழமான கண்டிஷனிங் மாஸ்க்கை வீட்டில் முயற்சி செய்யலாம். தேன் மற்றும் பால் சேர்த்து கலக்கி, அதை உங்கள் தலைமுடியில் தடவி, 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். பின்னர், உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி கழுவவும். முடி உதிர்வதைத் தடுக்கக்கூடிய ஆனியன் (வெங்காயம்) ஹேர் ஃபால் கண்டிஷனரை நீங்கள் பயன்படுத்தலாம். முடி உதிர்தலுக்கான சில ஆனியன் (வெங்காயம்) கண்டிஷனரின் நன்மைகள் பின்வருமாறு:
இது முடி வளர்ச்சிக்கான சுழற்சியை மேம்படுத்துகிறது. ஆனியன் (வெங்காயம்) கண்டிஷனர்கள் உங்கள் தலையில் சில நொதிகளை செயல்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சிக்கான சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக முடியின் வளர்ச்சி வேகமாகிறது.
ஆனியன் (வெங்காயம்) கண்டிஷனரில், முடி உதிர்தல், முடி மற்றும் பிளவுகள் ஏற்படுவதை தடுக்கும் அதிசயத்தை செய்யக்கூடிய கந்தகம் நிறைந்துள்ளது. ஏனெனில் கந்தகம் முடியின் இழைகளுடன் பிணைப்பை உருவாக்கி முடியை வலுப்படுத்தத் தேவைப்படுகின்றது.
இது உங்கள் தலைமுடியில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுக்கக்கூடிய சில நொதிகளைக் கொண்டிருப்பதால் இளநரையை தடுக்கிறது.
இது தலைமுடியின் pH அளவை பராமரிக்கிறது, இது ஊட்டச்சத்துடன் கூடிய ஆரோக்கியமான முடிக்கு அவசியமாகும்.
வெங்காயச் சாற்றை தலையில் தொடர்ந்து தடவி வருவது பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கவும், பொடுகு மற்றும் அரிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.
ஆனியன் (வெங்காயம்) கண்டிஷனர்கள் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும், சுருள் இல்லாததாகவும் மாற்றுகிறது.
ஷாம்பு உங்கள் தலையின் ஈரப்பதத்தை குறைக்காமல் இருக்க, ஷாம்பூவைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஆனியன் (வெங்காயம்) எண்ணெயை இயற்கையான கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
முடி உதிர்தலைக் குறைப்பதில் உங்கள் உணவுமுறை முக்கியமான பங்காற்றுகிறது. ஒமேகா -3, புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் நிறைய காய்கறிகளையும் உட்கொள்ளுங்கள் ஒமேகா -3, அழற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. உங்கள் தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது என்பதால், உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கவும் வலிமையாக்கவும் புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம் ஆகும். முடி உதிர்வைத் தூண்டக்கூடிய நச்சுகள் அதிக அளவில் சேர்வதைக் குறைக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். மேலும், கீரை, பச்சை பப்பாளி, சுரைக்காய், கேரட், வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் போன்ற காய்கறிகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காய்கறிகளாகும். இவை மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து முடி இழைகளை வலுவாக்குகின்றன.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் தலைமுடியானது உலர்ந்து, உயிரற்று போய்விடுகிறது. இறுதியில் தலைமுடி உடைந்து முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. மேலும், நீரானது மயிர்க்கால்களில் உராய்வை குறைக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்குத் தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சுழற்சியை அதிகரிக்கிறது. எனவே, முடி உதிர்வதைத் தடுக்க தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது உங்களுக்கு அதிகமாக வியர்க்கும்போதோ, உங்கள் தலையில் வியர்வை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியர்வையானது முடியின் இழைகளை நீர் இழப்பு செய்கிறது. இதன் விளைவாக பாக்டீரியா, பூஞ்சை தொற்று, துளை அடைப்பு மற்றும் லாக்டிக் அமிலம் குவிதல் போன்றவை ஏற்படுகிறது. எனவே, உடற்பயிற்சி செய்த பின்னர் குளித்துவிட்டு, உங்கள் தலைமுடியை சுத்தமான டவலால் உலர்த்துவது அவசியம். உங்கள் தலை முடியை விரைவாக உலர்த்துவதற்கு, குறைந்த சூட்டில் ப்ளோ ட்ரையரைப் பயன்படுத்தலாம்.
சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குகின்றன. இவை மயிர்க்கால்களை சேதப்படுத்தி, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கின்றன. உடலின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சும் திறனை ஆல்கஹால் குறைக்கிறது. எனவே, மது அருந்துவதைக் முடிந்தவரை குறைதுக்கொள்ளவும். மேலும் மதுப்பழக்கம் நீரிழப்பு மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.
யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. யோகா பயிற்சிகள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை எளிதாக்குகிறது. நமது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சுவாசப் பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம்.
மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்திற்கும் தலைமுடிக்கும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில், இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளின் அளவை அதிகப்படுத்துகிறது. இது உங்கள் முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்து பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்குகிறது. சுவாச பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், நீங்களே உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். நடனம், ஓவியம் வரைதல்,புத்தகம் படித்தல், சமையல், விளையாட்டு மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் உங்களுக்கு விருப்பமானவற்றை செய்வதன் மூலமும் நீங்கள் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
தூக்கம் உங்கள் முழு உடலையும் மனதையும் புத்துணர்ச்சி செய்ய உதவுகிறது. ஆறு முதல் ஏழு மணிநேரம் தூங்குவதனால் நமது உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் நீக்கப்படுகிறது மற்றும் உங்கள் மனதையும் உடலையும் புதுப்பிக்கப்படுகிறது. மேலும், மன அழுத்தம் குறைக்கப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படுத்தப்படுகிறது. போதுமான தூக்கம் இல்லையெனில், கார்டிசோல் அளவு அதிகரித்து, மயிர்க்கால்கள் வலுவிழந்து முடி உதிர்தல் ஏற்படக்கூடும். தூங்குவதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறு இருந்தால், மென்மையான இசையைக் கேளுங்கள். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் விளக்குகளை அணைத்து வைக்கவும்.
குறை நிலை லேசர் சிகிச்சையானது, ஒரு நல்ல முடி வளர்ச்சி சிகிச்சையாக பிரபலமடைந்து வருகிறது. இது உங்கள் தலையில் உள்ள சேதமடைந்த செல்கள் அவற்றின் இயல்பான செயல்பாட்டை செய்ய கூடுதல் திறனைக் கொடுக்கிறது. இதன் மூலம் முடி உதிர்வதும், முடி மெலிவதும் குறைகிறது. லேசர் சிகிச்சை முடி வளர்ச்சியை ஏற்படுத்தவும் முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது.
முடிகளுக்கான சிகிச்சை முறைகளில் ஒன்று முடி மாற்று அறுவை சிகிச்சை ஆகும். டோனரின் தலைமுடியை எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் முதலில் நீங்கள் சிறிது முடி உதிர்தலுக்கு உள்ளாகலாம், ஆனால் பின்னர் டோனரின் தலையில் வளர்ந்தது போலவே வளர ஆரம்பிக்கும்.
முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் ஒரு சில மருந்துகளை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.
மினாக்சிடில் அல்லது ரோகெய்ன் என்பது ஷாம்பூக்களில் உள்ள ஒரு மூலப்பொருளாகும். இது முடி உதிர்வைக் குறைக்கவும், முடிகளின் விரைவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது திரவமாகவும், நுரையாகவும் மற்றும் ஷாம்பு வடிவங்களிலும் கிடைக்கிறது. முடி உதிர்வதைத் முற்றிலும் தவிர்க்க அல்லது மீண்டும் முடி வளர ஆரம்பிக்க குறைந்தது ஆறு மாதங்கள் வரை இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இது உங்கள் தலையில் எரிச்சல் மற்றும் முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை ஏற்படுத்தலாம்.
பினாஸ்ட்டிரைடு அல்லது புரோபேசியா போன்றவை முடி உதிர்தல் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உரிமம் பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடிய மற்றொரு மருந்தாகும். இது முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் முடி மீண்டும் வளர உதவுகிறது. இருப்பினும், இது பக்க விளைவாக பாலியல் ஈடுபாட்டை குறைக்கக்கூடும். மேலும், கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த மருந்தை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - பாடி பாலீஷிங் செய்வதின் (உடலை மெருகூட்டுவதின்) நன்மைகள்
உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம், உங்கள் தலை மற்றும் முடியை தொடர்ந்து நன்றாக பராமரித்துக்கொள்வதன் மூலமும் உங்கள் தலைமுடியை வலிமையானதாக மாற்ற முடியும். இது, முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. முடி உதிர்தலுக்கான சிறந்த தீர்வுகளை பெற மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றவும். அதே நிலை தொடர்ந்தாலோ அல்லது அதிகமாக முடி உதிர்ந்தாலோ மருத்துவரை அணுகி தக்க ஆலோசனை பெறவும்.
Yes
No
Written by
gajalakshmiudayar
gajalakshmiudayar
கர்ப்ப காலத்தில் வாந்தி எடுப்பதைத் தடுக்க சில விரைவான மற்றும் பயனுள்ள டிப்ஸ்
தைராய்டு வகைகள், காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் உங்கள் பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டெண்) எவ்வளவு இருக்க வேண்டும்?
40 வயதில் கர்ப்பமாவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்
மாதவிடாய் நின்ற பிறகு ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியுமா?
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom | Stretch Marks | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass |